Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மார்க்கம் விவாதத்தை ஆதரிக்கவில்லை.

மார்க்கம் விவாதத்தை ஆதரிக்கவில்லை.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
سـَمِعْتُ سَيِّدِيْ عَلِيًّا الْخَوَاصَّ رَضِيَ الله عَنْهُ يَقُوْلُ ‘ اَلْجَدَالُ فِى الشَّرِيْعَةِ مِنْ بَقَايَا نِفَاقٍ فِى الْقَلْبِ، لِأَنَّهُ يُرِيْدُ بِهِ إِدْحَاضَ حُجَّةِ الْغَيْرِ، وَفِى الْقُرْآنِ الْعَظِيْمِ ‘ فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسـِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسـْلِيمًا ‘ فَنَفَى الْإِيْمَانَ الْكَامِلَ عَمَّنْ يَجِدُ فِى الْحُكْمِ عَلَيْهِ بِالشَّرِيْعَةِ حَرَجًا، وَمَعْلُوْمٌ أَنَّ الْجَدَالَ مَعَ أَئِمَّةِ الشـَّرِيْعَةِ جَدَالٌ مَعَهُ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنْ تَفَاوَتَ الْمَقَامُ، فَإِنَّ الْعُلَمَاءَ عَلَى مَدْرَجَةِ الرُّسـُلِ سَلَكُوْا، فَكَمَا يَجِبُ عَلَيْنَا الْإِيْمَانُ وَالتَّصْدِيْقُ بِكُلِّ مَا جَائَتْ بِهِ الرُّسـُلُ، وَإِنْ لَمْ نَفْهَمْهُ، فَكَذَلِكَ يَجِبُ عَلَيْنَا الْإِيْمَانُ وَالتَّصْدِيْقُ بـِكَلَامِ الْأَئِمَّةِ إِذَا لَمْ نَفْهَمْهُ، حَتَّى يَأْتِيَنَا عَنِ الشَّارِعِ مَا يُخَالِفُهُ،
(الميزان الخضريّة للإمام عبد الوهاب الشعراني، ص – 48)
 
திருவசனத்தின் பொருள்: ஆனால் உங்கள் இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சச்சரவில் உங்களை நீதிபதியாக ஆக்கி நீங்கள் செய்யும் தீர்ப்பை தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாதவரையில் அவர்கள் விசுவாசிகளாகமாட்டார்கள்)
அத்தியாயம்: நிஸா, வசனம் 65, ஆசிரியர் அல்லாஹ்.

இஸ்லாம் மார்க்கத்தில் தர்க்கத்திற்கு இடமில்லை. இஸ்லாம் அதை விரும்பவுமில்லை. இறைஞானி அலீ அல் கவாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
மார்க்க விடயங்களில் “இமாம்” மார்க்க மேதைகளுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள விடயங்களும் உள்ளன. கருத்து வேறுபாடில்லாத விடயங்களும் உள்ளன.
 
திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் தெளிவாகச் சொல்லப்பட்ட விடயங்களில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
உதாரணமாக ஒரு நாளில் ஐந்து நேரம் தொழுவது “பர்ழ்” கடமை என்பதில் எவரிடமும் கருத்து வேறுபாடு கிடையாது.
 
ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு “மத்ஹப்”களில் எதிலும் இதற்கு மாற்றமான கருத்து இல்லை. இதேபோல் ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர்களிலும் எவரிடத்திலும் எந்த ஓர் கருத்து வேறுபாடும் கிடையாது. இவைபோல் பல விடயங்கள் உள்ளன.
 
உலகில் பிரசித்தி பெற்ற, வஹ்ஹாபிகள் தவிர மற்ற இமாம்கள், மார்க்க மேதைகள் அனைவரும் ஏற்றுக் கொண்ட “மத்ஹப்”கள் நான்கு மட்டுமேயாகும்.
 
அவை இமாம் அபூ ஹனீபா அவர்களின் ஹனபீ மத்ஹப், இமாம் ஷாபிஈ அவர்களின் ஷாபிஈ மத்ஹப், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் ஹன்பலீ மத்ஹப், இமாம் மாலிக் அவர்களின் மாலிக் மத்ஹப் ஆகியன. றழியல்லாஹு அன்ஹும்.
 
இவை நான்கும் திருக்குர்ஆன், ஹதீதுகளின் ஆதாரங்கள் மூலம் சரியானவை என்று நிறுவப்பட்ட மத்ஹபுகளாகும்.
 
திருக்குர்ஆன், ஹதீதுகளின் ஆதாரங்கள் கொண்டு நிறுவப்பட்ட நான்கு மத்ஹபுகளின் தாபகர்களான மேற்கண்ட நான்கு இமாம்களும் இதை எழுதுகின்ற என் போன்றவர்களோ, இதை வாசிக்கின்ற உங்கள் போன்றவர்களோ அல்லர். அவர்கள் இமாம்கள் மட்டுமல்ல. “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற மகான்களாவர் என்பதை திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். அந்த மகான்கள் தம் போன்றவர்கள் என்று நினைக்கின்ற ஒரு கூட்டம் உலகில் இருக்குமாயின் அது இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரின் வாரிசுகளேயாவர். வஹ்ஹாபிகளேயாவர்.
 
வஹ்ஹாபிகளும், மத்ஹபுகளும்.
 
மத்ஹபுகளை எதிர்ப்போர் வஹ்ஹாபிகள் மட்டுமேயாவர். இமாம்களை எதிர்ப்போரும் இவர்கள் மாத்திரமே. வஹ்ஹாபிகளில் ஒருவன் சொன்னான். நெருப்பை விடச் சுடக் கூடிய வேறொன்று இருக்குமானால் அது கொண்டு ஷாபிஈ அவர்களுக்கு சூட்டுக் கோல் வைப்பேன் என்று. இவன் வஹ்ஹாபீ மட்டுமல்ல. இவன் வடிகட்டிய முட்டாளும், காபிரும் ஆவான்.
 
இன்னொரு வஹ்ஹாபீ பின்வருமாறு சொன்னான். هَذِهِ الْعَصَا خَيْرٌ مِنْ مُحَمَّدٍ என் கைக்கோல் முஹம்மதை விடச் சிறந்தது. ஏனெனில் எனது கைக்கோலால் எனக்கு எத்தனையோ நன்மைகள் உள்ளன. எனது ஆடுகளுக்கு மரத்திலுள்ள இலைகளைத் தட்டிக் கொடுப்பதற்கு இது உதவுகிறது. பூரான், பூச்சி போன்றவற்றைக் கொல்ல உதவுகிறது. ஆனால் முஹம்மத் மரணித்து மண்ணாகிவிட்டார். அவரால் எந்த ஒரு பயனும் எனக்குமில்லை. வேறு எவருக்குமில்லை என்றான். இவன் வஹ்ஹாபீ மட்டுமல்ல. பெருமானை தரக்குறைவாகப் பேசிய காபிரும் ஆவான்.
 
வஹ்ஹாபிகளுடன் விவாதித்து நேரத்தை வீணாக்குவதை விட ஆடு, மாடு போன்ற கால் நடைகளை வளர்ப்பதும், அவற்றுக்கு அறிவுரை கூறுவதும் பதின் மடங்கு சிறந்ததாகும். மனமுரண்டு, பொய் புரட்டு உள்ளவர்களுடன் விவாதிப்பது நேரத்தை வீணாக்குவது மட்டுமல்ல. அது பாவமுமாகும்.
 
உதாரணமாக அன்னதானம் வழங்குதல் போன்று. அன்னதானம் வழங்குதல் கூடாதென்று செருப்புத் தைக்கும் செம்மான் கூடச் சொல்லமாட்டான். பாம்பாட்டி குறவன் கூடச் சொல்லமாட்டான். ஆனால் இந்த வஹ்ஹாபிகளோ “கந்தூரி” என்ற பெயரில் அன்னதானம் வழங்குவதை “ஷிர்க்”, “பித்அத்” என்று கூறுவார்கள். முஸ்லிம்களில் அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு இணை வைத்தலாகும் என்று சொல்லும் ஒரு கூட்டம் உலகில் உள்ளது என்றால் அது வஹ்ஹாபிகளின் கூட்டமேயாகும்.
 
பௌத்த மத, இந்து மத, கிறித்துவ மத சகோதரர்களிடம், வஹ்ஹாபிகள் அன்னதானம் கொடுப்பதை தடுக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு பைத்தியமா? என்று எம்மிடம் கேட்கிறார்கள். இல்லை என்று இவர்களைக் காப்பாற்றினால் அவர்களுடன் தர்க்கம் செய்ய வேண்டி வருகின்றது. ஆகையால் அவர்களிடமிருந்து தப்பிக் கொள்வதற்காக ஆம், ஐந்து நிமிடம் வித்தியாசம்தான் என்று சொல்ல வேண்டியுள்ளது.
 
ஒரு விடயம் தெளிவில்லையானால், அது சரியா? பிழையா? என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் அந்த விடயத்தை திருக்குர்ஆன், ஹதீது எனும் தராசில்தான் நிறுத்துப் பார்க்க வேண்டும். அவ் இரு உரை கற்களிலுமே உரைத்துப் பார்க்க வேண்டும். விவாதித்து சரி பிழை காணுமாறு திருமறை கூறவில்லை.
فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ (سورة النساء 59)
நீங்கள் ஒரு விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் அதை அல்லாஹ்வின் பக்கமும், றஸூலின் பக்கமும் கொடுங்கள் என்று திருமறை கூறுகின்றது. அதாவது திருக்குர்ஆனையும், நபீ பெருமானின் பொன் மொழிகளையும் ஆராய்ந்து பாருங்கள் என்றுதான் அல்லாஹ் கூறியுள்ளான். விவாதம் செய்யுமாறு கூறவில்லை.
 
பொதுவாக மார்க்க விடயத்தில் விவாதம் செய்து சரி பிழை காண முயல்வது சரி பிழை காண சீட்டுக் குலுக்கி எடுப்பது போன்றதேயாகும். ஒரு விடயம் சரியா பிழையா என்று அறிந்து கொள்வதற்கு சீட்டுப் போடுவது மார்க்கமல்ல. மார்க்க விடயத்தில் தெளிவு காண்பதாயின் வாதி, பிரதிவாதி இரு தரப்பினரும் உள்ளத்தை சுத்தமாக்கி, இக்லாஸ் – கலப்பற்ற நல்லெண்ணத்துடன், எது சரியோ அதை ஏற்றுக் கொள்வதென்ற மன நிலையுடன் கலந்துரையாடி முடிவு செய்தல் வேண்டும்.
 
வாதத்திறமையால் மெய்யை பொய்யாக்கவும், பொய்யை மெய்யாக்கவும் முடியும். ஆகையால் மார்க்க விடயத்தில் தீர்ப்புக் கூற விவாதம் உகந்ததல்ல.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments