தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قالت شجرةٌ مُثمِرةٌ للعارف بالله الفاني فيه أبي بكر الشِّبلي رحمه الله، يا شبلي كُنْ مِثْلِيْ، النّاسُ يَرمُونَنِي بالأحجار وأنا أرميهم بالأثمار،
இறைஞானி அபூ பக்ர் ஷிப்லீ ஒரு வழியால் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பாதையில் நின்ற பழம் நிறைந்த மரம் ஒன்று அவரை அழைத்து ஷிப்லீ மகானே!
நீங்கள் என்போல் இருந்து கொள்ளுங்கள். மனிதர்கள் எனக்கு கற்களால் எறிகின்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு பழங்களால் எறிகின்றேன் என்று சொன்னது.
இதன் சுருக்கம் என்னவெனில் பிறர் நமக்கு தீமை செய்தாலும் நாம் அவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும் என்பதாகும்.
இத்தகைய மனப் பக்குவமும், பரந்து விரிந்த நற்குணமும் ஸூபீ வழி செல்லும் மகான்களிடமே இருக்கும்.
இதேபோல் இன்னுமொரு ஞானியைப் பார்த்து பூமி சொன்னது.
كُنْ مِثْلِيْ، يَطَئُنِيَ الْبَرُّ وَالْفَاجِرُ،
நீங்கள் என்போல் இருந்து கொள்ளுங்கள். என்னை நல்லவனும் மிதிக்கின்றான். கெட்டவனும் மிதிக்கின்றான்.
இதன் சுருக்கமும் மேலே சொன்னது போல் பிறர் நமக்கு தீமை செய்தாலும் நாம் அவனுக்கு நன்மையே செய்ய வேண்டும் என்பதாகும்.
மகான் ஷிப்லீ அவர்களுக்கு மரம் சொன்னது போலும், இன்னொரு மகானுக்கு பூமி சொன்னது போலும் பிறரால் தமக்கு ஏற்படுகின்ற துன்பம், துயரங்களை நாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதால் பாதையால் நாம் செல்லும் போது ஒருவன் எமது சாறனை அல்லது றவ்சரை கழட்டி எம்மை நிர்வாணியாக்கினால் இவ்விடத்திலும், இக்கட்டத்திலும் பொறுமை செய்ய வேண்டுமென்று அவனை முத்தி அவனை வாழ்த்தாமல் பொலீஸில் புகார் செய்து அவனுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். ஏனெனில் அவனின் அச் செயல் பாவச் செயலாகும். ஒருவனை நிர்வாணமாக்குதல் பாவமாகும்.
ஒருவன் அப்பாவி ஒருவரை அநீதியாக அடித்துக் கொண்டிருந்தால் அவனைத் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும்.
ஒருவன் திருக்குர்ஆனை தரையில் காலால் மிதித்தானாயின் அவனை அவ்விடத்திலேயே தண்டித்து அவனை பொலீஸில் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“மஜ்னூன்” مَجْنُوْنْ – பைத்தியக் காரன் அல்லது “மஜ்தூப்” مَجْذُوْبْ இறைஞானத்தால் இழுக்கப்பட்டவர் ஓர் தவறு செய்தால் அவரை ஏசாமலும், அடிக்காமலும் மன்னித்து விட வேண்டும். அவர் விதி, விலக்கிற்கு உட்பட்டவரல்ல. அவருக்கு ஏவல், விலக்கல் கிடையாது.
இறைபோதை தலைக்கேறியவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். மது போதை தலைக்கேறியவர்களை பொலீஸில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணான கருத்துக் கூறுபவர்களை எதிர்த்து விளக்கம் கூற வேண்டும்.
இன்று “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது கடமையாகிவிட்டது. திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் கூறுகின்ற கருத்துக்களையும், தத்துவங்களையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களை நாமும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ஒருவர் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணான கருத்துக் கூறினால் அவரை நிச்சயமாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய “பத்வா” பிழையென்றால் அதைப் பிழை காணும் உலமாஉகள் எவருக்கும் அஞ்சாமல் அதற்கு மறுப்புக் கொடுக்க வேண்டும். மௌனிகளாயிருந்தார்களாயின் மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் நிறுத்தப்பட்டு தோல் உரிக்கப்படுவார்கள். தலை கீழாய் தொங்க விடப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சத்தியத்தை மறைத்த குற்றத்திற்காக தண்டிக்கப்படுவார்கள்.
தம்பி ரிஸ்வி முப்தீ அவர்கள் ஒரு முக்கியமான இடத்தில், முக்கியமான ஒருவரை சந்தித்த போது அவர், காத்தான்குடி றஊப் மௌலவீக்கு கொடுத்த “பத்வா”வுக்கு என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு சரியான பதில் கூற வழியில்லாமல் அவர் புத்தரையும், மற்றும் எல்லாவற்றையும் அல்லாஹ் என்று சொல்கிறார் என்று பதில் கூறியுள்ளார்.
ஆம், எல்லாவற்றையும் அல்லாஹ் என்று சொல்வதே ஸூபிஸம். இது இவருக்குத் தெரியாமல் இவர் உலமா சபையின் தலைவராயிருப்பது விந்தையானதும், வேதனையானதுமாகும். தலைவரின் நிலையே இப்படியென்றால்? மற்றவர்களின் நிலை எவ்வாறிருக்குமென்று சொல்லவும் வேண்டுமா?
“பத்வா” வழங்கிய முல்லாக்களே! உங்களுக்கு “ஹுலூல் – இத்திஹாத்” மட்டுமே தெரியும். “வஹ்ததுல் வுஜூத்” விடயத்தில் நீங்கள் “சீறோ”தான். இதனால்தான் நான் வெளியிட்ட “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தலை கீழாய் விளங்கி “பத்வா”வில் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்பதற்கான ஆதாரங்களைக் கூறி அதில் என் பெயரைக் குறிப்பிட்டு நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசியதாகத் திரிவு படுத்தி என்னையும், நான் கூறிய தத்துவத்தையும் பொய்யாக்கி, என்னையும், எனது கருத்துக்களைச் சரி கண்டவர்களையும் மதம் மாற்றி “பத்வா” வழங்கியது போதாதென்று எங்களனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்தில் அறிவித்துள்ளீர்கள். உங்கள் போன்ற கீழ்த்தரமானவர்கள் “யஹூதீ”களிலும் இருக்க மாட்டார்கள். எங்களைக் “காபிர்”கள் என்று சொல்ல நீங்கள் யார்? ஸூபிஸ சமூகத்தில் ஆயிரம் பேர் உயிர் துறக்க வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களின் கொள்கையே எங்களின் உயிர்.
தம்பி முப்தீ அவர்களே!
உங்கள் “பத்வா”வில் சில மகான்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் பெரும் மகான்கள் என்றும், இவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் எழுதியுள்ளீர்கள். அவர்களில் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை அகில உலகிற்குப் பறை சாற்றிய ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ, இமாம் ஙஸ்ஸாலீ போன்றவர்களைக் கூறியுள்ளீர்கள்.
இந்த மகான்கள் இருவாலும் எழுதப்பட்ட பல அறபு நூல்களை உங்களின் கைகளில் தருகிறேன். அதோடு நீங்கள் ஆதாரமாக எடுத்த நூல்களில் சிலதையும் தருகிறேன். அவற்றை நீங்களே வாசித்து, நீங்களே விளக்கமும் சொல்லுங்கள். இதற்கு உங்களால் முடியுமா? முடியுமென்றால் சொல்லுங்கள். பகிரங்கமாக அறிவியுங்கள். ஏற்பாடு செய்வோம்.
இது விவாதமல்ல. நீங்கள் ஆதாரமாக எடுத்த நூல்களை நீங்களே வாசித்து அதில் கூறப்பட்ட விளக்கத்தை மக்கள் மத்தியில் நீங்கள் தெளிவாகச் சொல்வது மட்டும்தான். மிக விரைவில் உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் ஏற்றுக் கொண்ட கிதாபுகளிலிருந்தே எல்லாம் அவனே என்பதற்கு நான் ஆதாரம் காட்டித் தருகிறேன். புத்தரும் அல்லாஹ்தான், இயேசுவும் அல்லாஹ்தான் என்பதை உங்கள் வாயாலேயே சொல்ல வைப்பேன். இதற்கு நீங்கள் விருப்பமென்றால் உங்கள் பதில் பறந்து வரட்டும். நீங்கள் யாரிடத்தில் “அவர் எல்லாம் அல்லாஹ்தான், புத்தரும் அல்லாஹ்தான் என்று சொல்கிறார்” என்று சொன்னீர்களோ அவரிடமே இவ்வாறு உங்களை நான் சொல்ல வைப்பேன். இன்ஷா அல்லாஹ்!
முக்கிய குறிப்பு: திருக்குர்ஆனின் வசனத்தின் படி “பத்வா” வழங்கிய உங்களனைவருக்கும் “முர்தத்” என்று நான் “பத்வா” வழங்க வேண்டும். இதுவரை நான் அவ்வாறு செய்யவில்லை. நீங்கள் தொடர்ந்தும் உங்களின் தன்மானம் காப்பதற்காக உங்கள் நிலைப்பாட்டிலேயே இருந்தீர்களானால் உங்களுக்கு நான் “பத்வா” கொடுக்க வேண்டியேற்படும் என்பதை உங்களின் கவனத்திற்குத் தருகிறேன். “பத்வா”வை நீங்கள் வாபஸ் பெற்றால் உங்களுக்கு அவமானம் ஏற்படுமென்று நீங்கள் அஞ்சுகின்றீர்கள். நீங்கள் அஞ்சத் தேவையில்லை. மானம் இருந்தால்தானே அஞ்ச வேண்டும். அது வட்டிலப்பத்தோடும், சாம்பலோடும் பறந்து விட்டது.