தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே உயர்வானவர்களாம்!
தென்னிந்திய கர்னுஷ் ஷெய்தான் PJ என்பவர் இதுகாலவரை பல இலட்சம் முஸ்லிம்களை தனது பேச்சாற்றல், மற்றும் வாதத்திறமை மூலம் வஹ்ஹாபிஸ வழிகேட்டின் பால் இழுத்துச் சென்றுள்ளார். இது யாவரும் அறிந்த உண்மையே! இவர் ஒரு கருத்தை கூறுவதும் பிறகு தான் கூறியதை வாபஸ் பெறுவதும் இவருடைய வரலாற்றில் வாடிக்கையான ஒன்றே. இதற்கு சான்றாக நான் கீழே குறிப்பிட்டிருக்கும் யூ டியூப் லிங்கில் அவர் பேசுகையில் நபீ இப்றாஹீம் அவர்களின் “மகாமே இப்றாஹீம்” ஐச் சூழ தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுமாறு அல்லாஹ் பணித்துள்ளான். அதனால் நபீ இப்றாஹீம் அவர்கள்தான் உயர்வானவர்கள் என்று தனது குருட்டு வாதத்தை முன் வைக்கிறார். இவர் இங்கு கூறும் விடயத்திற்கு மாற்றமாக முன்னொரு காலத்தில் “மகாமே இப்றாஹீம்” என்றால் புனித கஃபாவுக்கு அருகில் இருக்கும் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காற் பாதம் பதிந்த கல் அல்ல. அதனருகில் தொழுவதை இறைவன் கூறவில்லை. மாறாக கஃபாவைச் சுற்றிய பிரதேசம் அனைத்தையுமே கூறியுள்ளான் என்றார். ஏனெனில் “மகாம்” என்ற சொல் நின்ற இடம் என்ற கருத்தை தரும். நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனித கஃபாவை கட்டுவதற்காக அதனைச் சூழ நின்றார்கள்தானே என்றார். இவரின் குருட்டு வாதத்தை சத்திய வழி வாழ் உலமாஉகள் தகர்த்தெறிந்தார்கள். பின்னர் மாறிவிட்டார்.
خَالِفْ تُعْرَفْ
என்றதன் படி மாற்றமான கருத்துக்களைக் கூறி அனைவரையும் தன் பக்கம் ஈர்க்க வைப்பதில் வல்லவர் இந்த PJ. இவருடைய அறிவீனமான, கவர்ச்சியான கருத்துக்களின் பால் ஈர்ந்து விடாமல் நம்மனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பானாக!
எங்கள் நாயகம் கண்மணி முஸ்தபா றஸூலே கரீம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே உயர்வானவர்கள் என்பதற்கு சில ஆதாரங்களை இவர் முன் வைக்கிறார். அவர் முன் வைக்கும் ஆதாரங்கள் இவர் கூறும் தலைப்புக்குப் பொருத்தமானவைதானா என்று நாம் அலசிப் பார்ப்போம். அதுமட்டுமன்றி எங்கள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அனைத்து நபீமாரை விடவும் உயர்வானவர்கள் என்பதற்கு திருமறையிலோ, ஹதீதுகளிலோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறார்.
இவர் கூறும் ஆதாரங்களில் ஒன்றுதான் அல்லாஹ் திருமறையில்
إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا
உங்களை நான் மனித குலத்துக்கு “இமாம்” ஆக ஆக்கியுள்ளேன் என்பதாகும்.
குறித்த இந்த வசனத்தை முழுமையாக கவனியாமல் நபீமாரில் எவரையும் இறைவன் “இமாம்” ஆக ஆக்கவில்லை. அதனால் நபீ இப்றாஹீம் அவர்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிடுகிறார். இவரின் முட்டாள் தனத்தை என்னென்பது? இத்திருமறை வசனத்தை முழுமையாக கவனியுங்கள்.
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்றாஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன் என்று அவன் கூறினான்; அதற்கு இப்றாஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (02 – 124)
மேற்படி வசனத்தில் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் உங்களை மக்களுக்கு “இமாம்” ஆக ஆக்கியுள்ளேன் என்று கூறிய போது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “எனது சந்ததியினரிலும் இமாம்களை ஆக்குவாயாக!” என்றார்கள். மனித குலத்துக்கு நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும்தான் இமாம் என்றிருந்தால் எவ்வாறு நபீ இப்றாஹீம் அவர்கள் எனது சந்ததியினரிலும் ஆக்குவாயாக! என்று கேட்பார்கள்? அவ்வாறு கேட்டாலும் கூட அதற்கு இறைவன் இல்லை அது நீங்கள் மட்டும்தான் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருந்தால் PJ யின் வாதம் சரியானதாயிருந்திருக்கும். மாறாக அல்லாஹ் கூறிய பதில் “எனது வாக்குறுதி உமது சந்ததியிலுள்ள அநியாயக் காரர்களுக்குச் சேராது” என்பதாகும். அப்படியாயின் அநியாயக் காரர்கள் அல்லாதவர்களுக்கு சேரும் என்பதையே இத்திரு வசனம் காட்டுகிறது. ஆகவே நபீ இப்றாஹீம் அவர்களை “இமாம்” என்று சொன்னதினால் அவர்கள் மட்டும்தான் இமாம் என்றோ, அல்லது பெருமானார் அவர்களை விட நபீ இப்றாஹீம் அவர்கள் சிறந்தவர்கள் என்றோ கருத்து வராது. இது PJ யின் மடமைகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அவர் கூறும் ஆதாரம்
فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا
நேர்வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தை பின்பற்றுங்கள். (03-95)
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு ஓரிடத்தில் அல்ல பல இடங்களில் கூறியுள்ளான். இந்த வசனத்தைக் காட்டி நபீ இப்றாஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றச் சொல்லியுள்ளானே இறைவன். அதனால் நபீ இப்றாஹீம்தான் சிறந்தவர்கள் என்று கூறுகிறார் PJ. இவரின் திருமறை பற்றிய அறிவை எண்ணி வெட்கப்படவேண்டியுள்ளது.
முதலில் ஒன்றை சிந்திக்க வேண்டும். அல்லாஹ் இந்த வையகத்தில் வேதம் வழங்கியவர்கள் நான்கு நபீமார்கள்தான். ஒன்று: நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் (தௌறாத் வேதம்). இரண்டு: நபீ தாஊத் அலைஹிஸ்ஸலாம் (ஸபூர் வேதம்). மூன்று: நபீ ஈஸா அலைஹிஸ்லாம் (இன்ஜீல் வேதம்). நான்கு: எங்கள் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்கள் (புர்கான் வேதம்). இவை தவிர வேறு எவருக்கும் வேதம் வழங்கப்படவில்லை. இருந்த போதும் இறுதி வேதம் வழங்கப்பட்ட எங்கள் கண்மணி நாயகம் அவர்களை – அவர்களின் சமூகத்தைப் பார்த்து நீங்கள் நபீ இப்றாஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்று ஏன் கூறுகிறான் என்றாவது சிந்திக்காமல் தான் தோன்றித் தனமாக இப்றாஹீம் நபீயின் மார்க்கத்தை பின்பற்றச் சொல்லி விட்டான் அதனால் அவர்கள்தான் சிறந்தவர்கள் என்று வாதிடுவது மடத்தனம் என்பதை விட பைத்தியம் என்று சொல்வதே சிறந்தது.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் புனித தீனுல் இஸ்லாமை கொண்டு வந்த போது யஹூதிகள், நஸாறாக்கள், மக்கத்து முஷ்ரிக்குகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெருமானாரை நபீயாக ஏற்கவில்லை. யஹூதிகள் “தௌறாத் வேதத்தைப் பின்பற்றுங்கள் நேர்வழி பெறுவீர்கள்” என்றார்கள். நஸாறாக்கள் “இன்ஜீல் வேதத்தைப் பின்பற்றுங்கள் நேர்வழி பெறுவீர்கள்” என்றார்கள். முஷ்ரிக்குகள் அவர்கள் தாம் செய்து வந்த விக்கிரக ஆராதனைதான் சரி என்றார்கள். ஆனால் இம்மூன்று சாராரும் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அதனால்தான் அல்லாஹ் நீங்கள் நபீ இப்றாஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்றான். காரணம் நபீ இப்றாஹீம் அவர்கள்தான் இறுதி காலத்தில் வேதத்தையும், இறைஞானத்தையும் ஓதிக் காண்பித்து அவர்களை பரிசுத்தப்படுத்தும் றஸூலை அனுப்புவாயாக என்று பிரார்த்தித்தார்கள். நபீ இப்றாஹீம் அவர்களை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் அவர்களின் பிரார்த்தனை மூலம் அனுப்பப்பட்ட இந்த நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு ஏவினான் இறைவன். இந்த ஒரு சாதாரண விடயமே புரியாமல் தனது மனமுரண்டுக்கு ஆதாரமாக திருமறை வசனத்தை புரட்டல் செய்யும் இந்த PJ யை என்னென்பது?
அவரின் அடுத்த ஆதாரம் “அஸ்ஸலவாதுல் இப்றாஹீமிய்யா” என்ற ஸலவாத்தில் “பெருமானார் மீதும், அவர்கள் கிளையார் மீதும் இறைவா நீ நபீ இப்றாஹீம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார் மீதும் “ஸலவாத்” சொன்னது போல் ஸலவாத் சொல்வாயாக! மேலும் அவர்கள் மீது “பறகத்” அருள் செய்தது போல் இவர்கள் மீதும் அருள் சொரிவாயாக! என்பதாகும்.
இந்த ஸலவாத்தை வைத்து அவர்கள் மீது ஸலவாத் சொன்னது போல் ஸலவாத் சொல்வாயாக என்றும், அவர்களுக்கு அருள் செய்தது போல் இவர்களுக்கும் அருள் செய்வாயாக என்றும்தானே சொல்லப்பட்டுள்ளது. அதனால் நபீ இப்றாஹீம் அவர்கள்தான் சிறந்தவர்கள் என்று வாதிடுகிறார் PJ.
இவரும், இவரின் அடிவருடிகளும் தங்களின் கொள்கைக்கு ஏற்றாற் போல் திருமறையையும், ஹதீதுகளையும் வளைத்தெடுப்பவர்கள் என்பது உலகறிந்த உண்மை. அதுபோன்ற ஒன்றுதான் இதுவும். நாம் இவ்வாறு ஸலவாத் சொல்வதால் நபீ இப்றாஹீம் அவர்கள் எம்பெருமானார் அவர்களை விடச் சிறந்தவர்கள் என்ற கருத்து வந்து விடாது. இந்த ஸலவாத்தில் வந்துள்ள “கமா ஸல்லைத” நீ ஸலவாத் சொன்னது போல் என்பது இந்த இடத்தில் முழுமையான ஒப்பிடுதலைக் காட்டாது. ஏனெனில் நபீமார்களில் றஸூல்மார்கள் சிறந்தவர்கள் என்பதும், அந்த றஸூல்மார்களில் எம்பெருமானார் அவர்களே சிறந்தவர்கள் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இது தெரியாமல் இந்த PJ போன்றவர்கள் ஸலவாத்தை மட்டும் பார்த்தால் நபீ இப்றாஹீம் அவர்கள் சிறந்தவர்கள் என்பதால்தான் இவ்வாறு ஸலவாத் வந்துள்ளது என்று எண்ணுவார்கள். இந்த இடத்தில் முழுமையான ஒப்பிடுதல் வராது என்பதற்கு ஓர் ஆதாரத்தை இங்கு தருகிறேன்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்ட விசுவாசிகளே! உங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இறையச்சம் உள்ளோர் ஆகலாம். (02 -183)
நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினருக்கு விதியாக்கப்பட்ட நோன்பும் எமக்கு கடமையாக்கப்பட்ட நோன்பும் ஒரேமாதிரியானவை என்பதல்ல. அவர்களுக்கு கடமையாக்கப்பட்டது போன்றுதான் எமக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது எனின் எம்பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “உம்மத்” சமூகத்தை விட அவர்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து வந்து விடும். இது திருமறையின் வாக்கிற்கு முரணானதாகும்.
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் உள்ளீர்கள். (3-110)
எனவே அவர்களுக்கு கடமையாக்கப்பட்டது போன்று என்பது முழுமையான ஒப்பல்ல. அவர்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததுதான். அது எமது நோன்பு போன்றதல்ல. இங்கு எங்களுக்கு முன் அவர்களுக்கு எங்களைப் போன்றல்லாவிட்டாலும் ஒரு வகையான நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கடமையாக்கப்பட்டிருந்தது போல் என்ற ஒப்பை மட்டுமே இங்கு கூறப்பட்ட “கமா குதிப” என்பது எடுத்துக் கொள்ளும். அதுபோன்றுதான் “கமா ஸல்லைத அலா இப்றாஹீம” நீ நபீ இப்றாஹீம் அவர்கள் மீது ஸலவாத் சொன்னது போல் என்றால் பெருமானாருக்கு முன் அவர்களுக்கு ஸலவாத் சொல்லப்பட்டுள்ளது. காரணம் அவர்கள் முந்தியவர்கள். அதுபோல் என்று முற்படுத்தப்பட்டதை எடுத்துக் கொள்ளுமே அன்றி அவர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்தையோ அல்லது அவர்கள் மீது சொல்லப்பட்டது போன்ற ஸலவாத் என்றதையோ எடுத்துக் கொள்ளாது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் கொள்கைக் குருடர்களான இவர்களுக்கு இவர்கள் கண்டதெல்லாம் ஆதாரம் என்று உளறுகிறார்கள்.
அடுத்து நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “கலீலுல்லாஹ்” அல்லாஹ்வின் நண்பன் என்று வருணிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் சிறந்தவர்கள் என்று உளறுகிறார் PJ. இந்த நயவஞ்சகனுக்கு எம்பெருமானார் அவர்கள் “ஹபீபுல்லாஹ்” அல்லாஹ்வின் காதலர் என்பது புரியவில்லை. அந்நிய ஜாதி பெண்ணுடன் கள்ளக் காதல் வைத்த இவருக்கு, பகிரங்க விபச்சாரிக்கு எங்கே இறைகாதல் புரியப் போகிறது. “கலீலுல்லாஹ்” என்பதிலும், “ஹபீபுல்லாஹ்” என்பதிலும் எது சிறந்ததென்பது எங்கே புரியப் போகிறது?
أَلَا وَإِنِّي سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ، وَأَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ، وَبِيَدِي لِوَاءُ الْحَمْدِ تَحْتَهُ آدَمُ فَمَنْ دُونَهُ وَلَا فَخْرَ،
அறிந்து கொள்ளுங்கள்! நாளை மறுமையில் நான்தான் ஆதமுடைய மக்களின் தலைவன். பெருமையில்லை. நானே முதன் முதலில் எழுப்பப்படுவேன். அதிலும் பெருமையில்லை. எனது கரத்திலேயே “லிவாஉல் ஹம்த்” எனும் கொடி இருக்கும். அந்தக் கொடியின் கீழேதான் நபீ ஆதமும், அவர்கள் அல்லாதவர்களும் (ஏனைய நபீமாரும்) நிற்பார்கள். அதிலும் பெருமையில்லை.
இந்தப் பொன் மொழியைப் பார்த்தாவது யார் சிறந்தவர்கள் என்பதைப் புரிய முடியாத PJ தான் தோன்றித்தனமாக மார்க்கம் பேச வருகிறார். கேவலத்திலும் கேவலம்.
«قَدْ سَمِعْتُ كَلَامَكُمْ وَعَجَبَكُمْ، أَنَّ إِبْرَاهِيمَ خَلِيلُ اللَّهِ، وَهُوَ كَذَلِكَ، وَمُوسَى نَجِيُّهُ، وَهُوَ كَذَلِكَ، وَعِيسَى رُوحُهُ وَكَلِمَتُهُ، وَهُوَ كَذَلِكَ، وَآدَمُ اصْطَفَاهُ اللَّهُ تَعَالَى، وَهُوَ كَذَلِكَ، أَلَا وَأَنَا حَبِيبُ اللَّهِ، وَلَا فَخْرَ، وَأَنَا حَامِلُ لِوَاءِ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ شَافِعٍ، وَأَوَّلُ مُشَفَّعٍ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ مَنْ يُحَرِّكُ بِحَلَقِ الْجَنَّةِ وَلَا فَخْرَ، فَيَفْتَحُ اللَّهُ فَيُدْخِلُنِيهَا وَمَعِي فُقَرَاءُ الْمُؤْمِنِينَ وَلَا فَخْرَ، وَأَنَا أَكْرَمُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ عَلَى اللَّهِ، وَلَا فَخْرَ»
ஸஹாபாக்கள் நபீமார் பற்றிப் பேசி ஆச்சரியப்பட்டதை பார்த்த பெருமானார் அவர்கள் அவர்களிடம் வந்து “நீங்கள் ஆச்சரியப்பட்டு பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நபீ இப்றாஹீம் “கலீலுல்லாஹ்”தான். நபீ மூஸா “நஜிய்யுல்லாஹ்”தான். நபீ ஈஸா “றூஹுல்லாஹ்” மற்றும் “கலிமதுல்லாஹ்”தான். அதேபோல் நபீ ஆதம் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்தான். அறிந்து கொள்ளுங்கள் நான் “ஹபீபுல்லாஹ்” அல்லாஹ்வின் காதலன். பெருமையில்லை. நாளை மறுமையில் “லிவாஉல் ஹம்த்” கொடியை நானே தாங்கி நிற்பேன். பெருமையில்லை. நாளை மறுமையில் நானே பரிந்துரைப்பவர்களின் முதன்மையானவன். பெருமையில்லை. சுவனத்தில் முதலில் நுழைபவன் நானே. பெருமையில்லை. என்னுடன் விசுவாசிகளில் நின்றுமுள்ள “புகறாஉ”கள் இருப்பார்கள். பெருமையில்லை. நான் முந்தியவர்கள், பிந்தியவர்களில் சங்கைக்குரியவன் பெருமையில்லை” என்று சொன்னார்கள்.
இவ்வாறான நபீ மொழிகளிருக்கும் நிலையில் “காலத்தின் சிறந்த அறிஞன்” என்று தன்னுடைய அடிவருடிகளால் போற்றப்படும் காலத்தின் கொம்பு PJ பெருமானாரை தரக் குறைவாக பேசுவது பெருமானாரின் காதலர்களுக்கு இல்லை அல்லாஹ்வுக்கும், அவனது அமரர்களுக்கும், அவ்லியாஉகளுக்கும் வேதனையாக உள்ளது. எனவே, அவர்கள் அனைவரின் சாபமும் இவர் மீது இறங்கட்டுமாக!