பல்லியைக் கொன்றால் நன்மை உண்டு. ஆயினும் பத்து – 10 நன்மை என்ற குறிப்பு “ஹதீது” நபீ மொழியில் இல்லை.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“பல்லி”க்கு அறபு மொழியில் وَزَغَةٌ என்று சொல்லப்படும். பெரிய பல்லிக்கு سَامْ أَبْرَصْ – “ஸாம் அப்றஸ்” என்று சொல்லப்படும். “வசஙதுன்” என்ற சொல்லுக்கு பன்மைச் சொற்கள் أَزْغَانٌ، وَزْغَانٌ، أَوْزَاغٌ، وَزَغٌ என்று வரும்.
روى البخاري ومسلم والنسائي وابن ماجه، عن أم شريك رضي الله تعالى عنها، أَنَّهَا اِسْتَأْمَرَتِ النَّبِيَّ صَلَّى الله عليه وسلم فِيْ قَتْلِ الْوَزغَانِ، فَأَمَرهَا بِذَلِكَ،
“உம்மு ஷரீக்” றழியல்லாஹு அன்ஹா அவர்கள், நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் பல்லியைக் கொல்வது தொடர்பாக கேட்டார்கள். அப்போது பெருமானார் அவர்கள் அதைக் கொல்லுமாறு அருளினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், நஸாயீ)
وفي الصحيحين أن النبي صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ، وَسَمَّاهُ فُوَيْسِقًا، وقال: كَانَ يَنْفُخُ النَّارَ على إبراهيم عليه الصلاة والسلام، وكذلك رواه الإمام أحمد في مسنده،
நபீ பெருமானார் அவர்கள் பல்லிகளைக் கொல்ல வேண்டுமென்று பணித்தார்கள். அதற்கு فُوَيْسِقٌ – “புவைஸிக்” கெட்டது என்றும் பெயர் சொன்னார்கள். மேலும் அது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீக்குழியில் எறியப்பட்டிருந்த சமயம் தீயை ஊதி தூண்டியது என்றும் சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்.
இவ்வாறுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களும் தங்களின் “முஸ்னத்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஹயாதுல் ஹயவான், பாகம் 02, பக்கம் 399)
وفي الحديث الصحيح، من رواية أبي هريرة رضي الله تعالى عنه قال: إن النبي صلى الله عليه وسلم قال: مَنْ قَتَلَ وَزَغَةً مِنْ أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثانية، فله كذا وكذا حَسَنَةً دُوْنَ الْأُوْلَى، ومن قتلها في الثالثة فله كذا وكذا حسنة دون الثانية، وفيه أيضا إن من قتلها في الأولى فله مِأَةُ حسنة، وفي الثانية دون ذلك، وفي الثالثة دون ذلك،
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
(யாராவது பல்லியை ஓர் அடியிலேயே கொன்றானாயின் அவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு, இரண்டாவது அடியில் கொன்றானாயின் அவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு, ஆயினும் ஓர் அடியில் கொன்றவனுக்கு கிடைக்கின்ற நன்மையை விட குறைவாகவே கிடைக்கும். மூன்றாவது அடியில் கொன்றவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு. ஆயினும் இரண்டாம் அடியில் கொன்றவனுக்கு கிடைக்கின்ற நன்மையை விட குறைவாகவே கிடைக்கும்) என்று நபீகளார் கூறினார்கள்.
இந்த நபீ மொழியின் இன்னோர் அறிவிப்பில், (ஓர் அடியிலேயே கொன்றவனுக்கு 100 நன்மை கிடைக்கும் என்றும், இரண்டாவது அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைவாகவும், மூன்றாம் அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைவாகவும் கிடைக்கும்) என்றும் வந்துள்ளது.
وروى الطبراني عن ابن عباس رضي الله تعالى عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: اُُقْتُلُوا الْوَزَغَةَ وَلَوْ فِيْ جَوْفِ الْكَعْبَةِ، لكن في اسناده عمر بن قيس المكي، وهو ضعيف،
இன்னும் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், (“கஃபா”வின் உள்ளேயாயினும் பல்லியைக் கொன்று விடுங்கள்) என்று கூறினார்கள். இந்த நபீ மொழியை அறிவித்த “உமர் இப்னு கைஸ்” என்பவர் பலம் குறைந்தவராவார்.
ஆதாரம்: தபறானீ, அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.
وفي حديث عائشة رضي الله تعالى عنها، لما أُحرِق بيتُ المقدس وكانت الأوزاغ تنفخه،
ஆயிஷா நாயகி அவர்கள் அறிவித்த “ஹதீது” ஒன்றில் பின்வருமாறு வந்துள்ளது. (“அல்பைதுல் முகத்தஸ்” ஒரு காலத்தில் யூதர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பல்லிகள் கூடிக் கொண்டு நெருப்பு வேகமாக எரியும் வண்ணம் ஊதிக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது)
وفي سنن ابن ماجه عن عائشة رضي الله تعالى عنها أنَّهُ كَانَ فِيْ بَيْتِهَا رُمْحٌ مَوْضُوْعٌ، فَقِيْلَ لَهَا: مَا تَصْنَعِيْنَ بهذا؟ فقالت: أَقْتُلُ بِهِ الْوَزَغَ، فإن النبي صلى الله عليه وسلم أَخْبَرَنَا أَنَّ إبراهيمَ عليه الصلاة والسلام، لَمَّا أُلْقِيَ في النَّارِ لَمْ يَكُنْ فِي الْأَرْضِ دَابَّةٌ إِلَّا أَطْفَأَتْ عَنْهُ النَّارَ غَيْرَ الْوَزَغِ، فإنه كان ينفخ عليه النار، فأمر صلى الله عليه وسلم بقتله. وكذلك رواه الإمام أحمد في مسنده،
அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(ஆயிஷா நாயகி அவர்களின் வீட்டில் ஓர் ஈட்டி – தடி இருந்ததாம். ஆயிஷா நாயகியிடம் இதை எதற்காக வைத்துள்ளீர்கள்? என்று கேட்கப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
நான் இந்த தடியால் பல்லிகளைக் கொன்று வருகிறேன். ஏனெனில் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குழியில் எறியப்பட்ட சமயம் உலகில் – இப்பூமியிலிருந்த ஊர்வன வர்க்கம் எல்லாம் அந்த நெருப்பை ஊதி அணைக்க முயற்சித்தன. ஆயினும் பல்லி இனம் மட்டும் நெருப்பை அணைப்பதற்காக ஊதாமல் கடுமையாக எரிய வேண்டும் என்பதற்காக ஊதின. இதனால் அதைக் கொல்லுமாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பணித்தார்கள்)
ஆதாரம்: இப்னு மாஜா, அறிவிப்பு: ஆயிஷா நாயகி.
இவ்வாறுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்களும் தங்களின் “முஸ்னத் அஹ்மத்” எனும் நூலில் அறிவித்துள்ளார்கள்.
وفي تاريخ ابن النجار عن عائشة رضي الله تعالى عنها، أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: مَنْ قَتَلَ وَزَغَةً مَحَا اللهُ عَنْهُ سَبْعَ خَطِيْآتٍ،
ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்ல நான் கேட்டேன். “எவன் ஒரு பல்லியை கொன்றானோ அவனின் ஏழு பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று.
ஆதாரம்: தாரீகு இப்னின் நஜ்ஜார், அறிவிப்பு: ஆயிஷா நாயகி.
وفي الكامل، عن ابن عباس رضي الله تعالى عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: مَنْ قَتَلَ وَزَغَةً فَكَأَنَّمَا قَتَلَ شَيْطَانًا،
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
(ஒரு பல்லியைக் கொன்றவன் ஒரு “ஷெய்தான்” ஷாத்தானைக் கொன்றவன் போலாவான்) என்று.
ஆதாரம்: அல்காமில், அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.
روى الحاكم في كتاب الفتن والملاحم من المستدرك، عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه، أنه قال: كان لا يُولَدُ لِأَحَدٍ مَوْلُوْدٌ إِلَّا أُتِيَ بِهِ للنبي صلى الله عليه وسلم فَيَدْعُوْ لَهُ، فَأُدْخِلَ عَلَيْهِ مَرْوَانُ بْنُ الْحَكَم فقال: هُوَ الْوَزَغُ ابْنُ الْوَزَغِ اَلْمَلْعُوْنُ ابْنُ الْمَلْعُوْنِ، ثم قال: صحيح الإسناد،
நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
(நபீ பெருமானார் அவர்களின் காலத்தில் யாருக்காவது குழந்தை பிறந்தால் அக்குழந்தை நபீ பெருமானாரிடம் கொண்டு வரப்படும். அவர்கள் அக்குழந்தையை ஊன்றிக் கவனித்துப் பார்த்து விட்டு அதற்காக “துஆ” செய்வார்கள்.
மர்வான் இப்னு ஹகம் என்பவர் பிறந்த போது அவரும் கொண்டு வரப்பட்டார். அப்போது நபீ பெருமானார் அவர்கள் அவரைச் சுட்டிக் காட்டி இவர் பல்லியின் மகன் பல்லி என்றும், சபிக்கப்பட்டவரின் மகன் சபிக்கப்பட்டவர்) என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்தத்றக்
அறிவிப்பு: அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப்
இந்த அருள் மொழியைப் பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இது “ஸஹீஹ்” பலமான “ஹதீது” என்று கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட ஆதாரங்கள், மற்றும் தகவல்கள் எல்லாம் “ஹயாதுல் ஹயவானில் குப்றா” எனும் நூல் இரண்டாம் பாகம், 400ம் பக்கத்தில் பதிவாகியுள்ளவையாகும்.
உயிரினங்களில் பாம்புக்கும், பல்லிக்கும் செவிப்புலன் இல்லை – காது கேட்காது.
நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன்கள் அனைவரும் தமது இளைய சகோதரன் யூஸுப் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாழடைந்த கிணற்றில் எறியும் வரை உலகிலுள்ள எந்த வகைப் பாம்பாயினும் அதற்கு செவிப் புலன் இருந்தே வந்துள்ளது. அவர்கள் எறியப்பட்ட கிணற்றிலும் கொடிய விஷப் பாம்புகள் இருந்தன. அவர்கள் கிணற்றில் விழுந்த சத்தம் அவ்வேளை உலகில் உயிருடனிருந்த பாம்புகள் அனைத்தின் காதுகளிலும் ஒலித்தது. அந்நேரம் முதல் அவற்றின் செவிகள் யாவும் புலனை இழந்து விட்டன.
பாம்பு அல்லாத உயிரினங்களில் பல்லிக்கும் செவிப்புலன் இல்லை. அது எப்போது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீக்குழியில் எறியப்பட்ட போது தீ அணையாமல் ஊதிக் கொண்டிருந்ததோ அந்த நேரம் முதல் உலகிலுள்ள அனைத்து வகைப் பல்லிகளும் செவிப்புலனை இழந்து விட்டன.
சிறிய பல்லி وَزَغَةٌ என்றும், பெரிய பல்லி سَامْ أَبْرَصْ என்றும் அறபு மொழியில் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் பொதுவாகப் பல்லிக்கு Lizard என்று சொல்லப்படும்.
أَبْرَصْ
என்ற சொல் بَرَصْ என்ற சொல்லடியில் உள்ளது. இதற்கு பின்வருமாறு பொருள் வரும்.
اَلْبَرَصُ مَرَضٌ يُحْدِثُ فِى الْجِسْمِ كُلِّهِ قِشْرًا أَبْيَضَ، وَيُسَبِّبُ لِلْمَرِيْضِ حَكًّا مُؤْلِمًا،
“பறஸ்” என்பது உடல் முழுவதிலும் ஏற்படுகின்ற ஒரு நோய். இது உடலில் வெள்ளை நிறத்தில் தோலை மாற்றிவிடும். நோயாளிக்கு பயங்கர சொறிச்சலையும் ஏற்படுத்தும். இதை நமது நாட்டில் சுருக்கமாக “வெண் குஷ்டம்” என்று சொல்வார்கள். இதனால் பெரிய பல்லி கடித்தவருக்கு வெண் குஷ்டம் ஏற்படச் சாத்தியம் உண்டு.
பல்லிக்கு அடித்தால் பத்து நன்மை என்றும், ஓணானுக்கு அடித்தால் ஒன்பது நன்மை என்றும் படிக்காத பொது மக்கள், குறிப்பாக பெண்கள் சொல்வது அர்த்தமற்றதாகும்.
ஒருவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது எங்காவது பல்லி தட்டும் சத்தம் கேட்டால் அவர் சொல்லிக் கொண்டிருந்த விடயம் உண்மை என்பதற்கு அது ஓர் ஆதாரம் என்று சொல்வதும் அர்த்தமற்றதேயாகும்.
முற்றும்.