அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்ற சிறப்பு நிகழ்வுகள்
காத்தான்குடி – 05 B.J.M அமைந்துள்ள றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் 100வது மாணவர் மன்ற நிகழ்வுகள் 24-03–2012 சனிக்கிழமை றப்பானிய்யஹ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா- அல் ஆலிமுல் பாழில் அஸ்-ஸெய்யித் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அதாலல்லாகஹு பகாஅகஹூ) அன்னவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வுகள் 2 அமர்வுகளாக இடம் பெற்றன. காலை 10 மணிக்கு ஆரம்பமான முதலாவது நிகழ்வில் கத்முல் குர்ஆன், மௌலித் நிகழ்வுகள் , துஆ, ஸலவாத், சிற்றூண்டி நிகழ்வுகள் நடைபெற்றன. துஆப் பிரார்த்தனையை சங்கைக்குரிய மௌலவீ ALM. முஸாதிக் (அஸ்ஹரீ) அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.
2வது அமர்வு மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. இதில் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களின் பேச்சு, கவிதை, இஸ்லாமிய கீதங்கள், அறிவுக்களஞ்சியம், அறபுப் பாடல்கள் என்பன இடம் பெற்றன.
விஷேட நிகழ்வாக றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் ஸ்தாபகர் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹூ) அவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அதே போல் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் அதிபர் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ, விரிவுரையாளர்களான மெளலவீ A. அபூபக்கர் (சிராஜீ), மௌலவீ MMA. மஜீத் றப்பானி ஆகியோர் மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ , ஷெய்ஹுனா மிஸ்பாஹி ஆகியோரின் உரை இடம் பெற்று ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் முடிவுற்றன. இந்நிகழ்வுகள் அனைத்திலும் கண்ணியமிக்க உலமாக்கள், காத்தான்குடி நகரசபையின் உதவித் தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் J.P , றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்கள், பெற்றோர், பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.