தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
1. يقول الشّيخ العارف بالله سلطان العارفين السيّد أحمد الرفاعيّ (إِنَّ للهِ تعالى أَسْمَاءً بِعَدَدِ مَا خَلَقَ مِنَ الرِّمَالِ والأوراق وغيرها) (الطبقات الكبرى للشعراني، 1-143)
2. ويقول علي وفا الشّاذلي ( قِيْلَ لِيْ: اِسْمَعْ، كُلُّ الْمَوْجُوْدَاتِ مَوْجُوْدَاتِيْ، فَسَمِّنِيْ بِمَا شِئْتَ، وَصِفْنِيْ بِمَا شِئْتَ) (الطبقات الكبرى، 2-40)
3. ويقول ابن سبعين: وَجَمِيْعُ مَا تَوَجَّهَ الضَّمِيْرُ إِلَيْهِ اُذْكُرْهُ بِهِ، ولا تُبَالِ، وَأَيُّ شَيْئٍ يَخْطُرُ بِبَالِكَ سَمِّهِ بِهِ، وَمِنْ اِسْمِهِ ‘الوجودُ ‘ كَيْفَ يُخَصَّصُ بِأَسْمَاءٍ مُنْحَصِرَةٍ؟ هَيْهَاتَ، اللهُ لا اِسْمَ له إلّا الإسم المطلق أو المفْرُوْض، (رسائل ابن سبعين، ص 184)
4. يقول الشيخ الأكبر ابن عربي: إنّ الحقّ المنزّه هو الخلق المشبه، كل ذلك من عين واحدة، لا بل هو العين الواحدة، (رسائل ابن سبعين، ص 184)
விளக்கம்:
01. “ஸுல்தானுல் ஆரிபீன்” இறைஞானிகளின் ராஜா அஹ்மத் கபீர் ரிபாயீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
(உலகிலுள்ள மண்களினதும், உலகிலுள்ள இலைகளினதும், மற்றுமுள்ள படைப்புகளினதும் எண்ணிக்கை அளவு அல்லாஹ்வுக்கு பெயர்கள் உள்ளன)
ஆதாரம்: அத்தபகாதுல் குப்றா, ஆசிரியர்: அஷ்ஷஃறானீ, பக்கம் 143, பாகம் 01.
விளக்கம்:
02. ஷாதுலிய்யா தரீகாவைச் சேர்ந்த அஷ்ஷெய்கு அலீ வபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(அசரீரி மூலம் பின்வருமாறு எனக்குச் சொல்லப்பட்டது. நீ செவி மடு. படைப்புகள் எல்லாம் என் படைப்புகள். அதாவது படைப்புகளின் “வுஜூத்” எனது “வுஜூதே”. நீ எப் பெயர் கொண்டு எனக்குப் பெயர் வைக்க விரும்புகிறாயோ அது கொண்டு எனக்குப் பெயர் சொல். நீ எவ்வாறு என்னை வர்ணிக்க விரும்புகிறாயோ அது கொண்டு என்னை வர்ணித்துக் கொள்)
ஆதாரம்: அத்தபகாதுல் குப்றா, ஆசிரியர்: ஷஃறானீ,
பாகம் 02, பக்கம் 40.
விளக்கம்:
03. இறைஞானி இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(உனது “கல்பு” உள்ளம் எதை முன்னோக்குகிறதோ அதன் பெயர் கொண்டு நீ அவனை – இறைவனை நினைத்துக் கொள். “Don’t care” எந்த ஒரு தடையுமில்லை. உனது உள்ளத்தில் எது தோணுகிறதோ அது கொண்டு அவனுக்குப் பெயர் சொல். அவன் பெயர்களில் وُجُوْدْ “வுஜூத்” என்பதும் ஒன்று. இந்நிலையில், குறிப்பிட்ட பெயர்கள் கொண்டு மட்டும் எவ்வாறு அவனை அழைப்பதும், அவை கொண்டு அவனைக் கட்டுப்படுத்துவதும்? هَيْهَاتَ “ஹைஹாத” இது முடியாது. அவனுக்குப் பெயர் பொதுவான பெயர் மட்டுமே உண்டு)
ஆதாரம்: றஸாயில் இப்னி ஸப்ஈன், ஆசிரியர்: இப்னு ஸப்ஈன்,
பக்கம் 184.
இப்னு ஸப்ஈன் அவர்களின் வசனத்தில் هَيْهَاتَ “ஹைஹாத” என்று ஒரு சொல் வந்துள்ளது. இச் சொல் பற்றி அறபு மொழி கற்கும் மாணவர்களின் நன்மை கருதி மட்டும் சில வரிகள் எழுதுகிறேன்.
(هَيْهَات: بِتَثْلِيْثِ الْآخِرِ، اِسْمُ فِعْلٍ، مَعْنَاهُ بَعُدَ، وَفِيْهَا لُغَاتٌ عَدِيْدَةٌ، مِنْهَا اَيْهَاتْ، اَيْهَانْ، هَيْهَانْ، هَايَهَاتْ، هَايَهَانْ، مُثَلَّثَاتُ الآخِرِ، مَبْنِيَّاتٍ وَمُعْرَباَتٍ، وَهَيْهَاهْ سَاكِنَةُالْآخِرِ، وَاَيْهَا)
“ஹைஹாத்” என்ற சொல்லின் கடைசி எழுத்தான தே – ت என்ற எழுத்துக்கு ழம்மு, பத்ஹ், கஸ்ர் மூன்று குறியீடுகளும் செய்யலாம். இது மொழியிலக்கணத்தில் “இஸ்மு பிஅல்” என்று பெயர் கூறப்படும். “ஹைஹாத்” இச் சொல்லை ஏழு விதமாக மொழியலாம். மேற்கண்ட சொற்களைக் கவனிக்கவும்.
(கவனிக்கவும்)
هَيْهَاتِ، هَيْهَاتَ، هَيْهَاتُ، هَيْهَاتٍ، هَيْهَاتًا، هَيْهَاتٌ، هَيْهَاهْ، اَيْهَا،
விளக்கம்:
04. அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நிச்சயமாக பரிசுத்த “தன்ஸீஹ்” நிலையிலுள்ள அல்லாஹ்தான் “தஷ்பீஹ்” அதற்கு மாறான “தஷ்பீஹ்” நிலையிலும் உள்ளான். எல்லாமே (தன்ஸீஹ் – தஷ்பீஹ்) இரு நிலைகளும் ஒரு மூலத்தின் நிலைகளேயாகும்.
நான்கு ஸூபீ மகான்களின் கருத்துக்களை இதுவரை எழுதி மிகச் சுருக்கமான விளக்கமும் கூறியுள்ளேன்.
குறித்த நான்கு ஸூபீ மகான்களும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் சாரத்தை தமது பாணியில் கூறியுள்ளார்களேயன்றி திருக்குர்ஆனுக்கோ, திரு நபீ அவர்களின் அருள் மொழிகளுக்கோ, இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கோ முரணாக ஒன்றுமே அவர்கள் சொல்லவுமில்லை, எழுதவுமில்லை.
நான் மேலே எழுதியுள்ள நான்கு ஸூபீ மகான்களும் கூறியுள்ள வசன்களை வாசிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் “முப்தீ”கள் எனக்கும், எனது ஸூபிஸ சமூகத்தைச் சேர்நதவர்களுக்கும் இன்னொரு “பத்வா” கொடுப்பதற்குத் தயாராகுவார்கள் என்று நினைக்கிறேன். ஒரு “பத்வா” என்ன? ஆயிரம் “பத்வா” கொடுக்க விரும்பினாலும் கொடுக்கட்டும். இவர்களின் போலி “பத்வா”விற்கு ஸூபிஸ சமூகம் அசையாது.
ஸூபீ மகான் ஸுல்தான் அஹ்மத் கபீர் ரிபாயீ அவர்களால் முதலாவதாக மேலே சொல்லப்பட்ட “அல்லாஹ்வின் திரு நாமங்களுக்கு எண்ணிக்கை இல்லை” என்ற தத்துவம் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ முரணான தத்துவம் அல்ல.
எனினும் ஆய்வுத் திறமையுமற்றவர்களும், ஒரு சில நூல்களை மட்டும் வாசித்து விட்டு தாமே அறிவுலக மேதைகள் என்று கனவு காண்பவர்களும் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும், நபீ மொழிகளையும் தமக்குச் சாதகமானவை என்று கற்பனை செய்து கொண்டு இவ்வாறு சொன்ன ஸூபீ மகானை “முர்தத்” என்று “பத்வா” கொடுத்து விடுவார்கள். இவர்களையும் நான் எச்சரிக்கிறேன். இன்னோர் துறை தெரியாமல் தோணி தள்ளாமல் அடக்கமாயிருந்து ஆய்வு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
அல்லாஹ்வுக்கு அழகிய திரு நாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அவனை அழையுங்கள். (07-180)
இத்திரு வசனம் அல்லாஹ்வுக்கு அழகிய திரு நாமங்கள் உள்ளன என்ற கருத்தை மட்டும் தருகிறதேயன்றி அவை மட்டும்தான் அவனின் திரு நாமங்கள் என்ற கருத்தை தரவில்லை.
இதேபோல் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளிய,
إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ
“அல்லாஹ்வுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன. அவற்றை மனனம் செய்தவன் சுவர்க்கம் சென்று விட்டான்” என்ற அருள் மொழியும் கூட 99 திரு நாமங்கள் மட்டுமேயன்றி வேறு திரு நாமங்கள் இல்லை என்ற கருத்தையும் தரவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன என்ற கருத்தை மட்டுமே தருகிறது. ஆகையால் அல்லாஹ்வுக்கு எண்ணற்ற பல கோடித் திரு நாமங்கள் உள்ளன என்ற தத்துவம் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ முரணானதல்ல என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமேயன்றி ஸூபீ சொன்னது பிழையென்று முடிவு செய்தல் கூடாது.
தற்கால நவீன உலமாஉகள் “ஷரீஆ” மட்டுமே இஸ்லாம் என்றும், “தீன்” என்றும் அறிந்து வைத்துள்ளார்களேயன்றி “தரீகா” அடிப்படையிலும், ஸூபிஸ அடிப்படையிலும் ஆய்வு செய்யவுமில்லை, ஆய்வு செய்கிறார்களுமில்லை.
“ஸஹீஹ் முஸ்லிம்” என்ற நபீ மொழி நூலில் ஜிப்ரீல் உடைய “ஹதீது” என்று ஒன்று உண்டு. இந்த ஹதீதில் “ஈமான்”, “இஸ்லாம்”, “இஹ்ஸான்” இம் மூன்றுமே “தீன்” மார்க்கம் என்று நபீ பெருமானார் அவர்களே கூறியிருப்பதை உலமாஉகளுக்கு நினைவுபடுத்துகிறேன். أَتَاكُمْ لِيُعَلِّمَكُمْ أمُوُرْ دِيْنِكُمْ என்ற இவ்வசம் இதற்கு ஆதாரமாக உள்ளது. சிந்தித்தோர் சந்திப்பர்.
பெருமானார் அவர்களின் பொன் மொழிகளிற் சில பொன் மொழிகளின் வெளித் தோற்றம் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் சரக்கில்லாத சிலருக்கு தோற்றினாலும் அவை எந்த வகையிலும் “ஷரீஆ”வுக்கு முரணானதாயிருக்காது.
உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நபீ பெருமானார் அவர்கள் ஓர் அருள் மொழியில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
خمس يفطرن الصائم، الغيبة، والنميمة، واليمين الغموس، والكذب، وشهادة الزور،
ஐந்து விடயங்கள் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்து விடும். அதாவது நோன்பை முறித்து விடும். அவை. புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல், பொய் சொல்லுதல், பொய்ச் சாட்சி சொல்லுதல் என்பன.
நபீ பெருமானார் அவர்கள் பயன்படுத்திய மேற்கண்ட வசனத்தைக் கவனியுங்கள். خَمْسٌ يُفَطِّرْنَ الصَّائِمَ ஐந்து விடயங்கள் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்துவிடும். இதன் வெளித் தோற்றம் நோன்பு முறிந்து விடும் என்பதாகும். ஆயினும் இந்த நபீ மொழியின் வெளித் தோற்றம் தரும் கருத்துக்கு மாறாகவே “ஷரீஆ” சட்டம் கூறுகிறது. அதாவது மேற்கண்ட ஐந்து காரியங்களைச் செய்தால் நோன்பு முறியாதென்று கூறுகிறது. ஒரு நோன்பாளி மேற்கண்ட ஐந்து காரியங்களில் எதைச் செய்தாலும் பாவம் – தண்டனை கிடைக்குமேயன்றி நோன்பு முறியாது.
இவ்விடத்தில் நபீ மொழியின் வெளித் தோற்றத்தின் படி நோன்பு முறிந்துவிடும் என்று விளங்கப்பட்டாலும் கூட இது “தரீகா” அடிப்படையில் பெருமானார் அவர்கள் சொன்னதே தவிர “ஷரீஆ” அடிப்படையில் சொன்னதல்ல என்று விளங்கிக் கொள்ள வேண்டும். “தரீகா” வழியில் – ஸூபீகளிடம் மேற்கண்ட ஐந்து விடயங்களும் நோன்பை முறிக்கும் என்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது.
“ஷரீஆ” அடிப்படையில் குறித்த நபீ மொழியை நோக்கினால் குறித்த ஐந்து விடயங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும் என்றே விளங்க வேண்டும். நாம் அவ்வாறு விளங்கக் கூடாது. ஏனெனில் ஐந்து காரியங்களில் எதைக் கொண்டும் நோன்பு முறியுமென்றிருந்தால் இன்று உலகில் நோன்பு நோற்பவர்களில் அதிகமானவர்களின் நோன்பு முறிந்தே போகும். இது அல்லாஹ்வின் அடியார்களுக்கு பேரிழப்பாகும்.
எனவே, இந்த நபீ மொழியை “தரீகா” அடிப்படையில் மட்டுமே நோக்க வேண்டும்.
இதேபோல் ஸூபீ மகான்களின் பேச்சின் வெளித் தோற்றம் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் தெரிந்தாலும் அதை ஸூபிஸ தத்துவ அடிப்படையிலேயே நாம் ஆய்வு செய்ய வேண்டும். “ஷரீஆ” அடிப்படையில் அல்லாஹ்வுக்கு 99 திரு நாமங்கள் என்றும், அவனுக்கு அழகிய திரு நாமங்கள் உள்ளன என்றும் நம்புவதுடன், ஸூபிஸ அடிப்படையில் அவனுக்குப் பல கோடி திரு நாமங்கள் உள்ளன என்றும் நம்ப வேண்டும். இதை எழுதுகின்றவனின் திரு நாமமும், இதை வாசிக்கின்றவனின் திரு நாமமும் ஒன்றே என்று புரிந்து கொள்ள வேண்டும்.
தொடரும்…