Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பெருமானார் மீது ஸலாம் சொல்லுங்கள்!

பெருமானார் மீது ஸலாம் சொல்லுங்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ).

கண்ணியத்திற்குரிய ஸுன்னத் ஜமாஅத் கொள்கைவாதிகளே! தரீகாவாதிகளே! ஸூபிஸ வழி வாழும் நல்லடியார்களே!

எமது உயிரினும் மேலான நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்வது போல் ஸலாமும் சொல்லுங்கள்.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ்வும், அவனுடைய “மலக்” அமரர்களும் நபீ மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லுங்கள். இன்னும் அதிகமாக “ஸலாமும்” சொல்லுங்கள்.
(திருமறை 33-56)

இத்திரு வசனத்தின் மூலம் அல்லாஹ்வும், மலக்குகளும் நபீகளார் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள் என்பதும், அவர்கள் பெருமானார் மீது “ஸலாம்” சொல்லவில்லை என்பதும், விசுவாசிகளான அடியார்கள் அவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் – இரண்டும் சொல்ல வேண்டும் என்பதும், அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் இரண்டும் சொல்லுமாறு பணிக்கப்பட்டவர்கள் விசுவாசிகள் மட்டுமேயன்றி காபிர்களோ, முனாபிகீன்களோ அல்ல என்பதும் விளங்கப்படுகின்றது. பல விடயங்கள் விளங்கப்படுகின்றன.

அல்லாஹ்வும், மலக்குகளும் “ஸலவாத்” மட்டுமே சொல்கிறார்கள். அவர்கள் ஸலாம் சொல்லவில்லை என்பது ஏன் என்ற கேள்விக்கான விடை – காரணம் நான் வாசித்த நூல்களில் காணப்படவில்லை. இதற்கான காரணம் தெரிந்தோர் பொது மகக்ளுக்கு பகிரங்கமாக அறிவிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான காரணத்தை யார் அறியாதிருந்தாலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முப்திகள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களாவது அறிவிப்பார்களா?

அல்லாஹ்வும், மலக்குகளும் நபீ பெருமான் மீது “ஸலவாத்” மட்டுமே சொல்கிறார்கள். ஸலாம் சொல்லவில்லை என்பதற்கான ஆதாரம் மேற்கண்ட திரு வசனமேயாகும். இத்திரு வசனம் பின்வருமாறு வந்திருந்தால் கேள்விக்கு இடமில்லாமற் போயிருக்கும்.

إن الله وملائكته يصلون ويسلمون على النبي يا أيها الّذين آمنوا صلوا عليه وسلموا تسليما

அல்லாஹ்வும், மலக்குகளும் ஸலாம் சொல்கிறார்கள் என்று சொல்லாமல் விட்டதற்கு நியாயமான, அர்த்தமுள்ள காரணம் இல்லாமற் போகாது என்பது உண்மை.

மேற்கண்ட திரு வசனத்தில் ஒரு நுட்பம் இருப்பது அறிஞர்களுக்கு மறையாதென்று நான் நினைக்கிறேன். ஆயினும் மற்றவர்களுக்காக அதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

மேற்கண்ட திரு வசனத்தில் وَسَلِّمُوْا تَسْلِيْمًا என்று வசனம் அமைந்துள்ளது. இதன் பொருள் அதிகம் ஸலாம் சொல்லுங்கள் என்பதாகும். இவ்வாறு “ஸலவாத்” சொல்வதற்கு கூறப்படவில்லை. இதன் மூலம் ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது ஸலவாத், ஸலாம் இரண்டும் சொல்லப்பட்டாலும் ஸலவாத் சொல்வதை விட அதிகமாக ஸலாம் சொல்ல வேண்டும் என்பதும் விளங்கப்படுகிறது. உதாரணமாக 100 தரம் ஸலவாத் சொன்னால் 101 தரமாவது ஸலாம் சொல்ல வேண்டும். எண்ணிக்கை சமமாக இருத்தலாகாதென்ற தத்துவமும் விளங்கப்படுகின்றது.

எனவே, எப்போது ஸலவாத் சொன்னாலும், எத்தனை தரம் சொன்னாலும் அதை விட ஒரு தரமாவது அதிகமாக ஸலாம் சொல்வது திருக்குர்ஆன் வசனத்திற்கு மிகப் பொருத்தமானதாகும். இந்தக் கருத்து திருக்குர்ஆன் வசனத்திலிருந்து நான் விளங்கிய கருத்தேயன்றி எந்த ஒரு கிதாபிலும் நான் கண்ட கருத்தல்ல.

எவர் ஸலவாத் சொன்னாலும் அதோடு ஸலாம் சொல்வதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்க்காமல் ஒன்றை மட்டும் சொல்வது “மக்றூஹ்” விரும்பத்தக்கதல்ல என்பது சட்ட நூல்கள் கூறும் தத்துவமாகும்.

மேற்கண்ட திரு வசனத்தின் மூலம் ஸலவாத், ஸலாம் சொல்லுமாறு ஏவப்பட்டவர்கள் “முஃமின்” விசுவாசிகளேயன்றி பொதுவாக மனிதர்கள் அனைவருமல்ல. இந்தக் கருத்தும் திரு வசனத்திலிருந்தே பெறப்படுகிறது. இதற்குக் காரணம் விசுவாசிகள் மட்டுமே பெருமானார் மீது “மஹப்பத்” வைத்தவர்களாகச் சொல்வார்கள். வழி தவறியவர்கள் உண்மையான “மஹப்பத்”தோடு சொல்லமாட்டார்கள் என்பதேயாகும். பாங்கு சொல்லுமுன்னும், சொன்ன பின்னும் “ஸலவாத்” சொல்லாதவர்கள் கண்மணியின் மீது எவ்வாறு ஸலவாத், ஸலாம் சொல்வார்கள் என்று சொல்லத்தான் வேண்டுமா?

இலங்கையில் தென்பகுதியில் “பர்சன்ஜீ” என்ற மௌலித் ஓதும் போது அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு வசன முடிவிலும் صَلَّى اللهُ عَلَيْهِ என்றும், صَلَّى اللهُ وَسَلَّمَ عَلَيْهِ என்றும் சொல்கிறார்கள். இவ்விரண்டிலும் இரண்டாவதே சரியானதாகும்.

வழிகேடர்கள் “ஸலவாத் இப்றாஹீமிய்யா” தவிர வலீமார்களால் இயற்றப்பட்ட ஸலவாத் ஓதுவது கூடாதென்ற அபிப்பிராயமுள்ளவர்களாவர். இது அவர்களின் அறியாமையாகும். றஸூலுல்லாஹ் அவர்களின் புகழ் கூறும் எந்த “ஸலவாத்” ஆயினும், எவரால் ஆக்கப்பட்டதாயினும் அதை ஓதலாம்.

எங்களுக்கு – மனுகுலத்துக்கு உயிர் பிச்சை வழங்கிய உத்தம நபீ மீது புனிதமிகு றபீஉனில் அவ்வல் மாதம் ஸலவாத் சொல்லுங்கள். எமது மகிழ்வை, சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் உங்கள் வீட்டில் ஒரு சிறு கொடியேனும் ஏற்றியும், வழமைக்கு மாறாக வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்தும் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். உங்களை யாராவது எதிர்த்தால் அவர்களுடன் தர்க்கம் செய்யாமல் நள்ளிரவில் எழுந்து “தஹஜ்ஜுத்” என்ற வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவர்களின் நல் வழிக்காக அல்லது அழிவுக்காக இரு கரமேந்துங்கள்.

الوارث المحمدي سلطان العارفين الشّيخ الأكبر محمد بن علي الحاتمي المُكنَّى بأبي عبد الله محي الدين ابن عربي قدّس سرّه،
وُلد فى الأندلس عام 560 هجري، وتوفِّي ليلة الجمعة 28 ربيع الثاني 638 هجري،

அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 560ம் ஆண்டு ஸ்பெய்ன் நாட்டில் பிறந்து றபீஉனில் ஆகிர் பிறை 28ல் வெள்ளிக்கிழமை ஹிஜ்ரீ 638ல் சிரியாவின் தலை நகர் “டமஸ்கஸ்” இல் “வபாத்” ஆனார்கள்.

இந்த மகான் பெருமானார் அவர்களுக்கு ஸலாம் சொன்ன வசனங்களை கீழே குறிப்பிடுகிறேன். இம்மாதம் பிறை 13க்குள் ஒரு தரமாவது அந்த வசனங்கள் மூலம் பெருமானார் அவர்களுக்கு ஸலாம் சொல்லி அவர்களின் அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

اَلسَّلَامُ عَلَيْكَ يَا إِسْرَاءَ هَيَاكِلِ الْمُلَاقَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا عَرْشَ رَحْمَانِيَّةِ الْمُنَاجَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مُحَيَّا عَرُوْسَةِ الْحَضَرَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا سِدْرَةَ مُنْتَهَى وَصْلِ الرُّوْحَانِيَّاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا سُطُوْرَ طُرُوْسِ الْكَائِنَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا عِقْدَ جَوْهَرَةِ تَلَاقِ الْمَعْشُوْقِيَّاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مِحْرَابَ صَلاَةِ رُوْحِ الْهُوِيَّاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَوْنَقَ مُحَيَّا ذَاتِ الْإِطْلَاقَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا كَعْبَةَ تَحْقِيْقِ الْكَمَالَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مَجْلَى صُوْرَةِ مَوَارِدِ التَّلَقِّيَّاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مَعْشُوْقَ الْحَضَرَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مَحْبُوْبَ السُّلَافَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَاكَهْفَ مَنِيْعِ الطَّامَّاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا سَمِيْرَ اَشْوَاقِ اَرْبَابِ اللَّهَفَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا اَنِيْسَ مَنْ هَامَ مِنْ اَلَمِ الزَّفَرَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مُبْدِعَ تَنْمِيْقِ الْإِخْتِرَاعَاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا أَنِيْسَ مُطْرِبِ مَنْ غَابَتْ عَنْهُ اللَّحَظَاتُ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنْ رُوْحِ الرُّوْحِ لِلرُّوْحِ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنَ الْحَقِّ لِلْحَقِّ يَلُوْحُ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنْكَ اِلَيْكَ لَدَيْكَ
اَلسَّلَامُ عَلَيْكَ بِكَ لَكَ عَلَيْكَ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنْ فَلَكِ اَطْلَسِ الْأَفْلَاكِْ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنْ قُطْبِ سِرِّ سِرِّ الْأَمْلَاكِْ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنَ الْكُلِّيَّاتِ وَالْجُزْئِيَّاتِْ
اَلسَّلَامُ عَلَيْكَ مِنَ الْبَسَائِطِ وَالْمُرَكَّبَاتِْ
َاَلسَّلَامُ عَلَيْكَ مِنَ الْحَيَوَانَاتِ وَالْعَجْمَاوَاتِ وَسَائِرِ الْبَرِيَّاتْ


அன்புக்குரிய நல்லடியார்களே!

ஷெய்குல் அக்பர் நாயகமவர்களின் இந்த “ஸலாம்” வசனங்கள் அவர்கள் ஆன்மீக நிலையின் உச்சியில் நின்றும், பெருமானாரின் அன்பெனும் ஆழியில் முழுமையாக மூழ்கிய நிலையிலிருந்தும் அவர்கள் வாயிலாக – மூலமாக வெளி வந்த வசனங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இதை ஓதுவதற்கு மிகப் பொருத்தமானவர்கள் ஆன்மிகத்தில் ஓர் இடத்தைப் பிடித்த மகான்கள் மட்டுமேயாவர். மிக ஆழமாக ஆய்வு செய்தால் இதை ஓதுவதற்கு நானும் தகுதியற்றவன்தான். ஆயினும் அதனருளாலும், அவர்களின் பறகத்தாலும் நான் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு ஓதி வருகிறேன். இதை ஓதும் உங்களில் தகுதி பெறாதவர்கள் எனது எண்ணம் போல் நீங்களும் மனதில் நினைத்து ஓதுங்கள்.

தொழாதவர்கள், மற்றும் பெரும் பாவங்களில் ஊறிப் போனவர்கள் இதை ஓதுவது விரும்பத்தக்கதல்ல.

எவர் ஓதினாலும் இறுதியில் இந்த அடியானுக்காகவும் அவரின் கை உயரட்டும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments