(தொகுப்பு: மௌலவீ: அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
“இல்முத்தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் “ஷரீஆ”வை வடித்தெடுத்த சாறேதான். இதுதான் எதார்த்தமேயன்றி இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதல்ல. இவ்வாறு சொல்வதால் “ஷரீஆ” தேவையில்லை என்ற கருத்துக்கு இடமே இல்லை. “ஷரீஆ”வை விட்டவன் பிரம்பால் அடிக்கப்படுவான் என்றால் ஸூபிஸத்தை விட்டவன் இரும்பால் அடிக்கப்படுவான் அவ்வளவுதான். இதுவே வித்தியாசம்.
ஒரு தேங்காயை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். வெளியே இருப்பது தும்போடு கூடிய மட்டை. அதைக் கடந்தால் இரண்டாவதாக இருப்பது சிரட்டை. அதைக் கடந்தால் மூன்றாவதாக இருப்பது சிரட்டையோடு வெள்ளை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற தேங்காய் கட்டி. அதைக் கடந்தால் தேங்காய்ப் பால்.
தேங்காயின் தும்போடு கூடிய மட்டை “ஷரீஆ”வுக்கு உதாரணம். சிரட்டை “தரீகா”வுக்கு உதாரணம். சிரட்டையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற தேங்காய் கட்டி “ஹகீகா”வுக்கு உதாரணம். தேங்காயில் உள்ள பால் “மஃரிபா”வுக்கு உதாரணம்.
மேலே குறித்த நாற் பெரும் அறிவுக் கடல்களான ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா என்பவற்றுக்கு ஸூபீ மகான்கள் தமது நூல்களிலும், பேச்சுக்களிலும் இவ் உதாரணத்தைக் கூறியுள்ளார்கள்.
தேங்காயின் வெளியே உள்ள தும்புடன் கூடிய மட்டை “ஷரீஆ”வுக்கு உதாரணம். அதனுள்ளே இருக்கின்ற சிரட்டை “தரீகா”வுக்கு உதாரணம். அந்த சிரட்டையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற தேங்காய் கட்டி “ஹகீகா”வுக்கு உதாரணம். தேங்காய்ப் பால் “மஃரிபா”வுக்கு உதாரணம்.
தேங்காய் மட்டை, சிரட்டை, தேங்காய் கட்டி, பால் ஆகிய இந் நான்கிலும் மிகப் பெறுமதியானதும், தரமானதும் பாலேயன்றி மற்ற மூன்றும் அல்ல. ஆயினும் அந்த மூன்றையும் அடையாமல் நாலாவதான பாலை அடைய முடியாது. பால் தவிர மற்ற மூன்றும் இல்லாமல் பாலை அடைய முடியாதிருப்பதால் “ஷரீஆ” இன்றியும், “தரீகா” இன்றியும், “ஹகீகா” இன்றியும் “மஃரிபா”வை அடைய முடியாது.
தேங்காய் மட்டை அதன் பாலோடு ஒப்பிடுவது கொண்டே தரம் குறைந்ததென்று சொல்லப்படுகின்றது. தவிர மட்டையால் அறவே எந்தப்பயனுமில்லை என்று எவரும் சொல்லமாட்டார். ஏனெனில் நமது வாழ்க்கையில் தேங்காய் மட்டை எத்தனையோ விடயங்களுக்கு (தேவைகளுக்கு) பயன்படுகின்றது. குறைந்த பட்சம் விறகாகவேனும் பயன்படுத்தலாம்.
இவ்வாறுதான் “ஷரீஆ” ஆகும். இது “மஃரிபா” என்ற இறைஞானத்தோடு ஒப்பிடுவது கொண்டு மட்டும் தான் தரம் குறைந்ததேயன்றி அதை வேறொன்றுடனும் ஒப்பிடாமல் பார்த்தால் அது முக்கியமானதேயாகும்.
ஸூபீ மகான்கள் தாரகை மந்திரம் போல் பின்வரும் வசனத்தைப் பாவிப்பதுண்டு.
اَلْحَقِيْقَةُ بِلَا شَرِيْعَةٍ بَاطِلَةٌ، وَالشَّرِيْعَةُ بِلَا حَقِيْقَةٍ عَاطِلَةٌ
இவ்வாறு அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இதன் பொருள் “ஷரீஆ” இல்லாத “ஹகீகா” வீணானது, “ஹகீகா” இல்லாத “ஷரீஆ” பாழானது என்பதாகும்.
ஸூபிகளின் இத்தாரகை மந்திரம் “ஷரீஆ”வும், “ஹகீகா”வும் இரண்டுமே தேவை. இவ்விரண்டில் ஒன்றை எடுத்து மற்றதைப் புறக்கணிப்பது பெருந்தவறென்று சொல்வதை விட பெரும் வழி கேடு என்பதே சரியானதும், பொருத்தமானதுமாகும்.
தம்மை ஸூபீகள் என்றோ, ஞான வழி செல்பவர்கள் என்றோ, தரீகா வாதிகள் என்றோ சொல்லிக் கொள்பவர்களிற் சிலர் “ஷரீஆ”வுக்கு முரணாக நடப்பதால் ஓர் எறும்பு கடித்தால் எல்லா எறும்புகளையும் நெருப்பால் எரிப்பது போன்று ஒரு சிலர் செய்கின்ற தவறால் மற்றவர்களும் எரிக்கப்படுகின்றார்கள். இதுவே உண்மை.
மேற்கண்ட உதாரணத்தை (தேங்காயை) ஸூபீ மகான்கள் கூறியது மேலே கூறிய ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா என்ற நான்கு விடயங்களையும் அறியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்கேயாகும். ஏனெனில் بِذِكْرِ الْأَمْثِلَةِ تَتَبَيَّنُ الْأَشْيَاءُ உதாரணங்கள் சொல்வதால் விடயங்கள் தெளிவாகும் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
ஞான மகான்கள் இவ்வாறான உதாரணங்கள் கூறி குறித்த நான்கு விடயங்களையும் விளக்கி வைத்திருக்கும் நிலையில் இஸ்லாமை அதன் தூய வடிவில் விளங்கிய قرنيون – கறனிய்யூன் – கொம்பர்கள் அல்லாஹ் இவ்வாறு திருக்குர்ஆனில் உதாரணங்கள் சொல்லியிருக்கின்றானா? திரு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஹதீதுகளில் உதாரணம் சொல்லியுள்ளார்களா? என்று கேட்டு நாம் கூறும் தத்துவத்தைப் பொய்யாக்க நினைக்கிறார்கள். இது இவர்களின் தொழிலாயிற்று. ஸூபிஸம் வளர்ந்து வலுப்பெற்று விடுமென்று பயந்து இவ்வாறு மந்திரம் சொல்லி பொது மக்களின் காதுகளில் ஊதுகிறார்கள். இதனால் இவர்களின் மந்திரத்தை எதிர்க்கச் சக்தியற்றவர்கள் மயங்கிவிடுகிறார்கள். மற்றவர்கள் மந்திரத்தை தூக்கியெறிந்துவிட்டு மனச் சாட்சிக்கு மாற்றமின்றி ஸுன்னிஸ வழியிலும், ஸூபிஸ வழியிலும் வெற்றி நடை போடுகிறார்கள்.
வஹ்ஹாபிகளின் அடிப்படை நோக்கம் ஸுன்னிஸத்தையும், ஸூபிஸத்தையும் வேருடன் பிடுங்கியெறிந்து அதை அழித்தொழிப்பதேயாகும்.
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
அவர்கள் தமது வாயால் அல்லாஹ்வின் ஒளியை ஊதியணைக்க நினைக்கிறார்கள். (இது நடக்காது) அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்துபவனாவான். காபிர்கள் வெறுத்தாலும் சரியே! (61-8) என்று திருமறை மூலம் இறைவன் இவர்களின் பரம்பரைப் பண்பைக் கூறி இவர்களை தலையில்லாதவர்கள் என்று நக்கலடிக்கிறான். நையாண்டி பண்ணுகிறான். நெருப்பைத்தான் வாயால் ஊதி அணைக்கலாம். அல்லாஹ்வின் ஒளியை அவ்வாறு அணைக்கலாமா? ஏனெனில் அல்லாஹ்வின் ஒளியை விட்டாலும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மின்னொளியைக் கூட எவராலும் வாயால் ஊதி அணைக்க முடியுமா? இது வடிகட்டிய முட்டாள் தனமல்லவா? இதற்கு மருந்து அங்கோடை மருத்துவ மணையில் உண்டு. அல்லது காத்தான்குடி பத்ரிய்யா மண்ணில் உண்டு. அந்த மருத்துவமனையில் மருந்து அருந்த வேண்டும். இந்த மருத்துவ மனையின் மண்ணைக் கரைத்துக் குடித்தாலே போதும். அல்ஹம்துலில்லாஹ்! போதையும் போய், மடமையும் மண்ணறை சென்று விடும்.
இவ்விடயத்தை எழுதிய எனக்கு ஒரு பாட்டி – “பெத்தா”வின் கதை நினைவுக்கு வருகிறது. அவரிடம் ஒருவர் ஒரு தேவைக்காக “டார்ச் லைட்” ஒன்றை “ஓன்” பண்ணிக் கொடுத்துள்ளார்.
பாட்டிக்கு அதை “ஓப்” பண்ண தெரியாமற் போனதால் நீர் நிறைந்த வாளியொன்றில் அதைப் போட்டுள்ளார். அப்போதும் அது அணையாமற் போனதால் ஒரு கம்பால் அதை அடித்துள்ளார். “டார்ச் லைட்” நொருங்கி அணைந்தது.
இவரோ 90 வயதுக் கிழவி. ஆனால் ஸுன்னிஸத்தையும், ஸூபிஸத்தையும் வாயால் ஊதி அணைக்க நினைக்கிறார்களே இளைஞர்களான வஹ்ஹாபிகள் இவர்களை என்னவென்று சொல்வது?
புதிய தகவலொன்று மக்கள் மன்றில் வைரலாகி வருகிறது. பொது மக்களுக்காக அதைக் கூறுகிறோம். வஹ்ஹாபிகளுக்கு என்னதான் நடந்ததோ தெரியவில்லை. இன்று வஹ்ஹாபிகள் “நாங்கள் வஹ்ஹாபிகள் அல்ல” என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கூட ஒரு வகை மடமையென்றும் அல்லது பைத்தியயமென்றும் அல்லது பயத்தின் வெளிப்பாடென்றுமே கூற வேண்டும்.
இன்னொரு புதிய தகவல் வைரலாகின்றது. كتب الأكتاب குத்புல் அக்தாப் கூட்டத்தினர் தம்மை நோக்கி அல்லாஹ்வால் ஏவப்படும் அங்கம் தம்மைத் தாக்கவிடுமெனப் பயந்து காத்தான்குடி சம்மேளனத்தையும், உலமா சபையையும் தமக்கு கேடயங்களாக்கிக் கொள்ள அவர்களையும் கொழுகி இழுக்கிறார்கள். அவர்களோ தாவக் கொப்பின்றித் தவிக்கும் நிலையில் இவர்களைக் காப்பாற்ற அவர்களால் முடியுமா? குத்புல் அப்தாப் கூட்டம் அவர்களும் (காத்தநகர் மாகான்களும்) தம்மைப் போன்ற வஹ்ஹாபிகள் என்று காட்டிக் கொடுக்கிறார்கள். கடைசியில் “பட்டிழுத்துப் பாயை சுற்றுவது” இவர்கள்தான்.
என்ன நடக்கிறது? இது யார் நடத்தும் நாடகமென்று பொது மக்கள் சிந்திக்கிறார்கள் போலும். அவர்கள் பெரிதாக ஒன்றும் சிந்திக்கத் தேவையில்லை. مَنْ عَادَى لِيْ وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ எனது வலீமாரில் ஒரு வலிய்யை பகைத்தவனை என்னுடன் யுத்தம் செய்ய வருமாறு அழைப்பேன் என்ற இறை வாக்கு – “ஹதீதுக் குத்ஸீ” வேலை செய்கிறது. இதுவே உண்மை. வஹ்ஹாபிகளின் ஆயுதம் வஹ்ஹாபான அல்லாஹ்வின் நவீன ஆயுதங்களின் முன்னால் சரண்தான். படைத்தவனுடன் போர் செய்ய யாரால்தான் முடியும்? அரசோடு போர் தொடுக்க ஆண்டிக்கு முடியுமா?
எனவே, “ஷரீஆ”வின் வடித்தெடுத்த சாறுதான் ஸூபிஸமேயன்றி அதற்கு எந்த வகையிலும் அது விரோதமானதல்ல என்பதை அனைவரும் புரிந்து செயல்படுவோமாக!
குத்புல் அப்தாப் கூட்டத்தாருக்கு!
இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் செல்லும் வழி பிழையானது. உங்களுக்கு ஸுன்னிஸம், ஸூபிஸம் பற்றி அறிந்து கொள்ள விருப்பமா? என்னிடம் வாருங்கள். என்னோடு சில நாட்கள் இருங்கள். ஸுன்னிஸமும், ஸூபிஸமும் தானாக உங்கள் காலடிக்கு வரும். தான் எல்லாம் அறிந்தவன் என்று தன்னை நினைப்பவனாலும், தனது கௌரவத்தை பெரிதாக நினைப்பவனாலும் கல்வியைக் கற்றுக் கொள்ள முடியாது. உங்களின் பட்டம், பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னிடம் வாருங்கள். உங்களை கண்ணியமாக அரவணைத்து, உபசரித்து, நான் அறிந்த, அறிவிக்கப்பட்ட கல்வி ஞானத்தை அள்ளித் தருவேன். உங்களை இன்ஸானாகவும் ஆக்குவேன். முதல் நிபந்தனை கற்றுக் கொள்ளும் நிய்யத்தோடு கால் வைக்க வேண்டும். என்னிடம் வர விரும்பவில்லையாயின் தரமான ஒருவரைத் தேடிப்பிடியுங்கள். நான் கூறும் ஞானம் தேடியெடுக்க வேண்டியதேயன்றி “பேமன்ட்” பொருளல்ல.
நீங்கள் ஓதாதவர்கள், படிக்காதவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆயினும் நீங்கள்
اللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ
என்று அல்லாஹ்விடம் கேட்கவில்லை போலும். அல்லது கேட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை போலும்.
إلى من بدّل القاف بالكاف مِن قطب الأقطاب! وإلى من أقامه مقامه! سلام الله عليكما إن كُنتما مؤمنين، وأخبركما مع الحزن والشَّجَنِ بأنّكما فى ضلال مبين وفى خُسران لا يُماثله خسران، من حيث لا تشعُران، ما نَفَعكُما الله بعلمكما، وما انتفع النّاس أيضا بعلومكما، لمُخالفة عقيدَتِكما عقيدةَ الإمام أبى الحسن الأشعريّ الّذي اتّفق جمٌّ غفير من علماء العالم على صحّتها، ولم يهتدوا بعلومكما، ولم يخرجوا من ظلمات جهلهم بوعظِكما وإرشادِكما، ولم يذُوقوا أيّ لذّة من لذّاتِ الإيمان والإخلاص والإيقان، والعلوم والأعمال، ولم يذوقوا طَعمَ عباداتهم، بل ضلّوا ووقعوا فى وهدة الكفر والضلالة، وما بقي لكما من سعيِكما إلّا رفعُ الأصوات وإضاعة الأوقات،
فائتياني بقلوب صافية، وصدور خالية، ونيّات صالحة، لكي أَقُودَكما إلى باب ربّكما الّذي تزعمانه أنّه على العرش أو فوق العرش بجهلكما بالله مع وجوده معكما معيّة ذاتيّة ومع كونه أقرب إليكما من حبل الوريد، كما قال ” ونحن أقرب إليه من حبل الوريد “ وأقودَكما أيضا إلى أبواب الأنبياء والأولياء الذين تقوم السموات والأرض ببركاتهم وأسرارهم، كما قال فى كلامه القديم، الّذي لا صوت له ولا جهة، ” والجبال أوتادا “ والمراد بالجبال الأولياءُ كما فى تفسير المحقّقين، وأقودَكما أيضا إلى باب من لم يَبِنْ عن ربّه ولو طرفة عين،
فإن أراد أحدكما أن يعرف عقائد أهل السنّة والجماعة ومسئلةَ وحدة الوجود الّتي أذكرها منذ أربعين عاما، فَلْيُسَلِّمْ قِيادَه لي، اُخرجه عن وظائفه وثيابه وماله وأولاده، واُدخله الخلوة، وأَمْنَعْه النّوم وأكل الشّهوات، وأنا أضمن له وُصولَه إلى علم هذه المسائل ذَوقا وكشفا، كما قال الشّيخ العارف بالله محمد المغربي الشاذلي شيخُ الجلال السيوطي رحمهما الله لأَصْحابِه،
واللهُ يهدي من يشاء، وهو الهادي لا هادي إلّا هو، وهو الظاهر وهو الباطن، لا ظاهر إلّا هو، ولا باطن إلّا هو،
ولا إله إلّا هو،
خادم القوم،