ஒன்றை ஒன்றாக்கல் அசாத்தியம். எனினும் பலதை ஒன்றாக்கல் சாத்தியமே!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ் எதார்த்தத்தில் ஒருவனே! எண்ணிக்கையில் ஒருவனல்ல. எண்ணிக்கையில் ஒருவன் என்றால் அவன் எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டவனாகிவிடுவான். لَيْسَ اللهُ مَعْدُوْدًا وَلَا مَحْدُوْدًا அல்லாஹ் எண்ணுக்குட்பட்டவனுமல்ல. கட்டுப்பாடுக்குள்ளானவனுமல்ல. ஒன்று எப்போதும் ஒன்றுதான். அதை எண்ண முடியாது. எண்ணிக்கை என்பது இரண்டு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அல்லாஹ்வே எல்லாமயிருப்பதால் படைப்பு இருப்பதற்கு இடமில்லை.
படைப்பின் இருப்பிற்கு இடமில்லாமற் போனதற்கான காரணம் எல்லாமாயும் அல்லாஹ் இருப்பது மட்டுமல்ல. “படைப்பு” என்பது தனக்கு இருக்கை இல்லாததாகும். அதாவது اَلْخَلْقُ عَدَمٌ أَوْ عَدَمِيٌّ كَالظُّلْمَةِ படைப்பு என்பது இருள் போன்றதாகும். அதாவது இல்லாததாகும். இல்லாதது இல்லாததுதான்.
இருள் “அதமீ” இல்லாததாயினும் அது ஊனக் கண் பார்வைக்கு இருப்பது போல் தோற்றினாலும் அது இல்லாததேயாகும். இவ்வாறுதான் கானல் நீருமாகும். கானல் நீரென்பது இல்லாததே. இல்லாதது இருப்பது போல் தோற்றினால் அது “கயால்” எனப்படும். அதற்கு எதார்த்தமில்லை.
“கயால்” என்றால் என்ன?
كُلُّ مَا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ
எது கண் பார்வைக்குத் தோற்றி எதார்த்தத்தில் அது இல்லையோ அது அறபு மொழியில் “கயால்” எனப்படும். கானல் நீர் போன்று. இதோடு பொதுவாக படைப்பையும் சேர்த்துக் கொள்ள முடியும்.
எதார்த்தத்தில் படைப்பு எதுவாயினும் அது கானல் நீர் போன்றும், இருள் போன்றும் இல்லாததேயாகும்.
ஒரு சமயம் ஷாதுலிய்யா “தரீகா”வின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “முரீது” சிஷ்யர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது
قَدْ مَحَقَ الْحَقُّ تَعَالَى جَمِيْعَ الْأَغْيَارِ بِقَوْلِهِ هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ، فَقِيْلَ لَهُ فَأَيْنَ الْخَلْقُ؟ فَقَالَ مَوْجُوْدُوْنَ وَلَكِنْ حُكْمُهُمْ مَعَ الْحَقِّ تَعَالَى كَالْأَنَابِيْبِ الَّتِيْ فِى كُوَّةِ الشَّمْسِ تَرَاهَا صَاعِدَةً هَابِطَةً ، فَإِذَا قَبَضْتَ عَلَيْهَا لَا تَرَاهَا، فَهِيَ مَوْجُوْدَةٌ فِى الشُّهُوْدِ مَفْقُوْدَةٌ فِى الْوُجُوْدِ،
(اليواقيت والجواهر ، ج الأول، ص 65 )
என்று கூறினார்கள்.
இதன் விளக்கம் என்னவெனில் அல்லாஹ் தனது முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற நான்கு திரு நாமங்கள் கொண்டும் தனக்கு வேறான எதுவுமில்லை என்று அவனல்லாத அனைத்தையும் அழித்துவிட்டான். அவன் சகல வஸ்த்து கொண்டும் அறியப்பட்டவனாக உள்ளான். (அவன் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவனாக உள்ளான்) திருக்குர்ஆன்: 57-3
அப்போது அவர்களிடம், அவ்வாறாயின் படைப்பு எங்கே? இல்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் படைப்புக்கள் உள்ளன. அல்லாஹ்விடம் அவற்றின் சட்டம் எவ்வாறெனில் வீட்டின் கூரையிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக சூரிய வெளிச்சம் ஒரு “பைப்” வடிவத்தில் உள்ளே வரும் போது அவ் வெளிச்சத்தில் பல்லாயிரம் தூசிகள் மேலே ஏறுவது போலும், கீழே இறங்குவது போலும் உன் கண் பார்வைக்குத் தோற்றும். எனினும் அவற்றை நீ கையால் பிடித்தால் ஒன்றுமே பிடிபடாது. படைப்பு என்பது பார்வையில் மட்டுமுள்ளதேயன்றி எதார்த்தத்தில் இல்லாததாகும்.
ஆதாரம்: அல்யவாகீத்,
பாகம்: 01, பக்கம்: 65, ஆசிரியர்: இமாம் ஷஃறானீ
இமாம் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீ, அதன் “பத்வா” குழுவினர், அதன் பொதுச் செயலாளர் போன்று மண்டையில் சரக்கில்லாத வெறும் கப்பல் அல்ல. அவர்கள் சரக்குள்ள கப்பல். ஸூபிஸ ஞானத்தின் தென்றல். ஆளுக்கேற்றவாறு சட்டம் சொல்லும் சந்தர்ப்பவாதியல்ல. மனிதர்களுக்கு “மக்ர்” செய்யும் சூட்சிக் காரருமல்ல. நீங்கள் இந்த மகானால் எழுதப்பட்ட நூல்களைப் படித்து உங்களை நீங்களே திருத்திக் கொள்ள வேண்டும். உங்கள் மானம், மரியாதையெல்லாம் காட்டை நோக்கி காற்றில் சிறகடித்துப் பறக்கப் போகின்றன. உங்களின் தரமற்ற இழி செயல்கள் காரணமாகவும், நேர்மை, நீதியற்ற நடவடிக்கை காரணமாகவும் பொது மக்கள் உங்களை வெறுக்கின்றார்கள். உங்களைத் தரக் குறைவாகப் பேசுகின்றார்கள். ஏசுகின்றார்கள். எம்மால் செவியேற்றுக் கொண்டிருக்க முடியாதுள்ளது. முதலில் நீங்கள் திருந்துங்கள். அதன் பிறகு நாட்டு மக்களைத் திருத்துங்கள். لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு இடமில்லாமற் போகும்.
وَفَوْقَ كُلِّ ذِيْ عِلْمٍ عَلِيْمٌ
என்ற திருமறை வசனத்தை நெஞ்சில் இருத்திக் கொண்டு இறை பக்தியோடு செயல்படுங்கள்.
நானும், எனது கருத்தைச் சரி கண்டவர்களும் பரம்பரை முஸ்லிம்களாவோம். நாங்கள் ஹறாமில் பிறந்தவர்களுமல்ல. காபிர்களுமல்ல. நீங்கள் எங்களை மதம் மாற்றி விட்டு நீங்கள் மட்டும்தான் இந்நாட்டின் மேதைகள் என்று நினைக்கிறீர்கள். இது வடிகட்டிய முட்டாள்தனமாகும்.
முதலில் முப்தியை இறக்குங்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாதி, இடம், பொருள், ஏவல் தெரியாத ஒரு காட்டுவாசி. நீதிவான்களுக்கே வட்டிலப்பம் கொடுத்து தனது குற்றத்தை மறைக்க முயன்ற ஓர் அறிவிலி. பல இலட்சம் முஸ்லிம்களை ஒரேயொரு பொய் “பத்வா” மூலம் “காபிர்”களாக்கி விட்டு அல்லாஹ்வை வென்ற இறுமாப்புடன் மார்தட்டிப் பேசும் மார்க்கம் தெரியாத வெறும் மண். இவர் காத்தான்குடி வந்த நேரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய எந்தவொரு “பத்வா”வையும் “வாபஸ்” பெற்றதற்கு வரலாறே கிடையாதென்று மார்தட்டிச் சொன்ன மகான். அல்லாஹ்வையும் வென்றுவிட்டார். ஈமானையும் இழந்து விட்டார்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஏதேனும் ஒரு வசனத்தை மாற்றினால், அல்லது அதை நாம் மறக்கச் செய்துவிட்டால் அதை விடச் சிறந்த அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்பதை நீங்கள் அறியவில்லையா? (திருக்குர்ஆன்: 02-106)
இதன் சுருக்கம் என்னவெனில் திருக்குர்ஆன் வசனங்களில் மாற்றிய வசனங்கள் என்றும், மாற்றப்பட்ட வசனங்கள் என்றும் இரு வகை வசனங்கள் உள்ளன. மாற்றிய வசனம் نَاسِخْ – “நாஸிக்” என்றும், மாற்றப்பட்ட வசனம் مَنْسُوْخْ – “மன்ஸூக்” என்றும் “தப்ஸீர்” கலையில் கூறப்படும். திருக்குர்ஆனில் மேற்கண்ட இருவகை வசனங்களும் உள்ளன என்று நம்ப வேண்டும்.
அல்லாஹ், அடியார்களுக்கு ஒரு விஷயத்தைச் செய்யுமாறு கட்டளையிடுவான். பின்னர் அதை மாற்றியும் விடுவான். இவ்வாறு பல திரு வசனங்கள் உள்ளன.
உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
அல்லாஹ் முதலில் اِتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ அல்லாஹ்வின் தரத்திற் கேற்றவாறு அவனை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறினான். கட்டளையிட்டான். சில காலத்தின் பின்னர் அதை மாற்றி اِتَّقُوا اللهَ مَااسْتَطَعْتُمْ அல்லாஹ்வை உங்களால் முடிந்த அளவு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டான்.
இதனால் அல்லாஹ் முதலில் தவறாகச் சொல்லிவிட்டான். பின்னர் தான் சொன்னது தவறென்று விளங்கி வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டான் என்று நாம் விளங்கலாகாது. அல்லாஹ் முக்கால ஞானங்களும் உள்ளவன். அவன் தவற முடியாது. தவறும் செய்யான்.
எனினும் அல்லாஹ்வுக்கு ஜமால், ஜலால் என்று இரு நிலைகள் உள்ளன. ஒன்று இரக்க நிலை, மற்றது கோப நிலை. இவ்விரு நிலைகளும் அவனுக்கு உண்டு.
சில நேரங்களில் இவ்விரு நிலைகளுக்குமிடையில் போட்டியும் நடப்பதுண்டு. என்னதான் போட்டி நடந்தாலும் 99 வீதம் “ஜமால்” என்ற இரக்கமே பரிசு பெறும். இதனால்தான் إِنَّ رَحْمَتِيْ سَبَقَتْ غَضَبِيْ எனது இரக்கம் எனது கோபத்தை முந்திவிட்டது என்று அல்லாஹ் ஹதீதுக்குத்ஸியில் கூறினான் போலும்.
பேரருளாளனின் இரக்கம் இல்லையெனில் நபீமார், வலீமார் தவிர ஏனையோர் அனைவரும் தண்டிக்கப்படுவதற்கு தகுதியானவர்களாகவே இருப்பார்கள்.
ஏனெனில் “ஸூபிஸ” வட்டத்துள் நின்று இன்று வாழும் உலக முஸ்லிம்களை நோக்கினால் 75 வீதமானோர் தண்டனைக்குத் தகுதி பெற்றவர்களேயாவர். ஆனால் தண்டிக்க முடியவில்லை. ஜமால், ஜலால் ஓட்டப் போட்டியில் முந்தினது முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் “ஜலால்” எவ்வாறு வேலை செய்யும்?
அண்ணலெம் பெருமான், அஹ்மதெங்கள் கோமான் அன்று மதீனா நகரில் ஒரு தெருவால் தோழர்களுடன் நடந்து செல்கிறார்கள். அத்தெருவின் வீட்டு வாயலில் நின்றிருந்த ஒரு மாது அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் திருத்தூதரே! எனதில்லத்தில் திருவடி பதித்துச் செல்லமாட்டீர்களா? என்று கெஞ்சிக் கேட்டார்.
“றஹ்மதுன் லில் ஆலமீன்” கருணைக்கடலான எம் பெருமான் ஆம், வருகிறேன் என்று கூறி உள்ளே சென்றார்கள்.
அப் பெண்ணின் சில குழந்தைகள் வறுமையால் வாடி வயிறு வற்றிய நிலையில் ஒரு பக்கம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த மாது அல்லாஹ்வின் திருத்தூதரே! எனது இக்குழந்தைகள் அல்லாஹ்வின் படைப்புக்கள். அவனின் வெளிப்பாடுகள். அவனுக்குத் தனது படைப்பின் மீது இரக்கம் இருக்கவே செய்யும். அதேபோல் வயிற்றில் சுமந்து பெற்ற எனக்கும் இரக்கம் இருக்கத்தான் செய்யும். அவனின் இரக்கமும், எனது இரக்கமும் தவிர்க்க முடியாதவையாகும். இந்நிலையில் எனது குழந்தைகள் செய்யும் தவறுகளுக்காக அவர்களை இதோ எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் நான் எரிப்பேனா? என்று கேட்டார். இல்லை. இல்லவே இல்லை என்றார்கள் ஏந்தல் அவர்கள். அப்படியானால் அல்லாஹ் இக்குழந்தைகளை நெருப்பிலிட்டு எரிப்பானா? என்று கேட்டார் அந்த மாது. பெருமானார் அவரின் கேள்விக்கு கண்ணீரால் பதில் கூறினார்களேயன்றி திரு வாயால் ஒன்றுமே சொல்லவில்லை.
இவ் எல்லையுடன் நாம் நிறுத்திக் கொள்வோம்.
“நான் எனும் உணர்வற்றவனுக்கு சூடு தாக்காது, தீ தீண்டாது”