“ஈதுல் பித்ர்” ஈகைப் பெருநாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றவர்களுக்கும், நாளை கொண்டாடவிருக்கின்றவர்களுக்கும் எனது “ஈதுல் பித்ர்” நல் வாழ்த்துக்களையும், ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்தவர்களின் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!
இலங்கை நாட்டிலும், வெளிநாடுகளிலும், குறிப்பாக தமிழ் நாட்டிலும் வாழ்கின்ற அனைத்து ஸூபிஸ உறவுகளுக்கும், ஸுன்னிஸ உறவுகளுக்கும், ஆன்மீக உறவுகளுக்கும் எனது “ஈதுல் பித்ர்” ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
யா அல்லாஹ்! மேற்கண்ட எனது ஆன்மிக உறவுகள் அனைவருக்கும் உனது “மக்பிறத்” எனும் பாவ மன்னிப்பையும், “றஹ்மத்” எனும் அருளையும் அள்ளி வழங்குவாயாக! அவர்களின் வாழ்வில் “பறகத்” செய்வாயாக!
கொரோனா வைரஸ், மற்றும் பயங்கர வியாதிகள் அவர்களை அணுகாமல் பாதுகாத்துக் கொள்வாயாக! அவர்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த நீண்ட ஆயுளையும் வழங்குவாயாக!
ஆன்மிக அறிவையும், “வஹ்ததுல் வுஜூத்” இறைஞானத்தையும் மேலும் அவர்களுக்கு வழங்கி அவர்களை எதார்த்தவாதிகளாக்கி வைப்பாயாக!
யா அல்லாஹ்! “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தையும், “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறை தத்துவத்தையும் தமது அறியாமையால் எதிர்த்து வருபவர்களை மன்னித்து அவர்களுக்கு உனது ஞானத்தை வழங்கியருள்புரிவாயாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்!