Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கடலின் ஆழத்தை அளந்தாற் கூட இறைஞானக் கடலின் ஆழத்தை அளக்க முடியாது!

கடலின் ஆழத்தை அளந்தாற் கூட இறைஞானக் கடலின் ஆழத்தை அளக்க முடியாது!

தொடர் 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

قال الإمام النّووي رحمه الله فى شرح مسلم يجوز رُؤيةُ الله فى الصّور النّورانيّة والصُّور البَشريّة بتجلّياتِه الصُّوريّة، فإنّه ورد فى الصحيح رأيتُ ربِّي عَلَى صورة شَابٍّ أمرَدَ، (نقله صاحب الخزائن فى الصفحة الخامسة)
ஒளி உருவங்களிலும், மனித உருவங்களிலும் அல்லாஹ்வின் உருவ வெளிப்பாடுகளில் அவனைக் காண முடியுமென்று இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஷர்ஹு முஸ்லிம்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். (அல்கசாயின், பக்கம் 05)

قال الشّيخ المُحقِّقُ شَاهْ عبدُ الحقّ المُحدِّثُ الدِّهلويّ رحمه الله فى ‘ إخبار الأخبار ‘ والشّيخ شاه وليّ الله المحدِّثُ فى ‘أنفاسِه’ والشّيخ عبدُ العزيز المحدثُ الدِّهلويّ فى فَتواه وصاحبُ ‘ جواهر غَيْبِي ‘ ‘ وشارح ديوان ‘ حافظ شيرازي والشّيخُ إمداد الله المهاجري وغيرهم من كِبار علماء الهند القائلين بوحدة الوجود، والشّاربين شراب الشُّهود أنّ أكابِرَ الصوفيّة الكرام يَرَون عِلمًا وحالا أنْ ليس فى الوجود إلّا الله، ويقولون تصديقا أنّ الظّاهر فى صُور أجناس العالَمِ وذرَّاتِها بأحكامِها هو اللهُ، ولهم الدلائل المبيّنةُ عليه من القرآن والأحاديث والأخبار وأذواق العارفين أولى الأبصار رضي الله عنهم الغفّار،
அஷ்ஷெய்குல் முஹக்கிக் ஷாஹ் அப்துல் ஹக் அல்முஹத்திதுத் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ், அவர்கள் தங்களின் “இக்பாறுல் அக்பார்” எனும் நூலிலும், அஷ்ஷெய்கு ஷாஹ் வலிய்யுல்லாஹில் முஹத்தித் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அன்பாஸ்” எனும் நூலிலும், அஷ்ஷெய்கு ஷாஹ் அப்துல் அஸீஸ் அல் முஹத்திதுத் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “பத்வா”விலும், “ஜவாஹிறுல் ஙைபீ” ஆசிரியர் அந்த நூலிலும், “ஷாரிஹு தீவான்” ஹாபிள் சீறாசீ அவர்களும், அஷ்ஷெய்கு இம்தாதுல்லாஹில் முஹாஜிரீ அவர்களும், இன்னும் அவர்கள் அல்லாத தலை சிறந்த “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற இந்திய அறிஞர்களிற் பலரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

ஸூபீ மகான்களில் மிகச் சிறந்தவர்கள் தமது அறிவாலும், அனுபவத்தாலும் இருப்பவற்றில் – உலகத்தில் அல்லாஹ் அல்லாத வேறொன்றுமே இல்லை என்று காண்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். இதை உண்மைப்படுத்தி நிறுவும் வகையில் உலகமாயும், மற்றும் அதிலுள்ள அனைத்துமாயும் உள்ளது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை ஒன்று மட்டுமேயாகும். அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். சர்வ பிரபஞ்சங்களின் உருவத்திலும், தோற்றத்திலும் அவனே உள்ளான் என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

ஸூபீ மகான்களின் இக்கூற்றுக்கு அவர்கள் திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும், மற்றும் வரலாறுகள், இறைஞானிகளின் அனுபவங்களில் இருந்தும் ஆதாரங்கள் வைத்துள்ளார்கள்.
والعلماء المذكورون الهنديُّون هم العلماء الكبار كالأئمّة، وبعضُهم المحدّثون المشهورُون فى أقطار الهند كلّها، فلا يجوز لأحد إعراضُهم وَلَا الإعتراضُ عليهم، لأنّهم ناطقون بالإلهام والكشْفِ،
இந்தியாவைச் சேர்ந்த மேற்கண்ட உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் ஆகியோர் இமாம்கள் போன்ற பேரறிஞர்களாவர். அவர்களிற் சிலர் இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற ஹதீதுக் கலை மேதைகளாவர். அவர்களைப் புறக்கணிப்பதோ, அவர்களை ஆட்சேபிப்பதோ எவருக்கும் கூடாது. ஏனெனில் அவர்கள் “கஷ்பு” எனும் அறிவும், “இல்ஹாம்” எனும் தெய்வீக நன்கொடை அறிவும் பெற்ற மகான்களாவர்.

மேற்கண்ட மகான்கள் “அகாபிறுல் அவ்லியா” வலீமார்களில் மிகச் சிறந்தவர்களாவர். இவர்கள் பெற்ற அறிவுகள் நூல் அறிவுகளல்ல. நூல்களில் பெற முடியாத, இறைவனால் அன்பளிப்பாக வழங்கப்படும் அறிவாகும்.

இவ் அறிவு பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படும். علم الكشف، علم الإلهام، علم اللدني இல்முல் கஷ்ப், இல்முல் இல்ஹாம், இல்முல் லதுன்னீ முதலான பெயர்களால் அழைக்கப்படும். عِلْمُ الْوَهْبِيْ – “இல்முல் வஹ்பீ” என்றும் அழைக்கப்படும். “இல்முல் ஹிக்மத்” என்றும் இது அழைக்கப்படும். இது அறிவுகளில் மிகச் சிறந்ததாகும்.

நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நபீ களிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் நடந்த நிகழ்வின் போது நபீ களிர் அவர்களின் அறிவை பாராட்டிய அல்லாஹ் وَعَلَّمْنَاهُ مِنْ لَّدُنَّا عِلْمًا “அவருக்கு நாங்கள் எங்களிடமிருந்து அறிவைக் கற்றுக் கொடுத்தோம்” என்று கூறியுள்ளான்.

இத்திரு வசனத்தின் வசன நடையிலிருந்தே “இல்முல் லதுன்னீ” என்று பெயர் வரலாயிற்று.
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا
எவருக்கு “ஹிக்மத்” வழங்கப்படுகிறதோ அவர் அதிக நன்மை வழங்கப்பட்டவராவார். “அல்பாப்” உள்ளவர்கள் தவிர வேறெவரும் இதை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். (திருமறை 2-269)

“ஹிக்மத்” வழங்கப்பட்டவர் அதிக நன்மை வழங்கப்பட்டவர் என்று அல்லாஹ் கூறியுள்ளான். “ஹிக்மத்” என்றால் என்ன என்பது பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இதன் வரைவிலக்கணம் பின்வருமாறு.
اَلْحِكْمَةُ هِيَ عِلْمٌ يُبْحَثُ فِيْهِ عَنْ حَقِيْقَةِ كُلِّ شَيْءٍ
“ஹிக்மத்” என்றால் அது ஓர் அறிவு. அதில், ஒவ்வொரு வஸ்த்தின் எதார்த்தம் தொடர்பாக ஆராயப்படும். அதாவது எந்தக் கலையில் ஒவ்வொரு வஸ்த்தின் எதார்த்தம் தொடர்பாக ஆராயப்படுமோ அந்தக் கலை “ஹிக்மத்” என்று அழைக்கப்படும். இதே கருத்தை பின்வரும் திரு வள்ளுவர் தத்துவமும் உறுதி செய்கிறது.

“எப்பொருள் எத்தன்மையுடையதாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” அதாவது எந்தவொரு வஸ்த்துவாயினும் அதற்கான மெய்ப் பொருள் எதுவென்று ஆய்வு செய்தறியும் கலைதான் “ஹிக்மத்” எனப்படும்.

“ஹிக்மத்” என்ற சொல்லுக்கு மேற்கண்டவாறு பல கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் பொதுவாக இறைஞானம், தத்துவம் என்ற கருத்துக்களுக்கு இச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

“ஹிக்மத்” என்ற சொல்லுடன் தொடர்பான நபீ மொழி ஒன்றும் உள்ளது.
قال النّبي صلّى الله عليه وسلّم اَلْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ أَخَذَهَا حَيْثُ وَجَدَهَا
“ஹிக்மத்” என்பது விசுவாசியின் தவறிப் போன சொத்தாகும். அவன் அதை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்வான். (நபீ மொழி :4169, ஸுனன் இப்னு மாஜஹ்)

இறைஞானம் என்பது விசுவாசியின் தவறிப் போன – காணாமற் போன சொத்து என்று எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்னும் “ஹிக்மத்” என்ற இச் சொல் திருக்குர்ஆனின் இன்னுமோர் இடத்தில் பின்வருமாறு வந்துள்ளது.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
உங்களின் இரட்சகனின் வழிக்கு “ஹிக்மத்” எனும் ஞானம் கொண்டும், அழகிய உபதேசம் கொண்டும் அழையுங்கள் (திரு மறை 16-125)

மக்களை அல்லாஹ்வின் பால் அழைப்பதற்கு அல்லாஹ் தெரிவு செய்த அம்சம் “ஹிக்மத்” எனும் இறைஞானமேயாகும்.

சுவர்க்கத்தின் மீது ஆசை காட்டியும், நரகத்தின் மீது பயம் காட்டியும் இறைவன் பால் மக்களை அழைப்பதை விட அவனையும், அவனின் ஞானத்தையும் காட்டி அழைப்பதே மிகச் சிறந்ததாகும்.

ஞானத்தைக் காட்டி மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதே அழைக்கும் முறைகளிற் சிறந்ததாகும். இவ்வாறு அழைக்கப்பட்டு அல்லாஹ்வை அறிந்து அவன் பக்கம் வந்தவன் ஒருபோதும் தடம் புரளமாட்டான். அவன் கொண்ட கொள்கையிலேயே நிலைத்திருப்பான். உண்ணி போன்று கழன்று போகமாட்டான்.

அல்லாஹ்வின் வலீமார் மக்களை அல்லாஹ்வின் பக்கம் இவ்வாறுதான் அழைத்துள்ளார்கள்.

இத்திரு வசனத்தின் அடிப்படையில் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவன் – “தாயீ” என்பவன் மக்களை அழைப்பதற்கு பாதம் பதிக்கு முன் முதலில் அவன் இறைஞானம் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பொருத்தமானவர்கள் “விலாயத்” எனும் ஒலித்தன்மை பெற்ற மகான்களேயாவர். ஏனெனில் வழி தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமேயாவர்.

இன்று பல பெயர்களில் பல “தஃவா” அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. நான் அறிந்தவரை எந்த ஓர் அமைப்பும் அல்லாஹ் சொல்லித் தந்த “ஹிக்மத்” என்ற அம்சத்தை முன் வைத்து அழைப்பதாகத் தெரியவில்லை. அதோடு எந்த ஓர் அமைப்பாயினும் அது வஹ்ஹாபிஸத்துக்கு துணை போகும் அமைப்பாகவே உள்ளது. எந்த ஓர் அமைப்பாயினும் அதில் வஹ்ஹாபிஸம் என்ற விஷம் ஒரு சொட்டுக் கலந்தால் போதும். அவ் அமைப்பே வஹ்ஹாபிஸமாகிவிடும்.

இன்றுள்ள “தஃவா” அமைப்புக்களில் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை, ஸூபிஸ ஞானக் கொள்கை, “தரீகா”வுக்கு ஆதரவான அமைப்புக்கள் பல இருந்தாலும் கூட அவர்கள் தமது அமைப்புக்களை முன்னெடுத்துச் செல்வதற்கான பொருளாதார வசதி பற்றாக்குறை காரணமாக பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

வஹ்ஹாபிஸம் குறுகிய காலத்தில் அதிக மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் அவர்களுக்கு வஹ்ஹாபிஸ அமைப்புக்கள் செய்து வருகின்ற பொருளாதார உதவியோயாகும்.

பொருளாதார வசதியுள்ளவர்கள் தமது ஊரிலுள்ள ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்களை இனம் கண்டு அவர்களுக்கு தம்மாலான பண உதவிகள் செய்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். மௌலவீ தாரிக் போன்ற ஸுன்னத் வல் ஜமாஅத் இளைஞர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments