தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
علّمني هذا الدّعاء سيّدي وشيخي وقائدي إلى باب الله عبد الرّشيد العنطريّ القادريّ والرّفاعي رضي الله عنه، وأجازني لقرائتِه، وأنا أُجيزُ لقرائته كلَّ من آمن بعقيدة وحدة الوجود، من الرّجال والنّساء دون غيرهم،
அதி சங்கைக்குரிய எனது ஷெய்கும், என் கரம் பற்றிக் கரை சேர்ப்பவர்களுமான, அந்தர தீவைச் சேர்ந்த அப்துர் றஷீத் கோயா தங்கள் – காதிரீ, ரிபாயீ மௌலானா வாப்பா அவர்கள் இந்த “துஆ”வை எனக்குக் கற்றுத் தந்து தினமும் ஓதுவதற்கு அனுமதியும் வழங்கினார்கள். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஓதுவதற்கு நான் அனுமதி வழங்குகிறேன்.
இதை தினமும் காலையும், மாலையும் ஓதி வந்தால் எதிரிகளின் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது.
بسم الله الرحمن الرحيم،
يَا حَيُّ يَا قَيُّوْمْ! بِرَحْمَتِكَ أَسْتَغِيْثْ، اَللهم رَحْمَتَكَ أَرْجُوْ، فَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنْ، وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهْ، لَا إلهَ إِلَّا أَنْتَ، اَللهم إِنَّا نَجْعَلُكَ فِى نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ، اَللهم لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحُزْنَ إِذَا شِئْتَ سَهْلًا، وَبَشِّرِ الصَّابِرِيْنْ، اَلَّذِيْنَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيْبَةٌ قَالُوْا إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنْ، أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِن رَّبِّهِمْ، وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُوْنْ،
ஓதுகின்றவர்கள் தமது “துஆ”வில் என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். (கடுகு சிறிது காரம் பெரிது)