அன்புக்குரியவர்களே!
புனித றமழான் 21ம் இரவு முதல் றமழான் மாதம் முடியும் வரை “மக்ரிப்” தொழுகையை “கழா”வாக்காமல் உரிய நேரத்தில் தொழுங்கள். பள்ளிவாயலிலும் தொழலாம். வீட்டிலும் தொழலாம்.
எங்கு தொழுதாலும் தொழும் அதே இடத்தில் – இடம் மாறாமலும், எவருடனும் ஒரு வார்த்தை கூடப் பேசாமலும் “மக்ரிப்” தொழுகையின் பிந்தின “ஸுன்னத்” இரண்டு “றக்அத்” தொழுங்கள். தொழுது முடித்த பின் மேலே சொன்னது போல் எவருடனும் பேசாமல் “ஸூறதுல் பாதிஹா” அல்ஹம்து லில்லாஹ் அத்தியாயத்தை – ஸூறாவை பிஸ்மியுடன் 40 தரம் ஓதுங்கள்.
ஓதி முடிந்தபின் பின்வரும் “துஆ”வை ஒன்பது தரம் அதே இடத்திலிருந்து அமைதியாக ஓதுங்கள்.
அதன் பின் எவை தேவையோ அவை குறித்து அல்லாஹ்விடம் தமிழில் கேளுங்கள்.
“இஷா” தொழுகைக்கான “பாங்கு” சொல்வதற்கு முன்னர் தமிழில் கேட்கும் “துஆ”வை முடித்து விட வேண்டும்.
இவ்வாறு றமழான் 21ம் இரவு அதாவது இன்றிரவு தொடக்கம் றமழான் முடியும் வரை தொடராகச் செய்து வாருங்கள். வெற்றி நிச்சயம். இன்ஷா அல்லாஹ்!
“இஷா” தொழுகைக்கான “பாங்கு” சொல்லுமுன் முடிக்க வேண்டியுள்ளதால் உரிய நேரத்தில் ஓதத் தொடங்க வேண்டும்.
முடிந்தவரை சன நடமாட்டம் குறைவான இடத்தில் இருந்து ஓதுவது பக்திக்கு வழி செய்யும்.
இது அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் பரீட்சிக்கப்பட்டது.
“துஆ”
إِلَهِيْ عِلْمُكَ كَافٍ عَنِ السُّؤَالْ، اِكْفِنِيْ بِحَقِّ الْفَاتِحَةِ سُؤَالًا، وَكَرَمُكَ كَافٍ عَنِ الْمَقَالْ، أَكْرِمْنِيْ بِحَقِّ الْفَاتِحَةِ مَقَالًا، وَحَصِّلْ مَا فِى ضَمِيْرِيْ،