Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஓர் “ஆலிம்” அறிஞனுக்கு மூன்று வகை அறிவு இருக்கும்.

ஓர் “ஆலிம்” அறிஞனுக்கு மூன்று வகை அறிவு இருக்கும்.

(لِلْعَالِمِ ثَلَاثَةُ عُلُوْمٍ)
فيقول العارف بالله سهلٌ التُّسْتَرِيْ (للعالم ثلاثة علوم، علمٌ ظاهرٌ، يبذله لأهل الظاهر، وعلم باطنٌ، لا يسعه إظهاره إلا لأهله، وعلمٌ هو بينه وبين الله تعالى، لا يظهره لأحدٍ)
(إحياء علوم الدين – 1 – 89)
سهلٌ التُّسْتَرِيْ – من تستر، بلدةٌ من الأهواز، من أئمَّة القوم، توفِّي عام 283 هـ أو 273 هـ)
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
ஞான மகான் ஸஹ்ல் அத்துஸ்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள். ஓர் “ஆலிம்” அறிஞனுக்கு மூன்று வகை அறிவு இருக்கும். ஒரு வகை வெளிப்படையான அறிவு. அதை அவர் வெளிப்படையானவர்கள் எல்லோருக்கும் கொடுப்பார். இரண்டாவது வகை “பாதின்” உள்ரங்கமான அறிவு. இதை இதற்குரியவர்களுக்கு மட்டும் கொடுப்பார். மூன்றாம் அறிவு அவருக்கும், அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள அறிவு. இதை எவருக்கும் வெளிப்படுத்தமாட்டார்.
இஹ்யா உலூமுத்தீன்
பாகம் – 01
பக்கம் – 89
ஆசிரியர் – இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ்

ஸஹ்ல் அல் துஸ்தரீ அவர்கள் “துஸ்தர்” என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபீ மகான்களின் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் மகான். ஹிஜ்ரீ 283 ல் அல்லது ஹிஜ்ரீ 273 ல் “வபாத்” மரணித்தார்கள்.
 
இல்முன் ளாஹிர்”அறிவென்பது “ஷரீஆ”வின் அறிவைக் குறிக்கும். இது முஸ்லிம்கள் அனைவருக்கும் பகிரங்கமாக சொல்லப்பட வேண்டும்.“இல்முல் பாதின்”உள்ரங்கமான அறிவென்பது “தரீகா”வின் அறிவைக் குறிக்கும். இது “தரீகா” வாதிகளுக்கு மட்டும் சொல்ல வேண்டிய அறிவாகும். மூன்றாம் அறிவு மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையிலுள்ள அறிவு. இதை எவருக்கும் பகிரங்கமாகச் சொல்வது தடைசெய்யப்பட்டதாகும்.
இஹ்யா உலூமுத்தீன்
பாகம் – 01
பக்கம் – 89
ஆசிரியர் – இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ்
 
ஓவ்வொரு ஆணும், பெண்ணும் “ஷரீஆ” வின் அறிவு அனைத்தையும் கற்றுக் கொள்வது அவசியமில்லை. எனினும் அவனுக்கு “இபாதத்”வணக்கம் செய்வதற்குத் தேவையான அளவு கற்றுக் கொண்டால் போதும். கடமை நிறைவேறி விடும். மேலதிகமாக கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் கற்றுக் கொள்ளலாம். தடையில்லை. எனினும் அது கடமையல்ல.
 
பொதுவாக தொழுகை 15 வயது முதல் கடமையாகும். அல்லது அதற்கு முதல் ஆணாயின் இந்திரியம் வெளியானால், பெண்ணாயின் இந்திரியம் வெளியானால் அல்லது 15 வயதை அடைந்தால் தொழுகை கடமையாகி விடும். ஆகையால் பருவமடைந்த ஆண், பெண் இருவரும் “வுழூ”வெளிச்சுத்தம் பற்றிய விபரங்களையும், தொழுகை பற்றிய விபரங்கனையும், மற்றும் நோன்பு வணக்கத்தின் விபரங்களையும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
எந்த “ஆலிம்” ஆயினும் மேலே சொல்லப்பட்ட “ஷரீஆ”வின் அறிவை அனைவருக்கும் கற்றுக் கொடுப்பது அவரின் கடமையாகும்.
இரண்டாம் அகை அறிவு “பாதின்” உள்ரங்க அறிவாகும். இது “தரீகா”வின் அறிவென்றும், ஸூபிஸத்தின் ஆரம்ப கட்டத்திலுள்ளவர்களுக்கான அறிவென்றும் சொல்லப்படும். இந்த அறிவு ஒருவரிடம் “பைஅத்” பெற்று “தரீகா”வழி நடப்பவர்களுக்கு அவசியமாகும்.
 
மூன்றாம் வகை அறிவு அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் இடையிலுள்ள அறிவாகும். அதாவது ஒரு அடியானுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலமோ, கஷ்பு மூலமோ வழங்குகின்ற உச்சகட்ட ஞானமாகும்.
 
முதலாம் வகை “ஷரீஆ”வின் அறிவென்பது அனைத்து மக்களுக்கும் பகிரங்கமாக, தெளிவாக சொல்ல வேண்டிய அறிவாகும். ஆண்களும், பெண்களும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவாகும்.
 
முதலாம் வகை அறிவும், இரண்டாம் வகை அறிவும் எந்த வகையிலும் “அஸ்றார்” என்று சொல்லப்டுகின்ற இரகசிய அறிவைக் சேராது.
 
எனினும் மூன்றாம் அறிவு மட்டும் தான் ரகசிய ஞானங்களைச் சேரும். இது இல்ஹாம், அல்லது “கஷ்பு” அல்லது “இல்முல்லதுன்னீ” என்ற அல்லாஹ் ஆசிரியராயிருந்து கற்றுக் கொடுக்கும் அறிவைக் குறிக்கும்.
 
ஆயினும் சிலர் விபரம் தெரியாமலும், விளக்கமில்லாமலும் இரண்டாம் வகை அறிவு “ஸிர்று” ரகசியமானதென்று சொல்கிறார்கள். இரண்டாம் வகை ரகசியமே இல்லை. அதுவும் பகிரங்கமாக சொல்ல வேண்டியதேயாகும். சிலர் சொல்வது போல் இரண்டாம் வகை அறிவை இரகசியமென்றால் மூன்றாம் வகை அறிவு பற்றி இந்தச் சிலர் என்ன சொல்வார்களோ?
 
நான் ஆய்வு செய்த வகையில் மூன்றாம் அறிவை மட்டுமே ரகசியம் என்று சொல்ல முடியும். அதில் கூட மிக ஆழமான கருத்தை மட்டும்தான் ரகசியம் என்று மக்களுக்குச் சொல்லாமல் மறைக்க வேண்டும்.
 
நாம் பேசிவருகின்ற “வஹ்ததுல் வுஜுத்” ஞானம் மக்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொல்ல முடியாதென்று யாராவது சொன்னால் அவர்கள் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா தருகின்ற பொருளையும், தத்துவத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் “எல்லாம் அவனே” என்ற இறை ஞானத்தை அள்ளித் தருகின்ற, தெளிவாகக் கூறுகின்ற திருக்குர்ஆன் வசனங்களில் திருக் கலிமாவும் ஒன்றுதான். இத்திருக் கலிமாவை உலமாஉகள் அதன் இலக்கண இலக்கியத்தோடு ஆய்வு செய்தார்களாயின் எல்லாம் அவனே என்ற ஞான தத்துவத்தை திருக் கலிமாதான் மிகத் தெளிவாகக் கூறுகிறதென்று அவர்களே சொல்வார்கள்.
 
நான் “வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தை 1979 ஆண்டு முதல் இன்று வரை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அன்று இதை எதிர்த்த உலமாஉகள் இன்று வரை எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இல்மில் – அறிவில் “நஸீப்” இல்லாமற் போனது அவர்களின் தலை விதி என்றே சொல்ல வேண்டும்.
 
قال الإمام الشعراني رحمه الله ( لا يَخْفَى أنّ أصلَ الإنكار من الأعداء المبطِلِين إنّما يَنْشأُ من الحسد ، ولو أنّ أولِئك الُمنكِرين تَرَكُوا الحسدَ وسلكوا طريقَ أهلِ الله لم يَظهرْ منهم إنكارٌ ولا حسدٌ، وازْدَادُوا علما إلى علمِهم ولكن هكذا كان الأمرُ، فلا حول ولا قوّة إلا بالله العليّ العظيم)
( اليواقيت والجواهر ج ١ ص ١٤ )
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(வீண் போன எதிரிகளின் எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம் பொறாமையோயாகும் எதிர்ப்பவர்கள் – எதிரிகள் பொறாமையை தூக்கியெறிந்து விட்டு மெஞ்ஞானிகளின் வழியில் நடந்தார்களாயின் அவர்களால் எதிர்ப்போ, மறுப்போ ஏற்படமாட்டாது. அதோடு அவர்கள் தம்மிடமுள்ள அறிவோடு மேலும் பல அறிவுகளையும் பெற்றுக் கொள்வார்கள்.)
 
இந்த ஞானத்தை எதிர்த்து எழுதியும், பேசியும் வருகின்ற உலமாஉகள் தமது பொறாமை என்ற அசூசியிலிருந்து சுத்தம் பெற்று ஸூபிகளின் வழியில் நடந்தார்களாயின் அவர்கள் தாமாகவே எதிர்ப்பை விட்டு விடுவார்கள். அது மட்டு மன்றி மேலும் பல ஞானங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.
 
எதிர்க்கும் உலமாக்களுக்கு இமாம் ஷஅறானீ அவர்கள் காட்டியுள்ள வழியில் செல்ல வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments