தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்று அல்லாஹ்வும் சொல்லவில்லையாம். அண்ணல் நபீயும் சொல்லவில்லையாம். “தரீகா”க்களும் சொல்லவில்லையாம். மஷாயிகுமார்களும் சொல்லவில்லையாம்!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரின் புதிய கண்டுபிடிப்பு!
திருக்குர்ஆனையும், திரு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகளையும், இறைஞானிகளான அவ்லியாஉகளின் தத்துவங்களையும் குழியிலிட்டு மறைக்க மந்திரம் சொல்லும் உலமா சபை! தமது மானம் காப்பதற்காக மகான்களின் மகிமைகளையும், அகமியங்களையும் மறைக்கும் இந்த அநீதியாளர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை வெகு தொலைவில் இல்லை. காலம் பதில் கூறும். இவர்களுக்கு அல்லாஹ்வின் கோப் பார்வை – “ஜலாலிய்யத்” அடுத்தடுத்து இறங்கும்.
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் இன்றேல் இஸ்லாமே இல்லை. இஸ்லாமின் உயிர் ஸூபிஸம் ஒன்று மட்டுமேயாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அவர்களின் நவீன கண்டுபிடிப்புக்களில் ஒன்று உலகிலுள்ள “தரீகா”க்களில் குறிப்பாக இலங்கையிலுள்ள “தரீகா”களில் எந்த ஒரு “தரீகா”வும் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தைச் சொன்னதே இல்லையாம். அதேபோல் “தரீகா”வின் தாபகர்களில் எவரும் இப்படியொரு ஞானம் பேசியதே இல்லையாம். ஸுப்ஹானல்லாஹ்! பொய் மூடைகளை அவிழ்த்துக் கொட்டுகிறாரா? பொதுச் செயலாளர்.
இதுவே பொதுச் செயலாளரின் புதிய கண்டுபிடிப்பாகும். இவர் திரையோடுதான் கண்டுபிடித்துள்ளாரேயன்றி திரையின்றிக் கண்டு பிடிக்கவில்லை. துணிக்கு மேல் சொறிந்தால் பலிக்காது. இவர் துணியின்றிச் சொறிந்து பார்த்தால் மட்டுமே ருசியைப் புரிந்து கொள்வார்.
முதலில் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் அவர்களின் முதலாவது ஞான குரு ஞான வள்ளல் அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களிலிருந்து தொடங்குகிறேன்.
عبد السلام بن مشيش، وقِيل ابن بشيش، قُطبُ دائرةِ المُحقِّقِين، أستاذُ أهلِ المشارق والمغارب، وسَنَدُ الواصلين إلى اَنْجَحِ المطالب، سيّدنا ومولانا عبد السلام ابن سيّدنا مشيش ابن سيّدنا أبي بكر الحسني الإدريسي،
كان رضي الله عنه قُطبَ الوجود، وبقيّةَ أهلِ الشُّهود، الغوثَ الفردَ، الجامعَ لأسرار المعاني، غوثَ الأمّة، وسِراجَ المِلّةِ، صاحبَ العلوم اللّدنِّيّة، والمعارفِ الربانيّة، الجامعَ بين علمِ الشريعة والحقيقة، لمْ تطلعِ الشمسُ على مثله فى زمنه،
“அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ்” இவர்கள் இப்னு பஷீஷ் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் இறைஞானம், ஸூபிஸக் கலைகளில் அதி விஷேட தேர்ச்சி பெற்றவர்கள். “முஹக்கிக்” என்று புகழப்பட்டு வந்தார்கள். இவர்களின் குத்பு இவர்கள்தான் என்றால் அது மிகையாகாது. உதயகிரி, அஸ்த்தகிரியிலுள்ள ஞான மகான்களின் உஸ்தாத் இவர்கள்தான்.
இவர்கள் “குத்புல் வுஜூத்” என்று அழைக்கப்பட்டார்கள். “ஷுஹூத்” உடையவர்களில் சிறந்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். “அல்கவ்துல் பர்த்” தனியான நிகரற்ற குத்பு என்றும், கருத்துக்களின் இரகசியங்களை ஒன்று சேர்த்தவர்கள் என்றும், “கவ்துல் உம்மத்” என்றும், “ஸிறாஜுல் மில்லத்” என்றும், “அல் உலூமுல் லதுன்னிய்யா” உள்ளவர்கள் என்றும், மற்றும் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரீ 559ல் பிறந்து ஹிஜ்ரீ 626ல் “வபாத்” ஆனார்கள். (1163- 1228) மரணிக்கும் போது 67 ஆகும். “தன்ஜா” நகருக்கு அண்மையில் பனூ அறூஸ் எனுமிடத்தில் பிறந்தார்கள். பின்னர் “ஜபல் இல்ம்” எனுமிடத்தில் சென்று அங்கேயே வாழ்ந்து அங்கேயே “வபாத்” ஆனார்கள். மா பெரும் ஸூபீ மகானாகத் திகழ்ந்தார்கள். குறித்த மலையிலேயே அவர்களின் சமாதி ஒளிர்கிறது. நடந்தும், பறந்தும் பக்தர்கள் அங்கு சென்று “விலாயத்”தைப் பெறுகின்றனர்.
له كراماتٌ وخوارقُ لا تدخل تحت حصرٍ، منها: أنه يوم ولادته سمع سيدي عبدُ القادر الجيلاني رضي الله عنه ونفعنا به آمين، هاتفًا يقول: يا عبد القادر، ارفع رجلك عن أهل المغرب، فإنَّ قطبَ المغرب قد وُلِدَ في هذا اليوم، فَتَمَشَّى الأستاذ عبد القادر إلى جبل الأعلام بالمغرب، حيث مولد سيدي عبد السلام، وأتى إلى أبيه سيدي مَشيش، وقال له: أخرجِ لي ولدك. فخرّجَ له أحدَ أولاده، فقال له: ما هذا أريد. فأخرج له أولادَه كلهم، وقال له: ما بقي إلا ولدٌ واحد وُلِدَ في هذا اليوم. فقال له سيدي عبد القادر: عليَّ به؛ فهو الذي أُريده. فأخرجه سيدي مَشيش، فأخذه سيدي عبد القادر، ومسحَ عليه، ودعا له.
அறபு வரிகளின் மொழியாக்கம்:
அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களுக்கு “கறாமாத்” எனும் அற்புதங்கள் நிறைய இருந்தன. அவை மட்டிட முடியாதவையாகும். அவற்றில் மிகப் பிரதான அம்சத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் பிறந்த அன்று நடந்த நிகழ்வுதான் இந் நிகழ்வாகும்.
மகான் அவர்கள் மொறோக்கோவில் ஹிஜ்ரீ 559ல் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த அதே நாள் அதிகாலை இறாக் நாட்டின் ஆன்மிகத் தலைவர் பக்தாதில் வாழ்ந்து கொண்டிருந்த குத்புஸ்ஸமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களுக்கு ஓர் அசரீரி கேட்டது. அதில், அப்துல் காதிரே! மொறோக்கோ வாசிகளை விட்டும் இன்றுடன் உங்கள் காலை எடுத்துவிடுங்கள். ஏனெனில் இன்றுதான் அங்கு மோறோக்கோ நாட்டிற்கான “குத்புஸ்ஸமான்” பிறந்துள்ளார்கள் என்று கூறப்பட்டது.
அசரீரி கேட்டதும் குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் மொறோக்கோ நோக்கி விரைந்து “பஷீஷ்” அவர்களின் வீடு தேடி வந்து சேர்ந்தார்கள். அவரிடம் விபரம் ஒன்றும் கூறாமல் உங்கள் பிள்ளைகளை எனக்கு காண்பியுங்கள் என்று கேட்டார்கள். தந்தை பஷீஷ் தனது ஆண் குழந்தை ஒன்றைக் காட்டினார். குத்பு நாயகம் நான் கேட்கும் குழந்தை இதுவல்ல என்றார்கள். அவர் தனது எல்லாப் பிள்ளைகளையும் காட்டினார். குத்பு நாயகம் மறுத்துவிட்டார்கள். இன்று பிறந்த குழந்தை ஒன்று மட்டும்தான் மீதமாக உள்ளது என்றார் தந்தை பஷீஷ். அதைக் கொண்டு வாருங்கள் என்றார்கள் குத்பு நாயகம். அந்த ஆண்பிள்ளை குத்பு நாயகம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அக்குழந்தையைக் கையிலெடுத்த குத்பு நாயகம் அதன் தலை தடவி உச்சி முகந்து “துஆ” செய்தார்கள்.
وكان رضى الله عنه إذا أهلَّ هلالُ رمضان يمتنعُ عن ثديِ أمِّهِ، فإذا أُذِّنَ المغربُ قاربه، وارتضع منه.
மகான் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் றமழான் மாதம் மட்டும் பகல் நேரத்தில் தாயிடம் பால் அருந்தமாட்டார்கள். “மக்ரிப்” தொழுகையின் பின் அருந்துவார்கள். இத்தகைய ஓர் அற்புதம் குத்பு நாயகம் பிறந்த நேரத்தில் அவர்களுக்கும் நடந்துள்ளது.
وَيَكْفِيْكَ في فضله أنَه أستاذُ الأقطاب الثلاثة: سيدي إبراهيم الدُّسوقي، وسيدي أحمد البدوي، وسيدي أبي الحسن الشاذلي رحمهم الله.
மகான் அப்துஸ்ஸலாம் அவர்கள் உலகப்பிரசித்தி பெற்ற மூன்று குத்புமார்களின் “உஸ்தாத்” குருவாக இருந்தது அவர்களின் சிறப்புக்கு மெருகூட்டுகிறது. ஒருவர் அல்குத்பு இப்றாஹீம் தஸூகீ ஆவார்கள். மற்றவர் ஷெய்குல் அறப் அல்குத்பு அஹ்மத் அல்பதவீ அவர்கள். மூன்றாமவர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ அவர்கள்.
மகான் அப்துஸ்ஸலாம் அவர்கள் பற்றி நான் இங்கு எழுதுவதற்கான காரணம் என்னவெனில் அவர்களிடம் கல்வி கற்ற மூன்று குத்புமார்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களாக இருப்பதேயாகும். அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்களே “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியுள்ளார்களென்றால் குரு அவர்கள் எந்த இடத்தில் இருந்திருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?
தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?
மகான் அவர்களின் மூன்று மாணவர்களில் ஒருவரான ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் இமாம் அல்குத்புல் அகபர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரீ 593ல் தூனுஸ் நாட்டில் “ஷாதுலா” எனும் ஊரில் பிறந்தார்கள்.
தனக்கு ஒரு “காமில்” ஆன குத்பு ஒருவர் ஞானகுருவாக கிடைக்க வேண்டுமென்று அத்தகைய ஒருவரை அடைய வேண்டுமென்று பல நாடுகள், பல ஊர்கள் சென்று தேடி அலைந்து வரும் வழியில் “தர்வேஷ்” இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு துறவியை சந்தித்து தனது தேவையை அவரிடம் கூறினார்கள்.
அத்துறவி ஷாதுலீ நாயகம் அவர்களிடம் இக்காலத்து “குத்பு” உங்களின் தூனுஸ் நாட்டில் இன்ன மலையில்தான் இருக்கிறார். அவரின் பெயர் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் என்று கூறினார்கள்.
ஷாதுலீ நாயகம் உடனே வந்து சுட்டிக் காட்டப்பட்ட மலையடிவாரம் வந்து சற்று நேரம் தங்கி நின்று தங்களின் உள்ளத்தால் மலை மீதிருந்த குத்புடன் பேசினார்கள். تَعَالَ عُرْيَانًا நிர்வாணமாக மலை மீது ஏறி வரவும் என்று ஓர் அசரீரி அவர்களுக்கு கேட்டது.
நிர்வாணமாக வரவும் என்ற வசனத்தின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்ட ஷாதுலீ நாயகம் மலையடிவாரத்திலிருந்த ஒரு குளத்தில் குளித்து சுத்தம் செய்து புத்தாடை அணிந்து அன்று வரை அவர்கள் செய்த அனைத்து அமல்கள் எனும் உடையையும், அன்றுவரை அவர்கள் கற்றிருந்த அனைத்து அறிவுகள் எனும் உடையையும் கழற்றி வைத்துவிட்டு அவர்கள் பணிக்கப்பட்டது போல் நிர்வாணியாக – வெறும் ஆளாக மட்டும் மலை மீது ஏறினார்கள்.
மலையுச்சியில் தவமிருந்த அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் ஷாதுலீ நாயகம் அவர்களை வரவேற்பதற்காக மலையடிக்கு இறங்கிக் கொண்டிருந்தார்கள். வழியில் இருவரும் சந்திக்கின்றார்கள். ஒருவரையொருவர் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்த பின் மகான் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் ஷாதுலீ நாயகம் அவர்களின் தந்தை வழித்தோன்றல்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவர் பின் ஒருவராக மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்கள். வியந்து வியர்த்துப் போன ஷாதுலீ நாயகம் தன்னை மறந்து நின்றார்கள்.
இருவரும் மலை உச்சிக்கு வந்து உரையாடினார்கள். ஒரு சமயம் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் தங்களின் குரு நாதருடன் இருந்த சமயம் அவர்களின் உள்ளத்தில் குரு மாகானுக்கு அல்லாஹ்வின் “இஸ்முல் அஃளம்” வலுப்பமுள்ள திரு நாமம் தெரிந்திருக்குமா? என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது.
அப்போது குருமகான் அவர்களின் மகன் ஒருவர் – சிறு பிள்ளை அங்கு இருந்தது. அப்பிள்ளை ஷாதுலீ நாயகமவர்களைப் பார்த்து
يا أبا الحسن! ليس الشأن من يعلم الإسم، الشأن من يكون هو عينَ الإسم،
“இஸ்முல் அஃளம்” எதுவென்று தெரிந்திருப்பதில் விஷயமில்லை. விஷயம் எதிலுள்ளதென்றால் ஒருவர் தானே “இஸ்முல் அஃளம்” ஆக இருப்பதில்தான் உள்ளது என்று சொன்னது.
மூன்று குத்புமாரும், அவர்களின் குருவான அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக கூறிய கருத்துக்களைக் கவனிப்போம். இதையறிந்த பிறகாவது பொதுச் செயலாளர் “தவ்பா” செய்வாரா?