கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I.அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வில் அஷ.ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா டாக்டர். மௌலவீ. அல்ஹாஜ். A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ J.P, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மௌலவீ H.M.M. இப்றாஹீம் நத்வீ, காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ்.M.I.M.ஜெஸீம்.J.P, றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ M.M.A.மஜீத் றப்பானீ, பரீட் பௌண்டேஷன் பணிப்பாளர் K.L.M.பரீட் J.P ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடிக்கடி நிகழும் இரத்த பற்றாக்குறையால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை தவிர்க்கவும் சத்திரசிகிச்சைகளுக்கு ஏற்படும் தடைகளை நீக்கவும் இவ்இரத்ததான திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த இரத்த தான நிகழ்வில் 140 ஆண்களும் 63 பெண்களுமாக மொத்தமாக 203பேர்கள் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்
அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம்