தொடர் – 02
-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-
ஸலாத்துல்வுழூ:
வுழூச்செய்தபின் தொழும் தொழுகை’ என்று இதற்குப் பெயர். வுழூ செய்தபின் வுழூவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின்,
ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لوجدوا الله توّابا رحيما
என்ற ஆயத்தை ஓதி’அஸ்தஃபிருல்லாஹ்’ என மூன்று முறை கூறி ‘குல்யாஅய்யுஹல்காபிரூன்’ சூராவைஓதுவதும்
இரண்டாவதுரக்அத்தில்,
ومن يعمل سوءا او يظلم نفسه ثمّ يستغفر الله يجد الله غفورا رّحيما
என்ற ஆயத்தை ஓதி ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என மூன்று முறை கூறி குல்ஹுவல்லாஹு அஹது சூராவை ஓதுவதும் சுன்னத்தாகும்.
ஸலாத்துல்அவ்வாபீன்:
மதிமறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமையான நப்ல் தொழுகைகள், தஸ்பீஹ்களை நிறைவுசெய்தபின் மிக உச்ச அளவான இருபது ரக்அத்துகளை அல்லது மிகக்குறைந்த அளவான இரண்டு ரக்அத்துகளை அவ்வாபீனுடைய நிய்யத் செய்து தொழுவது சுன்னத்தாகும். அதன்பின் கீழ்வரும் துஆவை மூன்று முறை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
اللهم اني أستودعك ايماني في حياتي وعند مماتي وبعد مماتي فاحفظه عليّ انّك علي كلّ شيئ قدير
தறாவீஹ் தொழுகை:
‘ஓய்வு கொள்ளும் தொழுகை’ என்பது இதன் பொருள். தறாவீஹ் தொழுகை நோன்பு காலங்களில் இஷாவிற்கு பின் இரண்டிரண்டு ரக்அத்துகளாக பத்துஸலாமில் 20 ரக்அத்துகள் தொழ வேண்டும். இதை ஜமாஅத்தாக தொழுவது போன்று தனியாகவும் தொழுது கொள்ளலாம். ரமழான்30 நாட்களுக்குள் குர்ஆன் ஷரீபை பரிபூரணமாக ஓதித்தொழுவது சுன்னத்தாகும். எனினும் அவரவர்களுக்குத் தெரிந்த சூராக்களை ஓதியும் தொழுதுகொள்ளலாம்.
தஸ்பீஹ் தொழுகை:
வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒருமுறையாவது இதைத்தொழுவது சுன்னத்தாகும்.
இதை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் அல்லது நான்கு ரக்அத்துகளாக ஒருஸலாமில் தொழவேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பிரித்து தொழுவதுதான் சிறந்தது.
முதல் ரக்அத்தில் பர்திஹாஸூராவிற்குப்பின்” அல்ஹாக்கு முத்தகாதுர்” சூராவும் இரண்டாவது ரக்அத்தில் ”வல்அஸ்ரி” சூராவும் மூன்றாவ துரக்அத்தில் “குல்யாஅய்யுஹல்காபிரூன்” சூராவும், நான்காவ துரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.
‘ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹுஅக்பர்’என்ற தஸ்பீஹை 4 ரக்அத்திலும் 300 தடவை ஓதுவது சுன்னத்தாகும்.
நின்ற நிலையில் சூராக்களை முடித்த பின்பு 15 விடுத்தம், ருகூவில்10 விடுத்தம், இஃதிதாலில்10 விடுத்தம், முதல்ஸுஜூதில்10 விடுத்தம், இரு ஸுஜூதின் நடுவில்10 விடுத்தம், இரண்டாவது ஸுஜூதில்10 விடுத்தம், இரு ஸுஜூதுகளை முடித்து எழுமுன் அமரும் இருப்பில் 10 விடுத்தம் இவ்வாறு ஒரு ரக்அத்தில் 75 வீதம் நான்கு ரக்அத்துகளில் 300 தஸ்பீஹ் ஓதவேண்டும்.
இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின் 10 தஸ்பீஹ் ஓதுவதுதான் சிறப்புடையதாகும்.
தொழுகை முடிந்த பிறகு கீழ்காணும்துஆவை ஓதுவது சிறப்பானதாகும்.
اَللّهُمَّ انيْ أسئلك توْفيق اهل الهدى واعمال اهل اليقين. ومناصحة اهل التوبة. وعزم اهل الصّبر. وجدّ اهل الخشية. وطلب اهل الرّغبة. وتعبّد اهل الورع. وعرفان اهل العلم حتي اخافك اَللّهُمَّ انّي أسئلك مخافة تحجزني عن معا صيك . حتي اعمل بطاعتك عملا استحقّ به رضاك. وحتي اناصحك بالّتوبة خوفا منك. وحتي اخلص لك النصيحة حياء منك. وحتي اتوكل عليك في الامور حسن ظنّ بك
سبحان خالق الناّر
ஸலாத்துல்ஈதைன்:
பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்துவரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநாள் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும். உளுஹிய்யாவை அறுக்கவேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையை அதன்ஆரம்ப வக்திலும், பித்ருஸகாத்தைகொடுத்து முடிப்பதற்காக நோன்புப்பெருநாள் தொழுகையை சற்றுக்காலம் தாழ்த்தியும் தொழுவதுசுன்னத்ஆகும்.
ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித பர்ழு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஜஹ்து ஓதியபின் ஏழு முறை தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்தபின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும் இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக்கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் ‘ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹுஅக்பர்’ எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். முதல் ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின்’காஃப்’; (50வதுசூரா ) அல்லது ‘ஸப்பிஹிஸ்மசூராவும் இரண்டாவதுரக்அத்தில் இக்தரபதிஸ்ஸா அது (54வது சூரா) அல்லது ‘ஹல்அதாக’ சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.
இரு பெருநாட்களின் முதல் நாள்மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப்பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகளிலும்நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக்கொண்டே இருப்பதுசுன்னத்தாகும். இதற்கு தக்பீர்முர்ஸல் என்றுபெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்ஹுத்தொழுகையிலிருந்துஅய்யாமுத்தஷ்ரீக் (துல்ஹஜ்பிறை13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர்சொல்வதுசுன்னத்தாகும். இதற்குதக்பீர்முகய்யத்’என்றுபெயர்மேலும்துல் ஹஜ்பிறை1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம்ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்கும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும் போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.
தக்பீர்:
الله اكبر الله اكبر الله اكبر لااله الاّ الله والله اكبر الله اكبر ولله الحمد..
الله اكبر الله اكبر الله اكبر كبيرا والحمد الله كثيرا وسبحان الله بكرة وّأصيلا لا اله الاّ الله ولا نعبد الاّ اياه مخلصين له الدّين ولو كره الكافرون لااله الاّ الله وحده وصدق وعده ونصر عبده وأعزّ جنده
وهزم الاحزاب وحده لااله الاّ الله والله اكبر الله اكبر ولله الحمد
தொழுகைக்குப்பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் பர்ழு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக்கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.
==***==***==***==***==***==
தொடர் – 01
-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-
வித்ரு தொழுகை:
இஷாத்தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து அதிகாலைப் பொழுது உதயமாகும் வரை வித்ரு தொழுகையை தொழுதுகொள்ளலாம்.
இந்ததொழுகையை ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என ஒற்றைப்படையாகத் தொழவேண்டும். இந்ததொழுகையின் குறைந்த அளவு ஒரு ரக்அத்தும் அதிகளவு பதினொரு ரக்அத்துகளும் ஆகும்.
மூன்றுரக் அத்தொழும்போது முதல் ரக்அத்தில் “ஸப்பிஹிஸ்ம” சூராவும், இரண்டாவது ரக்அத்தி ல்“குல்யாஅய்யுஹல்காபிரூன்”சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹுஅஹது, குல்அஊதுரப்பில்பலக், குல்அவஊதுபிரப்பின்னாஸ்’ சூராக்களும் ஓதுவது சுன்னத்தாகும்.
ஸலாத்துள்ளுஹா:
ளுஹாத் தொழுகையின் குறைந்தஅளவு இரண்டு ரக்அத்தும் விரிந்த அளவு எட்டு ரக்அத்தும் மிகவிரிந்த அளவு பன்னிரண்டு ரக்அத்துகளுமாகும்.
சூரியன் உதித்து ஒருஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் ‘ளுஹர்’ தொழுகையின்நேரம் வரை இதன் நேரமாகும். ஆனால் காலை 9 மணிமுதல்11 மணிவரை தொழுவது மிகச்சிறப்பாகும்.
இதன் முதல் ரக்அத்தில் ‘வஷ்ஷம்ஷி”அல்லது காபிரூன்’ சூராக்களையோ இரண்டாவது ரக்அத்தில் ‘வள்ளுஹா,வல்லைலி’ சூராக்களை அல்லது குல்ஹுவல்லாஹுஅஹது “சூராவோ ஓதுவது சுன்னத்தாகும்.
ளுஹாத்தொழுத பின்பு கீழ்காணும் துஆவை ஓதுவது சிறப்பானதாகும்
اللهم إن الضحى ضحاؤك ، والبهاء بهاؤك ، والجمال جمالك ، والقوة قوتك ، والقدرة قدرتك ، والعصمة عصمتك ، اللهم إن كان رزقي في السماء فأنزله ، وإن كان في الأرض فأخرجه ، وإن كان معسرا فيسره ، وإن كان حراما فطهره ، وإن كان بعيدا فقربه ، بحق ضحائك وبهائك وجمالك وقوتك وقدرتك ، آتني ما آتيت عبادك الصالحين
தஹிய்யத்துல்மஸ்ஜித்:
இதன் பொருள் ‘பள்ளியின் காணிக்கைத் தொழுகை’ என்பதாகும். உள்பள்ளிக்கு செல்பவர் அங்குசென்று அமருவதற்கு முன்இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அமருவது சுன்னத்தாகும். தகுந்த காரணமின்றி இத்தொழுகையை விடுவது மக்ரூஹ் ஆகும். பள்ளியில் ஜமாஅத் நடைபெறப்போகிறது என்றால், அங்கு நின்றுகொண்டு பர்ழான தொழுகையை எதிர்பார்ப்பது சுன்னத்தாகும். ஏதாவது காரணத்தினால் பள்ளியினுள் சென்றபிறகு தஹிய்யத்துல் மஸ்ஜித்தொழ விரும்பாதோர் மூன்றாம் கலிமாவை
سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوّة الاّ بالله العليّ العظيم.
நான்கு முறைஓதுவதுசுன்னத்தாகும்.
இஸ்திகாராத் தொழுகை:
நன்மையை நாடித்தொழுதல் என்று இதற்குப் பெயர். ஒருவர் ஒருசெயலை செய்வதா அல்லது விடுவதா? அதன்விளைவு நன்மையா? தீமையா? எனத்தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத்செய்து இரண்டு ரக்அத் தொழுவதும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹாஸூராவிற்குப்பின் குல்யாஅய்யுஹல்காபிரூன்’ சூராவையும் இரண்டாவது ரக்அத்தில் ‘குல்ஹுவல்லாஹுஅஹது’ சூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். ஒருதெளிவான முடிவுதெரியும்வரை திருப்பித்திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதை தொழுதபின்பு ஓதவேண்டியதுஆ:
الّلهمّ انّي اسْتخيرك بعلمك واستقدرك بقدرتك. واسالك من فضلك العضيم. فانّك تقدر ولا اقدر. وتعلم ولا اعلم. وانت علاّمالغيوب. الّلهمّ ان كنت تعلم انّ هذا الامر خيرلي في ديني ودنياي وعاقبة امري وعاجله وآجله فقدّره لي. وبارك لي فيه. ثمّ يسّره لي. وان كنت تعلم انّ هذا الامر شرّلي في ديني ودنياي وعاقبة امري وعاجله وآجله فاصرفني عنه. واصرفه عنّي. واقدر لي الخير اينما كان انّك علي كلّ شيئ قدير