தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ் குளித்தான், அல்லாஹ் சாப்பிட்டான், அல்லாஹ் திருமணம் செய்தான் என்று ஒருவன் சொன்னால் அவனை விசாரிக்காமல் அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமிய மூலாதாரங்களில் இடமுண்டா? ஆதாரங்கள் உண்டா?
விடை:
இல்லை. இல்லவே இல்லை. இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் ஆகியவற்றிலும் இடமில்லை. ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான நாற்பெரும் பிரிவுகளிலும் இடமில்லை.
அல்லாஹ் குளித்தான், அவன் சாப்பிட்டான், அவன் திருமணம் செய்தான் போன்ற வசனங்கள் வெளிப்பார்வையில் “ஷரீஆ”வுக்கும், இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கும் முரணானவை போல் விளங்கப்படுகின்றன. எவரிடம் கேட்டாலும் அவ்வாறு சொல்வது பிழையென்றே சொல்வார்கள். இக்கட்டுரையை வாசிக்கின்றவர்களும் கூட இது பிழையென்றே சொல்வார்கள்.
ஒரு முஸ்லிம் மேற்கண்டவாறு சொன்னால் அவரை விசாரிக்காமலும், அதற்கான விளக்கத்தை அவரிடமே வினவி அறியாமலும் அவருக்கு “முர்தத்” என்றோ, பௌதன் அல்லது இந்து அல்லது கிறித்துவன் என்றோ தீர்ப்புச் சொல்லுதல் நூறு வீதமும் பிழையானதாகும். குறித்த வசனங்களைக் கூறிய அவனிடம் விளக்கம் கேட்பது கடமை என்பதில் மாற்றமில்லை. இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
அவ்வாறு சொன்னவன் தலைமறைவாகியிருந்தால், அல்லது அவனிடம் எந்த வகையிலும் விளக்கம் கேட்க முடியாதிருந்தால், அல்லது அவன் விளக்கம் சொல்ல மறுத்தால் தீர்ப்பு வழங்குகின்ற “முப்தீ” பின்வருமாறு தீர்ப்பு வழங்கலாமேயன்றி பொதுவாக அவன் “முர்தத்” என்றோ, காபிர் என்றோ, பௌதன் என்றோ, இந்து என்றோ, கிறித்துவன் என்றோ “பத்வா” தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமே இல்லை. மார்க்க நியதியும் இதுதான். பொது நியதியும் இதுவேதான்.
இவ்வாறு சொன்னவனை எந்த வகையிலும் விசாரிப்பதற்கு சாத்தியமில்லாத கட்டத்தில் மட்டும்தான் பின்வருமாறு தீர்ப்புக் கூறலாம்.
அதாவது அவ்வாறு சொன்னவன் படைப்புக்குரிய தன்மை போன்ற ஏதேனுமொரு தன்மை இறைவனுக்கு உண்டு என்ற கருத்தில் அவன் அவ்வாறு சொல்லியிருந்தால் மட்டுமே அவன் “முர்தத்” ஆகிவிட்டான் என்றும், அவன் அக்கருத்தில் அவ்வாறு சொல்லவில்லையானால் அவன் “முர்தத்” அல்ல என்றுமே தீர்ப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு சொன்னவனை விசாரிக்கும் போது அவன் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி விளக்கம் சொன்னால் அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” வழங்குதல் முற்றிலும் பிழையாகும்.
உதாரணமும், விளக்கமும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى
என்று கூறியுள்ளான். இவ்வசனம் ஒரு நிகழ்வோடு தொடர்புடையதாகும்.
ஒரு சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு திரு மக்கா நகர் நயவஞ்சகர்களால் எதிர்ப்பு உச்சக் கட்டத்தை அடைந்த போது பெருமானார் மக்கா நகரிலிருந்து மதீனாவுக்கு “ஹிஜ்றத்” வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எவருக்கும் தெரியாமல் மக்காவிலிருந்து வெளியேற ஒழுங்கு செய்தார்கள்.
ஒரு நாளிரவு அங்கிருந்து வெளியேறவிருந்த தகவல் அவர்களோடு தோழர்கள் போல் நடித்துக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள் இரகசியமாக இருந்த இத்தகவலை வெளிப்படுத்திவிட்டார்கள். இச் செய்தி மக்கா நகரெல்லாம் பரவியது.
எதிரிகளில் ஒரு குழு அன்றிரவு பெருமானார் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டனர். ஆயுதங்களோடு அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
அவ்வேளை பெருமானார் தங்களின் திருக்கரத்தால் மண் ஒரு பிடி எடுத்து எதிரிகளின் பக்கம் எறிந்தபொழுது அவர்களின் கண்கள் பார்வையிழந்தன. பெருமானார் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார்கள்.
இந்த நிகழ்வின் போது பெருமானார் அவர்கள்தான் தங்களின் திருக்கரத்தால் மண்ணை எடுத்தவர்களும், எறிந்தவர்களுமாவார்கள். அவர்கள் தவிர வேறு யாரும் மண் எடுக்கவுமில்லை, எறியவுமில்லை. மண் எடுத்தவர்களும், எறிந்தவர்களும் பெருமானார் அவர்களேதான். இதுவே எதார்த்தம். இதுவே நடந்த உண்மை.
ஆயினும் இந்த நிகழ்வு பற்றி திருக்குர்ஆனில் கூறிய அல்லாஹ், “முஹம்மதே! மண் எறிந்த நேரம் நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான்” (திருக்குர்ஆன் 08-17) என்று கூறியுள்ளான்.
வெளிப்பார்வையில் அல்லாஹ் கூறியுள்ள இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது போல் தோணுகிறது. எனினும் இத் தகவல் அல்லாஹ் சொன்ன தகவலாக இருப்பதால் அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்க முடியாது. இதற்கு விளக்கம் இருக்கத்தான் வேண்டும். இதன் விபரத்தை இங்கு எழுதுகிறேன்.
“ஹகீகத் அக்லீ”, “மஜாஸ் அக்லீ”
“ஹகீகத் அக்லீ” என்றும், “மஜாஸ் அக்லீ” என்றும் இரு விடயங்கள் உள்ளன. இவ்விரண்டின் விபரங்களையும் நான் இங்கு எழுதுகிறேன். வாசிக்கும் சகோதரர்கள் முழுக்கவனம் செலுத்தியும், அவசரப்படாமலும் படித்து விளங்கிக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் விடயத்தை விளங்கி ஸூபிஸ ஞானம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது பசியும், தாகமுமேயன்றி நீங்கள் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டுமென்பதோ, கொடி தூக்க வேண்டுமென்பதோ, பத்ரிய்யா வளாகத்தை நிரப்ப வேண்டுமென்பதோ அல்ல.
“ஹகீகத் அக்லீ” என்றால் نِسْبَةُ الْفِعْلِ إِلَى مَنْ هُوَ لَهُ ஒரு செயலை அச் செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இதுவே “ஹகீகத் அக்லீ” என்பதற்குரிய வரைவிலக்கணமாகும். உதாரணமாக شَفَى اللهُ الْمَرَضَ அல்லாஹ் நோயை சுகமாக்கிவிட்டான் என்றும், أَنْبَتَ اللهُ الشَّجَرَةَ அல்லாஹ் மரத்தை முளைக்கச் செய்தான் என்றும் சொல்வது போன்று.
இவ்விரு உதாரணங்களும் “ஹகீகத் அக்லீ” என்ற விடயத்தைக் விளங்குவதற்குப் போதும். ஆய்வுத் திறனுள்ளவர்கள் இதுபோல் ஆயிரம் உதாரணங்கள் மூலம் சிந்திக்கலாம். குறிப்பாக படிக்கின்ற மாணவர்களும், படித்த பட்டதாரிகளும் இக்கலையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். ஏனெனில் ஈடேற்றமென்பது ஸூபிஸத்திலேயே தங்கி நிற்கின்றது. இது இன்று உணரப்படாமல் ஸூபிஸம் புறக்கனிக்கப்படுவதும், நகைப்புக்குரியதாக கணிக்கப்படுவதும், ஊர்த்தலைவர்களும், முக்கியத்தர்களும் நகைப்புக்கும், புறக்கணிப்புக்கும் துணை போவதும் உயிர் கொல்லும் நஞ்சுண்பதற்கு சமமாகும்.
மேலே சொன்ன இரு உதாரணங்கள்பால் உங்களின் கவனத்தை திருப்புகிறேன். شَفَى اللهُ الْمَرَضَ அல்லாஹ் நோயை சுகமாக்கினான் என்ற உதாரணத்தில் “ஷிபா” சுகமாக்குதல் என்ற செயல் எதார்த்தத்தில் அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுவே எதார்த்தம். ஏனெனில் சுகமாக்குதல் என்ற செயல் அல்லாஹ்வால் மட்டும் சாத்தியமானதேயன்றி வேறு எவராலும் சாத்தியமானதல்ல. வைத்தியர்களாலும் சாத்தியமானதல்ல. ஆகையால் இவ்வுதாரணத்தில் சுகமாக்குதல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
இவ் உதாரணம் போன்றதே أَنْبَتَ اللهُ الشَّجَرَةَ அல்லாஹ் மரத்தை முளைக்கச் செய்தான் என்ற உதாரணமமுமாகும். இவ்வுதாரணத்திலும் முளைக்கச் செய்தலெனும் செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
“மஜாஸ் அக்லீ” என்றால் نِسْبَةُ الْفِعْلِ إِلَى غَيْرِ مَنْ هُوَ لَهُ ஒரு செயலை எதார்த்தத்தில் அதற்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அதோடு தொடர்புள்ள இன்னொருவன் பக்கம், அல்லது இன்னொரு வஸ்த்தின் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இதுவே இதற்கான வரைவிலக்கணமாகும்.
மேலே சொன்ன இரு உதாரணங்களையும் சிறிய மாற்றத்துடன் சொல்வோம். “மஜாஸ் அக்லீ” வந்துவிடும். أَنْبَتَ الْمَطَرُ الشَّجَرَةَ மழை மரத்தை முளைக்கச் செய்தது என்றும், شَفَى الطَّبِيْبُ الْمَرَضَ வைத்தியர் நோயை சுகமாக்கிவிட்டார் என்றும் சொல்வது போன்று.
இவ்விரு உதாரணங்களில் முந்தின உதாரணத்தில் முளைக்கச் செய்தல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது முளைப்பதற்கு காரணமான அல்லது உதவியாயிருந்த மழையின் பக்கம் சேர்த்தும், பிந்தின உதாரணத்தில் சுகமாக்கி வைத்தல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் சுகம் கிடைப்பதற்கு காரணமாக அல்லது உதவியாயிருந்த வைத்தியன் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
முதலாம் வகைப்படி சொல்வதில் எந்தவொரு கருத்து வேறுபாடும் எவரிடமும் கிடையாது. எவரிடம் கேட்டாலும் அவ்வாறு சொல்ல முடியும் என்றுதான் சொல்வார். இதை விடுவோம்.
இரண்டாம் வகைப்படி சொல்வதில் ஸுன்னீ கொள்கைவாதிகளுக்கும், அதற்கு மாறான கொள்கை வாதிகளுக்கும் கருத்த வேறுபாடு உண்டு.
ஸுன்னீகள் அவ்வாறு சொல்லலாம் என்று கூறுவார்கள். மற்றவர்கள் அவ்வாறு சொல்ல முடியாதென்று கூறுவார்கள்.
எவர் எவ்வாறு கருத்தக் கூறினாலும் எவன் பேச்சை எவராலும் மறுக்க முடியாதோ அவன் தனது திருக்குர்ஆன் என்ற மேடையில் இரண்டையும் சரி கண்டு பகிரங்கமாக கூறியுள்ளான்.
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا
“ஆன்மாக்கள் மரணிக்கும் போது அவற்றை அல்லாஹ்தான் மரணிக்கச் செய்கிறான்” என்ற திருமறை வசனத்தையும், (திருக்குர்ஆன் 39-42)
قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُم
“முஹம்மதே! நீங்கள் சொல்லுங்கள். உங்களின் மீது சாட்டப்பட்ட இஸ்றாயீல் என்ற “மலக்” அமரர்தான் உங்களை மரணிக்கச் செய்கிறார்” என்ற (திருக்குர்ஆன் 32-11) வசனத்தையும் கவனிக்க வேண்டும்.
இவ்விரு வசனங்களில் ஒன்று மற்றதற்கு முரணாக உள்ளது. எனினும் முரண்பாடு ஒன்றுமே கிடையாது. இரண்டு விதமாகவும் சொல்ல முடியும் என்பதையே அல்லாஹ் இரு வசனங்கள் மூலமும் நிறுவிவிட்டான்.
முந்தின வசனம் “ஹகீகத் அக்லீ” அடிப்படையிலும், பிந்தின வசனம் “மஜாஸ் அக்லீ” அடிப்படையிலும் அமைந்துள்ளன.
பொதுவாக எச் செயலாயினும், அது எவர் மூலம் அல்லது எதன் மூலம் வெளியான செயலாயினும் பொதுவாகச் செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவேயாகும். எவருக்கும், அல்லது எதற்கும் சுயமான செயல் கிடையாது. اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியன என்பதே தத்துவமும், எதார்த்தமுமாகும்.
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
உங்களையும், உங்களின் செயல்களையும் அல்லாஹ்தான் படைத்தான். (திருக்குர்ஆன் 37-96)
எச் செயலுக்கும் உரியவன், சொந்தக் காரன் அல்லாஹ் மாத்திரமேயாவான். வேறு எவருக்கும் எதற்கும், எச்செயலும் இல்லை. இதுவே இஸ்லாமிய தத்துவமும், கொள்கையுமாகும். மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள “றம்யுன்” எறிதல் என்ற செயலுக்குரியவன் – அதன் சொந்தக் காரன் அல்லாஹ்தான். நபீ பெருமானுக்கோ, அல்லது வேறு யாருக்குமோ, எதற்குமோ செயல் கிடையாது.
உண்மை இவ்வாறிருக்கும் நிலையில், எதார்த்தமும் இவ்வாறே இருக்கும் நிலையில் நான் செய்தேன், அவன் செய்தான், அவள் செய்தாள், இவள் செய்தாள் என்று செயலை படைப்பின் பக்கம் சேர்த்துச் சொல்வது உலக நடைமுறையேயன்றி எதார்த்தமில்லை.
கத்தி வெட்டுகிறது, நெருப்புச் சுடுகிறது என்று வெட்டுதல் என்ற செயலை கத்தியின் பக்கமும், சுடுதல் என்ற செயலை நெருப்பின் பக்கமும் சேர்த்துச் சொல்வதும் உலக நடைமுறைக்காகவேயன்றி எதார்த்தம் அதுவல்ல. சுயமான செயல் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. வேறு யாருக்கும், எதற்கும் எச்செயலும் கிடையாது.
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ
நீங்கள் அவர்களைக் கொலை செய்யவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவர்களைக் கொலை செய்தான். (திருக்குர்ஆன் 08-17)
கொலை என்ற செயலை “ஹகீகத் அக்லீ” என்ற அடிப்படையிலேயே அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
அவர்களிடம் அல்லாஹ்வின் திருவசனங்கள் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை – விசுவாசத்தை அதிகப்படுத்தும். (திருக்குர்ஆன் 08-02)
விசுவாசத்தை அதிகப்படுத்துதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயன்றி திருவசனங்களுக்குரியதல்ல. எனினும் “மஜாஸ் அக்லீ” அடிப்படையில் இவ்வசனம் அருளப்பட்டுள்ளது.
எனவே, எந்தவொரு செயலாயினும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ்தான் என்று நம்புவதுடன், அவனின் அச் செயல் அவனின் படைப்புகளில் எதன் மூலம் வெளியாகின்றதோ அதன் பக்கம் அச் செயலைச் சேர்த்துச் சொல்வது பிழையாகாது. “ஷிர்க்” ஆகவுமாட்டாது. “குப்ர்” ஆகவுமாட்டாது என்று நம்புவதும் கடமையாகும்.
மேற்கண்ட விபரங்களையும், விளக்கங்களையும் தெளிவினும் தெளிவாக அறிந்த ஒருவன் முசம்மில் என்பவன் குளித்திருக்கும் நிலையில் “ஹகீகத் அக்லீ” அடிப்படையில் அல்லாஹ் குளித்தான் என்று சொல்வதும், இஸ்மாயீல் சாப்பிட்டிருக்கும் நிலையில் அல்லாஹ் சாப்பிட்டான் என்று சொல்வதும், முஸ்தபா திருமணம் செய்திருக்கும் நிலையில் அல்லாஹ் திருமணம் செய்தான் என்று சொல்வதும் மதம் மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஆயினும் இவ்வாறெல்லாம் ஒருவன் சொன்னால் அவனை விசாரிக்காமலும், அவனிடம் விளக்கம் கேட்காமலும் அவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குதல் சட்ட விரோதமானதும், செல்லுபடியாகாததுமாகும்.
யாராவதொரு “முப்தீ” அவ்வாறு சொன்னவன் “முர்தத்”துதான் என்றும், அவனை விசாரிக்காமலேயே அவனுக்கு அவ்வாறு “பத்வா” வழங்கலாமென்றும் சொன்னால் உலகில் திருக்குர்ஆன் ஓதுகின்ற அனைவருக்கும் “முர்தத்” என்று விசாரணையின்றியே “பத்வா” வழங்க வேண்டும். விபரம் அடுத்த தொடரில்…
[11:21 pm, 01/02/2022] Nsn: #முல்லாக்களின் கையெழுத்தில்லாத “முர்தத் பத்வா”
தந்தையின் பெயர் தெரியாத தனயன் போன்றதாகும்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஒருவனுக்கு தபால் மூலமோ, அல்லது வேறு வழிகள் மூலமோ ஒரு கடிதம் கிடைத்தால் அவன் முதலில் பார்ப்பது எழுதியவனின் கையெழுத்தையேயாகும். அதிகமானவர்களிடம் இவ்வழக்கம் உண்டு. அதில் கையெழுத்து இல்லையானால் அவன் அதை மொட்டைக் கடிதமெனக் கருதி அதைக் கசக்கி தனது காலின் கீழ் உள்ள குப்பைக் கூடையில் போட்டு விடுவான். ஒரு கடிதத்தின் பிரதான அம்சம் எழுதியவனின் கையெழுத்தேயாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” என்றும், எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் வழங்கிய “பத்வா” மொட்டைக் கடிதம் போல் மொட்டை “பத்வா”வேயாகும்.
ஏனெனில் அதில் “பத்வா” எழுதியவரின் அல்லது எழுதியவர்களின் பெயரோ, பெயர்களோ கூறப்படவில்லை. இது தந்தையின் பெயர் தெரியாத தனயன் போன்ற “பத்வா”வேயாகும்! எழுதியவர்கள் தம்மைக் காட்டிக் கொள்ளப் பயந்தவர்களேயாவர். பயந்தவர்களுக்கு ஏன் இந்த வேலையோ!
நமது இலங்கைத் திரு நாட்டில் சில ஊர்களில் தந்தையின் பெயர் தெரியாதவனை “ஹறாங்குட்டி” என்று சொல்வது வழக்கம். இதை எழுதிக் கொண்டிருந்த போது “ஹறாங்குட்டி” கதைதான் என் நினைவுக்கு வந்தது.
இக்குட்டி பிறந்து சில நாட்களிலேயே “ஜனாஸா” மையித் வைக்கப்படும் “ஸுந்தூக்”கில் அதை வைத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களால் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளி வளாகத்திலிருந்து ஊர் வீதி வழியாக “ஷஹாதத் கலிமா” சொல்லி மெத்தைப் பள்ளிவாயல் வழியாக பிரதான வீதியை அடைந்து “குட்வின்” சதுக்கத்தில் ஹறாங்குட்டி எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.
இந்த நிகழ்வு 25.05.1980 அன்று நடந்த நிகழ்வாகும். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போதும் எங்களிடமுள்ளன. தேவைப்பட்டால் வெளியிடுவோம்.
இப்போது எமக்கு எதிராகவும், ஸூபிஸ ஞானத்திற்கு எதிராகவும், “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவத்திற்கு எதிராகவும் கொடி தூக்குபவர்களில் அநேகமானவர்களுக்கு இந்நிகழ்வு தெரியாது. இன்று 42 வயதுள்ள ஒருவர் இந்நிகழ்வு நடந்த 1979ம் ஆண்டு தாயிடம் பால் அருந்தும் வயதுள்ளவராகவே இருந்திருப்பார்.
செத்திறந்து சாம்பலாக்கப்பட்ட பிரேதத்தை மீண்டும் வைத்துக் கொண்டு சாம்பிராணி போடுவோரை எண்ணி நான் வெட்கித் தலை குனிகிறேன்.
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
ஒருவர் “பத்வா” எழுதினால் அவர் தனது பெயரை அல்லது ஒரு குழு சேர்ந்து எழுதினால் அவர்கள் தமது பெயர்களையும், தமது முகவரிகளையும் எழுதுவதே வழக்கம். இதுவே சரியான நடைமுறையுமாகும்.
உங்களின் உலமா சபை கொடுத்த “பத்வா”வில் “பத்வா” எழுதியவர்களின் பெயர் முகவரிகள் கூறப்படவில்லையே அது ஏன்? பயந்துவிட்டார்களா? அப்படியானால் நீங்கள் “பத்வா” எழுத ஏன் முன்வர வேண்டும்? இடுப்பில் பலமில்லாதவனும், ஆண்குறி சூகையானவனும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்கிறார்களே! அவர்களுக்குள்ள “அக்ல்” புத்தியாவது “பத்வா” வழங்கிய முல்லா மகான்களுக்கு இல்லாமற் போய்விட்டதே! நீங்களாவது அவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கலாமல்லவா? நீங்கள்தான் ஐடியா மன்னராச்சே!
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
(நான் “பத்வா” வழங்கவில்லை என்றும், “பத்வா” வழங்கிய கால கட்டத்தில் நான் பதவியிலிருக்கவில்லை) என்றும் கூறி நியாயம் கேட்பவர்களுக்கு சாட்டுப் போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இது கூட சாம்பல் கேட்ட கதை போன்ற ஒரு கதையேதான்.
நீங்கள் கூறும் நொண்டிச் சாட்டைப் பார்த்தால் “பத்வா” வழங்கப்பட்ட நேரம் நீங்கள் பதவியிலிருந்திருந்தால் “பத்வா” வழங்கவிட்டிருக்கமாட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். இவ்வாறுதான் கலீபதுல் குலபா மௌலவீ அப்துல் ஹமீத் பஹ்ஜீ அவர்களும் என்னிடம் சொன்னார்.
கொழும்பிலுள்ள ஒரு “ஹோல்” மண்டபத்தில் சிறிய அளவிலான ஒரு மாநாடு நடந்தது. அதை சகோதரர் ஸெய்யித் ஹனீப் ஹாஜீ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என்று நினைக்கிறேன். அதற்கு எனக்கும் அழைப்பு வந்தது. நானும் சென்றிருந்தேன். பிரதம அதிதியாக மரியாதைக்குரிய அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் கைலானீ அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மட்டுமே அங்கு அறபு மொழியில் பேசினார்கள். அவரின் பேச்சை சகோதரர் மௌலவீ யஹ்யா அஸ்ஹரீ அவர்கள் தமிழாக்கம் செய்தார்.
நான் உள்ளே சென்ற போது முன்னிருக்கையில் ஒருவர் இருந்தார். அவருடன் இன்னுமொருவரும் இருந்தார். இருவருக்குமிடையில் ஓர் இடம் காலியாயிருந்தது. அவ்விடத்தில் அங்கு நின்றிருந்த ஒருவரால் நான் அமர்த்தப்பட்டேன். எனது வலது பக்கமிருந்தவர் மரியாதைக்குரிய அதிபர் முஹாஜிரீன் ஹஸ்றத் அவர்கள். இடப்பக்கம் இருந்தவர் முகத்தை மறைத்துக் கொண்டிருந்ததால் அவர் யாரென்று எனக்கு தெரியாமற் போயிற்று. நான் முஹாஜிரீன் ஹஸ்றத் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தின் பின் முகத்திரையை நீக்கிவிட்டு என்னை நோக்கி நான் யார் தெரியுமா? என்று அவர் வினவினார். ஸலாம் சொன்னாரா? இல்லையா? என்பது என் நினைவில் இல்லை. பார்த்த முகம் போல் தெரிகிறது என்றேன். அதற்கவர் நான்தான் கலீபதுல் குலபா அப்துல் ஹமீத் என்றார். சற்று சத்தமாய் சிரித்து விட்டு, எனக்கு “முர்தத் பத்வா” கொடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே? என்றேன். அதற்கவர் “அஸ்தக்பிறுல்லாஹல் அளீம்” நான் அந்தக் கூட்டத்திற்கு கூட போகவில்லை. இருந்தாலும் “முர்தத்” என்று “பத்வா” கொடுக்காதீர்கள் என்று பல தரம் நான் கூறியும் என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை என்று கூறினார். அவர் பொய் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேனாயினும் நான் அவரை எதிர்த்து எதுவுமே சொல்லவில்லை.
இந்த விபரத்தை நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில் இவரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களும் அதியுச்ச பதவியில் இருப்பவர்களாவர்.
மௌலவீ அப்துல் ஹமீத் பஹ்ஜீ அவர்கள் “கலீபதுல் குலபாஇ” இலங்கை நாட்டிலுள்ள “ஷாதுலிய்யா தரீகா”வின் பல கலீபாஉகளுக்கும் கலீபாவானவராவார். இப்பதவி சாதாரணமான பதவியல்ல. கிடைத்தற்கரிய பதவியாகும். இவருக்கு ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும், அவர்களின் கலீபா அஸஸெய்யித் அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும், அவர்களின் கலீபா அஸ்ஸெய்யித் தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும் “ஷபாஅத்” சிபாரிசும், உதவியும் நிச்சயமாக கிடைக்கும்.
எவர் எத்தரீகாவுக்கு கலீபாவாக இருந்தாலும் அவர் அத்தரீகாவின் “றூஹ்” உயிரான “தரீகா”வின் கொள்கையை – “அகீதா”வை வளர்க்க வேண்டும். அதை வளர்ப்பதற்கு அயராதுழைக்கவும் வேண்டும்.
“தரீகா”க்களை தாபித்த குத்புமார்களில் “கிதாப்” நூல்கள் எழுதுவதைக் குறைத்து أَحْزَابْ எனும் “அவ்றாத்”களை அதிகப்படுத்திய மகான் ஷாதுலீ நாயகம் என்றே சொல்ல வேண்டும்.
இதேபோல் தரீகாக்களின் தாபகர்களான குத்புமார்களில் “வஹ்ததுல் வுஜூத்” பேசாத எந்தவொரு குத்பும் இருந்ததற்கு வரலாறே கிடையாது. அவர்களில் விளக்கமாகவும், வெளிப்படையாகவும் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய, எழுதிய மகான் ஷாதுலீ நாயகம் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் “கலீபா”வின் “கலீபா”வான “ஹிகம்” எனும் ஞான நூலை எழுதிய தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அவர்களும் அவ்வாறே பேசியும், எழுதியுமுள்ளார்கள்.
ஒரு காலத்தில் – சுமார் 75 வருடங்களுக்கு முன் “ஹிகம்” எனும் நூல் இலங்கையிலுள்ள சில அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்பட்டும் உள்ளன. இந்நூல் பற்றிக் கருத்துக் கூறிய அறிஞர் சமுகம் كَادَ الْحِكَمُ أَنْ يَكُوْنَ قُرْآنًا “ஹிகம் எனும் நூல் குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் அறிந்தவரை இலங்கையில் நடைமுறையிலுள்ள “தரீகா”க்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் கூறப்படாத எந்த ஒரு “தரீகா”வும் கிடையாது. விபரமறிய விரும்புவோர் எம்மோடு தொடர்பு கொண்டு விபரம் கேட்டால் விளக்கமாகக் கூற நாம் ஆயித்தமாயுள்ளோம்.
கலீபதுல் குலபா அவர்களே!
உங்களுக்கோ, உங்களின் ஏனைய கலீபாஉகளுக்கோ இக்கொள்கை விளங்காதிருப்பின் அல்லது தெளிவில்லாதிருப்பின் நீங்கள் அனைவரும் நேரகாலத்தைப் பெற்றுக் கொண்டு என்னிடம் வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
அல்லாஹ்வின் அருளைச் சொல்லிக் காட்டுங்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நான் சொல்கிறேன். பெருமை, கர்வம் என்ற அசுத்தங்களைச் சுமந்தவனாக நான் இதைக் கூறவில்லை. அல்லாஹ் எனக்குச் செய்த “நிஃமத்” அருளைச் சொல்லிக் காட்ட வேண்டுமென்ற அடிப்படையில் சொல்கிறேன்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரிந்த மகான்கள் பலர் இந்நாட்டில் இருக்கலாம். ஆயினுமவர்களில் அநேகர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “முர்தத் பத்வா” தமக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சி இலைமறை காய் போல் வாழ்ந்து வருகிறார்களேயன்றி தெரிந்தவர்கள் இல்லையென்று நான் சொல்லவில்லை. உலமா சபை முப்தீகள் “பத்வா” கொடுப்பதற்கு பேனா, பேப்பருடன் ரெடியாக வழிமேல் விழி வைத்து காத்துக்கிடக்கின்றனர். அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் பலிக்கிடாய்களாக்க நான் விரும்பவில்லை.
قال الشّيخ الأكبر محي الدين ابن عربي قُدّس سرّه خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيِّ
நான் ஓர் அறிவு கொண்டு சொந்தமாக்கப்பட்டுள்ளேன். அர்ஷ், குர்ஸீ உடைய இறைவன் வேறெவருக்கும் அதைக் கொடுக்காமல் எனக்கு மட்டுமே தந்துள்ளான் என்று கூறினார்கள்.
அவர்களின் இப்பாடல் சிரியா நாட்டின் தலைநகரான டமஸ்கஸ் நகரில் அமைந்துள்ள அவர்களின் புனித அடக்கவிடத்தின் தலைவாயலில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருளைச் சொல்லிக் காட்டுவதற்காக கூறினார்களேயன்றி பெருமைக்காக சொல்லவில்லை.
அவர்கள் போல்தான் நானும் சொல்கிறேனேயன்றி பெருமைக்கும், எனக்கும் சம்பந்தமே கிடையாதென்று சத்தியம் செய்து கூறுகிறேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” பயமுறுத்தல் இன்றேல் என்னைவிடத் தரமான மறைந்து வாழும் மகான்கள் சபைக்கு வருவார்கள். மேடையேறிப் பேசவும் செய்வார்கள்.
கலீபதுல் குலபா அவர்களே!
ஷாதுலிய்யா தரீகாவுக்கும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கும் சம்பந்தமே கிடையாதென்றும், இந்த ஞானம் ஷாதுலீ நாயகமோ, தரீகாவைச் சேர்ந்த ஏனைய மஷாயிகுமார்களோ பேசவுமில்லை, எழுதவுமில்லை என்றும் நீங்கள் சொல்வீர்களாயின் சொல்லுங்கள். நாம் விளக்கி வைக்க எப்போதும் ஆயித்தமாயுள்ளோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
سمحا ومعذرة من العلماء الّذين أشرت إليهم بأسمائهم وألقابهم ومناصبهم، لأنّ القلب يتأذّى ويتألّم ويقطر دمعا ودما، بما فعل العلماء الّذين أفتوني وجمّا غفيرا وجمعا كبيرا من الموحّدين المؤمنين بوحدة الوجود التي هي الروح للإيمان والإسلام، وهي المرقاة التي توصل العبد إلى ربّه،
முற்றும்.