Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“குல்ஹுவல்லாஹ்” ஒரு கண்ணோட்டம்.

“குல்ஹுவல்லாஹ்” ஒரு கண்ணோட்டம்.

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ، اللَّهُ الصَّمَدُ ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ،
 
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் மிகப் பெரியது “பகறா” அத்தியாயமாகும். இது 286 வசனங்கள் கொண்டது.
 
மிகச் சிறிய அத்தியாயம் “கவ்தர்” அத்தியாயம். இது மூன்று வசனங்களைக் கொண்டது. அதையடுத்த சிறிய அத்தியாயம் “இக்லாஸ்” அத்தியாயம். இது நான்கு வசனங்களைக் கொண்டது.
 
இவ் அத்தியாயம் ثُلُثُ القُرْآنْ திருக்குர்ஆனில் மூன்றில் ஒன்று என வர்ணிக்கப்படுகின்றது. இவ்வாறு நபீ மொழிகளும் வந்துள்ளன.

ثلث القرآن
திருக்குர்ஆனில் மூன்றில் ஒன்று என்பதற்கு யார் எவ்வாறு விளக்கம் கூறினாலும் நான் அறிந்ததை மட்டுமே இங்கு எழுதுகின்றேன்.
 
திருக்குர்ஆன் வசனங்கள் 6666 வசனங்களும் மூன்று பகுதிகளாகும். ஒரு பகுதி இஸ்லாமிய சட்டங்களைக் கூறுகின்றது. இன்னொரு பகுதி வரலாறுகளை மட்டும் கூறுகின்றது. இன்னுமொரு பகுதி “தவ்ஹீத்” ஏகத்துவம் பற்றி மட்டும் கூறுகிறது.
 
ஸூறதுல் இக்லாஸ் எனும் “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயம் தனித் தவ்ஹீதை மட்டுமே கூறுகிறது. அல்லாஹ்வைப் பற்றி மட்டும் கூறுகிறது. இதில் வேறெந்த விடயமும் கலக்கவில்லை. இதனால் இது மூன்றில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
 
இதில் மூன்றில் ஒன்று என்பதற்கு இன்னுமொரு விளக்கம் சொல்லப்படுகின்றது. அதாவது இவ் அத்தியாயத்தை ஒரு தரம் ஓதினால் திருக்குர்ஆனில் மூன்றில் ஒன்றை ஓதிய நன்மை கிடைக்கும், இதை இரண்டு தரம் ஓதினால் திருக்குர்ஆனில் மூன்றில் இரண்டை ஓதிய நன்மை கிடைக்கும். இதை மூன்று தரம் ஓதினால் திருக்குர்ஆனை முழுமையாக ஓதிய நன்மை கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
 
இதற்கு இன்னுமொரு விளக்கமும் சொல்லப்படுகின்றது. கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் நபீ தோழர் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் றஸூலே! எனக்கு திருக்குர்ஆன் ஓதத் தெரியாது என்று சொன்னார். அவரிடம் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “ஸூறதுல் இக்லாஸ்” ஓதத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கவர் அது மட்டும் தெரியுமென்றார். அப்போது நபீ பெருமானார் அவர்கள் அது ثلث القرآن அது திருக்குர்ஆனில் மூன்றில் ஒன்று என்று கூறினார்கள்.
 
எனவே, நாம் அது நன்மை விடயத்தில் மூன்றில் ஒன்று என்பதை ஏற்று அதை மூன்று தரம் ஓதினால் திருக்குர்ஆனை முழுமையாக ஓதிய நன்மை கிடைக்கும் என்பதை நம்பியும் நாம் செயல்படலாம். இதனால்தான் இலங்கையில் மேல் மாகாணம் மற்றும், தென் மாகாணங்களில் வாழ்கின்ற மக்கள் இந்த அத்தியாயத்தை மூன்று தரமே ஓதுவார்கள். இவ்வழக்கம் ஏனைய மாகாணங்களில் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
இதற்கு விளக்கம் சொல்லும் உலமாஉகளில் வெளிரங்கமான விளக்கம் சொல்பவர்களும் உள்ளனர். உள்ரங்கமான விளக்கம் சொல்பவர்களும் உள்ளனர்.
 
வெளிரங்கமான விளக்கம் சொல்வோரின் விளக்கம் என்னைப் பொறுத்த வரை உப்பு, உறைப்பு இல்லாத உணவு போல் நான் அதைப் பார்க்கிறேன். உள்ரங்கமான விளக்கம் சொல்வோரின் விளக்கம் முக்கனிச் சாறை பாலுடனும், தேனுடனும் கலந்த பானம் போல் நான் உணர்கிறேன்.
 
இதனால்தானோ என்னவோ அட்டாளைச்சேனையில் சமாதி கொண்டுள்ள இறையருட் புலவர் அஷ்ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்.
 
குல்ஹுவல்லாஹு என்று கூறவும்
அதன் பொருளை குருவிடமறிந்து கொள்ளவும்..
 
இப் பாடலின் கருத்து என்னவெனில் “இக்லாஸ்” அத்தியாயத்தின் பொருளை சாதாரண ஆலிம்களிடம் அறிந்து கொள்ளாமல் தரீகா, ஸூபிஸ வழி செல்லும் ஞான குருக்களிடம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
 
ஷெய்கு அவர்கள் ஏன் இவ்வாறு பாடினார்கள் என்பதற்கான காரணத்தை பரந்த அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
قُلْ هُوَ اللهُ أَحَدٌ
என்ற வசனத்திற்கு “அல் இன்ஸானுல் காமில்” என்ற ஞான நூலாசிரியர் அறிஞர் அல்லாமா அஷ்ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் குறித்த நூலில் அறபியில் எழுதியுள்ள வசனத்தை எந்த மாற்றமும் இன்றி இங்கு எழுதுகிறேன்.
 
ألهاء من اسم الله فهو إشارة إلى هويّة الحقّ الّذي هو عينُ الإنسان، قال الله تعالى قل يا محمد! هو أي الإنسانُ اللهُ أحد، فهاء الإشارة فى هو راجعٌ إلى فاعل قُل، وهو أنت، وإلا فلا يجوز إعادة الضمير إلى غير مذكورٍ، اُقيمَ المخاطَبُ هنا مقام الغائب التفاتا بيانيا، إشارة إلى أنّ المخاطب بهذا ليس نفسَ الحاضر وحده، بل الغائب والحاضر فى هذا على السواء، (الإنسان الكامل، ج أوّل، ص 21)
இதன் சுருக்கம் பின்வருமாறு.
 
அல்லாஹ் என்ற சொல்லில் இறுதி எழுத்தான “ஹே” என்ற எழுத்து “ஹுவிய்யத்” என்பதை சுட்டிக் காட்டுகிறது. அதாவது அல்லாஹ் عينُ الإنسان மனிதன்தான் என்று கூறுகிறது.
 
قُلْ – குல் என்ற சொல்லுக்கு நீங்கள் சொல்லுங்கள் என்று பொருள் வரும். இரண்டு எழுத்துக்களைக் கொண்ட இச் சொல் ஆண் பாலுக்குரிய ஏவல் வினைச் சொல்லாகும்.
இச் சொல்லில் மொழி இலக்கண விதிப்படி “நீங்கள்” என்ற பொருளுக்குரிய أنتَ – அன்த என்ற சொல் மறைந்துள்ளது. மொழியிலக்கணம் கற்றவர்களுக்கு தெளிவாக விளங்கும்.
 
மறைந்துள்ள أنت நீ என்பது கண்மணி நாயகம் அவர்களையே குறிக்கும். இது தவிர அது வேறெவரையும் குறிக்காது.
 
இச் சொல்லை அடுத்து هُوَ – ஹுவ – என்று ஒரு சொல் வந்துள்ளது. இது அறபு இலக்கணத்தில் ضمير – ழமீர் எனப்படும். தமிழில் பிரதிப் பெயர்ச் சொல் என்று சொல்லப்படும். இதற்கு அவன் என்று அல்லது அது என்று பொருள் வரும்.
 
இவ்வாறு வரும் பிரதிப் பெயருக்கான விதி என்னவெனில் அது அவன் என்று யாரைச் சுட்டுகிறதோ அந்த நபர் அதற்கு முன்னால் வந்திருக்க வேண்டும். அவரின் பெயர் கூறப்பட்டிருக்க வேண்டும்.
 
உதாரணமாக, قُلْ عبدُ الله هُوَ صَدِقِيْ
இதன் பொருள் அப்துல்லாஹ் (அவன்) என் நண்பன் என்று நீ சொல் என்பதாகும். இந்த “அவன்” என்ற பிரதிப் பெயர்ச் சொல் அப்துல்லாஹ் என்பவனைச் சுட்டிக் காட்டுகின்றது.
قُلْ هُوَ اللهُ أَحَدٌ
என்ற திரு வசனத்தில் هُوَ என்ற பிரதிப் பெயருக்கு முன்னால் எந்த ஒரு பெயரும் கூறப்படவில்லை.
 
கூறப்படாது போனாலும் قُلْ என்ற சொல்லில் நீ என்ற கருத்துக்குரிய “அன்த” என்ற சொல் மறைந்திருப்பதாக நான் மேலே எழுதியுள்ளேன். “அன்த” என்ற மறைந்துள்ள சொல் யாரைக் குறிக்குமெனில் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையே குறிக்கும். அவர்களைக் குறிக்காமல் அது வேறொன்றைக் குறிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 
எனவே, “குல்” என்ற சொல்லில் மறைந்துள்ள “அன்த” நீ என்பது நபீகள் நாயகம் அவர்களைக் குறிப்பதால் قُلْ என்ற சொல்லுக்குப் பின்னால் வந்துள்ள هُوَ – அவர் என்ற பிரதிப் பெயர் அந்த முஹம்மத் என்பதையே குறிக்கும். இது தவிர வேறு வழியே இல்லை. ஆகையால் இதற்கு பொருள் சொல்வதாயின் முஹம்மதாகின்ற நீங்கள் அல்லாஹ் என்று சொல்லுங்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கருத்து مُحَمَّدٌ هُوَ اللهُ “முஹம்மத் என்பவர்கள் அல்லாஹ்” என்று வரும். இங்கு “முஹம்மத்” என்பவர்கள் மனிதனாயிருப்பதால் முஹம்மத் என்றும், மனிதன் என்றும் கருத்து வைக்கலாம்.
 
மொழியழிலக்கண மேதைகள் இவ்வாறு வசனம் வருமிடத்தில், அதாவது பிரதிப் பெயருக்கு முன் சுட்டப்படும் நபர் அல்லது வஸ்த்து கூறுப்படாமல் வருமிடங்களில் அந்தப் பிரதிப் பெயருக்கு ضَمِيْرْ شَأْنْ – “ழமீர் ஷஃன்” என்பர். இதன் விளக்கம் என்னவெனில், இது எது போலெனில் நாம் பேசிக் கொண்டு செல்லும் போது இடையில் “அதாவது” என்று சொல்வது போலாகும். இதன் சுருக்கம் அதற்கு பொருள் இல்லை என்பதே.
 
திருக்குர்ஆனில் பொருள் இல்லாத ஒரு “நுக்தா” கூட இருக்க முடியாது. ஏனெனில் அது மனிதனின் பேச்சு அல்ல. அல்லாஹ்வின் பேச்சு. மனிதனின் பேச்சில் அர்த்தமில்லாத சொல் வருவதற்கு சாத்தியமுண்டு. ஆனால் அல்லாஹ்வின் “கலாம்” பேச்சில் அவ்வாறு வருவது நாகரீகமற்றதாகும்.
 
மேற்கண்டஇந்த விளக்கம் எனது கற்பனையல்ல. இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் தங்களின் “அல் இன்ஸானுல் காமில்” என்ற நூலில் எழுதியுள்ள கருத்தாகும்.
 
வட்டிலப்பம் வழங்கிய மகான் போன்ற ஒருவர் ஒரு கருத்தைக் கூறினால் அதைத் தூக்கியெறியலாம். ஆயினும் மகான் அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபீகள், ஞான மகான்கள் மத்தியில் மிகப் பிரசித்தி பெற்ற, வஹ்ததுல் வுஜூத் கருத்தை அள்ளி இறைத்த பெரும் மகான் ஆவார்கள். அத்தகைய மகானை வட்டிலப்பம் போல் நினைத்து தூக்கியெறிதல் குற்றமாகும்.
 
قال الإمام الشّيخ عبد الكريم الجيليّ (767 هـ – 1365م) فى تفسير قوله تعالى ‘ وما خلقنا السموات والأرض إلّا بالحقّ ‘ فمَثَلُ العالم مَثَلُ الثّلجِ، والحقّ سبحانه وتعالى الماءُ الّذي هو أصلُ هذا الثّلج، فاسمُ تِلك الثلجة على ذلك المنعقد مُعارٌ، واسمُ المائيَّةِ عليه حقيقيّةٌ، وقد نبَّهْتُ على ذلك فى العقيدة المسمّاةِ بالبَوَادஷِرِ الغَيْثِيَّةِ فى النَّوادِرِ العينيّة،
وَمَا الْحَقُّ فِى التِّمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعُ
وَمَا الثَّلْجُ فِى تَحْقِيْقِنَا غَيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ – وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعُ
تَجَمَّعَتِ الْأَضْدَادُ فِى وَاحِدِ الْبَهَا – وَفِيْهِ تَلَاشَتْ وَهُوَ عَنْهُنَّ سَاطِعُ
ஹிஜ்ரீ 767ல், மீலாதீ 1365ல் பிறந்த அஷ்ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், “வானங்கைளயும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றையும் சத்தியத்தைக் கொண்டே நாங்கள் படைத்தோம்” என்ற திரு வசனத்திற்கு விளக்கம் கூறுகையில்,
 
அகில உலகத்திற்கும் உதாரணம் ஐஸ்கட்டி போன்றும், அல்லாஹ்வுக்கு உதாரணம் அந்த ஐஸ் கட்டியாகவுள்ள நீர் போன்றுமாகும். ஐஸ்கட்டி என்ற பெயர் இரவல் பெயராகும். நீர் என்ற பெயர் எதார்த்தமாகும். இது தொடர்பாக எனது “அல்அல்பவாதிறுல் ஙைதிய்யா பின்னவாதிரில் ஐனிய்யா” எனும் நூலில் கூறியுள்ளேன்.
 
படைப்பு என்பது ஐஸ்கட்டி போன்றது. இறைவா! நீ அதிலுள்ள நீர் போன்றவன். ஸூபீகளான எங்களிடம் ஐஸ்கட்டி நீருக்கு வேறானதல்ல. ஆயினும் “ஷரீஆ”வாதிகளிடம் அது வோறானதாகும். ஐஸ் கட்டி கரைந்து நீரானால் அதற்கான சட்டம் இல்லாமற் போய் நீருக்கான சட்டம் வந்துவிடும். ஒன்றுக்கு மற்றது எதிரான இரண்டு அம்சங்கள் “ஹக் தஆலா”வான அல்லாஹ்வில் ஒன்று சேர்ந்துள்ளன. இவ்வாறு கூறியுள்ளார்கள்.
 
அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கண்ட பாடலில் அல்லாஹ்வுக்கும், படைப்புக்கும் உதாரணம் கூறிய போது அல்லாஹ் நீர் போன்றவன் என்றும், படைப்பு ஐஸ்கட்டி போன்றது என்றும் கூறியுள்ளார்கள்.
 
இதன் கருத்து என்னவெனில் இரண்டும் ஒன்றுதான் என்பதாகும். ஐஸ்கட்டிக்கு எதார்த்தத்தில் உள்ளமை இல்லை. இதேபோல் மனிதனுக்கு மட்டுமன்றி பொதுவாக படைப்புக்கு உள்ளமை என்பது கிடையாது. அதற்கு உள்ளமை இல்லையென்றால் அதன் கருத்து அப்படியொன்று இல்லை என்பதேயாகும்.
 
நீருக்கு உள்ளமை உண்டு. நீர் உறைந்ததால் – இறுகியதால் இறுகிய அத்தோற்றம் ஐஸ்கட்டி என்றழைக்கப்படுகின்றது. எதார்த்தத்தில் இருப்பது நீரேயன்றி ஐஸ்கட்டியல்ல. ஐஸ்கட்டி என்பது பெயரிலும், தோற்றத்திலும் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் அதற்கு “வுஜூத்” இல்லை.
 
மனிதன் பேதமையின் காரணத்தால் இல்லாத ஐஸ்கட்டியை இருப்பதாகவும், அது நீருக்கு வேறான ஒன்றென்றும் நினைத்துக் கொண்டான். ஏமாற்றமடைந்து விட்டான். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது பேதமையேயாகும். ஏமாற்றமுமேயாகும். இதை எழுதிய என் நினைவுக்கு நான் சிறுவனாயிருந்த காலத்தில் செவியேற்ற யாரோ ஒருவரின் பாடல் நினைவுக்கு வந்து கண் முன்னே நிற்கிறது. “உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாதோ” இதுவே பாடல்.
 
وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا
உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட்டது (திருக்குர்ஆன் 45-35) உலக வாழ்க்கை யாரையாவது என்றாவது ஏமாற்றியுள்ளதா? ஒருவன் இன்னொருவனிடம் நான் நாளைக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்களித்துவிட்டு அவன் போகவில்லையானால் அவன் ஏமாற்றிவிட்டான் என்று சொல்லலாம். ஒருவன் இன்னொருவனிடம் நாளைக்குப் பத்தாயிரம் பணம் தருகிறேன் என்று வாக்களித்துவிட்டு மறுநாள் அவன் கொடுக்கவில்லையானால் அவன் ஏமாற்றிவிட்டான் என்று சொல்வோம். இவ்வாறு ஏமாற்றுவதையா உலக வாழ்க்கை ஏமாற்றிவிட்டதென்று அல்லாஹ் சொல்கிறான். இல்லை. அவ்வாறில்லை.
 
உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றுகிறதென்றால் உலகமே ஏமாற்றுகிறதென்று சொல்கிறான். ஏமாற்றுதல் என்றால் ஒன்றை அதுவல்லாத வேறொன்றாக காட்டுதல், காணுதல், நம்புதல், பார்த்தல் எனப்படும். இதை விளங்காதவன் வெறும் மட்டிதான். உலகம் தன்னை அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றாக காட்டுகிறதே அது ஏமாற்றுதல்.
 
யாரோ ஒரு கவிஞன் பின்வருமாறு கூறினான். உலகே மாயம், வாழ்வே மாயம், வாழ்வில் நாம் காணும் சுகமே மாயம். எல்லாமே மாயம்.
 
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – فَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةْ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةْ
இப்னு அறபீ நாயகம் அவர்களின் இப்பாடலுக்கு அஷ் ஷெய்குல் காமில் அல் ஆரிபுல் வாஸில் ஸுல்தானுல் மஜாதீப் அப்துல் காதிர் அஸ்ஸூபீ அல் ஹைதறாபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு விரிவுரை நூல் அறபியில் எழுதியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
إنما الكون خيال
“கவ்ன்” என்பது ما سوى الله அல்லாஹ்வின் படைப்பு அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். சிற்றெறும்பு முதல் கட்டெறும்பு வரை, பூனை முதல் ஆனை வரை அனைத்து படைப்புகளையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
 
இவை யாவும் “கயால்” என்று இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.
 
“கயால்” என்பதற்கு ஸூபீ மகான்கள் ஒரு வரைவிலக்கணம் கூறுகிறார்கள். அவ்வரைவிலக்கணத்தின் வெளிச்சத்தில் நாம் ஆய்வு செய்து பார்ப்போம்.
 
الخيال – كُلُّ مَا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ
என்பதாகும்.
 
கயால் என்பது கண்ணால் காணக்கூடியதான ஒன்று. ஆயினும் அது கண்ணால் கண்ட வஸ்த்தாக இருக்காது. இதெல்லாம் “கயால்” எனப்படும். உதாரணமாக கானல் நீர் போன்று. கானல் நீரைக் காணலாம். அதனண்டை சென்று பார்த்தால் அது கண்ணுக்குத் தெரிந்த பொருளாக எதார்த்தத்தில் இருக்காது. இவ்வாறுதான் நாம் காணும் அனைத்து பொருட்களுமாகும்.
 
இவ்வரைவிலக்கணத்தின் படி நாம் இவ்வுலகில் எதையெல்லாம் கண்ணால் காண்கிறோமோ அதுவெல்லாம் “கயால்” தான். அதாவது அல்லாஹ்வின் வெளிப்பாடுகள்தான்.
 
அல்லாஹ்வின் வெளிப்பாடுதான் என்று சொல்வதால் அல்லாஹ் வேறு அவனின் வெளிப்பாடு வேறு என்று விளங்கிக் கொள்ளுதல் கூடாது.
 
மோதிரம் தங்கத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் தங்கம் வேறு, மோதிரம் வேறு என்ற கருத்து வராது. ஆணி இரும்பின் வெளிப்பாடு என்று சொன்னால் ஆணி வேறு இரும்பு வேறு என்ற கருத்து வந்து விடாது. பானை மண்ணின் வெளிப்பாடு என்றால் பானை வேறு மண் வேறு என்ற கருத்து வராது. வெளிப்பாடு என்னவென்று தெரியாமற் போனதினால்தான் அதிகமான மக்கள் விடயத்தை விளங்காமற் போயினர்.
 
அல்லாஹ்வின் “தஜல்லீ”, அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று சொன்னாலும் அது எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்களைக் குறிக்காது. மோதிரம் தங்கத்தின் வெளிப்பாடு என்றால் பெயரில் மட்டும்தான் இரண்டு பொருட்கள் விளங்கப்படுகின்றன. எதார்த்தத்தில் இருப்பது தங்கம் என்ற ஒரேயொரு பொருள் மட்டுமேயாகும். இவ்வாறுதான் ஷேட் பஞ்சின் வெளிப்பாடு என்பதும், சட்டி மண்ணின் வெளிப்பாடு என்பதும், கேக் மாவின் வெளிப்பாடு என்பதுமாகும். இவ்வுதாரணங்கள் இரண்டு பொருட்களைக் காட்டினாலும் எதார்த்தத்தில் இருப்பது ஒரேயொரு பொருள்தான்.
 
முன்னோர்கள் எம்மைவிட அறிவு ஞானமுள்ளவர்களாயினும், பக்தி, தக்வா உள்ளவர்களாயினும் அவர்கள் அக்கால தமிழிலும், அவர்களின் நடையிலும் மக்களுக்கு இறைஞானத்தை விளங்கப்படுத்தியதாலும், சில விடயங்களைத் தெளிவாச் சொல்லாமல் ஜாடையாக சொன்னதினாலும் பொது மக்கள் சரியான கருத்தை விளங்கத் தவறிவிட்டார்கள்.
 
எனது மதிப்புக்குரிய தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள் என்னைவிட ஆயிரம் மடங்கு பேணுதலுள்ளவர்களாகவும், “இல்ஹாம்” உடைய அறிவுள்ளவர்களாகவும் இருந்தாலும் இக்காலத் தமிழில் பேசாமல் பழைய தமிழில் பேசியதாலும், எடுத்ததெற்கெல்லாம் பத்வா வழங்கி மக்களிடையே பிளவையும், பிரச்சினையையும் ஏற்படுத்துகின்ற உலமாஉகளின் அட்டூழியத்தைப் பயந்ததாலும் அவர்கள் தெளிவாகச் சொல்லாமல் நொடி சொல்வது போல் இறைஞானம் சொல்லி வந்ததால் பொது மக்களில் அநேகர் விளங்கவில்லை. இன்னோரை நான் குறை சொல்லவில்லை. அவர்களின் சூழல் அவ்வாறுதான் அமைந்திருந்தது.
 
இமாம் ஸெய்யிதுத் தாயிபா – ஸூபீகளின் தலைவர் என்று அனைவராலும் புகழப்படுகின்ற ஜுனைதுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பச்சை பச்சையாக மக்கள் மத்தியில் கூறி வந்தவர்கள். இமாம் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கொலை செய்யப்பட்டபின் இந்த ஞானத்தை மிகவும் இரகசியமாகவே கூறி வரலானார்கள்.
 
وقد كان الحسن البصري، وكذلك الجنيد والشّبلي وغيرهم لا يقرِّرون علمَ التّوحيد إلا فى قُعُورِ بُيوتِهم بعد غلق أبوابهم وجَعلِ مفاتيحها تحتَ وَرِكِهم، ويقولون أتحبّون أن تُرمى الصحابةُ والتابعون الّذين أخذنا عنهم هذا العلمَ بالزندقة بهتانا وظلما،
 
இமாம் இறைஞானி ஹஸனுல் பஸரீ, இறைஞானி ஸூபீகளின் தலைவர் ஜுனைதுல் பக்தாதீ, இமாம் இறைஞானி அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும், இன்னும் பலரும் “தவ்ஹீத்” ஞானம் பேசுவதாயின் தமது வீடுகளின் உள்ளே, வீட்டுக் கதவுகளைப் பூட்டி திறப்புக்களை தங்களின் துடைக்கடியில் வைத்துக் கொண்டே பேசுவார்கள். நாம் பகிரங்கமாகப் பேசினால் இந்த ஞானத்தை நாம் கற்றுக் கொண்ட நபீ தோழர்களையும், அவர்களைத் தொடர்ந்தவர்களையும் முர்தத் என்றும், சிந்தீக் என்றும் அநீதியாகப் பேசுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்றும் கேட்பார்கள்.
அல்யவாகீத், பக்கம் 17
முதலாம் பாகம்,
ஆசிரியர்: இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ அவர்கள்
 
இவ் இமாம்களின் நடவடிக்கை மூலம், பேச்சுக்கள் மூலம் குறித்த இந்த ஞானத்தை பகிரங்கமாக பேசுவதற்கு கடுமையாக பயந்துள்ளார்கள் என்று புரிய முடிகிறது.
 
நமது இலங்கை நாட்டில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பகிரங்கமாக பேசுபவர்களும், எழுதுபவர்களும் நானும், என்னுடனுள்ள மௌலவீமார்களுமேயாவர். வஹ்ஹாபிகளின் அம்புகள் எங்களை நோக்கி நீட்டப்பட்டுள்ளன என்பது எமக்குத் தெரியாத ஒன்றல்ல. எங்களுக்கு ஏதாவதோர் துன்பம் நிகழ்ந்தால் அது வஹ்ஹாபி அம்புகளின் தாக்கமாகவே இருக்கும். வேறெவருமே எங்களுக்கு எதிரிகள் அல்ல.
 
நான் அறிந்தவரை உலகில் தோன்றி மறைந்த 124,000 நபீமார்களில் ஒருவரும் பாக்கி இல்லாமலும், மற்றும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவ்லியாஉகள், மஷாயிகுமார்களில் எந்த ஒருவரும் பாக்கியில்லாமலும் அவர்கள் அனைவருமே “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை சரியென நம்பினவர்களும், அதை நிலை நாட்ட அயராதுழைத்தவர்களுமேயாவர். அதற்கு ஆதாரம் அவர்கள் அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவை வாயால் மொழிந்தவர்களும், அதன் எதார்த்தமான கருத்தாகிய “அல்லாஹ் தவிர வேறொன்றுமே இல்லை” என்று மனதால் நம்பினவர்களுமேயாவர்.
 
இதன் பிறகு أَحَدٌ “அஹதுன்” என்பது பற்றி ஆய்வு செய்வோம். இச் சொல்லுக்கு ஏகன் – ஏகமுமானவன் என்று பொருள் சொல்வதே சரியானதென்று நான் கருதுகிறேன்.
 
ஏனெனில் “இக்லாஸ்” அருளப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட அவற்றில் பின்வரும் காரணமே பலம் வாய்ந்ததாக அறிகிறேன். பலம் கூடியதோ, குறைந்ததோ ஏதாவதொரு காரணம் இருக்குமாயின், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் எழுதியிருந்தார்களாயின் அக்காரணம் பொருத்தமற்றதாக இருக்கமாட்டாது.
 
இதற்குக் கூறப்பட்ட காரணங்களில் வலுவான காரணம் பற்றி இங்கு எழுதுகிறேன்.
 
عن ابن عبّاس رضي الله عنهما أنّها نزلت فى أَرْبَد بن قَيْسٍ وعامر بن الطُّفيل، أقْبَلَا ذاتَ يوم يُريدان رسول الله صلّى الله عليه وسلّم، وهو فى المسجد الحرام جالس فى نَفَرٍ مِن أصحابه، فدخلا المسجدَ، فَاسْتَشْرَقَ النّاس لِجَمالِ عامر بن الطُّفيل، وكان من أجمل النّاس، إلّا أنّه أعورُ، فجعلَ يسئلُ أين محمد؟ وأخبروه، فقال رجلٌ من أصحابه عليه الصّلاة والسّلام، يا رسول الله! هذا عامر بن الطُّفيل، قد أَقْبَلَ نحوك، قال رسول الله صلّى الله عليه وسلّم دَعْهُ، فإن يُرِدِ اللهُ به خيرا يَهْدِه، وأقبلَ حتّى قام على رأسه عليه الصلاة والسلام، فقال أنت محمد؟ فقال أنا محمد، فقال إلى أيّ شيئ تدعونا إليه؟ قال أدعو إلى الله ربّي وربِّ كلِّ شيئ، فقال عامر اُنسُبْ لنا ربّك أَمِن ذهب هو؟ أم فِضَّةٍ أو مِن حَدِيدٍ أم من خشبٍ؟ فأنزل الله هذه السورة، جوابا لسؤال عامرٍ،
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்.
 
“ஸூறதுல் இக்லாஸ்” என்ற அத்தியாயம் அர்பத் இப்னு கைஸ், ஆமிர் இப்னுத் துபைல் என்ற இரு காபிர்கள் தொடர்பாக அருளப்பட்ட அத்தியாயமாகும்.
 
ஒரு சமயம் மேலே பெயர் குறித்த பெருமானாரின் எதிரிகள் இருவரும் பெருமானாருக்கு எதிரான ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு பெருமானார் அவர்கள் மக்கா பள்ளிவாயலில் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து மக்கா பள்ளிவாயலுக்கு திடீரென்று வந்தார்கள். அவ்வேளை பெருமானார் அவர்கள் தங்களின் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரும் பள்ளிவாயல் உள்ளே வந்துவிட்டார்கள்.
 
ஆமிர் இப்னுத் துபைல் என்பவர் மிக அழகானவர். இதனால் இவரைக் கண்ட நபீ தோழர்கள் இவரைப் பார்ப்பதற்கு முற்பட்டனர். எனினும் இவர் நபீகளாரின் எதிரியாயிருந்ததால் தோழர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. (இவர் பெருமானாரின் எதிரியல்லவா? ஏன் இங்கு வந்துள்ளார்? பெருமானாருக்கு அநீதி செய்யவா?) என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள்.
 
வந்தவர் முஹம்மத் எங்கே என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டபோது அங்கிருந்த நபீ தோழர் ஒருவர் நபீ பெருமானிடம் வந்து அல்லாஹ்வின் றஸூலே! ஆமிர் இப்னுத் துபைல் உங்களைக் கேட்கிறான் என்று பதட்டப்பட்டவராகச் சொன்னார். நபீ பெருமான் அவரை விடுங்கள் வரட்டும். அல்லாஹ் அவருக்கு நல்லதை நாடியிருந்தால் நல்வழி காட்டுவான் என்றார்கள்.
 
பெருமானாரின் தலைப்பக்கமாக வந்து நின்ற அவன் நீதானா முஹம்மத்? என்று கேட்டான். ஆம் என்றார்கள் அண்ணலெம் பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள். அப்போதவன் எங்களை எதன் பக்கம் அழைக்கிறாய் என்று கேட்டான். அதற்கவர்கள் எனது “றப்பு” இரட்சகனும், சகல வஸ்த்துவின் இரட்சகனுமான அல்லாஹ்வின் பால் அழைக்கிறேன் என்றார்கள்.
 
அப்போது அவன் நீ சொல்லும் இறைவன் எதனாலானவன்? தங்கத்தினாலா? வெள்ளியினாலா? இரும்பினாலா? மரத்தினாலா? என்று கேட்டான். அவனின் கேள்விக்குப் பதிலாக அவ்வேளை அருளப்பட்டதே “இக்லாஸ்” அத்தியாயமாகும்.
 
அவன் அவ்வாறு கேட்டதற்கு காரணம் என்னவெனில் மக்கத்து “காபிர்”கள் “கஃபா”வின் உள்ளே 360 விக்கிரகங்கள் வைத்து வணங்கி வந்தார்கள். அவற்றிற் சில தங்கத்தினாலும், இன்னும் சில வெள்ளியனாலும், இன்னும் சில இரும்பினாலும், இன்னும் சில மரத்தினாலும் செய்யப்பட்டவையாயிருந்தன. இதனால்தான் முஹம்மத் சொல்கின்ற தெய்வம் எதனால் செய்யப்பட்டதென்று அவன் கேட்டான். அவனுக்குப் பதிலாகவே “இக்லாஸ்” அத்தியாயம் இறங்கியது.
 
قل هو الله أحد
என்ற வசனத்துக்கு இன்று உலமாஉகள் சொல்வது போல் “அல்லாஹ் ஒருவன் என்று சொல்லுங்கள்” என்று வைத்துக் கொண்டால் இது அவனின் கேள்விக்குப் பதிலாகுமா? சிந்தியுங்கள். அவன் உங்களின் அல்லாஹ் எதனாலானவன்? தங்கத்தினாலா? வெள்ளியினாலா? இரும்பினாலா? மரத்தினாலா? என்றுதான் கேட்டானேயன்றி அவன் ஒருவனா? இருவரா? பலரா? என்று கேட்கவில்லை. இவ்வாறு கேட்டவனுக்கு அவன் நீங்கள் செய்து வைத்திருக்கின்ற தெய்வங்கள் போல் எதனாலானவனுமல்லன் என்று சொல்வதே அவனுக்கான பதிலாகும். ஆனால் அதில் அவ்வாறில்லை.
 
இதன் மூலம் நாங்கள் விளங்கும் கருத்து என்னவெனில் “அஹத்” என்ற சொல்லுக்கு ஏகன், எல்லாமாயுமுள்ளவன் என்று பொருள் கொண்டால் மட்டுமே அவனின் கேள்விக்குரிய பதிலாக قل هو الله أحد என்ற பதில் அமையும். இதற்கு ஒருவன் என்று பொருள் கொள்வது அவனின் கேள்விக்குரிய பதிலாகாது. திருவசனத்தில் வந்துள்ள “அஹத்” என்ற சொல்லுக்கு ஏகன் என்று பொருள் வைத்தால் அவன் ஏகமுமானவன் என்று விளக்கம் வரும். அதாவது அவன் இரும்பாலானவனும்தான், தங்கத்தாலானவனும்தான், வெள்ளியாலானவனும்தான், அவன் மரத்தாலானவனும்தான் என்று விளக்கம் வரும்.
 
இது எவ்வாறு சரியாக அமையுமெனில் தங்கம், வெள்ளி, இரும்பு மரம் என்பவையாவும் ஏனைய படைப்புகள் போல் அவனின் “தாத்” உள்ளமையின் வெளிப்பாடுகளேயாகும். படைப்புகளில் ஒன்றும் அவனுக்கு வேறாகாத, அவன் தானானதாக இருப்பது போல் மேற்கண்ட தங்கம், வெள்ளி, இரும்பு, மரம் எல்லாமே அவனுக்கு வேறாகாத அவன் தானானவையோயாகும்.
 
தங்கம் எந்த வடிவில் இருந்தாலும், வெள்ளி எந்த வடிவில் இருந்தாலும், இரும்பு எந்த வடிவில் இருந்தாலும், மரம் எந்த வடிவில் இருந்தாலும் இவையாவும் அவன் தானானவையும், அவனின் வடிவங்களுமேயாகும்.
 
இவ்வடிப்படையில் நமது ஆய்வை நாம் நகர்த்தினால் அல்லாஹ்வின் “தஜல்லியாத்” வெளிப்பாடுகள் யாவும் அவனே என்றும், அந்த வெளிப்பாடுகளின் வடிவங்களும் அவனின் வடிவங்கள் என்றும், அவற்றின் உருவங்கள் யாவும் அவனின் உருவங்கள் என்றும் விளங்க வரும்.
 
இவ்வடிப்படையிலேயே “லாஇலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை என்ற தத்துவம் வெளிப்படுகின்றது.
இதனால்தான் இறைஞானிகளும், ஸூபீ மகான்களும்
காணும் பொருளையெல்லாம்
கர்த்தன் “மள்ஹர்” என்று
பேணி “ஷுஹூது” செய்து
பிலப்படுவதென்னாளோ?
என்று பாடினார்கள்.
 
படைப்புகள் யாவும் அவன் “மள்ஹர்”கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் பலர் எல்லாம் அவனே என்ற தத்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது வியப்பாக உள்ளது. இத்தகையோர் தங்கம் வேறு என்றும், மோதிரம் வேறு என்றும், வெள்ளி வேறு என்றும், வெள்ளிக் கொலுசு வேறு என்றும், இரும்பு வேறு என்றும், ஆணி வேறு என்றும், மரம் வேறு என்றும், கதிரை வேறு என்றும் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வார்களாயின் அவர்கள் பைத்தியக்கார மருத்துவ மனைக்கு அனுப்ப வேண்டியவர்களேயாவர்.
 
“ளாஹிறும், மள்ஹறும்”
 
படைப்புகள் அல்லாஹ்வின் “மள்ஹர்”கள் என்று ஏற்றுக் கொள்பவர்கள் எல்லாம் அவனே என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான காரணம் அவர்கள் “மள்ஹர்” என்றால் என்ன? “ளாஹிர்” என்றால் என்ன? என்பதை சரியாக, தெளிவாக புரிந்து கொள்ளாமையேயாகும்.
 
தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை எடுத்துக் கொள்வோம். இதில் “ளாஹிர்” எது? “மள்ஹர்” எது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
“ளாஹிர்” என்றால் வெளியானது. “மள்ஹர்” என்றால் அது வெளியான இடம். மோதிரத்தின் வடிவம், அதன் அமைப்புதான் “மள்ஹர்” எனப்படும். அந்த மள்ஹரில் வெளியான தங்கம்தான் “ளாஹிர்” எனப்படும். வெளியானதென்றும், வெளியான இடமென்றும், ளாஹிர், மள்ஹர் என்றும் இரு பெயர்களால் சொல்லிக் கொண்டாலும் கூட இரு பொருட்கள் அங்கு இருக்காது. ஒரு பொருள் மட்டும் தான் இருக்கும். அதுவே தங்கம். இப்போது மோதிரம் தங்கம் தானானதேயன்றி தங்கத்துக்கு வோறான தனியான ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்வது போல் வெள்ளிக் கொலுசு என்ற உதாரணத்தையும், அதுபோல் நான் மேலே குறிப்பிட்ட உதாரணங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதனாக அல்லாஹ் வெளியானான் என்றால் மனிதனாக அவனே உள்ளான் என்பதே அதன் அந்தரங்க விளக்கமாகும். அல்லாஹ் மனிதன் என்று இரு பெயர்கள் சொல்லப்பட்டாலும் பொருள் ஒன்றேதான். இரண்டில்லை என்பதே இஸ்லாமிய தத்துவம். இன்றுள்ள உலமாஉகளோ இரண்டென்பதே இஸ்லாமிய தத்துவம் என்று கூறுகிறார்கள். இது ஏதோ ஒன்றால் சிரிக்க வேண்டிய விடயமாகும்.
 
நான் கூறிவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இந்து மத ஞானமாம். இது கண்ணியமுள்ள உலமாஉகளின் கதை. இந்து மத ஞானம்தான் ஹுலூல், இத்திஹாத் என்ற கொள்கைகளாகும். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் ஹுலூல், இத்திஹாத் என்பதற்கு இடமே இல்லை. நானும், ஸூபீ மகான்களும் சர்வ படைப்புகளிலும் அல்லாஹ் இருக்கின்றான் என்று ஒரு போதும் சொன்னதில்லை. இதன் பிறகு சொல்லப் போவதுமில்லை. சர்வமும் அவனே என்றுதான் நானும் சொல்கிறேன், ஸூபீகளும் சொல்கிறார்கள். இந்தக் கருத்தைக் கருவாகக் கொண்டே “எல்லாம் அவனே” என்று சொல்லப்படுகின்றது.
 
இக்லாஸ் அத்தியாயம் அருளப்பட்டதற்கான காரணங்களில் மிகப் பிரதானமான காரணமான அர்பத் இப்னு கைஸ், ஆமிர் இப்னுத் துபைல் இருவரின் வரலாறை எழுதினேன். எனினும் அந்த வரலாறை நான் முடிக்காமல் தொடர்ந்து “அஹத்” என்று சொல்லுக்கு விளக்கம் எழுதினேன்.

நான் “அஹத்” என்ற சொல்லுக்கு அந்த வரலாறை ஆதாரமாகக் கொண்டு எழுதிய விளக்கம் மூலம் “அஹத்” என்ற சொல்லுக்கு ஒருவன் என்று பொருள் கொள்ளாமல் ஏகன் என்று பொருள் கொள்வதே சரியென்றும் குறிப்பிட்டு அல்லாஹ் ஏகன், அவன் ஏகமுமானவன் என்று விளக்கம் எழுதியிருந்தேன். உன்னிப்பாக வாசித்தவர்கள் உண்மை எதுவென்று உணர்ந்திருப்பார்கள்.

ஆமிர் இப்னுத் துபைல், முஹம்மதே! நீ சொல்லும் தெய்வம் தங்கத்தினாலானதா? வெள்ளியினாலானதா? இரும்பினாலானதா? என்று கேட்ட போதுதான் இக்லாஸ் அத்தியாயம் இறங்கியது என்றதோடு அவனின் வரலாறை நிறுத்தியிருந்தேன்.

இப்போது தொடர்கிறேன்.
فقال عامرٌ مَا لِيْ إن أسْلمْتُ؟ قال عليه الصلاة والسلام لَكَ ما لِلْمسلمين، وعليك ما عليهم، قال عامر أتجعلُ لي الأمر بعد موتك؟ قال صلّى الله عليه وسلّم ليس لك ذلك ، ولا لِقومِك، ولكن ذلك إلى الله تعالى يجعله حيث يشاء، قال عامر فتَجْعَلُنِيْ على الوَبَرِ وأنت على المَدَر، قال لا، قال فماذا تجعل لي؟ قال عليه الصلاة والسّلام أجعلُ لك أعنّة الخيل تغزو عليها، قال أَوَ لَيْسَ ذَلِكَ الْيَوم لي؟ قال عليه الصّلاة والسّلام لا، قال عامر قُمْ معي أُكلِّمْكَ، فقام معه رسول الله صلّى الله عليه وسلّم، ووكان قد قال عامرٌ لأربد بن قيسٍ إذا رأيتَنِي أكلّمُه دُرْ خلفه واضربْه بالسيف، فجاء عامر بالنبي صلّى الله عليه وسلّم ووضَعَ يدَه على عاتقه يُكلِّمُه، ويقول له يا محمد إنّ ربّك الّذي تدعونا إليه كيف هو؟ وأيّ شيئ يفعل؟ وما أَشْبَهَ ذلك، وأشار عند ذلك إلى أربد بن قيس أنِ اضْرِبْهُ، فلمّا أراد أربد بن قيس أن يَخْتَرِط سيفَه فاخترطَ مِقدارَ شبرٍ، فحبسهُ الله تعالى فلم يقدر على سلِّه، وجعل عامر يومئ إليه وهو لا يستطيع سلَّه، فرأى رسول الله صلّى الله عليه وسلّم مِن خلفِه، لأنّه كان يُبصرُ من خلفه كما كان بيصر من أمامه، فقال اللهم اكْفِنِيْهِمَا بما شئتَ فولّيا هاربين،

தமிழாக்கம்:

அப்போது ஆமிர், நான் இஸ்லாமானால் எனக்கு என்ன கிடைக்குமென்று பெருமானாரிடம் கேட்டான். நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதுவெல்லாம் கிடைக்கின்றதோ அதுவெல்லாம் உனக்கும் கிடைக்கும் என்றார்கள். அப்போது ஆமிர், நீ மரணித்தால் என்ன கிடைக்குமென்று கேட்டான். அதாவது பதவி கிடைக்குமா என்று வினவினான். உனக்கோ, உனது கூட்டத்தினருக்கோ அவ்வாறு ஒன்றும் கிடைக்காது. அது அல்லாஹ்வைப் பொறுத்த விடயம் என்றார்கள்.

அப்போது ஆமிர், என்னை காட்டில் வைத்துவிட்டு நீ வீட்டில் இருக்கின்றாய் என்று கூறிவிட்டு எனக்கு என்னதான் தருவீர் என்று கேட்டான். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நீ ஏறி யுத்தம் செய்வதற்காக குதிரை தருகிறேன் என்றார்கள். அதற்கவன் இன்று எனக்கு அது இல்லையா என்று கேட்டான். இல்லை என்றார்கள் எங்கள் நபீ.

அப்போது ஆமிர் உன்னுடன் பேச வேண்டும் எழுந்து வா என்றான். அவனுடன் பேசுவதற்காக நபீயவர்கள் எழுந்து சென்றார்கள்.

இந்த ஆமிர் என்பவனும், அர்பத் இப்னு கைஸ் என்பவனும் நபீயவர்களிடம் வருமுன் முஹம்மதைக் கொலை செய்ய வேண்டும். அதற்கு வழி என்னவெனில் நான் முஹம்மதோடு பேசுவதையெல்லாம் பேசிவிட்டு உன்னுடன் தனிமையாக பேச வேண்டும் எழுந்து வா என்று சொல்வேன். அவர் எழுந்து வருவார். நான் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது நீ அவரின் பின்பக்கமாக வந்து அவரை வாளால் வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஆமிர், அர்பத் இப்னு கைஸ் என்பவனிடம் சொல்லி வைத்திருந்தான். சதித்திட்டம் தீட்டியிருந்தான்.

நபீ அவர்களை தனிப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்த ஆமிர் நபீ பெருமானின் திருத் தோளில் தனது கையை போட்டுக் கொண்டு அவர்களுடன் பேசத் தொடங்கினான். முஹம்மதே! நீ சொல்கின்ற கடவுள் எப்படியானவன்? அவன் என்ன செய்கிறான்? இன்னும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது மற்றவன் பெருமானாருக்குப் பின்புறம் வந்து உறையில் வாளை வைத்துக் கொண்டு ஆயித்தமாக நின்றான். அப்போது ஆமிர் தன் தோழன் அர்பத் என்பவனுக்கு வெட்டு என்று கண்ணால் ஜாடை காட்டினான்.

அர்பத் என்பவன் பெருமானாரை வெட்டிக் கொல்வதற்காக உறையிலிருந்த வாளை உருவினான். ஒரு சான் அளவுதான் வாள் வந்தது. முழுமையாக வரவில்லை. அல்லாஹ் அந்த வாளைப் பிடித்துக் கொண்டான். ஆமிர் வெட்டு என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அர்பத் என்பவனால் வாளை உருவ முடியாமற் போயிற்று. இவர்கள் இருவரின் நடவடிக்கைகளை முன்னால் பாரப்பது போல் பின்னாலும் பார்க்கும் சக்தி வழங்கப்பட்ட பெருமானார் அவர்கள் கண்டதும் இறைவா! யா அல்லாஹ்! இவ்விருவரின் தீமையிலிருந்தும் என்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். அதோடு அவ்விருவரும் பயத்தால் நடுங்கியவர்களாக ஓடிவிட்டார்கள்.

وأرسل الله على أربد بن قيس صاعقة فى يوم صَحْوٍ ليس فيه غَيْمٌ فأحرقتْه، وطعن عامر بن الطّفيل فخرج غدّة من عُنقه، فأتى إلى امرأة سَلُوليّة فاشتدّ وجعه من تلك الطّعنة، فكان يقول غُدّةٌ كغُدّة البعير، فظهر له أثر الموت فى بيت سَلُوليّة، ثمّ دعا بفرسه وركبه وأجراه حتّى مات على ظَهر فرسه،

அவ்விருவரும் ஓடிக் கொண்டிருந்த போது மேகமே இல்லாத தெளிவான நாளில் அர்பத் இப்னு கைஸ் என்பவன் மீது அல்லாஹ் ஓர் இடியை இறக்கி அவனை எரித்தான். ஆமிர் இப்னுத்துபைல் என்பவனின் கழுத்தில் ஒட்டகத்துக்கு ஏற்படுகின்ற ஒரு வகைத் தீரா நோயை ஏற்படுத்தி அவனை அழித்தான்.

“அல்லாஹுஸ்ஸமத்” என்ற வசனத்திற்கு விளக்கம் எழுதுவதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதற்கு விளக்கம் எழுதுமுன், “இக்லாஸ்” அத்தியாயம் இறங்கியதற்கான பிரதான காரணமென்று நான் குறிப்பிட்ட அதே காரணம் வேறோர் அறிவிப்பில் வேறோர் விதமாக வந்துள்ளதையும் இங்கு எழுதுகிறேன்.
 
அதாவது மக்கத்தில் வாழ்ந்த காபிர்கள் அக்காலத்தில் “கஃபா”வின் உள்ளே 360க்கும் அதிகமான தெய்வங்களை வைத்து வழிபட்டு வந்தார்கள். அத் தெய்வங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமைப்பிலும், உருவத்திலும் இருந்தது. 360 தெய்வங்களும் ஒரே உருவத்தில் இருக்கவில்லை. அவர்கள் வைத்துக் கொண்ட விக்கிரகங்களிற் சில தங்கத்தாலானவையாகவும், இன்னும் சில வெள்ளியாலானவையாகவும், இன்னும் சில இரும்பினாலானவையாகவும், இன்னும் சில மரத்தாலானவையாகவும், இன்னும் சில மண்ணாலானவையாகவும் இருந்தன. இவையாவும் அவர்களின் கற்பனையில் உருவான உருவங்களும், அமைப்புக்களுமேயன்றி அல்லாஹ்வுக்கு எதார்த்தத்தில் அவ்வாறான உருவங்களும், அமைப்புக்களும் இருக்கவில்லை. இதுவே உண்மை.
 
உதாரணமாக அல்லாஹ்வுக்கு ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் என்ற திருநாமங்களும், அர்றஹ்மான், அர்றஹீம், அர்றஊப் என்ற திரு நாமங்களும் உள்ளன.
 
இவற்றில் முந்தின மூன்று திரு நாமங்களும் கோபம், அடக்கி ஆள்தல், பளிவாங்கல் என்ற அர்த்தங்கள் கொண்டவையும், பிந்தின மூன்று திருநாமங்களும் அன்பு, இரக்கம், சாந்தம் என்ற அர்த்தங்கள் கொண்டவையுமாகும்.
 
முஸ்லிம்களான நாம் மேற்கண்ட இரு வகைத் திருநாமங்கள் அல்லாஹ்வுக்கு உண்டு என்று நம்பி, அவற்றை மொழிந்தாலும் கூட அவற்றுக்கு ஏதோ ஒரு உருவத்தையோ, அமைப்பையோ கற்பனை செய்வதுமில்லை, அக்கற்பனைக் கேற்றவாறு சிலைகள் வைத்து வணங்குவதுமில்லை. ஆயினும் காபிர்கள் அவற்றுக்கு தமது கற்பனைக் கேற்ற உருவத்தையும், அமைப்பையும் கற்பனை செய்து அவர்களின் கற்பனைக்கேற்றவாறு உருவங்களைச் செய்து அவற்றை வழிபடுகின்றார்கள், வணங்குகின்றார்கள். இதை இஸ்லாம் சரி காணவில்லை. முஸ்லிம்களான நாம் அவ்வாறான பண்புகள் அவனுக்கு இருப்பதாக நம்பினாலும் கூட அந்தப் பண்புகளுக்கு ஏற்றவாறு உருவங்கைளயும், அமைப்புக்களையும் கற்பனை செய்து விக்கிரகங்களை வைப்பதில்லை. இதுவே சரியான வழியும், இஸ்லாம் கூறும் நல்வழியுமாகும். காபிர்கள் செய்வது பிழை என்பதற்கும், முஸ்லிம்களான நாம் செய்வது சரி என்பதற்குமான காரணம் பற்றி இங்கு எழுதுவதற்கு நான் விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ் அது பற்றி இன்னோர் இடத்தில் குறிப்பிடுவேன்.
 
நான் இங்கு கூற விரும்புவது என்னவெனில், பெருமானார் அவர்களிடம், முஹம்மதே! நீங்கள் கூறும் தெய்வம் எதனாலானவன்? தங்கத்தினாலா? வெள்ளியினாலா? அல்லது வேறு எந்த வஸ்த்துவால் ஆனவன்? என்று கேட்ட கேள்விக்கு விடையாக قل هو الله أحد என்ற வசனத்தை அல்லாஹ் அருளியது சரியானதும், பொருத்தமானதுமேயாகும். இதில் எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.
எனினும் இவ்வசனத்தில் வந்துள்ள “அஹத்” என்ற சொல்லுக்கு ஒருவன் என்று பொருள் கொள்வது காபிர்களின் கேள்விக்கு விடையாகாதென்பதே எனது கருத்தாகும்.
 
ஏனெனில் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் அந்தக் காபிர்கள் நீங்கள் கூறும் தெய்வம் ஒருவனா? இருவரா? பலரா? என்று கேட்டிருந்தால்தானே ஒருவன் என்று பதில் சொல்வது பொருத்தமாகும். அவர்கள் அவ்வாறு கேட்காமல் எதனாலானவன் என்று கேட்ட கேள்விக்கு இன்னதாலானவன் என்று, அல்லது எதனாலும் ஆனவனல்ல என்றுதானே பதில் கூறியிருக்க வேண்டும். இதுதானே கேள்விக்குரிய பதிலாகும்.
 
ஆகையால் அவர்களின் கேள்விக்குரிய பதிலாக قل هو الله أحد என்ற வசனம் ஆவதாயின் “அஹத்” என்ற சொல்லுக்கு ஏகன், அல்லது ஏகமுமானவன் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். எனது இக்கருத்துப் பிழையென்று கூற நினைப்பவர்கள் பெருமனங் கொண்டு ஆதாரத்தோடு எனக்கு அறிவிக்கும் பட்சத்தில் அவ்வாதாரங்களை நான் சரி கண்டால் எந்த ஒரு மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வேன்.
 
குறித்த திரு வசனத்தில் வந்துள்ள “அஹத்” என்ற சொல்லுக்கு ஏகன் என்றோ, ஏகமுமானவன் என்றோ பொருள் கொண்டால் கேள்வி கேட்ட காபிர்களின் கேள்விக்கு அது சரியான பதிலாக அமையுமென்பது எனது கருத்தாகும்.
 
அது எவ்வாறெனின் “வஹ்ததுல் வுஜூத்” என்ற அடிப்படையில் ஸூபீ மகான்களின் கருத்து என்னவெனில் எந்த ஒரு படைப்பாயினும் – தங்கமோ, வெள்ளியோ, இரும்போ, செம்போ, மண்ணோ, மரமோ அவையாவும் அல்லாஹ்வின் “தாத்”தின் வெளிப்பாடேயன்றி அதற்கு வேறான, சுயமான ஒன்றல்ல என்பதும், அந்தப் படைப்பு அல்லாஹ்வின் “தாத்”து கொண்டு நிற்பதேயன்றி அல்லாஹ்வின் “தாத்”து போல் சுயமாக, தனியாக நிற்கக் கூடியதல்ல. இவ்வாறு ஒருவன் நம்பினால் அவனின் நம்பிக்கை قائم بنفسه தன்னைக் கொண்டு நிலைபாடானது அல்லாஹ்வின் “தாத்” மட்டும்தான் என்ற தத்துவத்திற்கு முரண்பட்டதாகிவிடும்.
 
ஏனெனில் قائم بنفسه தன்னைக் கொண்டு நிற்பது ஒன்று இருக்குமானால் அது அல்லாஹ்வின் “தாத்” அல்லது அவனின் “வுஜூத்” உள்ளமை தவிர வேறொன்றுமே கிடையாது. படைப்புகளில் எதுவுமே தன்னைக் கொண்டு நிற்பது அல்ல. படைப்புகள் யாவும் قائم بالله அல்லாஹ்வைக் கொண்டே நிலை பெற்று நிற்பவையாகும்.
 
படைப்புகள் அல்லாஹ்வைக் கொண்டு நிற்பவை என்றால் அது எவ்வாறு என்பது தொடர்பாக நான் அறிந்த விளக்கத்தை எழுதுகிறேன். இவ்விளக்கம் எவரும் எனக்கு சொல்லித் தந்ததல்ல. எனினும் அல்லாஹ் எனதுள்ளத்தில் உதிப்பாக்கிய விளக்கமேயாகும். இவ்விளக்கம் கூட பிழையென்று கருதுபவர்கள் பெருமனங் கொண்டு ஆதாரத்தோடு அறிவித்தால் அதை என் தலை மேல் வைத்து ஏற்றுக் கொள்வதற்கு நான் நூறு வீதம் விருப்பமுள்ளவனாகவே உள்ளேன்.
 
படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதானது விழுவதற்கு சாய்ந்து கொண்டிருக்கின்ற ஒரு வாழை மரம் ஒரு عمود ஒரு முட்டில் நிற்பது போன்றதென்று கருத்துக் கொள்ளுதல் பிழையானதாகும். ஏனெனில் இதற்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை. ஒன்று வாழை மரம். மற்றது முட்டு. ஸூபிஸ தத்துவத்தில் இரண்டிற்கு இடமே கிடையாது. இரண்டு உண்டு என்று நம்பும் போது அல்லாஹ் என்று ஒருவனும், இன்னொரு வஸ்த்துவும் என்று நம்ப வேண்டும். அந்த வஸ்த்து எது? அது எதைக் கொண்டு நிற்கிறது என்ற கேள்வியும் ஏற்படும். இறுதியில் அந்த வஸ்த்துவும், அல்லாஹ் போல் தன்னைக் கொண்டு நிற்பதாக நம்ப வேண்டியேற்படும். தன்னைக் கொண்டு நிற்பது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையேயன்றி வேறொன்றுமல்ல.
 
எனவே, படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்பது என்றால் வாழை மரம் – முட்டு என்ற உதாரணம் போலன்றி இரண்டுக்கு இடமில்லாத வகையில் உதாரணம் அமைய வேண்டும். அவ்வாறு உதாரணம் சொல்வதாயின் ஷேட் என்பது பஞ்சைக் கொண்டு நிற்பது போல் என்றும், மோதிரம் தங்கத்தைக் கொண்டு நிற்பது போல் என்றும், கம்பி இரும்பைக் கொண்டு நிற்பது போலென்றும் உதாரணங்கள் எடுத்து இந்த அடிப்படையில் சிந்தித்தால் எதார்த்தம் புரியும்.
 
நான் மேலே சொன்ன உதாரணங்களில் பெயரளவில் மட்டும் இரண்டு வஸ்த்துக்கள் உள்ளனவேயன்றி எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை.
 
எனவே, படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதானது ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்பது போலும், மோதிரம் தங்கத்தைக் கொண்டு நிற்பது போலும், கம்பி இரும்பைக் கொண்டு நிற்பது போன்றுமென்றும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சிந்தித்தால் பெயரளவில் பஞ்சென்றும், ஷேட் என்றும், தங்கமென்றும், மோதிரமென்றும், இரும்பென்றும், கம்பியென்றும் இரண்டு பெயர்கள் சொல்லப்பட்டாலும் எதார்த்தத்தில் இருப்பது பஞ்சு மட்டுமே. மோதிரம் என்பதில்லை. இரும்பு என்பது மட்டுமே கம்பி என்பதில்லை.
எதார்த்தமென்னவெனில் பஞ்சின் “தஜல்லீ” வெளிப்பாடுதான் ஷேட் என்பதாகும். பஞ்சுக்குத்தான் “வுஜூத்” உள்ளதேயன்றி ஷேட்டுக்கு அல்ல. தங்கத்திற்குத்தான் “வுஜூத்” உள்ளதே தவிர மோதிரத்துக்கல்ல. இரும்புக்குத்தான் “வுஜூத்” உள்ளதே தவிர கம்பிக்கல்ல என்ற எதார்த்தம் புரியும்.
 
இதையே அஷ் ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.
 
سُبْحَانَ مَنْ أَظْهَرَ الْأَشْيَاءَ وَهُوَ عَيْنُهَا، قاله الشّيخ المذكور رحمه الله،
وقال الشّيخ عبد الكريم الجيلي رحمه الله فى كتابه الإنسان الكامل،
وَمَا الْـخَلْقُ فِـى الـتِّـمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعُ
وَمَا الثَّلْجُ فِى تَـحْـقِيْقِنَـا غَيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ – وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعُ
تَـجَمَّـعَتِ الْأَضْدَادُ فِـى وَاحِدِ الْبَهَا – وَفِيْهِ تَلَاشَتْ فَهُوَ عَنْهُنَّ سَاطِعُ
وقال الشّيخ عمر وليّ الله القاهري رحمه الله فى قصيدة له
إِلَهِي الْخَلْقُ مِثْلُ حَبَابْ – عَلَا مَاءً لَدَى الْأَحْبَابْ
فَـمَـاءٌ فِـى الْفَنَاءِ حَبَابْ – وَحَالَ بَـقَـاهُ يَـا اَللهُ
فَـأَيْـنَ أَنَـا إِذَا أَنْـتَـا – بِـذَاتِـيْ دَائِـمًـا كُـنْـتَـا
فَـمَـا بِـنْـتُ وَلَا بِـنْـتَـا – وَلَا تَـا بَـيْـنَـنَـا اَللهْ
وقال الشّيخ الأكبر ابن عربي رحمه الله فى هذا المعنى،
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – فَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةْ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةْ
وهؤلاء الأولياء العارفون الكمّل فقد أثبتوا الوجود لله تعالى فقط ونَفَوْهُ للخلق، ونفَوْا أيضا الإثنينيّة، وقالوا أيضا باستحالة الحلول والاتّحاد لعدم الإثنينيّة، لاحتياج الحلول والاتّحاد إلى الإثنينيّة،
فعلى كلّ عالم دينيّ أن يتعلّم علم الحكمة والحقيقة من شيخ كامل ذي الكرامة والإلهام والكشف، ويترك التعصّب وإنكار هذه العلوم التي قالها أولو الكشف والإلهام، والعلوم اللّدنّيّة، من غير دخل ومهارة فيها ومن غير معرفة اصطلاحات الصوفيّة، والله يعلم وأنتم لا تعلمون، فاسئلوا أهل الذّكر إن كنتم لا تعلمون، وقال الرسول صلّى الله عليه وسلّم ‘ إنّما العلم بالتعلّم ‘، ولكنّ الله تعالى يعلّم شخصا عمل بما علِمَ من غير واسطة المعلّم، كما قال سيّد الوجود محمّد صلّى الله عليه وسلّم من عمِلَ بما علِمَ ورّثه الله علم ما لم يعلم،
قال الله ربّ العزّة والجلال ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا، وما يذّكّر إلّا أولوالألباب، وقال سيّد الوجود صلّى الله عليه وسلّم الحكمة ضالّة المؤمن أخذها حيث وجدها،
ولم يأت الله بلفظة العلم بدل الحكمة فى قوله ومن يؤتى الحكمة، وكذلك لم يأت الرسول صلّى الله عليه وسلّم بلفظة العلم بدل الحكمة فى قوله الحكمة ضالّة المؤمن، وهذا دليل واضح لمزيّة وشرف الحكمة على العلم، لأنّ الحكمة موضوعها ذات الله وما تعلّق بها، كما قال أهل الله فى تعريف الحكمة الحكمة علم يبحث فيه عن حقيقة كلّ شيئ، وحقيقة كل شيئ وحقيقة كل ذرّة من ذرّات الكائنات هي ذاته المقدّسة، كما لا يخفى على من عرف ربّه بمحمّد صلّى الله عليه وسلّم وبشيخه كما عرفتُ ربّي بربّي، والشّيخ ربّ إن كان كاملا لا متمثّلا، والله ورسوله أعلم، والله يهدي من يشاء إلى صراط مستقيم،
 
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

இறைவன் பெறவுமில்லை, அவன் பிறரால் பெறப்படவுமில்லை. (அவன் எவரையும் பெறவுமில்லை. எவராலும் பெறப்படவுமில்லை)

இறைவன் இவ்வாறு தன்னை அறிமுகம் செய்ததற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? சிந்திப்போம். இன்ஷா அல்லாஹ். உண்மையை சந்திப்போம்.

இதற்கான சுருக்கமான காரணம் பின்வருமாறு.

“இக்லாஸ்” அத்தியாயம் அருளப்படுமுன் திரு மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த “காபிர்”களிற் சிலர் اَلْمَلَائِكَةُ بَنَاتُ اللهِ மலக்குகள் – அமரர்கள் அல்லாஹ்வின் பெண் மக்கள் என்றும், இன்னும் சிலர் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மகன் اَلْمَسِيْحُ اِبْنُ اللهِ என்றும் கூறினார்கள். அவர்களின் இத்தவறான கூற்றை மறுப்பதற்காகவே இவ்விரு வசனங்களும் அருளப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இன்னும் இறைவன் எவரையும் பெறவில்லை என்ற வசனம் அவனுக்கு மனைவி இல்லை என்பதையும், அவனை எவரும் பெறவில்லை என்ற வசனம் அவனுக்கு பெற்றோர் இல்லை என்பதையும் உணர்த்துகிறதென்றும் கொள்ள முடியும்.

لَمْ يَلِدْ
அவன் பெறவில்லை என்ற வசனம் படைப்புக்கள் யாவையும் அவன் படைத்தவனாயினும், அல்லது அவையாவும் அவனின் வெளிப்பாடாயினும் அவனிலிருந்து எதுவும் பிரிந்து வரவில்லை என்பதையும், இதேபோல் لَمْ يُولَدْ அவனை யாரும் பெறவில்லை என்ற வசனம் அவன் எதிலிருந்தும் பிரிந்து வரவில்லை என்பதையும் உணர்த்தும் பாணியில் அமைந்துள்ளதென்றும் கொள்ள முடியும்.

அவனோ ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத ஒளிமயமாயிருக்கும் நிலையில் அவன் யாரைப் பெற்றான்? அவனை யார் பெற்றான்? என்று எவ்வாறு சிந்திக்க முடியும்? அவனின் எதார்த்தம் மனிதனின் அறிவைக் கடந்த விடயமும், அவனின் சிந்தனைக்கு எட்டாத விடயமுமாகும். எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுதல் எங்கனம் சரியாகும்? அவன் கடவுள். உள்ளத்தில் ஊறும் எண்ணங்கள் யாவையும் கடந்தவன்.
عَلَا رَبُّنَا عَنْ كَيْفَ أَوْ أَيْنَ أَوْ مَتَى – وَعَنْ كُلِّ مَا فِى بَالِنَا يَتَصَوَّرُ
இறைவன், எப்படி? எங்கே? எப்போது? என்பவற்றை விட்டும், இன்னும் மனிதனின் உள்ளத்தில் உருவாகும் அனைத்தை விட்டும் உயர்ந்தவனாவான். இவற்றுக்கு அப்பாலுள்ளவனுமாவான்.

அவன் படைத்த எண்ணற்ற படைப்புக்களில் அவனை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு அறிந்தவர் எவருமில்லை. நபீகட்கரசருமில்லையா? இல்லை. அதனால் அவர்களின் உயர்வில் எக்குறையுமில்லை. ஏனெனில் எவருமில்லையென்றால் அது அவர்களுக்கு குறைவை ஏற்படுத்தாது.

அவர்களே مَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ இறைவா! உன்னை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு நாங்கள் அறியவில்லை என்ற அவர்களின் அருள் மொழியில் வந்துள்ள “நாங்கள்” என்ற பன்மையை குறிக்கும் சொல் நபீமார், றஸூல்மார், வலீமார் அனைவரையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அவர்களில் ஒவ்வொருவரும் தமது தரத்திற்கேற்பதான் அறிந்து கொண்டார்களேயன்றி அவனின் தரத்திற்கேற்றவாறு அறியவுமில்லை, அறியவும் முடியாது.

இறைஞான மதுக்கடலில் ஒரு சொட்டை அருந்திவிட்டு போதையால் தள்ளாடியவர்களும் உளர். வயிறு புடைக்க அருந்திவிட்டு ஆடாமலும், அசையாமலும் இருந்தவர்களும் உளர்.

அவன் எவரையும் பெறவுமில்லை. அவனை எவரும் பெறவுமில்லை என்றும், அவன் எதிலிருந்தும் பிரிந்து வந்தவனுமல்ல, அவனிலிருந்து எதுவும் பிரிந்து வந்ததுமல்ல என்றும் நம்பிக்கை கொள்வது முதற் கடமை. முதல் நம்பிக்கை.

இறைவன்தான் அனைத்திற்கும் கருவேயன்றி அவனுக்கு கரு இருப்பது அசாத்தியம்.

தானாய்த் தனியவனாய்த்
தன் மயமாய் தற் சொருபாய்த்
தானாய்த் தனி நினைவாய்த்
தானானாய். தானே நீ
ஸல்லல்லாஹுவான நபீ
ஸாதாத்தவரொளியால்
“குல்லுன்” படைத்தனையே கூர்ந்து……
என்று ஓர் இறைஞானி பாடியுள்ளார்.

எது இன்னொன்றைத் தனக்கு கருவாகக் கொள்ளாமல் தானே மற்றதற்கு கருவாயுள்ளதோ அதுவே “தாத்” பிரம்மம் என்றும், “வுஜூத்” உள்ளமை என்றும் சொல்லப்படும்.

அந்தக் கரு மதத்தைக் கடந்தது. மொழியைக் கடந்தது. நிறத்தைக் கடந்தது. எடையைக் கடந்தது. அகலம், நீளம், ஆழம் என்ற கட்டுப்பாடுகளைக் கடந்தது. அனைத்துப் புலன்களையும் கடந்தது. ஆண், பெண் என்ற குறிப்பற்றது.

اِعْلَمْ أَنَّ مُطْلَقَ الذَّاتِ هُوَ الْأَمْرُ الَّذِيْ تَسْتَنِدُ إِلَيْهِ الْأَسْمَاءُ وَالصِّفَاتُ فِى عَيْنِهَا، لَا فِى وُجُوْدِهَا، فَكُلُّ اسْمٍ أَوْ صِفَةٍ اِسْتَنَدَ إِلَى شَيْئٍ فَذَلِكَ الشَّيْئُ هُوَ الذَّاتُ، سَوَاءٌ كَانَ مَعْدُوْمًا كَالْعَنْقَاءِ، فَافْهَمْ، أَوْ مَوْجُوْدًا، وَالْمَوْجُوْدُ نَوْعَانِ، نَوْعٌ مَوْجُوْدٌ مَحْضٌ، وَهُوَ ذَاتُ الْبَارِيْ سُبْحَانَهُ وَتَعَالَى، وَنَوْعٌ مَوْجُوْدٌ مُلْحَقٌ بِالْعَدَمِ، وَهُوَ ذَاتُ الْمَخْلُوْقَاتِ،

பொதுவாக “தாத்” என்பது – அல்லாஹ்வின் விடயத்திலன்றி – எதன் பால் “அஸ்மாஉ” பெயர்களும், “ஸிபாத்” தன்மைகளும் அதன் உள்ளமையைக் கவனிக்காமல் அந்த வஸ்த்தை மட்டும் கவனித்துச் சேர்கின்றதோ அது “தாத்” எனப்படும்.

எனவே, எந்த ஒரு பெயர், அல்லது ஒரு தன்மை எதைச் சேர்கிறதோ அது “தாத்” எனப்படும். அந்த “தாத்” யானையிறாஞ்சிப் பட்சி போல் இல்லாத ஒன்றாயினும் (இதை விளங்கிக் கொள்) அல்லது உள்ளதாயினும் சரியே! உள்ளதென்பதும் இருவகை. ஒன்று. உண்மையில் உள்ளதே. அது அல்லாஹ்வின் “தாத்” போன்று. இரண்டு – இல்லாமற் போவதுடன் சேர்க்கப்பட்ட உள்ளமையாகும். அது படைப்புகளின் “தாத்”துகள் போன்று.
وَاعْلَمْ أَنَّ ذَاتَ اللهِ تَعَالَى عِبَارَةٌ عَنْ نَفْسِهِ الَّتِيْ هُوَ بِهَا مَوْجُوْدٌ، لِأَنَّهُ قَائِمٌ بِنَفْسِهِ، وَهُوَ الشَّيْئُ الَّذِيْ اِسْتَحَقَّ الْأَسْمَاءَ وَالصِّفَاتِ بِهُوِيَّتِهِ، فَيَتَصَوَّرُ بِكُلِّ صُوْرَةٍ يَقْتَضِيْهَا كُلُّ مَعْنًى فِيْهِ، أَعْنِيْ اِتَّصَفَ بِكُلِّ وَصْفٍ يَطْلُبُهُ كُلُّ نَعْتٍ، وَاسْتَحَقَّ لِوُجُوْدِهِ كُلَّ اسْمٍ دَلَّ عَلَى مَفْهُوْمٍ يَقْتَضِيْهِ الْكَمَالُ، وَمِنْ جُمْلَةِ الْكَمَالَاتِ عَدَمُ الْإِنْتِهَاءِ وَنَفْيُ الْإِدْرَاكِ ، فَحُكِمَ بِأَنَّهَا لَا تُدْرَكُ، وَأَنَّهَا مُدْرِكَةٌ لَهُ لِاسْتَحَالَةِ الْجَهْلِ عَلَيْهِ، فَافْهَمْ،

நீ அறிந்து கொள்! அல்லாஹ்வின் “தாத்” என்பது தன்னைக் கொண்டு உண்டானதொன்றாகும். ஏனெனில் அது – அல்லாஹ்வின் “தாத்” தன்னைக் கொண்டு உண்டாகி தன்னைக் கொண்டு நிற்பதாகும். அதுவே அனைத்து திருநாமங்களையும், விட்டுப் பிரியாத தன்மைகளையும் தன்னைக் கொண்டே தகுதியாக்கிக் கொண்டதாகும். அந்த “தாத்” அதிலேற்படுகின்ற பொருளுக்கேற்ப “ஸூறத்” உருவம் பெறத் தகுதியானது. உருவம் பெறும். எனது கருத்து என்னவெனில் அந்த “தாத்” என்னென்ன தன்மைகளில் வெளியாக வேண்டுமோ அத்தன்மையில் வெளியாகும் என்பதாகும்.

கமால் – பூரணம் என்பது என்ன கருத்தை அறிவித்ததோ அந்தக் கருத்திற்குரிய பெயர்கள் அனைத்தையும் அந்த “தாத்” தனதாக்கிக் கொண்டது. பூரணம் என்பதற்கு முடிவுமில்லை. அதைச் சூழ்ந்து கொள்ளவும் முடியாது. இதனால்தான் அந்த “தாத்”தை எட்டிக் கொள்ள முடியாதென்று முடிவு செய்யப்பட்டது. எனினும் அந்த “தாத்” தன்னை அறிந்ததும், சூழ்ந்ததுமேயாகும். ஏனெனில் அல்லாஹ் தன்னை அறியாமலிருக்க முடியாது. அவனுக்கு அறியாமை என்பது அசாத்தியமானதாகும்.

“தாத்” பற்றி மேற்கண்டவாறு கூறியவர் “இன்ஸான் காமில்” நூலாசிரியர் மௌலானா, அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களேயாவர்.
இன்ஸான் காமில்,
முதலாம் பாகம், பக்கம்: 16.

இறை ஞானத்தாகமுள்ளவர்களே!

“தாத்” தொடர்பாக மேலே அறபு மொழியில் கருத்துக்கள் தந்த மகானின் கருத்துக்களை நான் தமிழில் தந்துள்ளேன்.

இறைஞானம் தொடர்பான முன்னறிவுள்ளவர்கள் மேற்கண்ட கருத்துக்களை நூறு வீதம் விளங்காது போனாலும் ஓரளவேனும் விளங்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆயினும் இது தொடர்பான முன்னறிவு அறவே இல்லாதவர்கள் தமது தலை முடிகளை இரு கைகளாலும் பிசைந்து பிசைந்து இது என்ன மொழியோ? ஒன்றுமே புரியவில்லை என்று இறைஞானத்தின் பக்கம் தலை வைத்துக் கூட உறங்கமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நானும் ஒன்றுமே புரியாத ஆரம்ப காலத்தில் தலைமுடியை பிசைந்தவன் மட்டுமல்ல. என் தலைமுடியை பிச்சிப் பிச்சி எடுத்தவனும்தான். அது மட்டுமல்ல. ஞானமும், கத்திரிக்காயும் என்று சொன்னவனாக ஞான நூலொன்றை கிழித்தெறிந்தவனும்தான். அல்லாஹ் என்னை மன்னிப்பான்.

எனினும்
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
என்ற இறை மறையாம் திரு வசனத்தாலும்,

وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ
என்ற அருள் மறை வசனத்தாலும், அண்ணலெம் பெருமான் அஹ்மதெங்கள் கோமான் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்

اَلْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ أَخَذَهَا حَيْثُ وَجَدَهَا
என்ற அருள் மொழியாலும் உணர்த்தப்பட்டும், கவரப்பட்டும், சுண்டி இழுக்கப்பட்டும் இன்று கடலைக் கண்ணால் காணாது போனாலும் அதன் இரைச்சலைச் செவியேற்று கடலென்று ஒன்று உண்டு என்ற நம்பிக்கைக்கு வந்துள்ளேன்.

அறபு வசனங்களின் பொருள்:

எவர்கள் எங்களிலே “ஜிஹாத்” போர் செய்கிறார்களோ அவர்களுக்கு எங்களின் வழிகளைக் காட்டிக் கொடுப்போம். (திருக்குர்ஆன் 29-69)

கற்களிற் கூட சில கற்களுண்டு. அவற்றை அடித்து உடைத்தால் அவற்றிலிருந்து பல நதிகளே பெருக்கெடுக்கும். (திருக்குர்ஆன் 2-74)

இறைஞானம் என்பது ஒரு விசுவாசியின் தவறிப்போன – காணாமற் போன பொருளாகும். அவன் அதை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். (நபீ மொழி)

لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ என்ற இரு வசனங்களுக்கும் விளக்கம் எழுதிய நான் அல்லாஹ்வின் “தாத்” தொடர்பான, இன்ஸான் காமில் நூல் ஆசிரியர் குறித்த தனது நூலில் அறபு மொழியில் “தாத்” தொடர்பாக எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்திருந்தேன்.

நான் எழுதிய மொழியாக்கத்தின் சுருக்கத்தை இறைஞானத்தின் ஆரம்ப அறிவுள்ளவர்கள் ஓரளவு விளங்கினாலும் கூட அவர்களால் சரியான சுருக்கத்தை விளங்கியிருக்க முடியாதென்று வேதனைப்பட்டவனாக புரியாது போனாலும் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டுமென்பதற்காக சில ஆதாரங்களை எழுதியிருந்தேன். ஆயினும் விளக்கம் எழுதக் கிடைக்கவில்லை. இப்போது அவற்றின் விளக்கங்களை ஓரளவு கூறி “தாத்” தொடர்பான விளக்கத்தை எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.

முதல் ஆதாரம்:
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
எங்களில் – எங்களிலே “ஜிஹாத்” போர் செய்பவர்களுக்கு எங்களின் வழிகளை காட்டிக் கொடுப்போம். (திருக்குர்ஆன்: 29-69)

இந்த திரு வசனம் இறைஞானம் விளங்காதவர்களுக்கு மன நிம்மதியை வழங்குவதுடன், தொடர்ந்து கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறது.

இத்திருவசனம் وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللهِ அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தவர்கள் என்று வராமல் وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا எங்களில் – எங்களிலே- போர் செய்தவர்கள் என்று வந்துள்ளதால் இப்போர் இஸ்லாமிய கொள்கையை நிலை நாட்ட யுத்த களத்தில் வாளேந்திச் செய்கின்ற போரைக் குறிக்கவில்லை என்பதும், இறைஞானத்தை அடைந்து கொள்வதற்கான போரையே குறிக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.

ஒரு மனிதன் தனது “நப்ஸ்” எனும் மனவெழுச்சியோடும், மன ஆசையோடும் போராடுவது வாளேந்திப் போராடுவதைக் குறிக்காது. அந்த மனவெழுச்சிக்கும், மன ஆசைக்கும் மாறு செய்து அதற்கு வழிபடாமல் நடப்பதையே குறிக்கும். அவ்வாறிருந்தும் கூட அது “ஜிஹாத்” போர் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ஸூபிஸக் கலையில் جِهَادُ النَّفْسِ என்றும், مُجَاهَدَةُ النَّفْسِ என்றும் கூறப்படுவது ஒருவன் தனது மனவெழுச்சியுடன் போர் செய்தலையே குறிக்கும்.

இறைஞானம் என்பது இறைவனைப் பற்றிய அறிவாகும். ஒரு கலையில் எது பற்றி ஆய்வு செய்யப்படுகின்றதோ அதுவே அக்கலையின் கருவாகும். இறைவனை அறிதல் என்ற பெரும் பாக்கியம் போல் வேறொன்றுமே அதற்கு நிகராக நிற்காது.

ஒருவன் ஒரு பெண்ணை அடைவதாயின் அவளின் அழகு, செல்வம், நற்குணம், குடும்பம், பரம்பரை முதலானவற்றைப் பொறுத்து அவனின் முயற்சி இருத்தல் வேண்டும்.

ஒன்றுக்கும் உதவாத, எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லாத ஒரு பெண்ணை அடைவதாயின் கடும் முயற்சி தேவையில்லை. ஒரு சிறிய அன்பளிப்பை வழங்கியே அவளை அடைந்து கொள்ளலாம். அவளை அடைவது மிக இலகுவான விடயம். இதற்காக பசித்திருக்கவோ, தனித்திருக்கவோ, விழித்திருக்கவோ தேவையில்லை.

இறைஞானக்கலையில் நாம் அடைய விரும்பும் பெண்ணோ மிகப் பெறுமதி மிக்கவள். சீமாட்டியென்றால் சாதாரண சீமாட்டியல்ல. ஈருலகங்களும், அவற்றிலுள்ளவையும் அவளுக்கே சொந்தம். அழகோ படைப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்த அழகு. அவளைக் காணத்துடிக்காத இதயங்கள் மனு ஜின்களிலுமில்லை. மற்றப் படைப்புகளிலும் இல்லை.

இப் பெரும் பாக்கியங்கள் ஒன்றிணைந்த அவ்வழகியில் அழிந்து ஒழிந்து போவதற்காக எத்தனை கோடியாண்டுகளும் தவமிருக்கலாம். தனித்திருக்கலாம். பசித்திருக்கலாம். தாகித்திருக்கலாம். எண்ணற்ற துன்பம், துயரங்களையெல்லாம் அனுபவிக்கலாம்.

ஒரு “பகீர்” ஒரு தெருவால் போய்க் கொண்டிருந்தார். அந் நாட்டு அரசனின் பறைச் சத்தம் அவரின் செவிகளுள் சென்றன. கடலில் “பஹ்றுமான்” என்று இரு முத்துக்கள் உள்ளன. அவற்றை எடுத்து தந்தவனுக்கு எனது மகள் இளவரசியை திருமணம் முடித்துக் கொடுப்பேன் என்ற அரசனின் பறை கேட்ட அந்த “பகீர்” கடலோரம் சென்று தன்னிடமிருந்த சின்னஞ் சிறிய காட்டுத் தேங்காய்ச் சிரட்டையால் கடலை இறைக்கலானார். வருவோர் போவோரெல்லாம் ஏன் இறைக்கிறாய்? என்று கேட்டனர். இளவரசியை அடைவதற்காக என்றார். வந்தவரும், போனவரும் அவரை நையாண்டி பண்ணினர். கடலை இறைத்துக் கரை கண்டவர் யார்? பகீரின் முயற்சி படுதோல்விதான் என்று கூறிச் சென்றனர்.

هِمَّةُ الرِّجَالِ تَهْدِمُ الْجِبَالَ
மனிதர்களின் முயற்சி மலைகளையும் தகர்க்கும் என்ற தத்துவம் அவரை விடவில்லை. இறைத்தார் பகீர். இறைத்துக் கொண்டே இருந்தார். நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து கொண்டே இருந்தன. நூற்று இருபதாம் நாள் இறையோன் அல்லாஹ் ஏழை பகீரின் நெஞ்சைப் பார்த்தான். அது மலையை விட உறுதியாயிருந்தது கண்டு கடல் வாழ் இரு மலக்குகள் – அமரர்களை அழைத்து

يَا مَلَائِكَتِيْ! اُنْظُرُوْا إِلَى قَلْبِ هَذَا الْفَقِيْرِ، وَإِلَى هِمَّتِهِ الَّتِيْ رَسَخَتْ فِى قَلْبِهِ، فَانْهَضُوْا وَسِيْرُوْا إِلَى قَعْرِ هَذَا الْبَحْرِ فِى مَكَانِ كَذَا كَذَا، وَهُنَاكَ دُرَّتَانِ مُضِيْئَتَانِ، فَخُذْهُمَا بِفِيْكُمَا وَأَلْقِهِمَا أَمَامَ الْفَقِيْرِ،

எனது அமரர்களே! இந்த பகீரின் உள்ளத்தைப் பாருங்கள். அதில் பதிவாகியுள்ள அவனின் விடா முயற்சியையும் பாருங்கள். நீங்கள் எழுந்து கடலின் அடித்தளத்திற்குச் சென்று இன்னின்ன இடங்களிலுள்ள இரு முத்துக்களை உங்கள் வாயால் எடுத்துச் சென்று இந்த பகீருக்கு முன்னால் போட்டு விடுங்கள் என்று பணித்தான். இரு மலக்குகளும் இரு தவளைகளின் உருவில் வந்து அவ்வாறே செய்தனர்.

இரு முத்துக்களையும் எடுத்து வந்த அந்த பகீரை காவற்காரர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த பகீர், நான் இந்நாட்டு இளவரசியின் கணவன் இளவரசன் என்று சத்தமிட்டான். இறுதியில் அரசனின் ஆணைப்படி இளவரசியின் கழுத்தில் மஞ்சக் கயிறு கட்டி மன்னனின் மருமகனார் பகீர்.

இறைஞானமென்ற இளவரசியை நாம் முயற்சித்தால் ஏன் அடையமுடியாது?

எவர்கள் எங்களிலே ஜிஹாத் செய்கிறார்களோ அவர்களுக்கு எங்களின் வழியைக் காட்டிக் கொடுப்போம் என்ற திரு மறை வசனம் மூலம் எமக்கு வாக்களித்த அல்லாஹ்வை நம்புவோம்.

“குத்பிய்யத்”, “விலாயத்” என்பவை சிலருக்கு மட்டும் சொந்தமானவையல்ல. அவை பக்தாதில் வாழும் முஹ்யித்தீன் ஆண்டகை றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், நாஹூர் பாதுஷாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், இன்னுமிவர்கள் போன்றவர்களுக்கும் மட்டும் எழுதிக் கொடுக்கப்பட்டவையுமல்ல.

وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا،

அல்லாஹ் அடியானுக்கு வழங்கும் நாற்பெரும் பரிசில்கள்!

எனது அடியான் “நவாபில்” மேலதிக வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். அப்போது நான் அவனை விரும்புவேன். நான் அவனை விரும்பினால் அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆவேன். அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆவேன். அவன் பிடிக்கும் கையாக நான் ஆவேன். அவன் நடக்கும் காலாக நான் ஆவேன் என்று அல்லாஹ் ஹதீது குத்ஸியில் கூறியுள்ளான். (ஆதாரம்: புகாரீ)

இந்த ஹதீதுக் குத்ஸீ மூலம் நாம் பல பாடங்களை விளங்குகின்றோம். அவற்றில் ஒன்று. அடியான் “நவாபில்” “ஸுன்னத்” ஆன வணக்கங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குகின்றான் என்பதாகும். “குர்புன்னவாபில்” என்றும், “குர்புல் பறாயிழ்” என்றும் இருவகை உண்டு. தேவையேற்பட்டால் எழுதுவோம்.

அடியான் அல்லாஹ்வை நெருங்குதல் என்பது قُرْبٌ مَعْنَوِيٌّ கருத்தோடும், தத்துவத்தோடும் சம்பந்தப்பட்ட நெருக்கத்தைக் குறிக்குமேயன்றி قُربٌ مَكَانِيٌّ இடத்தோடு சம்பந்தப்பட்ட நெருக்கத்தைக் குறிக்காது.

ஏனெனில் இடத்தோடு சம்பந்தப்பட்ட நெருக்கம் ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்குமுள்ள நெருக்கமேயன்றி அல்லாஹ்வுக்கும், மனிதனுக்குமுள்ள நெருக்கம் அத்தகையதன்று.

ஏனெனில் அடியானின் பிடரி நரம்பு அடியானுக்கு நெருங்கியிருப்பதை விட நான் அடியானுக்கு நெருங்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
நாங்கள் – நான் அடியானுக்கு அவனின் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளேன் என்று கூறியுள்ளான்.
(திருக்குர்ஆன்: 50-16)

இத்திரு வசனத்தை தெளிவான, விபரமான விளக்கத்தை நாடி சாதாரண வசனமாக்கிப் பார்த்தால்

وَنَحْنُ أَقْرَبُ إِلَى الإنسان مِنْ قُرْبِ حَبْلِ الْوَرِيدِ إليه،
என்று வரும். இதற்கான கருத்தை நான் மேலே எழுதிவிட்டேன்.

“ஹப்லுல் வரீத்” என்ற வசனத்திற்கு பிடரி நரம்பு என்றும், பிடரியிலுள்ள உயிர் நரம்பு என்றுமே நான் சிறுவனாயிருந்த காலத்திலிருந்து அறிஞர்கள் பொருள் சொல்லி வந்ததை நான் செவியேற்றுள்ளேன்.

நான் இதை மறுக்கவில்லையாயினும் பிடரியில் ஏதாவது விஷேட நரம்பு இருப்பதாக வைத்திய நிபுணர்களில் எவரும் கூறியதாக நான் அறியவில்லை. இது “ஸிறாதுல் முஸ்தகீம்” பாலம் என்ற கதை போன்றதென்றே நினைக்கிறேன். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக எல்லோரும் சொல்லிப் பழகிவிட்டார்களேயன்றி எவரும் இது பற்றிச் சிந்திக்கவில்லை. இவ்வாறுதான் “நடுமத்தி” என்ற வசனத்தின் கதையுமாகும்.

நான் ஆய்வு செய்த வகையிலும், பல ஆய்வாளர்களிடம் கேட்டறிந்த வகையிலும் “பிடரி நரம்பு” என்பது பிடரியிலிருந்து பின் பக்கம் இறங்கிச் செல்லும் நீளமான முள்ளைக் குறிக்குமென்றே நான் நினைக்கிறேன். அந்த முள்ளின் இறுதி முனையில்தான் – அடியில்தான் சங்குமணி அளவிலான ஒரு வஸ்த்து உண்டு. அதுவே عَجَبُ الذَّنَبِ “அஜபுத்தனப்” என்று சொல்லப்படுகின்றது.

ஒரு மனிதனின் உடல் நெருப்பில் எரிந்து சாம்பலானாற் கூட அது மட்டும் அழியாதென்று சொல்லப்படுகின்றது. விமானத்திற்கு “கறுப்புப் பெட்டி” இருப்பது போல் மனிதனிலுள்ள கறுப்பு பெட்டி இதுவேயாகும்.

நான் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பைவிட – அவனின் முதுகு முள்ளை விட நெருங்கியுள்ளேன் என்றால் இதன் சரியான விளக்கம் நான் மனிதனாக இருக்கிறேன் என்பதேயாகும். முதுகு முள்ளே அல்லது பிடரி நரம்பே மனிதனில் ஓர் அங்கமாக இருக்கும் நிலையில் நான் அதை விட நெருங்கியிருக்கிறேன் என்றால் இதன் எதார்த்தம் நான் மனிதனாக வெளியாகியுள்ளேன் என்பதேயன்றி வேறென்ன?

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

அல்லாஹ்வுக்கு நிகராக எவருமில்லை என்ற தத்துவத்தை இறுதியாகக் கூறி “இக்லாஸ்” அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளான் அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.

ஏன் நிகர் இல்லை? இரண்டில்லை. இதனால் நிகரில்லை. இதுவே அடிப்படைத் தத்துவம். இது தெரியாமல் உலமாஉகளிற் பலர் எங்கெங்கோ சென்று நிகரில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றார்கள். கேட்பதற்கு கசப்பாகவும், அலுப்பாகும் உள்ளது. “குத்பா” பிரசங்கத்தின் போது பலர் தூங்கிவிழுவதற்கும் பிரசங்கமே காரணம் எனலாம்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவன் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனும், பார்ப்பவனுமாவான்.

மேற்கண்ட இரண்டு திரு வசனங்களும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்ற தத்துவத்தைக் கூறினாலும் அவ்விரண்டில் ஒன்று – அதாவது முந்தினது உயர் திணையில் அவனுக்கு நிகரில்லை எனவும், இரண்டாவது வசனம் அஃறிணையில் அவனுக்கு நிகரில்லை எனவும் சுட்டுவதை உற்று நோக்கினால் அறிய முடியும்.

அவனுக்கு நிகர் இல்லை என்பதே எதார்த்தம். இதற்கு மறுக்கவும், அசைக்கவும் முடியாத ஒரேயொரு காரணம் இரண்டில்லை என்பதேயாகும். சிந்தித்தோர் உண்மையை சந்திப்பர்.

திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் கிழறிக் கிழறி ஆய்வு செய்தாலும், நபீ பெருமானின் அருள் மொழிகளை அக்கு வேறாக ஆணி வேறாக ஆய்வு செய்தாலும், “அகீதா” கொள்கை தொடர்பான நூல்களை மடக்கி மடக்கி ஆய்வு செய்தாலும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதற்கான எதார்த்தமான காரணம் இரண்டில்லை என்பதேயாகும்.

كُفْوٌ
– குப்வுன் என்றாலும், مِثْلٌ – மித்லுன் என்றாலும் , نِدٌّ என்றாலும் கருத்தில் இவையாவும் ஒன்றுதான். ஒரே கருத்துக்குரிய பல சொற்களாகும். இவை அறபு மொழியில் أَلْفَاظٌ مُتَرَادِفَةٌ என்று அழைக்கப்படும். இதன் பொருள் ஒரு பொருளுக்குரிய பல சொற்கள் என்பதாகும்.

அல்லாஹ்வுக்கு مَثَلْ “மதல்” உண்டு. مِثْلْ – “மித்ல்” என்பதே இல்லை. முந்தின சொல்லுக்கு உதாரணம் என்று பொருள். பிந்தின சொல்லுக்கு நிகர் என்று பொருள்.

அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறலாம். தடையில்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்று தெளிவாகவே கூறியுள்ளான்.

உயர்வான உதாரணம் என்பது ஒரு நாட்டின் மன்னன் போன்றவன். ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவன் என்று உதாரணம் சொல்வது போன்று. இவ்வாறு உதாரணம் சொல்ல முடியும்.

மேலே குறிப்பிட்ட திரு வசனத்தில் مَثَلْ – மதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதேயன்றி مِثْلْ – “மித்ல்” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

இன்னொரு வசனத்தில் مَثَلُ نُورِهِ அவனின் ஒளிக்கு உதாரணம் என்றுதான் சொல்லியுள்ளானேயன்றி مِثْلُ نُورِهِ அவனின் ஒளிக்கு நிகர் என்று அல்லாஹ் கூறவில்லை.

مَثَلْ
– உதாரணம் என்ற பொருளைத் தருகின்ற இச் சொல்லுக்கும், مِثْلْ – “மித்ல்” நிகர் என்ற பொருளைத் தருகின்ற இச் சொல்லுக்கும் ஏகபோக வித்தியாசமுண்டு. மலைக்கும் மடுவுக்குமுள்ள தூரம் உண்டு.

இது பற்றி கடந்த பதிவுகளின் போது நான் எழுதியுள்ளேன். விடயம் புரியாதவர்களின் நன்மை கருதி மீண்டும் எழுதுகிறேன்.

நான் ஏற்கனவே எழுதிய விடயமாதலால் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன். முழு விபரம் தெரிந்து கொள்ள விரும்புவோர் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகம் 108ம் பக்கத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ إلى آخر ما قال الشعراني،
இதன் சுருக்கம் வருமாறு.

அல்லாஹ்வை ஏதாவதொரு உருவத்தில் கனவில் காணலாம் என்பதே சரியான முடிவாகும்.

அல்லாஹ்வை உருவத்தில் காண்பதா? இதெவ்வாறு சாத்தியமாகும்? என்று யாரேனும் சொல்வாரென்றால் “மதல்” என்பதற்கும், “மித்ல்” என்பதற்குமுள்ள வித்தியாசம் தெரியாதவராகவே இருப்பார்.

நிகர் என்ற பொருளுக்கு வருகின்ற مِثْلْ என்ற சொல்லில் “மீம்” என்ற எழுத்து “கஸ்ர்” செய்யப்பட்டதாயும், அதையடுத்த எழுத்தான “தே” “ஸுகூன்” செய்யப்பட்டதாயும் இருக்கும். مِثْلٌ என்பதுபோல்.

உதாரணம் என்ற பொருளுக்கு வருகின்ற مَثَلْ என்ற சொல்லில் உள்ள “மீம்” என்ற எழுத்து “பத்ஹ்” செய்யப்பட்டதாயும், அதையடுத்த எழுத்தான “தே” என்ற எழுத்தும் “பத்ஹ்” செய்யப்பட்டதாயும் இருக்கும். مَثَلْ என்பதுபோல்.

அல்லாஹ்வுக்கு உதாணரம் உண்டு. ஆனால் நிகர் இல்லை. مَثَلْ உண்டு. مِثْلْ இல்லை.
فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ
நிகர் என்ற பொருளைத்தருகின்ற مِثْلْ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமே மேலே நான் எழுதிக்காட்டிய அறபு வசனம்.

எதை எதற்கு நிகராக கூறப்படுகின்றதோ அவ்விரண்டும் சகல அம்சங்களிலும் ஒன்றுபோல் சமமாக இருக்க வேண்டும். இது இருக்கும் இடத்தில் அதையும், அது இருக்கும் இடத்தில் இதையும் வைத்தால் இரண்டும் எந்தவொரு விதம்தியாசமுமின்றி சமமாக ஒன்று போல் இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால்தான் அது நிகர் ஆகும். அல்லாஹ்வுக்கு நிகர் இல்லையென்பது இதை அடிப்படையாக கொண்டதேயாகும்.

உதாரணம் என்பது நிகர் போன்றதல்ல. நிகருக்கு சொல்லப்பட்ட அம்சம், நிபந்தனை இதற்குத் தேவையில்லை. எல்லா அம்சங்களிலும் இரண்டும் ஒன்றுபோல் இருக்க வேண்டுமென்பதில்லை. ஏதேனும் ஓர் அம்சத்தில் மட்டும் இரண்டும் ஒன்றுபோல் இருந்தால் உதாரணமாக கொள்ளலாம்.

உதாரணமாக முசம்மில் சிங்கம் போன்றவன் என்று சொல்வது உதாரணமேயன்றி இது நிகரல்ல. சிங்கத்திலுள்ள அம்சங்களில் வீரம் போன்ற ஏதாவதொரு அம்சம் இருந்தால் போதும். உதாரணம் என்று சொல்ல முடியும். அவனில் நான்கு கால்களும், ஒரு வாலும், மற்றும் ஏனைய அமைப்புக்களும் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை.

ஆயினும் ஒரே அச்சில் எந்த ஒரு அணுவளவும் வித்தியாசமின்றி செய்யப்பட்ட இரண்டு பொருட்களில் ஒன்றை மற்றதற்கு நிகராக கூற முடியும். ஒரே அச்சில் செய்யப்பட்ட இரண்டு தங்க மோதிரம் போன்று.

அல்லாஹ்வுக்கு நிகராக யாருமில்லை, எதுவுமில்லை. ஆயினும் அவனுக்கு உதாரணங்கள் கூற முடியும்.

அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை என்பதற்கும், இணையில்லை என்பதற்கும் ஆணித்தரமான ஒரேயொரு ஆதாரம் “உள்ளது ஒன்று மற்றது அன்று” எனும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமாகும்.
اَللهُ مَوْجُوْدٌ وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ
திருக்குர்ஆனை ஒவ்வோர் எழுத்தாகவும், ஒவ்வொரு “நுக்தா” புள்ளியாகவும் ஆய்வு செய்த மகான்களின் முடிவும், அதேபோல் இலட்சக்கணக்கான ஹதீதுகளை ஒவ்வோர் எழுத்தாக ஆய்வு செய்தவர்களின் முடிவும், மற்றும் இறைஞானக்கடலில் முங்கி உள் நீச்சலடிப்பவர்களின் இறுதியான முடிவும் “அல்லாஹ் தவிர வேறெந்த ஓர் வஸ்த்துவும் இல்லை” என்பதேயாகும்.
اَللهُ فقط، الله فقط، الله فقط،
لا إله إلا الله محمد رسول الله،
الكون كلُّه ظُلمةٌ وإنّما أناره وجود الحق فيه، أي فى صورته،
وكل شيئ هالك فى الأزمنة الثلاثة أي عدم محض،

“குல்ஹுவல்லாஹு அஹத்” ஒரு கண்ணோட்டம் முற்றுப் பெற்றது.

எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments