“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 1

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸூபிஸ ஞானம், “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாடு பற்றிப் பேசிய எனக்கும், நான் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவும், உலமா சபைத் தலைவர் ரிஸ்வீ முப்தீயும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் வழங்கிய “பத்வா” நூலில் 13 இமாம்களின், ஞான மகான்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை முன்மாதிரியாகக் கொண்டே அவ்வாறு “பத்வா” வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார்கள்.

அவர்களில் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, இமாம் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் முஹம்மத் ஙஸ்ஸாலீ, இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் அடங்குவர்.

அவர்களின் “பத்வா” கண்டு நான் வியப்படயவில்லை. ஏனெனில் அது எனக்குப் பொருத்தமான “பத்வா”வே அல்ல.

நான் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியிருக்கும் நிலையில் அது பிழையென்பதற்கு ஓர் ஆதாரம் கூட தமது “பத்வா”வில் எழுதாமல் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்பதற்கான ஆதாரங்களை மட்டும் எழுதிவிட்டு அந்த “பத்வா”வில் எனது பெயரைச் சொருகி வைத்தார்கள் பத்வா வழங்கியவர்கள். இது தொடர்பான முழு விபரங்களும் “முர்தத் பத்வாவும், முல்லாக்களின் சதிகளும்” என்ற தலைப்பில் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

இப்போது நான் கூற விரும்புவது என்னவெனில் மேலே நான் பெயர் குறிப்பிட்ட மூன்று இமாம்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாகப் பேசியவர்களும், எழுதியவர்களுமாவர். இவர்களை உலமா சபை சரி கண்டது எனக்கு வியப்பாக மட்டுமல்ல பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த அடிப்படையில் அவர்கள் சரி கண்ட இமாம் ஙஸ்ஸாலீ யார்? “வஹ்ததுல் வுஜூத்” பேசிய, எழுதியவர்தானா? இல்லையா? என்பதை பத்வா வழங்கியவர்களும், பொது மக்களில் படித்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய, எழுதியவர்கள் மட்டுமல்ல. மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் بَلْ هُوَ الْكُلُّ எல்லாம் அவனே என்ற வசனத்தைப் பயன்படுத்தியவர்கள் என்றும் நான் எழுதியிருந்தேன். எல்லாம் அவனே என்று சொன்னால் அவர் யார்? என்பது எவருக்கு விளங்காது போனாலும் “பத்வா” வழங்கியவர்களுக்கு நன்றாகத் தெரியும். இமாம் ஙஸ்ஸாலீ அவர்களை ஏற்றுக் கொண்டவன், அவர்களைச் சரி கண்டவன் என்னையும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும், சரி காணவும் வேண்டும்.

“பத்வா” குழு “பத்வா” வழங்கிய வேளை இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் இவ்வாறு சொல்லியிருப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் ஸுப்ஹானல்லாஹ்! ஙஸ்ஸாலீயும், றஊபும் ஒன்றுதான் என்று அவர்களைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சத்தியத்தை மறைக்க அல்லது மறுக்க நினைத்தால் அல்லாஹ் விடுவானா? சரியாக மாட்டி வைத்துவிட்டான். இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள் முல்லாக்கள்.

அவர்கள் சரி கண்ட மற்ற இமாம்தான் இப்னு அறபீ நாயகமவர்களாவர். அவர்கள் பற்றியும், அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” கருத்து பற்றியும் இங்கு எழுதுகிறேன்.

இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

هُوَ محمد بن علي بن محمد، الحاتَمِي الطَّائِيّ الْمُرسيّ، المُلَقَّبُ عند الصوفيّة بالشيخ الأكبر، المشهور عند أهل المشرق بابن عربي، بدون أداة التعريف، لِيُمَيِّزُوْا بينه وبين القاضي أبي بكر ابن العربي، وأما أهل المغرب فشُهْرَتُهُ عندهم ابن العربي بالألف واللّام، كما يُسَمِّيْ نفسَه بذلك فى كتبه،

இப்னு அறபீ அவர்களின் பெயர் முஹம்மத். தந்தை பெயர் அலீ. அவர்களின் தந்தை பெயர் முஹம்மத்.

இப்னு அறபீ அவர்கள் உலகப் பிரசித்தி பெற்ற கொடை வள்ளல் “ஹாதிம் தாயீ” அவர்களின் வழித் தோன்றல் ஆவார்கள். “முர்ஸீ” என்றால் “முர்ஸியா” என்ற ஊரில் பிறந்தவர்கள். ஸூபீகளிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்ற சிறப்புப் பெயரால் பிரசித்தி பெற்றவர்கள். கிழக்கைப் பொறுத்து இப்னு அறபீ என்று அறியப்பட்டவர்காளவர்.

“அலிப் – லாம்” இல்லாமல் இப்னு அறபீ என்று வந்தால் அது முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களையும், “அலிப் – லாம்” உடன் “இப்னுல் அறபீ” என்று வந்தால் அது அல்காழீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களையும் குறிக்கும். இவ்விருவருக்குமிடையில் வித்தியாசம் காண்பதற்காக இவ்வாறு ஒரு வழி காட்டப்பட்டுள்ளது. மொறோக்கோ வாசிகள் “இப்னுல் அறபீ” என்றே “அலிப் – லாம்” உடன் அழைப்பார்கள். இப்னு அறபீ நாயகம் அவர்களும் தங்களின் பெயரை “அலிப் – லாம்” உடன் இப்னுல் அறபீ என்றே குறிப்பிடுவார்கள்.

وُلد فى مدينة مُرسيّة بالْأُنْدُلُسْ، سنةَ 560 هـ ، ولمّا بلغ الثامنة من عمره اِنْتَقَلَتْ أسرتُه إلى مدينةِ إِشْبِيْلِيَّةَ، وفيها بدأ بطلب العلم، فَدَرَسَ القرآن والحديث والفقه، وَعَمِلَ فى شَبَابِه كاتِبًا لِبَعْضِ الْحُكَّامِ،

அவர்கள் ஹிஜ்ரீ 560ல் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸிய்யா” எனும் நகரில் பிறந்தார்கள். அவர்களின் 8ம் வயதில் அவர்கள் குடும்பத்தோடு “இஷ்பீலிய்யா” நகருக்கு வந்தனர். அங்குதான் அவர்கள் கல்வி கற்கத் தொடங்கினார்கள்.

திருக்குர்ஆன், ஹதீது, பிக்ஹ் போன்ற கலைகளை அங்கு கற்றார்கள். இளைஞனாயிருந்த வேளை சில நீதிவான்களின் செயலாளராகவும் கடமை செய்துள்ளார்கள்.

ثم سلك طريق التصوّف، فانقطع عن الدنيا، وتزَهَّدَ، واعْتَزَلَ الناسَ، وسَاحَ فى بُلدان الأندلس وشِمالي إِفْرِيْقَا، مدّة عشـر سنين، الْتَقَى خلالَها بِعَدَدٍ من شيوخ التصوُّف،

பின்பு ஸூபிஸ வழியில் இறங்கினார்கள். துன்யா – இவ்வுலகைத் துறந்தார்கள் – துண்டித்தார்கள். மக்களை விட்டும் ஒதுங்கினார்கள். ஸ்பெய்ன் நாடெங்கும் பிரயாணம் செய்தார்கள். வட ஆபிரிக்காவுக்கும் சென்றார்கள். பத்தாண்டுகளை இப்பயணத்தில் கழித்தார்கள். இப்பயணத்தின் போது ஸூபிஸ மகான்களில் பலரை சந்தித்தார்கள்.

ثمّ اتّجه إلى مكّة فأقام بها سنتين، ثمّ أقام بمَلَطْيَة من بلاد الأَنَاضُول، وتزوّج بأمّ تِلميذه محمد القَونَوي، ثمّ استقرّ فى دمشق، إلى وفاته سنة 638 هـ (البداية والنهاية، 13-156 ، ميزان الإعتدال، 3-659، سير أعلام النبلاء، 23 -48، الطبقات الكبرى، 1 – 188)

பின் திரு மக்கா நகர் வந்து அங்கு இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்கள்.

பின்னர் தனது மாணவர் முஹம்மத் அல்கவ்னவீ அவர்களின் தாயை திருமணம் செய்தார்கள். பின்னர் ஹிஜ்ரீ 638ல் “வபாத்” ஆகும் வரை அங்கேயே இருந்தார்கள்.

يقول ابن عربي رضي الله عنه فى الفتوحات المكية تحقيق عثمان يحيى (13-424) (ما فى الوجود إلّا الله ) وأنّ جميعَ ما يُدركون بالحواسّ هو مظهرٌ للهِ تعالى، وهذه عنده ‘ حقيقةُ الحقائق ‘، الّتي تُفرِّق بين العارف بالله والجاهل به، (حقيقة الحقائق ஸ்ரீ الفتوحات المكية، 2-332)

அல் புதூஹாதுல் மக்கிய்யா எனும் நூலில் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

உலகில் அல்லாஹ் தவிர வேறொன்றுமே இல்லை என்றும், புலன்கள் கொண்டு – புலன்களின் மூலம் எத்திக் கொள்ளப்படுகின்ற யாவும் அல்லாஹ்வின் “மள்ஹர்” பாத்திரம் என்றும் கூறியுள்ளார்கள். இதற்கு அவர்கள் எதார்த்தங்களின் எதார்த்தம் என்று கூறுவார்கள். இது அல்லாஹ்வை அறிந்தவனையும், அவனை அறியாதவனையும் பிரித்துக் காட்டும் தத்துவமாகும்.

புதூஹாதுல் மக்கிய்யா (13 – 424)
ஹகீகதுல் ஹகாயிக் (2-332)

தொடரும்….