தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
தென்னிந்தியா கம்பம் நகரில் கண்ணுறங்கும் காமில் வலீ அஷ் ஷெய்கு அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் வலிய்யுல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் உயிரோடிருந்த காலத்திலேயே தனக்குப் பிறகு தனது இரண்டாவது மகன் அவர்களையே தன்னுடைய பிரதிநிதியாக நியமித்தார்கள். தன்னுடைய மூத்த மகன் மௌலவீ அப்துல் கபூர் என்பவர் ஒரு ஆலிமாக இருந்தம் கூட அவரை அவர்கள் நியமிக்கவில்லை. இவருடைய தில்லுமுல்லுகளை அவர்கள் அறிந்திருந்த காரணத்தினால் அவரை அவர்கள் தனக்குப் பின் தன்னுடைய கலீபாவாக நியமிக்கவில்லை. உண்மையில் இவர் தில்லுமுல்லுக் காரன் என்பதை 20 வருடங்களைக் கடந்த நிலையில் அல்லாஹ் நிரூபித்துக் காட்டியுள்ளான்.
ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலை பகிரங்கமாகப் பேசியது 1979ம் ஆண்டாகும். அதை மறுத்து அவர்களும், அவர்களின் கருத்தைச் சரி கண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “பத்வா” வழங்கியது அதே ஆண்டு (01 – 04 -1979ல்) ஆகும். உலமா சபை வழங்கிய “பத்வா” தவறானது என்றும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் சரியானது என்றும் ஆதார பூர்வமாக “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் ஓர் அறபு மொழியிலான “பத்வா” எழுதி அதில் இந்திய உலமாஉகளிடம் கையெழுத்துப் பெறுவதற்காக இந்தியா சென்றார்கள். இது நடை பெற்றது 1982ம் ஆண்டாகும்.
மேற்படி மௌலவீ அப்துல் கபூரிடம் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்பது போன்றும், அதற்கு மௌலவீ அப்துல் கபூர் அவ்வாறு அம்பா நாயகம் கையெழுத்திடவில்லை என்று பதிலளிப்பது போன்றும் ஒரு கானொளி சமுக வலை தளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறித்த கானொளியில் மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் 1977 – 1978 களில் ஒரு நூல் கொண்டு வந்தாகவும், அதில் அம்பா கையெழுத்திட முடியாது என்று சொன்னதாகவும், குறித்த நூலில் “ஷஃன்” இல்லையென்று அதன் ஓரத்தில் தான் எழுதியதாகவும் மௌலவீ அப்துல் கபூர் கூறுகின்றார். இவர் கூறுவது பொய் என்பதை இவரின் பதிலிலேயே புத்தியுள்ள ஒருவன் புரிந்து கொள்வான். மார்க்கப் பிரச்சினை ஏற்பட முன்னேயே கையெழுத்துக் கேட்டு வந்ததாக கூறுகிறார்.
இவர் இவ்வாறு “ஹக்” சத்தியத்துக்கு மாற்றமாக உலகளாவிய ஆதாயத்துக்காக பேசுபவராக காணப்பட்டதாலேயே கண்ணியத்திற்குரிய அம்பா நாயகம் அவர்கள் இவரை கணக்கெடுக்கவில்லை. தனது கையாலேயே எழுதிவிட்டு தான் எழுதவுமில்லை. அம்பா கையெழுத்திடவுமில்லை என்று பொய் உரைக்கும் இவர் எவ்வாறு கண்ணியத்திற்குரியவராக இருக்க முடியும்? இவர் இன்று நேற்றல்ல சுமார் 12 – 13 வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கைத் திரு நாட்டிற்கு வசூலுக்காக வருகிறார். தான் இலங்கையில் கால் பதித்த ஆரம்ப கட்டத்திலேயே தனது வாசிக்காக கொழும்பு, காலி போன்ற இடங்களில் இவ்வாறு கையெழுத்திடவில்லை என்று கூறியது எமக்கு அன்றே தெரியும். இவர் குறித்து தந்தை அம்பா அவர்களே “இவர் ஒரு பிராடு” என்று சொன்னதைக் கேட்டதற்கு “ஐ விட்னஸ்” இன்றும் எம்முடன் இருக்கின்றார்.
ஆகவே, இவர் போன்ற பிராடுகளின் பித்தலாட்டத்துக்கு என்றும் நாம் அசைபவர்களல்ல என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இத்துடன் இவரின் கையெழுத்தும், அம்பா நாயகம் அவர்களின் கையெழுத்தும் இணைக்கப்பட்டுள்ளன. சத்தியம் என்றுமே சத்தியம்தான்.
نَبْحُ الْكِلَابِ لَا يَضُرُّ السَّحَابَ
நாய் குரைத்து மேகத்துக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.
குறிப்பு: அம்பா நாயகம் அவர்களின் கையெழுத்தின் அசல் பிரதியி காண விரும்புவோர் எம்மிடம் நேரடியாக வந்து கண்டு கொள்ளலாம்.
عَنْ عُمَرَ، رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْوَفُ مَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةُ الْمُضِلِّينَ»
நான் எனது “உம்மத்” மீது பயப்படும் விடயங்களில் மிகவும் பயப்படுவது வழி கெடுக்கும் இமாம்கள் – உலமாக்களையே ஆகும் என்று பெருமானார் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.