بابُ ما يُقال فى حال غُسل الميّت وَتَكفينِه
*(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)*
يُستحبُّ الإكثارُ مِن ذكر الله تعالى، والدُّعاءِ للميّت فى حالِ غُسلِه وتَكْفِيْنِهِ، قال أصحابُنا: وإذا رأى الغاسلُ من الميت ما يُعجبُه، مِن استنارةِ وجههِ وطِيبِ رِيحِه ونحو ذلك، اُستحبّ له أن يُحدِّثَ النّاس بذلك، وإن رَأى ما يُكرهه مِن سوادِ وجهِه، ونَتْن وتَغَيُّرِ عُضوٍ ، وانقلابِ صورةٍ ونحو ذلك حَرُمَ عليه أن يُحدّث أحدا به،
ஒரு “மையித்” – மரணித்த ஒருவரை குளிப்பாட்டுதல் நான்கு கடமைகளில் ஒன்றாகும். இந்தக் கடமையையோ, மற்ற மூன்று கடமைகளையோ செய்தல் உயிருடன் இருப்பவர்களுக்கு கடமையாகும்.
குளிப்பாட்டும் போதும், “கபன்” செய்யும் போதும் அந்த வேலைகளைச் செய்வதற்கென்று நியமிக்கப்பட்டவரும், அவருடன் அப்பணியில் இணைந்து கொண்டவர்களும் அதிகமாக அல்லாஹ்வை “திக்ர்” செய்ய வேண்டும். மரணித்தவருக்காக “துஆ” பிரார்த்தனை செய்யவும் வேண்டும்.
குளிப்பாட்டுவதற்குப் பொறுப்பாக்கப்பட்டவர் அல்லது பட்டவர்கள், அதேபோல் “கபன்” செய்வதற்கு பொறுப்பானவர்கள் மரணித்தவரின் முகம் பிரகாசமாக இருப்பதை, அல்லது நறுமணம் வீசுவதை, அல்லது இவை போன்ற ஏதாவது ஒரு நல்ல விடயத்தைக் கண்டால் அதைப் பிறருக்குச் சொல்லாமல் விடாமல் மற்றவர்களுக்கு அதைச் சொல்வது நல்ல காரியமாகும். இதனால் நன்மை கிடைக்குமே தவிர பாவம் கிடைக்காது.
ஆயினும் மேற்சொன்னதற்கு மாற்றமான முகம் கறுத்திருத்தல், துர் நாற்றம் வீசுதல், உறுப்புக்கள் மாற்றமடைந்திருத்தல், உருவம் – தோற்றம் மாறுபட்டிருத்தல் போன்றவற்றை அவர்கள் கண்டால் அதை மறைத்துவிடுவது அவர்கள் மீது கடமையாகும். அதை ஒருவருக்கேனும் சொல்வது “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறு சட்ட மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரமாக பின்வரும் நபீ மொழிகளையும் கூறியுள்ளார்கள்.
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ، وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ»
உங்களில் மரணித்தவர்களின் நன்மைகளை பிறருக்குச் சொல்லுங்கள். அவர்களின் தீமைகளைச் சொல்லாதீர்கள். (ஆதாரம்: அபூ தாவூத், துர்முதீ, அறிவிப்பு: இப்னு உமர்)
عَنْ أَبِي رَافِعٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غَفَرَ اللَّهُ لَهُ أَرْبَعِينَ مَرَّةً،
“ஒருவன் ஒரு “மையித்” மரணித்தவனைக் குளிப்பாட்டி அவனிலுள்ள குறைகளை மறைத்தானாயின் அவனுக்கு அல்லாஹ் நாற்பது தரம் பாவ மன்னிப்பு வழங்குவான்”
ஆதாரம்: அஸ்ஸுனனுல் கபீர்,
ஆசிரியர்: பைஹகீ,
அறிவிப்பு: அபூறாபிஉ
இன்னும் இந்த நபீ மொழியை ஹதீதுக் கலை மேதை ஹாகிம் அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
ஆதாரம்: அல்முஸ்தத்றக் (01-54)
قال أبو الخير اليَمَنِيُّ ‘صاحب البيان ‘ لوكان الميتُ مُبتدِعًا مُظهرا للبدعة، ورأى الغاسلُ منه ما يُكْرِهُه، فالّذي يَقْتَضِيْهِ القِياسُ أن يَتَحَدَّثَ بِهِ فى النّاس، لِيَكُوْنَ ذَلِكَ زَجْرًا لِلنَّاسِ عَن البدعة،
“மையித்” மரணித்தவன் வெளிப்படையாக, பகிரங்கமாக “பித்அத்” செய்பவனாயின் குளிப்பாட்டுகின்றவன் வெறுக்கத்தக்க ஏதாவதொன்றை அந்த “மையித்”தில் கண்டால் அதை மக்களிடம் சொல்வதே சரியான சட்டமாகும். அவ்வாறு சொன்னால் பொதுமக்கள் “பித்அத்” செய்வதை விட்டுவிடுவார்கள்.
ஆதாரம்: அல்பயான். 03-38
ஆசிரியர்: அபுல் கைர் யமனீ
“பித்அத்” காரன் என்றால் மிகச் சுருக்கமாகச் சொல்வதாயின் “ஸுன்னத் ஜமாஅத்” கொள்கைக்கு எதிரான கொள்கையுள்ளவன் என்று சொல்லலாம்.
பகிரங்கமாக “பித்அத்” செய்கின்ற ஒருவனைக் குளிப்பாட்டும் போது அவனின் பிரேதத்திலிருந்து ஏதாவது வெறுக்கத்தக்க ஒன்றை குளிப்பாட்டுவோர் கண்டால் அதை மறைக்காமல் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். சொன்னால்தான் மற்றவர்கள் “பித்அத்” செய்யாமலிருப்பதற்கு வழியேற்படும்.
ஆயினும் “பித்அத்” காரனைக் குளிப்பாட்டும் போது நல்ல அடையாளங்கள் தென்பட்டால் அதை மக்களிடம் சொல்லக்கூடாது. ஏனெனில் மற்றவர்களுக்கு அவனைப் பின்பற்றி “பித்அத்” செய்வதற்கு வழி பிறந்துவிடும்.
اُستحبّ له أن يُحدِّثَ النّاس بذلك،
என்ற இமாம் நவவீ அவர்களின் வசனத்திற்கு எழுதப்பட்ட குறிப்பில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
(أي إن لم يكن صاحب بدعة مشهورة، وإلّا فينبغي كَتْمُ المحاسنِ حينئذٍ، لِئلّا يَفتَتِنَ الناسُ ببدعته، قال الأذراعيُّ ‘ بل لا يَبعُد إيجابُ الكتم عند ظَنِّ الإغتِرَار بها والوُقوعِ فيها بذلك، وهو متَّجهٌ، (الفتوحات 4 – 161)
குளிப்பாட்டும் நேரத்தில் நல்ல அறிகுறிகளைக் கண்டால் அவற்றை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்பதற்கான பிரதான நிபந்தனை அவன் பகிரங்க “பித்அத்” காரனாக இருக்கக் கூடாதென்பதாகும். மாறாக அவன் “பித்அத்” காரனாயிருந்தால் அவனில் காணப்பட்டது நல்ல அறிகுறியாக இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் மறைத்துவிட வேண்டும்.
இமாம் அத்றாயீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள். “பித்அத்”காரனின் ஜனாஸாவில் நல்ல அடையாளம் தெரிந்தாலும் கூட அதை வெளியே சொல்வதால் பொது மக்கள் ஏமாந்து அவனை நல்லவனென்று அவனுடைய “பித்அத்”தை அவர்களும் பின்பற்றுவார்கள். அவர்கள் அவ்வாறு பின்பற்றாமலிருப்பதற்காக அதை மறைப்பது கடமை – வாஜிபு என்றே சொல்ல வேண்டும்.
ஆதாரம்: அல்புதூஹாத் 04 -161
“பித்அத்” காரன் மார்க்க ரீதியாக எந்த அளவு இழிவாக கருதப்படுகின்றான் என்றால் அவனைக் கண்டால் அவனுக்கு ஸலாம் சொல்வதும், அவனைக் கட்டியணைத்து “முஆனகா” செய்வதும் இழிவான செயல்களாகும் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குடிகாரனை மேடையில் “முஸல்லா” விரித்து உட்கார வைத்தால் ஒரு போத்தல் குடித்து வந்தவன் மறுநாள் இரண்டு போத்தல் குடிப்பான். இதைப் புரிந்து மக்கள் நடந்து கொள்ள வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட்டால்தான் அவனும் திருந்துவான். அவனின் குடும்பமும் திருந்தும்