Sunday, October 6, 2024
Homeநிகழ்வுகள்45வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் தமாம் நிகழ்வும், 2வது வருட புனித மிஃறாஜ்...

45வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் தமாம் நிகழ்வும், 2வது வருட புனித மிஃறாஜ் தின நிகழ்வும் – 2022 இன் தொகுப்பு.

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 45வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 30.01.2022 அன்று திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 28.02.2022 அன்று தமாம் செய்து வைக்கப்பட்டது.

மஜ்லிஸ் நிகழ்வுகளாக அன்றைய தினம் சுப்ஹ் தொழுகையையினை தொடர்ந்து புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி தொடக்கம் 11.45 மணி வரை கத்முல் குர்ஆன், இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் மௌலித், இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் மௌலித், புனித மிஃறாஜ் மௌலித், ஆகிய இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அஸ்ர் தொழுகையின் பின் புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமாகி இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அவர்களின் சிறப்பு சொற்பொழிவும், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து  றஜப் மாதத்தின் 27ம் இரவான புனித மிஃறாஜ் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் இரவு 10.30 மணி தொடக்கம் நள்ளிரவு 12.30 மணி வரை மிஃறாஜ் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் சிறப்பு சொற்பொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு, இஸ்திஃபார், துஆ ஸலவாதுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments