Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸுப்ஹானல்லாஹ்! இப்படியும் ஒரு குத்பா?

ஸுப்ஹானல்லாஹ்! இப்படியும் ஒரு குத்பா?

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
قال ابن النّجّار فى تاريخه، سمعتُ عبدَ الرزّاق ابنَ الشّيخ عبد القادر الجيلاني يقول وُلِد لِوَالدي تِسْعٌ وأربعون ولدا، سبعة وعشرون ذكرا، والباقي إناثا،
 
வரலாற்றாசிரியர் இப்னுன் நஜ்ஜார் தங்களின் வரலாறில் குறிப்பிடுகையில், அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அவர்களின் மகன் அப்துர் றஸ்ஸாக் அவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
 
எனது தந்தை அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு 49 பிள்ளைகள் பிறந்தன. அவர்களில் 27 பிள்ளைகள் ஆண்கள், 22 பிள்ளைகள் பெண்கள்.

قال الجُبائيّ قال سيّدنا الشّيخ عبد القادر رضي الله عنه كان إذا وُلد لي ولدٌ أخذتُه على يدي وأقولُ هذا ميّتٌ، فأخرجْهُ من قلبي، فإذا مات لمْ يؤثِّرْ عندي موتُه شيئًا، لأنّي قد أخرجتُه من قلبي أوّل ما وُلد، قال فكان يموت من أولاده الذُّكورُ والإناثُ ليلةَ مَجْلِسِه، فلا ينقطع المجلسُ، ويصعد على الكرسيّ ويعظ النّاس، والغاسل يغسل الميّت، فإذا فرغُوا من غَسله جائوا به إلى المجلس، فينزل الشّيخ ويصلّي عليه، رضي الله عنه، (قلائد الجواهر، ص – 53)
 
குத்பு நாயகம் சொன்னதாக ஜுபாஈ என்பவர் பின்வருமாறு அறிவிக்கின்றார்.
 
எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதை என் கையில் எடுத்து இது “மையித்” மரணித்தது என்று சொல்வேன். அதோடு அதை என் மனதிலிருந்து எடுத்து விடுவேன். அது மரணித்தால் அதனால் எனக்கு எந்த ஒரு தாக்கமோ, கவலையோ ஏற்படமாட்டாது. ஏனெனில் அது பிறந்த ஆரம்பக்கட்டத்திலேயே நான் அதன் பாசத்தை என் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டேன்.
 
அவர்களின் பிள்ளைகளில் ஆண்களும், பெண்களும் “மஜ்லிஸ்” சபை நடக்கும் நாளில் மரணித்தால் சபையை அவர்கள் கலைத்துவிடாமல் அவர்கள் கதிரையில் அமர்ந்து உரை நிகழ்த்துவார்கள். குளிப்பாட்டுகின்றவன் குளிப்பாட்டுவான். குளிப்பாட்டும் வேலை, மற்றும் ஏனைய வேலைகளும் நிறைவு பெற்றால் மையித்தை சபைக்கு கொண்டு வருவார்கள். அப்போது கதிரையிலிருக்கும் குத்பு நாயகம் இறங்கி வந்து ஜனாசா தொழுகை நடத்துவார்கள்.
 
குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எண்ணற்ற “கறாமாத்” அற்புதங்களுடைய ஒரு “குத்பு” என்பதை உலகம் முழுவதிலுமுள்ள மார்க்க மேதைகள் அனைவரும் நன்கறிவர்.
 
قَدَمِيْ هَذِهِ عَلَى رَقَبَاتِ كُلِّ وَلِيٍّ للهِ تَعَالَى
உலகில் தோன்றிய “வலீ”மார்களில் மேற்கண்டவாறு சொன்னவர்கள் இவர்கள் தவிர வேறெவரையும் வரலாற்றில் காண முடியவில்லை.
 
“எனது காற்பாதம் உலகிலுள்ள அனைத்து அவ்லியாஉகளின் பிடரிகள் மீதுள்ளது” என்று அவர்கள் கூறிய இவ்வசனம் அந்நேரம் உலகில் வாழ்ந்த அனைத்து அவ்லியாஉகளின் செவியுட்புகுந்து அவர்களை அதிர வைத்தது. அனைத்து வலீமாரும் لبيك وسعديك அடி பணிந்தேன், வைத்து விட்டேன் என்று கூறியதாக வரலாறு கூறுகின்றது.
 
அந்நேரம் இருந்த வலீமார்களில் ஒருவர் மட்டும் தலை சாய்க்கவில்லை என்றும், அவரின் ஒலித்தனத்தை அல்லாஹ் பறித்துக் கொண்டான் என்றும் வரலாறு கூறுகின்றது.
 
இதற்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா? அல்லது ஹதீதில் ஆதாரம் உண்டா? என்று யாராவது கேட்பானாயின் அவன் அங்கோடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியவனாவான். அப்படியொருவன் உலகில் இருப்பானாயின் அவன் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனின் கொள்கை வாரிசாகவே இருப்பான்.
 
அல்லாஹ் எவருக்கும் ஒரு போதும் அநீதி செய்யமாட்டான் என்பது திருக்குர்ஆன் ஆதாரத்தைக் கொண்டு நிறுவப்பட்ட விடயமாகும். இந்த அடிப்படையில் இன்று இப்னு அப்தில் வஹ்ஹாபின் கொள்கை வழித் தோன்றல்களுக்கு ஏற்பட்டுள்ள தீர்ப்பு அல்லாஹ்வின் தீர்ப்பேயன்றி வேறெவரின் தீர்ப்புமல்ல. அல்லாஹ் தவிர வேறெவராலும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. இதுவே “அகீதா” கொள்கையாகும்.
 
ஒரு நாள் இப்னு அப்தில் வஹ்ஹாபின் கொள்கைவாதிகளில் ஒருவன் பேசுவதை நான் காதால் கேட்டேன். அப்போதே நான் நினைத்தேன் இப்னு அப்தில் வஹ்ஹாபின் கொள்கை கப்றுக்குள் போய்விடுமென்று.
 
அவன் என்ன சொன்னான்? எங்கோ ஓர் இடத்தில் குத்பு நாயகம் அவர்களின் “றாதிப்” மஜ்லிஸ் நடைபெறுகிறது. பாவாமார் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைக் கிண்டல் செய்து பேசிய அவன் “கஞ்சாவைக் குடித்துவிட்டு குத்தாட்டம் ஆடுகிறானுகள்” என்று பேசினான். இது நான் நேரில் கண்டு என் காதால் கேட்ட உண்மை.
 
அவனின் இன்னொரு கொள்கை வாரிசு எங்கோ ஓர் ஊரில் மேடை அமைத்து வலீமாரின் “கறாமாத்” அற்புதங்களை மறுத்து அவர்கள் செய்ததெல்லாம் “மெஜிக்” என்று பேசினான். அவன் யாரோ நான் அறியேன்.
 
வலீமாரைக் கிண்டல் செய்யும் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்களும், வரம்பை மீறிய வழி கேடுமே அவர்களை இந்நிலைக்கு தள்ளியுள்ளது.
 
அவ்லியாஉகள் என்றால் அல்லாஹ்வின் அதிகாரிகள் என்பது பொருள். அதாவது அவர்கள் எதைச் செய்வதற்கும் அல்லாஹ்வால் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள். அவர்களில் சில நேரம் “ஜமாலிய்யத்” என்ற நிலைமை மிகைத்திருக்கும். அவ்வேளை குற்றங்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள். சில நேரம் அவர்களில் “ஜலாலிய்யத்” மிகைத்திருக்கும். அவ்வேளை அவர்கள் நெருப்பாக இருப்பார்கள். இதை நிறுவ ஆயிரமாயிரம் ஆதாரங்கள் உள்ளன. எதை நாம் கூறினாலும் எமது கூற்று كالمطر على الجاموس போன்றே அவர்களுக்கு உள்ளது.
நபித்துவத்தின் ரகசியமும், விலாயத்தின் ரகசியமும் தெரியாதவர்களும், அதைத் தெரிந்து கொள்ள விரும்பாதவர்களும் ஒருபோதும் ஜெயசீலர்களாக மாட்டார்கள். அவர்களின் தலைவிதி அதுதான். தலைவலிக்கே மருந்துண்டு. தலைவிதிக்கு மருந்தில்லை. அல்லாஹ்வின் நாட்டமே அவர்களின் மருந்தாகும். அவ்லியாஉகள் இழிவு படுத்தப்படும் போது அல்லாஹ்வுக்கு கோபம் வராது. மாறாக ரோஷம் வரும். அவனுக்கு ரோஷம் வந்தால் ராசாவும் சாம்பல்தான்.
குத்பு நாயம் 49 பிள்ளைகள் பெற்றார்கள் என்பதை கிண்டல் செய்வதற்கும் ஒரு கதை கட்டி வைத்திருப்பார்கள். இதேபோல் பிறந்த குழந்தையை கையில் எடுத்து இது “மையித்” என்று சொல்லிக் கொடுத்ததற்கும் கூட ஒரு கதை கற்பனை செய்து வைத்திருப்பார்கள். அதை அவிழ்த்துக் கொட்டி இன்பமடைய மேடைதான் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்.
 
எதார்த்தவாதிகள் பொதுசன விரோதிகள்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments