Tuesday, October 8, 2024

துறவறம்

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله
“ما معنى قول صوفيّ من اكتفى بالفقه عن الزّهد فَسَقَ، فأجاب بقوله معناه أنّ
من تساهل فى الزّهد والورع ادّى ذلك إلى ارتكاب الشّبهات، ومن تساهل فى ارتكاب
الشبهات ادّاه ذلك إلى ارتكاب الحرام، ومن تساهل فى الحرام أدّاه ذلك إلى ارتكاب
الكبائرعلى أنّ الصّوفيّة رضي الله عنهم قد يطلقون لفظ السيّئة والفسق والكفر على
غير معناه الشرعيّ مبالغة فى التّنفير كقولهم “حسنات الأبرار سيّآت
المقرّبين، وقول سيّدي عمربن الفارض رضي الله عنه

               وإن خطرت لي فى سواك
ارادة   *****  على خاطري سهوا قضيت بردّتي

فهذا ليس
بردّة حقيقه،
(الفتاوى
الحديثية ص – 217

“யாராவதொருவன் “பிக்ஹ்” ஷரீஆவின் சட்டத்தை மட்டும் படித்து “சுஹ்த்” வழியிற் செல்லவில்லையானால் அவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான்” என்ற ஸூபிஸ ஞானி ஒருவரின் பேச்சு பற்றி இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது பின்வருமாறு அவர்கள் பதில் கூறினார்கள்.
“ஸூபீ” அவர்களின் பேச்சுக்கான விளக்கம் என்னவெனில், ஒருவன் “சுஹ்த்” உடைய விடயத்திலும், பேணுதல் விடயத்திலும் கவனமின்றி இருப்பானாயின் அது அவனை “ஷுப்ஹாத்” என்ற “ஹறாம் ஹலால்” இரண்டும் கலந்த விடயத்தை செய்வதற்கு இட்டுச் செல்லும். “ஹறாம்” விடயத்தில் ஒருவன் கவனமின்றி இருந்தால் அது அவனை பெரும் பாவத்தளவில் இட்டுச் செல்லும்.
ஸூபீமகான்கள் ஸெய்யிஅத், பிஸ்க், குப்ர் என்ற சொற்களை “ஷரீஆ” கூறும் பொருளுக்கு பயன்படுத்தாமல் அவற்றை மக்களுக்கு கடினமாக காட்டுவதற்காக வேறு பொருளுக்கு பயன்படுத்துவார்கள். ஸூபிகள் இவ்வாறு பயன்படுத்துவது உண்டு.
“ஹஸனாதுல் அப்றார் ஸெய்யிஆதுல் முகர்றபீன்” சிறந்தவர்கள் செய்யும் நல்லமல்கள் அதிசிறந்தவர்களின் பாவங்கள் என்ற அவர்களின் பேச்சுப் போன்றும், அஸ்ஸெய்யித் இப்னுல் பாரிழ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “யா அல்லாஹ்! உன்னல்லாத நாட்டம் – நினைவு – என்னுள்ளத்தில் மறதியாக வேனும் ஏற்படுமாயின் நான் எனக்கு “முர்தத்” என்று தீர்ப்புச் செய்து கொள்வேன்” என்ற அவர்களின் பேச்சுப் போன்றுமாகும். (இது உண்மையான மதமாற்றமில்லை)
அல்பதாவல்
ஹதீதிய்யஹ்
பக்கம்
– 217

இப்னு
ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ்
RELATED ARTICLES

Most Popular

Recent Comments