ஸூபீ மகான்களில் ஆரம்பப் படியிலுள்ளவர்களும், உயர் படியிலுள்ளவர்களும் مَجْلِسُ السَّمَاعِ என்ற பெயரில் ஒரு சபை நடத்துவார்கள். அங்கு ஸூபீகள் கூடி இறை காதல் தொடர்பான கவிதைகள் பாடுவார்கள். அந்த சபையில் பாடுவதற்கு “இப்னுல் பாரிழ்” எழுதிய கவிதைகளையும் பாடி பேரின்ப பரவசம் அடைவார்கள்.
இப்னுல் பாரிழ் அவர்களின் கவிகளுக்கு பலர் விரிவுரை எழுதியுள்ளார்கள். அவர்களில் ابن الفارض والحبُّ الإلهي என்ற பெயரில் முஹம்மது முஸ்தபா ஹில்மீ என்பவரும், كشفُ السِّرِّ الغامضِ فى شرح ديوان ابن الفارض என்ற பெயரில் இமாம் அப்துல் ஙனீ அந்நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் பலரும் விரிவுரை எழுதியுள்ளார்கள்.
وشعر ابن الفارض شعر رائقٌ، عذْبٌ، ولكنّه يَنْعق بوحدة الوجود، ولهذا فقد شبّهَهُ الذّهبي بـ ‘الْفَالُوْذَج المسموم ‘
மேலே நான் இப்போது எழுதிய வசனம் “மட சாம்பிராணி”யின் வசனமாகும். அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “இப்னுல் பாரிழ் அவர்களின் பாடல் மிக அழகானதும், தரமானதும், இனிமையானதுமாகும். (ஆயினுமவர் காகம் கரைவது போல் கரைகிறார்)” என்று கூறியுள்ளார் மட சாம்பிராணி.
نَعَقَ என்றால் காகம் கரைந்தது என்று பொருள் வரும். இந்தச் சொல்லை அவர் பாவித்தது “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை – கொள்கையை – நையாண்டி பண்ணுவதற்கேயாகும்.
لا أدري أنّه حيّ إلى الآن أو مات، فإن كان حيّا فهو يموت كما يموت الغراب، لأنّه استهزأ بابن الفارض وعقيدة وحدة الوجود،
இவ்வாறு நையாண்டி பண்ணிய மட சாம்பிராணி பின்னால் எவ்வாறு சொல்கிறார் என்பதையும் கவனியுங்கள்.
ولهذا فقد شبّهَهُ الذّهبي بـ ‘الْفَالُوْذَج المسموم ‘
இதனால்தான் இமாம் தஹபீ என்பவர் இப்னுல் பாரிழ் அவர்களின் இறை காதல் பாடலை விஷம் கலந்த பாலூதாவுக்கு ஒப்பாக்கினார் என்று சொல்கிறார். இதற்கு ஆதாரமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய لِسَانُ المِيْزَانِ என்ற நூல் நாலாம் பாகம் 317ம் பக்கத்தை (4-317) ஆதாரமாக கூறியுள்ளார்.
இமாம் தஹபீ விஷம் கலந்த பாலூதா என்று இப்னுல் பாரிழ் அவர்களின் பாடலைக் குறிப்பிட்டிருந்தால் அவர் வஹ்ததுல் வுஜூத் ஞானத்திற்கு எதிரானவராக இருந்திருக்க வேண்டுமென்று விளங்குகின்றது.
இமாம் தஹபீ யார்?
هو محمد بن أحمد بن عثمان بن قائمان الذّهبي، مؤرّخ الإسلام، وُلد بدمشق سنة 673 هـ ، بَرِعَ فى علمي الحديث والتاريخ، له مؤلفات كثيرة، منها تذكرة الحفّاظ، وميزان الإعتدال، والعُلو للعليّ العظيم، تُوفّي بدمشق سنة 748 هـ،
இவர் – தஹபீ – முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு உத்மான் இப்னு காயிமான் அத்தஹபீ ஆவார். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்;. ஹிஜ்ரீ 637ல் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகரில் பிறந்தார். ஹதீதுக்கலை, வரலாற்றுக் கலை இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர். இவர் அதிக நூல்கள் எழுதியுள்ளார்.
தஹபீ அவர்களுக்கும், இப்னுல் பாரிழ் அவர்களுக்கும் சுமார் 60 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. சந்தித்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இப்னுல் பாரிழ் முந்தியவர்.
மட சாம்பிராணி சொல்வது போல் இப்னுல் பாரிழ் அவர்களின் பாடலை இமாம் தஹபீ நையாண்டி பண்ணியிருந்தால் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் لسان الميزان லிஸானுல் மீஸான் நூலைப் பாரக்க வேண்டும். அந்த நூல் தற்போது எம்மிடமில்லை.
எனினும் இமாம் தஹபீ அவ்வாறு சொல்லியிருப்பாரா? என்று நான் சந்தேகப்படுகின்றேன். அவ்வாறு அவர் சொல்லியிருந்தால் அவர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரியாதவராக இருந்திருப்பதற்குச் சாத்தியமுண்டு. அல்லாஹ் மிக அறிந்தவன். விபரம் தெரியாமல் நான் எவரையும் எடை போட விரும்பவில்லை.
وأشهر قصائد ابن الفارض : التّائيّة الكبرى والميميّة فأمّا التّائيّة فهي أطولُ قصائده ، إذْ تبلغ 761 بيتا، وقد زعم أنّ النّبي صلّى الله عليه وسلّم أمره أن يُسمّيها ‘نظم السُّلوك ‘ (كشف السرِّ الغامض فى شرح ديوان ابن الفارض) للنابلسـي 1-56،
وأمّا الميميّة فهي الّتي تُسمّى ‘ الخمريّة ‘ وعدد أبياتها 41 بيتا، وهاتان القصيدتان أصرَح قصائده، وأوضحُها فى الدّلالة على مذهبه فى وحدة الوجود،
இமாம் இப்னுல் பாரிழ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் பாடல்களில் மிகப் பிரசித்த பெற்ற பாடல் “அத்தாஇய்யதுல் குப்றா”, “அல்மீமிய்யா” என்ற இரு பாடல்களுமேயாகும். “தாஇய்யா” என்றால் ஒவ்வோர் பாடலும் “தே” என்ற எழுத்தில் முடிவதையும், “மீமிய்யா” என்றால் ஒவ்வோர் பாடலும் “மீம்” என்ற எழுத்தில் முடிவதையும் குறிக்கும்.
“தாஇய்யா” என்ற பாடல் மிக நீளமான பாடலாகும். 761 பாடல்கள் உள்ளன. அல் ஆரிப் பில்லாஹ் இப்னுல் பாரிழ் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் கண்டதாகவும், அவர்கள் “தாஇய்யா” பாடல் தொகுப்புக்கு نَظْمُ السُّلُوك என்று பெயரிடுமாறு அவர்களைப் பணித்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. இது பற்றிய தெளிவான தகவல் எனக்கு கிடைக்கவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
இந்த விபரம் இமாம் அப்துல் ஙனீ அந்நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கஷ்புஸ்ஸிர்ரில் ஙாமிழ் பீ ஷர்ஹி தீவானில் பாரிழ்” என்ற நூல் பாகம் 01, பக்கம் 56ல் உள்ளதாக அறிகிறேன். இந்த நூல் தற்போது என்னிடமில்லை.
இப்னுல் பாரிழ் அவர்களின் “மீமிய்யா” என்ற பாடல் தொகுப்பு 41 பாடல்களேயாகும். இத்தொகுப்பு خَمْرِيَّةْ – கம்ரிய்யா என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் இவ்விரு பாடல் தொகுப்புகளும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பானதாகவே உள்ளன.
சிறிய குறிப்பு:
அறிவுகளில் தேடிப் பெறுவது – கற்றுக் கொள்வது – கடமையான அறிவு “ஷரீஆ”வின் அறிவும், “மஃரிபா”வின் அறிவுமேயாகும்.
ஒரு மனிதன் இவ்விரு அறிவையும் தேடியேனும் பெற்றுக் கொள்வது அவனின் “பர்ழ்” கட்டாயக் கடமையாகும்.
قال النبي صلى الله عليه وسلّم طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَمُسْلِمَةٍ
அறிவைத் தேடுவது – கற்றுக் கொள்வது முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும். “பரீழதுன்” என்ற சொல் கடமை என்பதைக் குறிக்கும்.
நாம் மிக ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்யாது போனாலும் மிகவும் சுருக்கமாக ஆய்வு செய்தால் “ஷரீஆ” உடைய அறிவையும், “மஃரிபா” இறை ஞான அறிவையும் தேடிப் படிப்பது கடமையாகும். கடமை என்ற அடிப்படையில் இவ்விரு அறிவுகளையும் கற்றுக் கொள்ளாமலிருப்பது மேற்கண்ட நபீ மொழியின்படி குற்றமாகும்.
“ஷரீஆ”வின் அறிவை எல்லை கடந்து கற்றுக் கொள்வது அவசியமில்லை. ஒரு முஸ்லிம் என்ன வணக்கம் செய்ய விரும்புகிறானோ அந்த வணக்கம் வீணாகாத படி அதற்கான பர்ழ், ஷர்த்து என்பவற்றை மட்டும் அறிந்தாலே போதும். அத்துடன் கடமை முடிந்து விடும்.
ஒன்றுக்கும் வழியில்லாத ஒரு முஸ்லிம் “ஹஜ்” செய்வது தொடர்பான அறிவையோ, “ஸகாத்” கொடுப்பது தொடர்பான அறிவையோ அறவே கற்றுக் கொள்ளத் தேவையில்லை. அது அவனுக்கு கடமையுமில்லை.
தொழுகையைப் பொறுத்த மட்டில் அதற்கான விதி முறைகளை வயது வந்த ஆண், பெண் அனைவரும் கற்றுக் கொள்வது அவசியம்தான்.
ஆயினும் “மஃரிபா” இறைஞானம், “தவ்ஹீத்” ஏகத்துவம், “தஸவ்வுப்” ஸூபிஸம் முதலான அறிவுகளை கற்பதும் “ஷரீஆ”வின் அறிவு போல் கடமைதான். ஆயினும் அதற்கு கட்டுப்பாடு, எல்லை என்பது கிடையாது. தாகம் தீரும் வரை குடிக்கவே வேண்டும். பசி தீரும் வரை உண்ணவே வேண்டும்.
இக்காலத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களில் 90 வீதமானோர் மேலே குறித்த இந்த அறிவுகளில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்நிலை மாறினால் மட்டும்தான் அவன் மனிதனாக முடியும். இன்றேல் அவன் இரண்டுகால் மிருகமேதான்.