Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸம்ஹான், ஸக்றான் உரையாடல்

ஸம்ஹான், ஸக்றான் உரையாடல்

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ

ஸம்ஹான் – தம்பி ஸக்றான் நீ எங்கே செல்கிறாய்?

ஸக்றான் – கொழும்பு சென்று தரமான மார்க்க அறிஞர் ஒருவரிடம் மார்க்க விளக்கம் கேட்டுவரச் செல்கிறேன்.
ஸம்ஹான் – எது பற்றிய விளக்கம் என்று சொல்ல முடியுமா?
ஸக்றான் – ஆம். சொல்லலாம். தற்போது றமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது. “தறாவீஹ்” தொழ வேண்டும். சில பள்ளிவாயல்களில் இருபது “றக்அத்” தொழுகின்றார்கள். இன்னும் சில இடங்களில் எட்டு “றக்அத்” தொழுகின்றார்கள். எது சரி என்பதை அறிந்து அதன் படி செயல் படுவதற்காகச் செல்கிறேன்.
ஸம்ஹான் – நீ எங்கும் செல்லவும் வேண்டாம். எவரிடமும் கேட்கவும் வேண்டாம். நீ உலமாக்களில் எவரிடம் கேட்டாலும் இரண்டும் சரிதான் என்று சொல்பவர் எவரையும் நீ காண மாட்டாய். அவர் “ஸுன்னி”யாக இருந்தால் இருபதுதான் சரி என்பார். அவர் கர்னீயாக இருந்தால் எட்டுத்தான் சரி என்பார். நீ எவ்வாறு முடிவு செய்வாய்?
ஸக்றான் – சிக்கலான விஷயம்தான். நான் என்ன செய்ய வேண்டும்? நீயே ஒரு வழி சொல் பார்க்கலாம்.
ஸம்ஹான் – நான் அறிந்த வகையில் ஒரேயொரு வழிதான் உண்டு. அது பற்றி நீ சற்று சிந்தனை செய்து பார். எந்த நாட்டு மக்களாயினும் பல நூறு ஆண்டுகளாக “தறாவீஹ்” தொழுகை இருபது “றக்அத்”களே தொழுது வந்துள்ளார்கள். எவரும் எட்டு என்று சொன்னதுமில்லை. தொழுததுமில்லை. “எட்டு றக்அத்” என்ற அழுகிய வெங்காயம் நமது நாட்டுக்கு வந்த பிறகுதான் எட்டுத் திக்கும் நாறத் தொடங்கியது. இது வழி கேடர்களின் புதிய கண்டு பிடிப்பு. இந்த வெங்காயம் இறக்குமதியாகு முன் நமது நாட்டிலோ, வேறு நாடுகளிளோ வாழ்ந்த தலை சிறந்த உலமாக்கள் எதைச் சரி கண்டு செயற்பட்டு வந்தார்கள் என்பதை நீ அறிந்து செயல்படு. இருபது தொழு. எட்டைக் கைவிடு. எட்டுக் காரனைத் தொட்டவனும் கெட்டான் என்பதைப் புரிந்து கொள்.
இன்னும் ஒரு வழி உண்டு. நீ விரும்பினால் அவ்வழியையும் சற்று ஆய்வு செய்து பார். “தறாவீஹ்” தொழுகை எத்தனை “றக்அத்”துகள் என்பது தொடர்பாக இலங்கை நாட்டு அறிஞா்களில் பலரும் இந்தியா – தமிழ் நாட்டு அறிஞர்களிற் பலரும்
தமில் மொழியில் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அவற்றையும் படித்துப் பார். அறபு மொழியில் அறபு நாட்டு அறிஞர்களிற் பலர் அறபு மொழியில் எழுதிய நூல்களும் உள்ளன. அவற்றையும் படித்துப் பார்.
அறபுக் கல்லூரிகளில் “பிக்ஹ்” சட்டக் கலையில் உம்தா, பத்ஹுல் முயீன், மஹல்லீ முதலான நூல்களை பாடத்திட்டத்திற் சேர்த்து பல்லாண்டுகளாக உலமாக்கள் கற்றுக் கொடுத்து வருகின்றார்கள். அவை யாவும் தலை சிறந்த “புகஹாஉ” சட்ட மேதைகளால் எழுதப்பட்வையாகும். அவற்றையும் படித்துப் பார்.
ஸக்றான் – நல்லது. ஆலோசனைப் படி முதலில் செயல் படுகிறேன். அதன் பிறகு உன்னைச் சந்திக்கிறேன்.
ஸம்ஹான் – திருக்குர்ஆனில் 

فا سئلوا اهل الذّكر إن كنتم لا تعلمون.  
“நீங்கள் அறியாதவர்களாயின் அறிஞர்களிடம் கேளுங்கள்” என்று அல்லாஹ் கூறியுள்ளது போல் நீ கேட்பதாயினும் நிறைவான அறிவுள்ளவர்களிடம் கேள். “கர்னீ”களிம் கேட்காதே. ஏனெனில் அகில உலக அறிஞர்கள் “கர்னீ”களை அதிகமானோர் குழப்பவாதிகளும், மனமுரண்டுள்ளவர்களுமேயாவர். அந்தகனிடம் வழி கேட்காதே.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments