தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
الشِّبلي والحلّاج شَيْئٌ واحدٌ
يقول الشبلي رضي الله عنه ”كنتُ أنا والحسين بن منصور شيئًا، إلّا اَنّه اَظْهَرَ وَكَتَمْتُ”
(من كتاب ”الحلّاج ” لطَه عبد البافي سُرُور. شيخ الصوفية بمصر – ص – 104)
இமாம் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (நானும், ஹல்லாஜும் ஒரே கொள்கையுள்ளவர்களே! ஹல்லாஜ் சொல்லிவிட்டார்கள். நான் மறைத்து விட்டேன்.) அதனால் தப்பினேன்.
ஆதாரம் – நூல் – அல்ஹல்லாஜ்
ஆசிரியர் – தாஹா அப்துல் பாகீ ஸுறூர்.
மிஸ்ர் நாட்டு ஸுபிகளின் தலைவர்.
பக்கம் – 104
மேற்கண்ட இத்தகவலின் மூலம் இமாம் ஷிப்லீ அவர்களும், ஹல்லாஜ் அவர்கள் போல் “எல்லாம் அவனே” என்ற கொள்கையில் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
وعِنْد مَا صُلِب الحلّاجُ ليُقتلَ أرسل الشبلي امرأةً متصوِّفة وأمرها أن تقول للحلّاج ”إنّ الله إئْتَمَنَكَ على سِرٍّ مِن أسراره فأذَعْتَهُ، فأَذاقَك طَعْمَ الحديد،
(الفكر الصوفي – ص – 62)
ஹல்லாஜ் கொலை செய்யப்பட்ட அன்று – அவர் சிலுவையில் நிறுத்தப்பட்டிருந்த போது அங்கு நின்றிருந்த இமாம் ஷிப்லீ அவர்கள் ஸூபீ கொள்கையுள்ள ஒரு பெண்ணை அழைத்து ஹல்லாஜிடம் சென்று “அல்லாஹ் உங்களை நம்பி அவனின் இரகசியங்களில் ஒன்றை உங்களுக்குச் சொல்லித் தந்தான். நீங்கள் அதை வெளியாக்கி விட்டீர்கள். அதனால் இந்தச் சோதனையை அனுபவிக்கச் செய்துள்ளான்.” என்று சொல்வீராக என்றார்கள். அந்தப் பெண் அவ்வாறே செய்தார்.
இவ்வாறு சொன்ன இமாம் ஷிப்லீ அவர்கள் ஹல்லாஜ் அவர்களின் உறவினராவார். இவரும் அவரைக் கொலை செய்வதைப் பார்க்கச் சென்றவர்களில் ஒருவராக இருந்தார். பக்தாத் நகரமே அங்கு அலை திரண்டது.
சித்திரவதை செய்து கொல்லப்பட்ட இமாம் ஹல்லாஜ் அவர்களும், இமாம் ஷிப்லீ அவர்களும் நெருங்கிய தொடர்புள்ளவர்கள்.
இருவரும் “வஹ்ததுல் வுஜுத்” இறை ஞான அரசர்கள். எனினும் இமாம் ஹல்லாஜ் அவர்கள் “ஜத்பு” எனும் பரவசநிலை மிகைத்தவர்கள். இவர்கள் அடிக்கடி
اَنَا الْحَقُّ
நானே மெய்ப்பொருள், நானே அல்லாஹ் என்று சொல்வார்கள். இவரை நெருங்கியிருந்த ஏனைய ஸுபீ மகான்கள் தடுத்தும் இவர் அவ்வாறு சொல்வதை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஸூபிஸத்துக்கும், தமக்கும் சம்மந்தமில்லாத, ஹல்லாஜ் அவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு பொறாமை கொண்ட ஒன்றுக்கும் உதவாத சில்லறை உலமாக்கள் ஹல்லாஜ் அவர்களை தீர்த்துக்கட்ட சதிவலை விரித்தார்கள்.
பக்தாத் நகரில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த அதிகாரியிடம் சென்று ஓர் உண்மையுடன் பல பொய்களையும் கலந்து ஹல்லாஜ் அவர்களை இஸ்லாமின் விரோதியாக சித்தரித்துக் காட்டினார்கள். அவர் தன்னை இறைவன் என்று கூறியதால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொலை செய்யப்பட வேண்டுமென்றும் கூறினார்கள்.
அதே நேரம் அங்கு வாழ்ந்து வந்த ஸெய்யிதுத் தாயிபா – ஸூபிகளின் தலைவர் ஜுனைத் பக்தாதீ உள்ளிட்ட, ஹல்லாஜின் போக்கையும், அவரின் கொள்கையையும் சரி கண்ட பலர் இருந்தும் கூட அவர்களால் கொலையை தடுத்து நிறுத்த முடியாமற் போயிற்று. இடையில் பல நிகழ்வுகள். அவற்றை இங்கு எழுத வாய்ப்பில்லை.
கொலைக்கான நாள் நெருங்கியது. ஸூபீ மகான் கொல்லப்படவுள்ள செய்தி நாடெங்கும் காட்டுத் தீ போல் பரவியது. பக்தாத் நகர் மனித வெள்ளத்தால் அலை மோதியது. ஹல்லாஜ் சிலுவையில் ஏற்றப்பட்டார். கைகள், கால்கள் கட்டப்பட்டன. கழுத்து வெட்டுவதற்காக அரசால் நியமிக்கப்பட்டிருந்த முஹம்மத் பின் அப்துஸ் ஸமத் என்பவர் கூரிய, பெரிய வாளுடன் வந்தார்.
இந்தச் சம்பவம் ஹிஜ்ரீ 309 துல் கஃதா மாதம் பிறை 6ல் புதன் கிழமை இரவு இஷா தொழுகையின் பின் நிகழ்ந்தது.
இக் கொலைக்குப் பிரதான காரணம் அன்று ஆட்சியிலிருந்த முக்ததிர் பில்லாஹ் என்பரின் அமைச்சர் ஹாமித் இப்னுல் அப்பாஸ் அவர்களின் அவையில் ஹல்லாஜ் தன்னை அல்லாஹ் என்று சொன்னதாகும்.
ஹல்லாஜ் கட்டப்படு முன் 1000 ஆயிரம் கசையடி வழங்கப்பட்டார். இதன் போது ஹல்லாஜ் வேதனையடையவோ, அழவோ இல்லை. அதன் பின் இரண்டு கைகளும், கால்களும் வெட்டப்பட்டன அப்போதும் கூட அவர் அசையவுமில்லை. அழவுமில்லை. அதன் பின் அவரின் கழுத்து துண்டாக்கப்பட்டது. பின்னர் அவர் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் பக்தாத் நகரில் உள்ள “தஜ்லா” நதியில் கரைக்கப்பட்டது. அன்று முதல் ஒரு வருடம் வரை அந்த நதீ சீற்றம் கொண்டதாக காணப்பட்டது.
சிலுவையிலிடு முன் இமாம் ஹல்லாஜ் அவர்கள் இரண்டு “றக்அத்” “ஸுன்னத்” தொழ வேண்டுமென்று கூறினார்கள். அவர்களுக்கு நேரம் வழங்கப்பட்டது. வழமைக்கு மாறாக மிக அவசரமாகத் தொழுது முடித்தார்கள். ஏன் அவசரமாக தொழுது முடித்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது வழமை போல் நீண்ட நேரம் தொழுதால் கொலைக்குப் பயந்து நீண்ட நேரம் தொழுது கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்று அவசரமாக தொழுதேன் என்றார்கள்.
அவர்கள் கொலை செய்ய அழைத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வாள், கத்தி, ஆணி போன்றவற்றைக் கண்டு சிரித்தார்கள். இதைக் கண்ட கூடியிருந்த மக்கள் வியந்து வியர்த்துப் போனார்கள்.
கொலை களத்துக்கு அழைத்து வரப்படும் போது பின்வருமாறு பாடினார்கள்.
طَلَبْتُ الْمُسْتَقَرَّ بِكُلِّ اَرْضٍ – فَلَمْ اَرَ لِيْ بِأرْضٍ مُسْتَقَرًّا
اَطَعْتُ مَطَامِعِيْ فَاسْتَعْبَدَتْنِيْ – وَلَوْ اَنِّيْ قَنَعْتُ لَكُنْتُ حُرًّا
இப் பரந்த பூமியில் தங்குவதற்கு ஓர் இடம் தேடினேன். எந்த ஓர் இடத்திலும் எனக்கு இடம் கிடைக்கவில்லை. எனது ஆசைகளுக்கு நான் வழிப்பட்டேன். அவை தமக்கு வழிப்படுமாறு என்னை வேண்டின. இருப்பவை கொண்டு நான் சமாளித்திருந்தால் நான் சுதந்திரம் பெற்றவனாயிருந்துருப்பேன் என்று.
அவர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது பாடிய பாடல் பின்வருமாறு.
لَمْ اُسْلِمِ النَّفْسَ لِلْاَسْقَامِ تُتْلِفُهَا
اِلَّا لِعِلْمِيْ بِأنَّ الْمَوْتَ يَشْفِيْهَا
وَنَظْرَةٌ مِنْكَ يَا سُؤْلِيْ وَيَا اَمَلِيْ
اَشْهَى اِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا
نَفْسُ الْمُحِبِّ عَلَى الْآلَامِ صَابِرَةٌ
لَعَلَّ مُتْلِفَهَا يَوْمًا يُدَاوِيْهَا
என்னை அழித்து விடும் நோய்களுக்கு என்னை நான் ஒப்படைக்க வில்லை. எனது நோய்களுக்கு மருந்து நான் மரணிப்பதேயாகும் என்று நான் அறிந்ததற்காகவேயாகும்.
இறைவா! உன்னுடைய ஓர் அருட் பார்வை இவ்வுலகை விடவும், இதுலுள்ளவற்றை விடவும் எனக்கு மிக விருப்பமானதாகும். காதலன் காதலால் தனக்கு இன்னல்கள் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்வான். ஏனெனில் இன்னல்களை தந்தவன் என்றாவதொரு நாள் அதற்கு மருந்து செய்வான்.
இமாம் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பக்தாத் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஸூபிகளின் தலைவர் ஜுனைதுல் பக்தாதீ, ஷிப்லீ ஆகியோரையும், இன்னும் பல ஸூபீ மகான்களையும் சந்தித்துள்ளார்கள். ஸூபி மகான்களில் அநேகர், குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கொள்கை பேசிய, எழுதியவர்களில் அநேகர் இவர்களின் காலத்தில் பக்தாத் நகரிலேயே இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் இறை ஞானம் பேசிய ஸூபீ மகான்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் பின்வருவோர் மிகப் பிரசித்தி பெற்றவர்களாவர்.
مِنْ اَشْهَرَ مَنْ قُتِلَ عَلَى الزَّنْدَقَةِ مِنْ اَئِمَّةِ الصُّوْفِيَّةِ إمَامُنَا الْحَلَّاجُ، وإمَامُنَا أبوالعبّاس ابن عَطاء الله ، والسَّهْرَوَرْدِيّ، وعبد السلام بن مشيش رضي الله عنهم ، لعن الله مَنْ قَتلَهم،
காபிர், அல்லது “சிந்தீக்”என்ற குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்வர்கள்தான் மேற்கண்ட மகான்களாவர். இது தவிர வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்களும் பலருளர். வெட்டிக் கொல்லப்படாமல் “பத்வா” என்ற வாளால் வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பலருளர்.
உலகில் கொலை “பத்வா” வழங்கி சாதனை படைத்தவர்களில் அ – இ – ஜ – உலமா முதலிடத்தில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
அதி விஷேடமென்னவெனில் பல நாடுகளில் பலரால் பலர் காபிர் என்றும், முர்தத் என்றும், “பத்வா” வழங்கியவர்களில் இலங்கை நாட்டில் எனக்கும், எனது கருத்தை சரிகண்டவர்களுக்கும் மொத்தமாக “ஹோல்ஸல்” பத்வா வழங்கிய பெருமை அ – இ – ஜ – உலமாவின் “பத்வா” குழுவையும், சாம்பல் வட்டிலப்பம் புகழ் முப்தி அவர்களையுமே சேரும்.
الله الذي لا إله إلّا هو ، يعلّق يوم القيامة العلماء الذين أفتوني بالرّدة وجمّا غفيرا وجمعا كبيرا بها من أهل القبلة على أغصان أشجار مخلوقة بالنار بقوله كن،
இறை ரகசியம் என்பது எது?