நான் உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையில் இருந்த நிலையில் எனக்கு அறிமுகமில்லாத ஓர் கூட்டத்துடன் திரு “கஃபா”வை “தவாப்” சுற்றுவதற்கு கண்டேன். அவர்கள் என்னைக் கண்டதும் பின்வருமாறு இரு பாடல்கள் பாடினார்கள். அவற்றில் ஒன்று என் நினைவில் இல்லை. மற்றது பின்வருமாறு.
لَقَدْ طُفْنَا كَمَا طُفْتُمْ سِنِيْنَا – بِهَذَا الْبَيْتِ طُرًّا أَجْمَعِيْنَا
அதன் பொருள் “நீங்கள் பல வருடங்கள் இவ் இறை இல்லத்தை “தவாப்” சுற்றியது போல் நாங்களும் இதைப் பல வருடங்களாகச் சுற்றினோம்” என்பதாகும்.
அப்போது அவர்களில் ஒருவருடன் நான் பேசினேன். அவர் என்னிடம் என்னைத் தெரியுமா? என்று கேட்டார். இல்லை என்றேன். அப்போதவர் நான் உங்களின் முந்தின பாட்டன்மார்களில் ஒருவர் என்றார். அப்போது நீங்கள் மரணித்து எவ்வளவு காலம் என்று கேட்டேன். அதற்கவர் 40 ஆயிரம் வருடங்களும், இன்னும் சில வருடங்களும் என்றார். அப்போது நான் எங்கள் தந்தை ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மரணித்தே இத்தனையாண்டுகள் இல்லையே என்றேன். அதற்கவர் நீங்கள் எந்த ஆதம் பற்றிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு நெருக்கமான ஆதம் பற்றியா? அல்லது வேறு ஆதம் பற்றியா? என்று கேட்டார்.
அப்போது இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பெருமானார் அவர்கள் சொன்னதாக அறிவித்த “ஹதீது” ஒன்று என் நினைவுக்கு வந்தது. அந்த “ஹதீது” அல்லாஹ் இரண்டு இலட்சம் ஆதம்களை படைத்தான் என்ற ஹதீதாகும்.
அந்த ஹதீது என் நினைவுக்கு வந்த போது என்னுடன் பேசிய இனம் தெரியாத அந்த மனிதன் அல்லாஹ் படைத்த இரண்டு இலட்சம் ஆதம்களில் ஒருவரின் சந்ததியாக இருக்கலாம் என்று என் மனதில் நான் நினைத்துக் கொண்டேன்.
அந்த இரண்டு இலட்சம் ஆதம்களின் வரலாறு அறிய முடியாத ஒன்றாகும்.
ஆதாரம்: அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 36
ஆசிரியர்: இமாம் ஷஃறானீ
இந்த வரலாறை வாசிக்கின்ற பாமரன் “ஸுப்ஹானல்லாஹ்” இப்படியெல்லாம் இருக்கிறதா என்று வியந்து வியர்த்துப் போவான். அல்லாஹ் எதற்கும் சக்தியுள்ளவன் என்று நம்பி “ஸலாமத்” ஈடேற்றம் பெற்று விடுவான்.
ஆயினும் ஏழு ஆண்டுகள் அறபுக் கல்லூரிகளில் கற்று மௌலவீ பட்டம் பெற்றவர்களிற் சிலர் – அதாவது “ஸூபிஸம்” தெரியாத, வலீமாரின் அகமியம் புரியாத, கற்றுமறிவற்ற, பிஞ்சில் பழுத்தவர்கள் “ஈமான்” கொண்ட பெரும் சமுகத்தையே “முர்தத்” என்று “பத்வா” கொடுத்தவர்கள் மேலே நான் குறிப்பிட்ட செய்தியை நம்பமாட்டார்கள்.
இவர்கள் அந்த மகானை நம்பமாட்டார்கள் என்பதற்கு ஆதாரம் என்னவெனில் கண் கெட்ட “பத்வா” குழுவும், இக்குழுவை வழி நடத்தும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி என்பவருமேயாவர்.
இவர்கள் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகமவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு வாயால் சொன்னாலும் உள்ளத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதற்கு ஆதாரம் அவர்கள் ஆணித்தரமாக அடித்துக் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை இவர்கள் மறுப்பதும், “குப்ர்” என்று சொல்வதுமாகும். இதற்குக் காரணம் இவர்கள் வஹ்ஹாபீகளாக இருப்பதேதான். வஹ்ஹாபிகள் அனைவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையும், அதைப் பேசிய மகான்களையும் “ஷெய்தான்” என்று சொல்பவர்களாவர். முன்னூறுக்கும் மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்ற குண்டுதாரி வஹ்ஹாபி கூட அவர்களை காத்தான்குடியில் நடைபெற்ற தனது கூட்டமொன்றில் “ஷெய்தான் கபீர்” பெரிய ஷெய்தான் என்று சாடியது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
ஜனாப் ரிஸ்வீ அவர்களே! ரிஸ்வீயின் கைக் கூலிகளான “பத்வா” குழுவினரே! நீங்கள் அனைவரும் கற்றும் அறிவற்றவர்கள். விசுவாசிகளில் ஒருவர் இருவரையல்ல. பெரும் சமுகமொன்றையே “முர்தத்”துகளாக்கி விட்டு உங்கள் “பத்வா”வினால் நாட்டைக் குழப்பியும், நாட்டு மக்களிடையே பிளவையும், பிரச்சினையையும், மனக்கசப்பையும் ஏற்படுத்திவிட்டு நீங்கள் பஞ்சணையில் படுத்துறங்குகிறீர்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறீர்கள். உங்கள் “பத்வா”வினால் தாக்கப்பட்டு அல்லல் படும் மக்களின் அவல நிலை உங்களுக்குத் தெரியுமா?
மேலே நான் எழுதிக் காட்டிய இப்னு இறபீ நாயகமவர்கள் உறக்கத்திற்கும், விழிப்பிற்குமிடையில் கண்ட காட்சியை கற்றுமறிவற்ற “பத்வா” குழுவும், ரிஸ்வியும் நம்ப மாட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல. இவர்களால் வளர்க்கப்பட்ட வஹ்ஹாபீகளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறும், அகமியமும், மகிமையும் அறிந்த எந்த ஒரு மனிதனும் அவர்களைக் குறை காணமாட்டான்.
சில அயோக்கியர்களும், கீழ் சாதிகளும் அவர்களை இழித்துரைத்துப் பேசிய போது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் எழுதி அவர்கைளப் பயங்கர விபத்துக்களில் இருந்து பாதுகாக்க வழி சொல்லிக் கொடுத்தோம். ஆயினுமவர்கள் உணர்ந்து செயல்படவில்லை. இறுதியில் அவர்களின் இறுதி முடிவு நல்ல முடிவாகவில்லை. திட்டம் தீட்டியவரே தற்கொலை செய்ய நேரிட்டது. இது அவர் இப்னு அறபீ நாயகத்தை “ஷெய்தான் கபீர்” பெரிய ஷெய்தான் என்று பகிரங்க மேடையில் கூறியதற்கான நியாயமான தண்டனையும், தீர்வுமென்றால் அது மிகையாகாது. அவன் “அஹ்கமுல் ஹாகிமீன்” என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் காத்தான்குடியில் வலீமாரை இழித்துரைப்போர் உள்ளனர். இவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றேல் இரத்தக் கண்ணீர் சிந்துமளவு அல்லாஹ்வின் தண்டனை இறங்கும்.
இன்று பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லி பாங்கு சொல்லப்படும் பள்ளிவாயல்கள் ஒரு சில பள்ளிவாயல்களே இந் நாட்டிலுள்ளன. “வஹ்ஹாபிஸ” கொரோனா வைரஸ் கடல் கடந்து கொண்டுவரப்பட்டு நமது நாட்டு மக்களிடம் திணிக்கப்படுவதற்கு முன் நமது நாட்டில் முகவரியில்லாத சிலர் – வஹ்ஹாபிகள் வாழ்ந்திருந்தாலும் கூட அவர்களின் வைரஸ் எவரையும் தாக்கவில்லை. இதற்குக் காரணம் அக்கால கட்டத்தில் வாழ்ந்த உலமாஉகள் உலமாஉகளாயிருந்ததேயாகும். ஆனால் அன்றிருந்த நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. உலமாஉகளிற் பலர் இரு முகம் உள்ளவர்களாகவும், இரு நாக்குள்ளவர்களாகவும் மாறிவிட்டார்கள்.
ஆனால் இன்று என்னதான் ஆதாரங்களை முன்வைத்து பாங்கு சொல்லு முன்னும் “ஸலவாத்” சொல்ல வேண்டும், சொன்ன பிறகும் “ஸலவாத்” சொல்ல வேண்டும் என்று பேச்சுக்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும் பறை சாற்றினாலும் கூட கறை படிந்த இதயங்கள் இஸ்லாத்திற்கு வருவதாகத் தெரியவில்லை.
“ஸலவாத்” சொல்வதற்கு நேர, காலம் கிடையாது. ஆனால் தொழுகைக்கு நேர காலம் உண்டு. குறிப்பிட்ட நேரமே தொழலாம். அது மட்டுமல்ல. தொழுவதற்கு “ஹறாம்” ஆன நேரம் – விலக்கப்பட்ட நேரமும் உண்டு. தொழுகைக்கு இடம், தலம் உண்டு. ஆனால் ஸலவாத் சொல்வதற்கு இடம் தலமில்லை. மல சல கூடத்தில் மட்டுமே ஸலவாத் சொல்வது தடை. அதுகூட அதற்கு கண்ணியம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
தொழுகையில் “ஸலவாத்” சொல்லாவிட்டால் தொழுகை நிறைவேறாதென்று இஸ்லாமிய சட்டமே கூறிக் கொண்டிருக்கும் நிலையில் “ஸலவாத்” சொல்வதற்கு வஹ்ஹாபிகள் காட்டும் எதிர்ப்பை எண்ணி வியப்படைய வேண்டி உள்ளது. இவர்களுக்குப் பைத்தியமா? அல்லது மன நோயா? என்று எண்ணவும் தோணுகிறது.
ஒருவன் பயணிக்க விரும்புகிறான். பயணிக்குமுன் 10 தரம் “ஸலவாத்” சொல்ல வேண்டுமென்று மார்க்கம் கூறாவிட்டாலும் அவன் விரும்புகிறான். அவன் சொல்ல வேண்டியதுதான். அதனால் எந்தப் பாவமும் வந்துவிடாது. ஒரு காதலன் தனது காதலியை எப்போதும் புகழலாம், அதேபோல் அவளும் அவனை எப்போதும் புகழலாம். அதற்கு நேரம், காலம் எதுவுமே இல்லை.
ஒருவன் தனது பிள்ளை இரவில் உறங்கும் போது 10 தரம் “ஸலவாத்” ஓதி அந்தப் பிள்ளையில் ஊதி உறங்க வைக்க விரும்புகிறான். அவன் அதைச் செய்யலாம். அதற்கு “ஹதீது” ஆதாரம் வேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு செய்வது “பித்அத்”துமில்லை, “பித்அத்” என்று சொன்னாற்கூட அது பாவமான “பித்அத்” ஆகாது.
நான் திருமணப் பதிவு ஒன்றில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவன் நிகழ்வு முடிந்து “ஸலவாத்” சொல்லுமுன் சபையிலிருந்து எழுந்தான். அவனுக்கு அருகில் இருந்தவர் “ஸலவாத்” முடிந்த பின் போகலாம் என்றார். அவ்வளவுதான். “ஸலவாத்தும் கத்தரிக்காயும்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்றுவிட்டான்.
இவன் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவன். அவன் முகக்குறியில் அவன் ஒரு கெட்டவன் போல் எனக்கு விளங்கவில்லை. ஆயினும் அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வஹ்ஹாபிகளேயாவர். வஹ்ஹாபிகளிலும் சபை ஒழுங்கைப் பேணும் வஹ்ஹாபிகளும் உள்ளனர். சபை ஒழுங்கே தெரியாத எருமைகளும் உள்ளனர். பொதுவாக வஹ்ஹாபிகள் அல்லாஹ்வின் “றஹ்மத்” அருளை விட்டும் தூரமானவர்களேயாவர்.
காத்தான்குடியில் வஹ்ஹாபிஸம் பரவுவதற்கு எவன் காரண கர்த்தாவாக இருந்தானோ அவன் “தவ்பா” செய்து மீண்டு “வஹ்ஹாபிஸம் வழிகேடு அதைப் பின்பற்றாதீர்கள்” என்று சொன்னாலேயன்றி அவன் “ஈமான்” விசுவாசத்துடன் மரணிக்கமாட்டான் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஆரிபீன் – இறைஞானிகள், வலீமார் – இறை நேசர்கள் விடயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
كان الشيخ سراج الدين المخزُومي شيخ الإسلام بالشّام يقول : إيّاكم والإنكارَ على شيئ من كلام الشيخ محي الدين. فإنّ لُحوم الأولياء مَسمومةٌ، وهَلاكَ أديانِ مُبغِضِهم معلومةٌ، فمن أبغَضَهم تَنَصَّرَ ومات على ذلك، ومن أطْلَقَ لِسانَه فيهم بالسّبِّ ابتلاه الله بموت القلب،
(اليواقيت، ج 1،ص 7-8 )
சிரியா நாட்டில் வாழ்ந்த ஷெய்குல் இஸ்லாம் அஷ்ஷெய்கு ஸிறாஜுத்தீன் அல்மக்ஸூமீ றழியல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சுக்களில் எந்த ஒரு பேச்சையும் நிராகரித்துவிட வேண்டாமென்று உங்கள் அனைவரையும் நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் வலீமாரின் மாமிசம் நஞ்சூட்டப்பட்டதாகும். அந்த வலீமாரை கோபத்துக்குள்ளாக்கியவனின் மார்க்கம் அழிந்து போவது நிச்சயமானதாகும். எவனாவது அவர்களைக் கோபமாக்கினால் அவன் நஸ்றானியாகிவிடுவான். அதே நிலையிலேயே அவன் மரணிப்பான். எவனாவது வலீமாரின் விடயத்தில் தனது நாவைப் பேணவில்லையானால் அவனின் “கல்பு” மரணித்துவிடும்)
இது மாபெரும் எச்சரிக்கை. இதுகாலவரை தமது அறியாமையால் அவ்லியாஉகளை ஏசியவர்கள், தரக் குறைவாக பேசியவர்கள், நினைத்தவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் “தவ்பா” செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
وكان أبو عبد الله القُرشيّ يقول مَن غَضَّ مِن وليِّ الله عزّوجلّ ضُرب فى قلبه بِسَهمٍ مسمومٍ، ولَمْ يَمُتْ حتَّى تَفْسُدَ عقيدتُه ويُخاف عليه من سُوء الخاتمة،
அஷ்ஷெய்கு அபூ அப்தில்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(ஒரு வலீயை ஒருவன் கீழ்த்தரமாக நினைத்தானாயின் அவனின் “கல்பு” நஞ்சூட்டப்பட்ட அம்பினால் அடிக்கப்படும். அவன் தனது கொள்கை கெட்டுப் போகும் வரை மரணிக்கமாட்டான். அவனின் இறுதி முடிவு மிக மோசமானதாகவே இருக்கும்)
மேற்கண்ட அறிவுரைகள் மூலம் நாம் விளங்க வேண்டிய விடயங்கள் என்னவெனில் வலீமார் பற்றி நாம் தவறாகப் பேசவும் கூடாது. நினைக்கவும் கூடாது. வஹ்ஹாபிகளுடன் நாமும் சேர்ந்து கொண்டு அவ்லியாஉகளை குறை கூறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இன்றேல் மரண வேளை திருக்கலிமாவை மொழிய நா இயங்காது.
முற்றும்.