தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“குபைப் இப்னு அதீ” அவர்கள்தான் இஸ்லாமிய வரலாற்றில் குற்றம் எதுவுமின்றிக் கொலை செய்யப்பட்ட முதல் ஸஹாபீ – நபீ தோழர் ஆவார்கள்.
(صلاة الصحابيّ خبيب قبل قتله )
خُبيب بن عَدِيّஸ்ரீ هذا الصحابي الجليل ركع ركعتين – صلّى ركعتين – قَبْلَ أَنْ يُقْتَلَ ، حيث جاء في حديث البخاري، (6 ஃ 165 -166 برقم 3045 ) فَكَانَ خُبيبٌ أوَّلَ من سنَّ الركعتين لكل امرئ مسلم قُتل صبرا،
நபீ தோழர் “குபைப்” அவர்கள்தான் குற்றம் எதுவுமின்றி அநீதியாக கொலை செய்யப்பட்ட முதல் “ஸஹாபீ” ஆவார்கள். இவர்கள் கொலை செய்யப்படுமுன் இரண்டு “றக்அத்” தொழுதார்கள். இவர்கள்தான் கொலை செய்யப்படுமுன் இரண்டு “றக்அத்” தொழுவதை மார்க்கமாக்கியவர்களாவர்.
ஆதாரம்: புகாரீ (06-165, 166, ஹதீது எண்: 3045)
وهو صحابيّ مشهور بين أصحاب النّبي صلّى الله عليه وسلّم ، شَهِدَ بَدْرًا مع رسول الله صلّى الله عليه وسلّم ، وهذا خُبيبٌ قَتَلَ الحارِثَ بنَ عَامِرِ بن نَوْفَلٍ يَوْمَ بَدْرٍ، فابْتَاعَ بَنُو الحارث بن عامر بن نوفل بن عبد مناف خُبيبًا، فَلَبِثَ خُبيبٌ عندهم أسيرا حتّى أَجْمَعُوْا قَتْلَه، فاستعارَ خُبيبٌ من بعض بنات الحارث موسى يستحِدُّ بها للقتل، فأعارته إيّاها ، فَدَرَج بُنيٌّ لها، ، قالت وأنا غافلة ، حتّى أتاه فوجدته مُجْلِسَه على فَخِذِه والموسى بيده، قالت فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَها خبيبٌ، فقال اَتَحْسَبِيْنَ أَنِّيْ أَقْتُلُه؟ ما كنتُ لِأَفعَلَ ذلك، فقالت واللهِ ما رأيتُ أسيرا خيرا من خبيب ، واللهِ لقد وجدتُه يوما يأكل قِطَفًا من عِنَبٍ في يده، (القِطَفُ ما قُطِف من الثمر وهو أيضا العنقود ساعة يُقطف) وإنّه لمُوثَقٌ في الحديد ، وما بمكّة من تمرة، وكانت تقول إنّه لرِزق رزقه الله خبيبا، فلمّا خرجوا به من الحرم ليقتلوه في الحِلِّ ، قال لهم خبيب ‘ دعوني أركع ركعتين ‘ فتركوه، فركع ركعتين، ثمّ قال ‘ والله لولا أن تحسبوا أنّ ما بي جزعٌ من الموت لزِدْتُ ‘ اللهم أَحْصِهِمْ عددا، واقتلهم بددا، ولا تُبْقِ منهم احدا،
ذكره القرطبي في التفسير – 31ஃ11
இவர்கள் நபீ தோழர்களில் பிரசித்தி பெற்ற தோழர் ஆவார்கள். “பத்ர்” போரில் நபீ பெருமானார் அவர்களுடன் கலந்து கொண்ட நபீ தோழரும் ஆவார்கள்.
“பத்ர்” போர்க்களத்தில் நின்று கொண்டிருந்த இவர்கள் “ஹாரித் இப்னு ஆமிர் இப்னி நவ்பல்” என்ற எதிரியை வெட்டிக் கொன்றார்கள். அவர் கொல்லப்பட்ட பின் அவரின் மக்கள் அவரைக் கொன்ற “குபைப்” என்ற அடிமையை பணம் கொடுத்து வாங்கி தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு அவரைக் கொலை செய்வதென்று முடிவு செய்து கொண்டார்கள். அதுவரை அவர்களின் பொறுப்பிலேயே “குபைப்” இருந்தார்கள்.
ஒரு நாள் “குபைப்” அவர்கள் கொலை செய்யப்பட்ட “ஹாரித்” என்பவரின் மகளிடம் “மூஸா” என்று சொல்லப்படுகின்ற சவரக் கத்தியொன்று இரவலாகத் தருமாறு கேட்டார்கள். அவளும் கொடுத்து உதவினாள். அவர்கள் கத்தி கேட்டது எதற்காகவெனில் தான் கொலை செய்யப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படுமுன் தனது அப முடியை களைந்து சுத்தம் செய்வதற்கேயாகும்.
இவ் வேளை கொலை செய்யப்பட்ட “ஹாரித்” என்பவனின் பாலருந்தும் சிறிய மகன் மெல்ல மெல்ல நகர்ந்து விலங்கிடப்பட்டிருந்த “குபைப்” அவர்களிடம் வந்து விட்டான். அவர்கள் அவனைத் தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டிருந்த நேரம் தாய் இதைக் கண்டு பயந்து விட்டாள். “குபைப்” தனது மகனைக் கொலை செய்யப் போகிறார் என்று நினைத்தாள் போலும். இதை அறிந்த “குபைப்” அவர்கள் அவளிடம் “நான் உனது குழந்தையை கொலை செய்யப் போகிறேன் என்று பயப்படுகிறாயா? வேண்டாம். நான் அவ்வாறு செய்பவன் அல்ல” என்று கூறினார்கள்.
இதன் பின் அவள் – இவரால் கொலை செய்யப்பட்ட “ஹாரித்” என்பவரின் மனைவி “குபைப்” அவர்கள் பற்றிப் புகழ்ந்து கூறிய போது பின்வருமாறு கூறினாள்.
(“குபைப்” என்பவரை விட சிறந்த ஒரு கைதியை நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் எங்களிடம் கைதியாக விலங்கிடப்பட்டிருந்த போது தனது கையில் திராட்சைப் பழக் குலையொன்றை வைத்துக் கொண்டு அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் எனது கண்களால் கண்டேன். அக்காலம் திரு மக்கா நகரில் திராட்சைப் பழ “சீசன்” காலமில்லாமலும் இருந்தது. அந்தப் பழம் “குபைப்” அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியது) என்று கூறினாள்.
இதன் பின் “குபைப்” அவர்களைக் கொலை செய்வதற்காக திரு மக்கா நகரில் “ஹறம்” எல்லையிலிருந்து வெளியே அழைத்துச் சென்ற போது “குபைப்” அவர்கள், “நான் இரண்டு “றக்அத்” தொழுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள்” என்று கேட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் அவ்விடத்திலேயே வழமைக்கு மாறாக அவசரமாகத் தொழுது முடித்து விட்டு அங்கு கூடியிருந்த மக்களிடம், “நான் எனது வழமைக்கு மாறாக அவசரமாக தொழுது முடித்தமைக்கான காரணம் நான் எனது வழமை போல் நீண்ட நேரம் தொழுது கொண்டிருந்தால் நான் கொலைக்குப் பயந்து தொழுகையை நீட்டிக் கொண்டிருப்பதாக நீங்கள் கருதக் கூடாது என்பதற்கேயாகும்” என்று கூறிவிட்டு “யா அல்லாஹ்! இவ் அநீதியாளர்களின் சனத் தொகையை குறைத்து விடுவாயாக! இவர்களைக் கொன்றொழிப்பாயாக! இவர்களில் ஒருவரையும் விட்டு வைத்து விடாதே!” என்று சாபமிட்டார்கள்.
ஆதாரம்: தப்ஸீர் குர்துபீ, பாகம் – பக்கம்: 11-31)
நான் மேலே எழுதியுள்ள நபீ மொழி “ஸஹீஹ்” பலம் வாய்ந்த நபீ மொழியாகும். (புகாரீ 06-165,166, 3045)
இஸ்லாமிய வரலாற்றில் மார்க்க விடயம் தொடர்பாக முதலில் கொலை செய்யப்பட்டவர்கள் நபீ தோழர் “குபைப்” என்பது குறிப்பிடத்தக்கது.
“பத்ர்” போரின் போது حَارِثْ “ஹாரித்” என்ற எதிரியை நபீ தோழர் “குபைப்” வெட்டிக் கொன்றதால் அதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடுதான் நபீ தோழர் “குபைப்” அவர்கள் கொல்லப்பட்டு “ஷஹீத்” ஆனார்கள்.
மேற்கண்ட நபீ மொழி வரலாறிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, ஆய்வுக்கு எடுக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
அவற்றில் ஒன்று. கொலை செய்வதற்கென்றே கைது செய்யப்பட்டும், விலங்கிடப்பட்டும் எதிரிகளின் பிடியிலிருந்த நபீ தோழர் “குபைப்” எந்த ஒரு கவலையுமின்றி எதிரிகளின் பிடியில் இருந்ததும், பயங்கரமான அந்த சூழலில் கூட “ஷஹீத்” ஆகி அல்லாஹ் அளவில் செல்லும் அவர்கள் சுத்தமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக தங்களின் அபமுடி, கமுக்கட்டு முடிகளைக் களைந்து சுத்தம் செய்து கொண்டதும் நபீ தோழர் “குபைப்” அவர்களின் மார்க்கப் பற்றை எடுத்துக் காட்டுகின்றன.
இஸ்லாம் சுத்தம், சுகாதாரம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும் என்பது இங்கு உணரப்படுகிறது.
திரு மக்கா நகரில் திராட்சைப் பழம் இல்லாத கால கட்டத்தில் விலங்கிடப்பட்டிருந்த “குபைப்” அவர்களுக்கு திராட்சைப் பழக் குலை எங்கிருந்து, யாரால் கொடுக்கப்பட்டதென்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். இது நபீ தோழர் “குபைப்” அவர்களின் “கறாமத்” அற்புதங்களில் ஒன்று என்பதும், வலீமாருக்கு “கறாமத்” உண்டு என்பதும் விளங்கப்படுகின்றன.
ஒருவனின் உயிர் பிரியுமுன் அவனுக்கு ஏதாவது விருப்பம் இருந்தால் அது நிறைவேற்றப்பட வேண்டுமென்ற பொது நியதி இங்கு பேணப்பட்டுள்ளது. கொலைக் குற்றவாளி ஒருவனிடம் அவன் கொலை செய்யப்படுமுன் அவனுக்கு விருப்பமானது எது என்று கேட்டால் அவன் தனது மனைவியை, அல்லது தனது பிள்ளைகளை, அல்லது தனது பெற்றோர்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்வான். அல்லது தனக்கு விருப்பமான உணவு வேண்டுமென்று சொல்வான்.
ஆனால் நபீ தோழர் “குபைப்” அவர்கள் தனது இறுதி விருப்பமாக அவர்களிடம் கேட்டது இரண்டு “றக்அத்” தொழுவதற்கான சந்தர்ப்பம் மட்டுமேயாகும். தங்களுக்கு விருப்பமான உணவுகளையோ, வேறு எதையுமோ அல்ல. اَلصَّلَاةُ مِعْرَاجُ الْمُؤْمِنِيْنْ தொழுகை என்பது விசுவாசிகளின் “மிஃறாஜ்” புனித விண் பயணம் என்ற நபீயின் அருள் மொழிப்படி “குபைப்” அவர்களும் குறித்த அந்தப் பயணத்தையே விரும்பினார்கள். இவ்வாறு இந்த நபீ மொழி மூலம் பல விடயங்கள் விளங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் விட மிக விஷேடமாக விளங்கப்படுகின்ற விடயம் என்னவெனில் “பித்அத்” என்பதில் பல வகையுண்டு என்பதும், அவற்றில் நல்ல “பித்அத்” என்பதும் ஒன்று என்பதும், அத்தகைய நல்ல “பித்அத்”தை செய்யலாம் என்பதும், அதனால் குற்றமில்லை என்பதுமேயாகும்.
நாம் மிகவும் முக்கியமாக ஆய்வுக்கு எடுக்க வேண்டிய விடயம் “குபைப்” அவர்கள் கொலை செய்யப்படுமுன் இரண்டு “றக்அத்” தொழுததாகும்.
ஏனெனில் ஒருவர் கொலை செய்யப்படுமுன் இரண்டு “றக்அத்” தொழ வேண்டுமென்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்லவில்லை. இதற்கு எந்த ஒரு நபீ மொழியும் ஆதாரமாகவுமில்லை.
நபீகளார் செய்யாததும், செய்யுமாறு சொல்லப்படாததுமான ஒன்றைச் செய்வது “பித்அத்” என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறுதான் ஸுன்னீகளும், வஹ்ஹாபீகளும் சொல்கிறார்கள். ஆயினும் “ஸுன்னீகள்” “பித்அத்” என்பது ஐந்து வகை என்றும், அவை “வாஜிப்” கடமையான “பித்அத்” என்றும், “ஸுன்னத்”தான “பித்அத்” என்றும், “மக்றூஹ்” ஆன “பித்அத்” என்றும், “ஹறாம்” ஆன “பித்அத்” என்றும், “முபாஹ்” ஆன “பித்அத்” என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் வஹ்ஹாபீகளோ “பித்அத்”தில் ஐந்து வகையுமில்லை, ஐம்பது வகையுமில்லை என்றும், “பித்அத்” என்பது ஒரு வகைதான் என்றும், “பித்அத்” எல்லாமே வழி கேடுதான் என்றும் சொல்கிறார்கள்.
இவர்களின் இக் கூற்றின் படி “குபைப்” அவர்கள் கொலை செய்யப்படுமுன் இரண்டு “றக்அத்” தொழுதது “பித்அத்” என்றாகிவிடும். “பித்அத்” எல்லாம் வழிகேடு என்ற அவர்களின் கூற்றின் படி அது வழிகேடாகவும் ஆகிவிடும். வழிகேடெல்லாம் நரகம் செல்லும் என்ற கருத்தின் படி அது நரகம் செல்லும் செயலாகவும் ஆகிவிடும்.
சுருக்கம் என்னவெனில் நபீ தோழர் “குபைப்” مُبْتَدِعٌ “பித்அத்” காரன் என்றும், வழிகேடர் என்றும், நரகவாதி என்றும் முடிவு செய்ய வேண்டியேற்படும். இவ்வாறு முடிவு செய்வது நபீ மொழிகளுக்கு முரணான முடிவாகும். விபரம் பின்னால் வரும்.
தொடரும்…
மேற்கண்ட இத்தலைப்பில் தொடராக எழுதப்படும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் மட்டுமே பயனடைவர்.