வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 11.11.2022 வெள்ளிக்கிழமை தொடக்கம் 13.11.2022ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 38வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நடைபெற்றது.
கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 11.11.2022 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MMA. மஜீத் றப்பானீ அவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு, துஆ, இறைஞான கீதம், தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் முதலாம் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
2ம் நாளான 12.11.2022 அன்று பி.ப 5.00 மணிக்கு தலைபாதிஹா மௌலித் மஜ்லிஸும், முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அன்னவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும், துஆ, இறைஞான கீதம், தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
இறுதியாக கந்தூரி தினமான 13.11.2022 அன்று பி.ப 5.00 மணிக்கு முஹ்யித்தீன் மௌலிதும், மஃரிப் தொழுகையின் கௌது நாயகம் அவர்களின் திருநாமங்களை ஓதும் குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹலான் றப்பானீ BBA. (Hons.) அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து கெளது நாயகத்தின் இரட்சிப்பு கீதத்துடன் இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாதுடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.