أيّها المؤمنون الموحّدون ادعوا بهذا الدّعاء عقب كلّ صلاة إن أمكنكم، وإلّا فاقرئوه ليلة يوم الجمعة بعد صلاة التّهجّد،
தவ்ஹீத்வாதிகளான விசுவாசிகளே! உங்களால் முடியுமாயின் தினமும் ஐவேளை தொழுகையின் பின் பின்வரும் “துஆ”வை ஓதுங்கள். இன்றேல் வெள்ளிக்கிழமை இரவு “தஹஜ்ஜுத்” தொழுகையின் பின் ஓதுங்கள்.
اَللهم يَا بَاسِطَ الْيَدَيْنِ بِالْعَطِيَّةْ، وَيَا مَنْ إِذَا رُفِعَتْ إِلَيْهِ أَكُفُّ الْعَبْدِ كَفَاهْ، وَيَا مَنْ تَنَزَّهَ فِى ذَاتِهِ وَصِفَاتِهِ الْأَحَدِيَّةْ، عَنْ أَنْ يَكُوْنَ لَهُ فِيْهَا نَظَائِرُ وَأَشْبَاهْ،
اَللهم إِنِّيْ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِى كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِى عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ وَنُوْرَ صَدْرِيْ وَجَلَاءَ حُزْنِيْ وَذَهَابَ هَمِّيْ،
وَأَسْأَلُكَ يَا حَيُّ يَا قَيُّوْمُ، يَا بَدِيْعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا اَللهُ يَا وَاحِدُ يَا أَحَدُ يَا صَمَدُ يَا وِتْرُ يَا دَائِمُ! أَنْ تُبَارِكَ فِى تِجَارَاتِيْ وَتِجَارَاتِ طَائِفَةٍ يُعِيْنُوْنَنِيْ وَيُعِيْنُوْنَ مُؤَسَّسَاتِيْ مِنَ الْمَسَاجِدِ وَالْمَدَارِسِ وَالْكُلِّيَّاتِ، وَتَجْعَلَنِيْ وَإِيَّاهُمْ أَغْنِيَاءَ تُشِيْرُ الْأَصَابِعُ إِلَيْهِمْ، وَتَرْزُقَنِيْ وَإِيَّاهُمْ إِيْمَانًا قَوِيًّا وَعِلْمًا نَافِعًا، وَتَجْعَلَنِيْ وَإِيَّاهُمْ مُؤْمِنِيْنَ بِوَحْدَةِ الْوُجُوْدِ وَمُخْلِصِيْنَ فِى شُؤُوْنِنَا، وَتُطَوِّلَ عُمْرِيْ وَأَعْمَارَهُمْ فَوْقَ مِأَةِ سَنَةٍ، وَتَرْزُقَنِيْ وَإِيَّاهُمْ صِحَّةً كَامِلَةً وَنِعْمَةً وَافِرَةً، وَتَقْضِيَ حَاجَاتِيْ وَحَاجَاتِهِمْ،
َ وَأَسْأَلُكَ يَا اَللهُ أَنْ تُبَارِكَ فِى مَعِيْشَةِ أَحْبَابِيْ وَأَصْدِقَائِيَ الَّذِيْنَ يَشْتَغِلُوْنَ فِى الدُّوَلِ الْخَارِجِيَّةْ، مِنَ الْبِلَادِ الْعَرَبِيَّةِ وَالْإِنْجِلِيْزِيَّةْ، وَأَسْأَلُكَ يَا أَحْكَمَ الْحَاكِمِيْنَ أَنْ تُعَاقِبَ قَوْمًا أَفْتَوْنِيْ وَإِخْوَانِيْ بِالرِّدَّةِ، وَاجْعَلْهُمْ خَائِبِيْنَ وَخَاسِرِيْنَ فِى أَمْرِ فَتْوَاهُمْ، وَابْتَلِهِمْ بِبَلَاءٍ عَظِيْمٍ وَآفَةٍ عَجِيْبَةٍ تَكُوْنُ عِبْرَةً لِغَيْرِهِمْ،
اَللهم يَا أَحْكَمَ الْحَاكِمِيْنَ، وَيَا ذَا الْقُوَّةِ الْمَتِيْنْ، وَيَا جَبَّارُ وَيَا قَهَّارُ وَيَا مُنْتَقِمْ اِقْطَعْ أَجَلَ أَمَلِ أَعْدَائِيْ، وَشَتِّتِ اللهم شَمْلَهُمْ وَأَمْرَهُمْ، وَفَرِّقْ جَمْعَهُمْ، وَأَقْلِبْ تَدْبِيْرَهُمْ، وَبَدِّلْ أَحْوَالَهُمْ، وَنَكِّسْ أَعْلَامَهُمْ، وَكِلَّ سِلَاحَهُمْ، وَقَرِّبْ آجَالَهُمْ، وَنَقِّصْ أَعْمَارَهُمْ، وَزَلْزِلْ أَقْدَامَهُمْ، وَغَيِّرْ أَفْكَارَهُمْ، وَخَيِّبْ آمَالَهُمْ، وَخَرِّبْ بُنْيَانَهُمْ، وَاقْلَعْ آثَارَهُمْ، حَتَّى لَا تَبْقَى لَهُمْ بَاقِيَةْ، وَلَا يَجِدُوْا لَهُمْ وَاقِيَةْ، وَاشْغَلْهُمْ بِأَبْدَانِهِمْ وَأَنْفُسِهِمْ، وَأَدِمْهُمْ بِصَوَاعِقِ انْتِقَامِكْ، وَابْطُشْ بِهِمْ بَطْشًا شَدِيْدًا، وَخُذْهُمْ أَخْذًا عَزِيْزًا، إِنَّكَ عَلُى كُلِّ شَيْءٍ قَدِيْرْ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمْ، اَللهم لَا أَمْنَعُهُمْ وَلاَ أَرْفَعُهُمْ إِلَّا بِكَ، اَللهم إِنَّا نَجْعَلُكَ فِى نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ، يَا مَالِكَ يَوْمِ الدِّيْنْ، إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ عَلَيْهِمْ، فَدَمِّرْهُمْ تَدْمِيْرًا، وَتَبِّرْهُمْ تَتْبِيْرًا، فَاجْعَلْهُمْ هَبَاءً مَنْثُوْرًا، آمِيْنْ آمِيْنْ آمِيْنْ، يَا اَللهُ يَا اَللهُ يَا اَللهُ، بِسْمِ اللهِ بِحُرْمَةِ مُحَمَّدٍ عِنْدَكَ وَبِحُرْمَتِكَ عِنْدَ مُحَمَّدٍ أَنْ تَسْتُرَنَا فِى الدُّنْيَا وَالْآخِرَةْ، إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرْ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمْ، وَصَلَّى اللهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيْمًا كَثِيْرًا إِلَى يَوْمِ الدِّيْنْ،
மேலே எழுதப்பட்ட வசனங்களில் عِبْرَةً لِغَيْرِهِمْ என்ற வசனத்தோடு எனது சொந்த வசனங்கள் முடிந்து விட்டன. அதற்குப் பின்னால் اَللهم يَا أَحْكَمَ الْحَاكِمِيْنْ என்று தொடங்கும் வசனத்திலிருந்து இறுதி வரையிலான “துஆ” வசனம் குத்பு நாயகம் ஸெய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வசனங்களாகும்.
குத்பு நாயகம் அவர்கள் மேற்கண்ட “துஆ” பிரார்த்தனையில் பயன்படுத்தியுள்ள சொற்களும், வசனங்களும் மிகவும் காரசாரமானவையாகும். இதை “துஆ” என்று சொல்வதை விட “பத்துஆ” بَدْ دُعَاءْ என்று சொல்வதே சிறந்ததென்று நான் கருதுகிறேன். “பத்துஆ” என்றால் “சபித்தல்” என்று பொருள். இது அறபு, பாரசீக இரு மொழியும் கலந்த சொல். இச் சொல்லையே நமது நாட்டில் பலர் “பதுவா” என்று மொழிகிறார்கள்.
வலீமார்களான இறை நேசர்களுக்கு இரு நிலைமைகள் உள்ளன. ஒன்று “ஜமால்” என்றும், மற்றது “ஜலால்” என்றும் சொல்லப்படும். “ஜமால்” என்றால் அழகு, அமைதி, சாந்தம் என்ற பொருள் உள்ளதாகும். “ஜலால்” என்றால் வேகம், கோபம், சூடு போன்ற பொருள்கள் உள்ளதாகும்.
இவ் இரு நிலைகளும் அல்லாஹ்வுக்கும் உண்டு. “ஜமாலீ, ஜலாலீ” என்று ஸூபீகள் சொல்வார்கள்.
“ஜமால்” நிலை என்றால் அல்லாஹ்வின் திரு நாமங்களில் رَؤُوْفْ றஊப் – இரக்கமுள்ளவன், عَفُوٌّ – அபுவ்வுன் – மன்னிப்புள்ளவன், صَبُوْرٌ – ஸபூர் – பொறுமை உள்ளவன் முதலான திரு நாமங்களின் செயற்பாடுகள் அவனில் மிகைத்திருக்கும் நிலையாகும். இந்நிலையில் அவன் உள்ள நேரத்தில் மன்னிப்பு மிகைத்தவனாயிருப்பான். குற்றம் செய்தாலும் கூட அதைக் கண்டு கொள்ளாதவனாக இருப்பான்.
மனிதனுக்கும் இது போன்ற நிலை ஏற்படுவதுண்டு. இந்நிலையில் அவனிடம் எந்த வேலையையும் சுலபமாக முடித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு கடைக்கார முதலாளி தனது கடையில் வருடத்திற்கு ஒரு தரம் “ஸ்டொக்” எடுத்து “இலாப நட்டம்” பார்ப்பார். அவ்வருடம் அவருக்கு இலாபம் பல கோடி என்று காணப்பட்டால் அவரின் முகம் மலர்ந்து விடும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார். அவ்வேளை அவரிடம் எதையும் பெற்றுக் கொள்ளலாம். இது அவரின் “ஜமால்” நிலை.
இதற்கு மாறாக அவன் கோடிக் கணக்கில் நட்டப்பட்டால் அவனைக் கவலை சூழ்ந்து கொள்ளும். முகம் வாடி விடும். எந் நேரமும் ரொட்டிக் கல் போன்று சூடாகவும், கோபமாகவுமே இருப்பான். இந் நேரம் அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. இது “ஜலால்” நிலை எனப்படும்.
இவ்வாறான இரு நிலைகளும் அல்லாஹ்வுக்கும் உண்டு. அவன் “ஜமால்” நிலை மிகைத்தவனாயிருந்தால் அந்நேரம் அவனிடம் எதையும் பெற்றுக் கொள்ள முடியும். “ஜலால்” நிலை மிகைத்தவனாயிருந்தால் அவ்வேளை அவனை அணுகவும் முடியாது.
இது குறித்து பின்வருமாறு ஸூபீ மகான்கள் சொல்லியுள்ளார்கள்.
وَللهِ رِجَالٌ، لَوْ تَمَلَّكَهُمُ الْحَالُ، لَمَا كَانَ عَلَيْهِمْ مِنَ الدُّنْيَا مُحَالٌ،
“அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நிலை உண்டு. அது அவர்களை மிகைத்தால் அவர்களுக்கு இவ் உலகில் எதுவும் அசாத்தியமானதாயிருக்காது”
இத்தகைய ஒரு நிலையில்தான் குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
قَدَمِيْ هَذِهِ عَلَى رَقَبَاتِ كُلِّ وَلِيٍّ للهِ،
“எனது காற் பாதம் அனைத்து வலீமாரின் பிடரிகள் மீதுமுள்ளது” என்று கூறினார்கள். இன்னுமிதே போல் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களும்
قَدَمِيْ هَذِهِ عَلَى جَبَهَاتِ كُلِّ وَلِيٍّ للهِ،
“எனது காற்பாதம் அனைத்து வலீமாரின் நெற்றிகளின் மீதுமுள்ளது” என்று கூறியுள்ளார்கள்.
இன்னும் குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
وَلَوْ أَلْقَيْتُ سِرِّيْ فِى جِبَالٍ – لَدُكَّتْ وَاخْتَفَتْ بَيْنَ الرِّمَالِ
“மலைகளில் எனது இரகசியத்தை நான் வைத்தால் அவை சுக்கு நூறாகி மணல்களிடையே மறைந்து விடும்”
وَلَوْ أَلْقَيْتُ سِرِّيْ فَوْقَ مَيْتٍ – لَقَامَ بِقُدْرَةِ الْمَوْلَى مَشَى لِيْ
“எனது இரகசியத்தை ஒரு பிணத்தின் மீது வைத்தால் உடன் இறை சக்தி கொண்டு அந்தப் பிணம் என்னிடம் நடந்து வரும்”
وَلَوْ أَلْقَيْتُ سِرِّيْ فَوْقَ نَارٍ – لَخَمِدَتْ وَانْطَفَتْ مِنْ سِرِّ حَالِيْ
“நெருப்பின் மீது அல்லது நரகின் மீது எனது இரகசியத்தை எறிந்தால் உடன் எனது இரகசிய நிலையால் நரகம் அணைந்துவிடும்”
அல்லாஹ்வின் சக்தி வலீமாரில் மிகைத்தால் எதெல்லாம் மனிதனால் சாதிக்க முடியாதென்று கருதப்படுகின்றதோ அதெல்லாம் அவனால் சாதிக்க முடியும்.
இத்தகைய ஒரு நிலையை அடைதல் குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகைக்கு மட்டுமோ, அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ ஆண்டகைக்கு மட்டுமோ சொந்தமானதல்ல. அல்லாஹ் எவருக்கு இத்தகைய நிலையை கொடுக்க விரும்புகிறானோ அவர் காத்தான்குடியில் இருந்தாலென்ன? காலியில் இருந்தாலென்ன? அவன் நாடியவர்களுக்கு கொடுப்பான்.
மேலே நான் எழுதியுள்ள குத்பு நாயகம் அவர்களின் “துஆ” பிரார்த்தனை அல்லது சாபம் “ஷரீஆ”வின் வரம்பையும், “தரீகா”வின் வரம்பையும், “ஹகீகா”வின் வரம்பையும், “மஃரிபா”வின் வரம்பையும் மீறுபவர்களை நினைத்து மனதிற் கொண்டு ஓதப்பட்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி நிச்சயமாக நடக்கும். பலிக்கும்.
போலிகளால் பொய் “பத்வா” வழங்கப்பட்டு நசுக்கப்படுகின்ற ஸூபிஸ சமூகமே!
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அல்குர்ஆன் மூலம் சொல்லித் தந்த அல்லாஹ்வையும், அதே தத்துவத்தை அருள் மொழியின் மூலம் சொல்லித் தந்த எம் பெருமானாரையும், உலகில் தோன்றி இதே தத்துவத்தை எழுதியும், பேசியும் வந்த வலீமார்களையும், தரீகாவின் மஷாயிகுமார்களையும் மதம் மாற்றி “பத்வா” வழங்கியவர்களுக்கு “அஹ்கமுல் ஹாகிமீன்” ஆன அல்லாஹ்வின் நியாயம் இறங்குவதற்காக குத்பு நாயகம் அவர்கள் “ஜலாலிய்யத்” எனும் நிலையில் இருந்து சொன்ன மேற்கண்ட “துஆ”வை காலையும், மாலையும் ஓதுவோம். அழுது சலித்து அவனிடமே இரு கரம் ஏந்துவோம். அரச நீதி அன்று கேட்கும். தெய்வ நீதி நின்று கேட்கும்.