தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தரீகாக்கள் வழிகேடென்றும், “காதிரிய்யா” தரீகாவைப் பின்பற்றுவோரும், முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் முஹ்யித்தீன் மௌலித் கிதாபில் “குப்ர்” இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் பாடல்கள் உள்ளதால் அதை ஓதுபவர்கள் அனைவரும் “காபிர்”கள் என்றும் சொல்லக் கூடிய வழிகேடர்களும், அந்த வழிகேடர்களின் கூற்றை மறுக்காமல் அதற்கு “ஆமாசாமி” போடும் நயவஞ்சகர்களையும் இனம் கண்டு அவர்களை விட்டும் விரண்டோடுமாறு அவ்லியா பக்தர்கள் அனைவரையும் எச்சரிக்கிறேன். நயவஞ்சகர்கள் யார்? என்று தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வேண்டியதில்லை.
முஹ்யித்தீன் மௌலித் கிதாபை எழுதிய இறைஞான மகான் அஸ்ஸெய்யித் மஹ்மூதுத் தீபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு பாடலில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
إِذْ مَا أَرَادَ إِلَهُ الْعَرْشِ ذِى الْعِظَمِ – تَنْفِيْسَ كُرَبِ أَسَامِيْهِ أُولِى الْحِكَمِ
أَفَاضَ قَبْلَ ظُهُوْرِ الْكَوْنِ مِنْ نَفَسِ – الرَّحْمَنِ نُوْرًا حَوَى الْيَدَيْنِ ذَا قِدَمٍ
يَدُ النُّبُوَّةِ لِلْإِعْطَاءِ مَا أَخَذَتْ – يَدُ الْوِلَايَةِ مِنْ مَوْلَاهُ مِنْ قِسَمٍ
فَمِنْ وِلَايَتِهِ قَالَ الْإِلَهُ لَهُ – لَوْ لَاكَ لَمْ تُوْجَدِ الْأَكْوَانُ مِنْ عَدَمٍ
பொருள்:
வலுப்பமுடைய “அர்ஷின்” நாயன் தத்துவங்களையுடைய தனது திரு நாமங்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதை நாடிய நேரத்தில்
படைப்பு எதுவும் வெளியாகுமுன் றஹ்மானுடைய சுவாசத்திலிருந்து பூர்வீகமுடைய இரு கரங்களைக் கொண்ட ஓர் ஒளியை சொரிந்து விட்டான்.
“விலாயத்” என்ற கரம் அல்லாஹ்விடமிருந்து எடுத்தவற்றை கொடுப்பதற்குரியதுதான், “நபித்துவம்” என்ற கரமாகும்.
அல்லாஹ் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு நீங்கள் இல்லையெனில் உலகங்கள் எதுவும் உண்டாகியிருக்க முடியாதென்று சொன்னது அவர்களின் “விலாயத்” ஒலித்தனத்தில் உள்ளதேயாகும்.
இரண்டாம் பாடலின் இரண்டாம் அடியில் لَوْ لَاكَ لَمْ تُوْجَدِ الْأَكْوَانُ مِنْ عَدَمِ “நீங்களின்றேல் உலகங்களில் எதுவும் “அதம்” இல்லாமையிலிருந்து உண்டாகியிருக்க முடியாது” என்ற வசனத்தில் مِنْ عَدَمٍ என்ற சொல் வந்துள்ளது. இது தொடர்பாக தனியான ஒரு விளக்கம் தேவை. அதை இறுதியில் எழுதுகிறேன். வாசிப்பவர்கள் தொடர்ந்து வாசிப்பது அவசியம். இவ்வாறு வாசிக்கவில்லையாயின் உப்பு, உறைப்பு இல்லாமற் சாப்பிட்டது போன்றிருக்கும்.
மேற்கண்ட முதலாவது பாடலின் முதலாம் அடியில் إِذْ مَا என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு மட்டும் சிறு விளக்கம் எழுதுகிறேன்.
إِذْ مَا حرفُ شرطٍ جازمٌ فِعلين بمعنى إن الشرطيّة، نحو إِذْمَا تَقُمْ أَقُمْ
என்பது إِذْمَا “ஷர்த்”துடைய ஹர்பாகும். இது ஷர்திய்யத்தான إِنْ உடைய பொருளைக் கொண்டது. பின்னால் வருகின்ற இரண்டு “பிஅல்”களுக்கு “ஜஸ்ம்” செய்யும். ஆனால் இவ்விடத்தில் பின்னால் இரண்டு “பிஅல்”கள் வரவில்லையாதலால் “ஜஸ்ம்” செய்யப்படவில்லை. அமல் செய்யவில்லை. எனினும் إذما என்ற இச் சொல்லுக்கு إن الشـرطيّة “ஷர்திய்யத்தான இன்” உடைய பொருள் கொள்ள முடியும். இதன்படி அல்லாஹ் நாடினான் – நாடினால் என்று பொருள் கொள்ளலாம். முதலாம் பாடலின் முதல் அடியில் வேறு ஆழமாக ஆய்வதற்கு அவசியமானதொன்றுமில்லை.
ஆயினும் முதலாம் பாடலின் இரண்டாம் அடியான تَنْفِيْسَ كُرَبِ أَسَامِيْهِ என்ற அடியில் வந்துள்ள மேற்கண்ட இவ்வசனம் ஆழமாக ஆராயப்பட வேண்டியதாகும்.
இவ்வசனத்தில் வந்துள்ள تَنْفِيْسْ என்ற சொல் نَفَّسَ என்ற சொல்லடியில் உள்ளது. நிவர்த்தி செய்தான் என்று பொருள். இது முன்னால் கூறப்பட்ட أَرَادَ என்ற சொல்லுக்கு مَفْعُوْلْ ஆகும். كُرَبْ என்பது كُرْبَةٌ என்ற சொல்லின் பன்மைச் சொல். இதற்கு கஷ்டங்கள் என்று பொருள். أَسَامِيْ என்பது اِسْمٌ என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். இதற்கு أَسْمَاءُ، أَسَامْ، أَسْمَاوَاتْ என்றெல்லாம் பன்மைச் சொற்கள் வரும்.
اِسْمٌ
– இஸ்ம் என்றால் பெயர் என்று நாம் பொருள் சொல்லிக் கொண்டாலும் இதற்கு ஒரு வரைவிலக்கணம் உண்டு. அது
اَللَّفْظُ الْمَوْضُوْعُ عَلَى جَوْهَرٍ أَوْ عَرَضٍ لِتَعْيِيْنِهِ وَلِتَمْيِيِزِهِ،
இதன் சுருக்கம் என்னவெனில் பெயர் என்பது ஏதோ ஒரு வஸ்தை மற்ற வஸ்துக்களை விட்டும் பிரித்துக் காட்ட வேண்டிய ஒரு சொல்லாகும். اِسْمٌ என்ற சொல்லில் உள்ள “அலிப்” هَمْزَةُ وَصْلٍ எனப்படும். تُحْذَفُ هَمْزَةُ اِسْمٍ فِى الْبَسْمَلَةِ “பிஸ்மில்லாஹ்” என்று எழுதும் போது மட்டுமே அந்த “அலிப்” எழுதக் கூடாது. وَتُثْبَتُ فِى غَيْرِهَا வேறு இடங்களில் அவ்வாறு செய்யாமல் “அலிப்” எழுத வேண்டும்.
والبسملةُ عند النصارى هِي ‘بسم الأب والإبن والرُّوح القُدس ‘، وعند المسلمين بسم الله الرحمن الرحيم،
“நஸாறா”க்களிடம் “பிஸ்மில்லாஹ்” என்பது தந்தை, மகன், புனித உயிர் மூன்றையும் குறிக்கும். முஸ்லிம்களிடம் “பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்” என்பதைக் குறிக்கும்.
முதலாம் பாடலில் இரண்டாம் அடியின் இறுதியில் أُولِى الْحِكَمِ என்ற வசனம் வந்துள்ளது. இதற்கு “தத்துவங்கள் உடையவைகளான” என்று பொருள் வரும். أُولُو என்ற சொல் பற்றிய சிறு விளக்கம்.
أولو – جمعٌ بمعنى ذَوُو أي أصحاب، واحده ذو، بمعنى صاحب، والمؤنّث أولات، واحدتُها ‘ ذاتُ ‘ تقول جائني أولو العلم وأولاتُ الفضل،
(அறபு மொழியிலக்கணம் படிக்கும் மாணவர்களுக்கு இது விளங்கும்)
முதலாவது பாடலின் பொதுவான பொருள் “அர்ஷுடைய நாயன் தனது தத்துவங்களுடைய திரு நாமங்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய நாடிய போது” என்பதாகும்.
இங்கு சற்று விளக்கம் எழுத வேண்டும். அதாவது அல்லாஹ் தனக்குரிய தத்துவங்களுடைய திரு நாமங்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய நாடினான் என்றால் அவற்றை வெளிப்படுத்தாமல் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்தது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அல்லாஹ்வுக்கு கஷ்டம் என்று ஒன்று கிடையாது. ஆயினும் ஒருவனின் திறமைகளை அவன் வெளிப்படுத்தாமலிருப்பது அவனுக்கு கஷ்டமாக இருக்கும். அவற்றை அவன் வெளிப்படுத்தினால் மட்டும்தான் அவனின் கஷ்டங்கள் குறையும். இது மனிதனுக்குள்ள ஓர் அம்சம்.
உதாரணமாக பேச்சாற்றல் திறமை உள்ளவன் அதை வெளிப்படுத்தாமல் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருப்பது அவனுக்கு கஷ்டமாக இருக்கும். இது மனித இயல்பு. அல்லாஹ்வுக்கு கஷ்டம் என்று ஒன்றிருக்க முடியாது. எனினும் மனிதனுக்கு விளக்கி வைப்பதற்காகவே மஹ்மூதுத் தீபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் தனது 99 திரு நாமங்களை வெளிப்படுத்தாமல் அவற்றை தன்னுள் அடக்கி வைத்திருக்க முடியாமற் போனதால் அவற்றை வெளிப்படுத்தி தனது கஷ்டங்களை நிவர்த்தி செய்ய நாடிய போது பின்வருமாறு செய்தான்.
இரண்டாம் பாடலின் முதலடியில் வந்துள்ள أَفَاضَ – சொரிந்து விட்டான் என்ற சொல்தான் முந்தின பாடலில் உள்ள إِذْمَا என்ற “ஷர்த்” உடைய “ஜவாப்’ விடையாகும். ஒரு “ஷர்த்” வந்தால் அதற்கு “ஜவாப்” என்பது நிச்சயமாக வரும். இன்றேல் பேச்சு நிறைவு பெறாது.
முதலாம் பாடலின் இரண்டாம் அடிக்கு வருவோம்.
أَفَاضَ قَبْلَ ظُهُوْرِ الْكَوْنِ مِنْ نَفَسِ – الرَّحْمَنِ نُوْرًا حَوَى الْيَدَيْنِ ذَا قِدَمِ
அல்லாஹ் தனது திரு நாமங்களை வெளிப்படுத்தாமல் இருந்தது அவனுக்கு கஷ்டமாக இருந்ததால் அதை நிவர்த்தி – நீக்கி வைப்பதற்காக “கவ்ன்” படைப்புக்களைப் படைக்கு முன் (கவ்ன் – என்றால் பொதுவாக படைப்பு எனப்படும். اَلْكَوْنُ ما سِوى اللهِ அல்லாஹ் தவிரவுள்ள யாவும் “கவ்ன்” என்ற சொல்லில் அடங்கிவிடும்) أَفَاضَ قَبْلَ ظُهُوْرِ الْكَوْنِ அவன் أَفَاضَ சொரிந்து விட்டான். சொரிந்து விட்டான் என்றால் أًظْهَرَ வெளியாக்கினான் என்று பொருள் கொள்ள வேண்டுமேயன்றி ஏதோ ஒன்றை எடுத்துச் சொரிந்து விட்டான் என்று பொருள் கொள்ளக் கூடாது. மாறாக أَظْهَرَ வெளிப்படுத்தினான் என்று பொருள் கொள்ள வேண்டும். மேற்கண்ட أَفَاضَ சொரிந்தான் அல்லது வெளிப்படுத்தினான் என்றால் எதை வெளிப்படுத்தினான் என்ற கேள்வி ஏற்படுகிறது. இக்கேள்விக்கான பதில் இரண்டாம் அடியிலுள்ள نُوْرًا ஒளியை என்ற சொல்லேயாகும். அதாவது نُوْرًا என்ற சொல்லை أَفَاضَ என்று முன்னால் வந்துள்ள சொல்லுக்கு مفعول ஆக அமைக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் படைப்புகளில் எதையும் படைக்குமுன் ஓர் ஒளியை சொரிந்தான் – படைத்தான் என்று பொருள் அமைந்து விடும்.
இங்கு ஒரு கேள்விக்கு இடமேற்படுகிறது. அதாவது அந்த ஒளியை எங்கிருந்து? எதிலிருந்து படைத்தான்? என்ற கேள்விதான் அது.
இக்கேள்விக்கான விடையை பாடலாசிரியரான மஹ்மூதுத் தீபீ அவர்களே பின்வருமாறு சொல்லிவிட்டார்கள். அதாவது مِنْ نَفَسِ الرَّحْمَنِ றஹ்மான் ஆகிய அல்லாஹ் தனது சுவாசத்திலிருந்து என்று பொருள் வரும். மேற்கண்ட இவ்வசனத்தில் வந்துள்ள مِن என்ற சொல்லின் مُتَعَلَّقْ பொருள் பொருந்துமிடம் أَفَاضَ என்ற சொல்லேயாகும். இவ்வாறு மட்டும்தான் பொருளைப் பொருத்த முடியும். இது தவிர வேறு வழியே இல்லை.
نَفَسُ الرَّحْمَنِ
– றஹ்மானின் “நபஸ்” என்றால் என்ன? இதன் விளக்கம் அடுத்த தொடரில் இடம் பெறும். முதலாம் தொடரான இத் தொடரை நுகர்பவர்கள் இரண்டாம் தொடரையும் நுகர்ந்தால் மட்டுமே ஞானப் பசி தீரும்.
இத் தொடரில் “நஹ்வு” எனும் மொழியிலக்கணத்தை தொடர்பு படுத்தி நான் எழுதியுள்ளதால் இவ் விபரம் மொழியிலக்கணம் கற்ற உலமாஉகளுக்கும், கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கும் மட்டுமே உள்ளங்கை நெல்லிக் கனி போல் புரியுமென்று நினைக்கிறேன். ஆகையால் அறபு மொழியிலக்கணம் கற்காத சகோதர, சகோதரிகள் கற்றவர்களின் உதவியுடன் எனது கட்டுரைகளை வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புக்குரிய பொது மக்களே!
நானும், எனது கருத்தைச் சரிகண்ட றப்பானீ உலமாஉகளும், இன்னும் நான் பேசிய கருத்துக்களைச் சரி கண்ட இலை மறை காய்களாக உள்ள உலமாஉகளும் எங்களின் இறுதி மூச்சு வரை ஸூபிஸ ஞானம் பேசிக் கொண்டே இருப்போம். இதற்கு ஜனநாயக நாடான நமது இலங்கைத் திரு நாட்டின் நாடாளுமன்ற அனுமதி எங்களுக்கு உண்டு என்பதை இது வரை இவ்விடயம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இது தொடர்பான விபரத்தை இங்கு தருகிறேன்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடாளுமன்றில் பதிவு செய்யப்பட்டாலும் “பத்வா” மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு அனுமதி வழங்கப் படாமலிருப்பது போல் எமது ஸூபிஸ அமைப்பான “அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு” நாடாளுமன்றில் பதிவு செய்யப்பட்டு ஸூபிஸ ஞானம் பேசுவதற்கும், அது தொடர்பான வகுப்புகள் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட அமைப்பாகும்.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினைக் கூட்டிணைத்து அரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் 02ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “கூட்டுத் தாபனத்தின் பொதுக் குறிக்கோள்கள்” எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
(இ) இஸ்லாமிய மதத்தில் நல்ல அறிவை அளிக்கும் பொருட்டு மௌலவீமாருக்குப் பயிற்சி அளித்தல்.
(ஈ) மௌலவிமாருக்கான கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும், ஆன்மிகப் பயிற்சிகளையும் ஒழுங்கு செய்தலும், மற்றும் நடாத்தலும்.
(உ) இஸ்லாமிய கோட்பாடாகிய “சூபித்துவத்தை” போதிப்பதனாலும், மற்றும் சாத்வீகத்தின் பால் வழிகாட்டுவதாலும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆட்களிடையே ஆத்மிக வளர்ச்சியை மேம்படுத்துதல்.
மேற்கண்ட, நாடாளுமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட குறிக்கோள்களை செயற்படுத்தும் அதிகாரம் எமக்கு உண்டு. இதன்படி ஸூபிஸ சமூகம் ஸூபிஸ தத்துவங்களை மரணிக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கும். ஒருவன் பேசுவது சரியாயினும், பிழையாயினும் அவனைப் பேச வேண்டாம் என்று சொல்வதற்கோ, அவனை மதம் மாற்றி “பத்வா” வழங்குவதற்கோ எவருக்கும் எந்த ஓர் அதிகாரமும் கிடையாது என்பதை பொது மக்களும், குறிப்பாக குருட்டு பத்வா வழங்கிய முல்லாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.