இவர்கள் தந்தையின் பெயர் மத்தா. இவர்கள் தாயின் பெயர் பதூரா என்பதாகும். இவர்கள் நபீ ஹாறூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்கள் நீனவா நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அங்கு செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறு கரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல அந்த பதற்றத்தில் இவர்கள் கையில் இருந்த குழந்தை கீழே நழுவி விழ அதனை ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றது. இவர்கள் உயிர் தப்பி அக்கரை வந்து சேர்ந்தார்கள்.
மனைவியோ இக்கரையில் இருந்தார். அப்பொழுது ஜிப்ரீல் (அலை) தோன்றி இவர்களை நீனவா சொல்லுமாறும் இவர்கள் மனைவி மக்களை இறைவன் இவர்களிடம் ஒன்று சேர்ப்பான் என்றும் கூறி மறைந்தனர். அவ்விதமே இவர்கள் அங்கு சென்று ஓறிறை வணக்கத்தை அவ்வூர் மக்களுக்குப் போதித்தும் அவர்கள் கேட்கவில்லை.பெறுமையிழந்த இவர்கள் அவர்கள் மீது நெருப்பு மழையாய் பொழியுமாறு இறைவனிடம் இறைஞ்சினார்கள். சரி அவ்விதமே செய்கிறேன். நீர் இன்ன மலைமீதுபோய் அமர்ந்திரும் என்று இறைவன் கூறினான். அவ்விதமே செய்ய அனல் காற்று வீசத்தொடங்கியது. அது கண்டு அலறிய மக்கள் தங்கள் பாவம்பெறுத்தறுளுமாறும் அல்லாஹ் தவிர வேறு எவரும் இல்லை என்றும் யூனுஸ் (அலை) அவர்கள் அவனுடைய திருத்தூதர் என்றும் தாங்கள் நம்புவதாகவும் நாற்பது இரவு பகல் குப்புற வீழ்ந்து கண்ணீரும் கம்பலையுமாய்க் கூற, இறைவன் அவர்கள் மீது இரங்கினான். தீமழை செழுமையாய்ப் பொழிந்தது. இதனை இவர்கள் அறிந்ததும் கோபமுற்று அவ்வூரைவிட்டே நீங்கினார்கள்.
கப்பலில் செல்லும்போது கப்பல் திடீரென நின்றது. பாவியாகிய இவர்கள் கப்லில் இருப்பதால்தான் கப்பல் செல்லவில்லை என்று சீட்டுக் குலுக்கிப்பார்த்ததில் தெரிய வந்ததும் இவர்கள் கடலில் குதித்தார்கள். அப்பொழுது இறை ஆணைப்படி “நூன்” என்ற மீன் அவர்களை விழுங்கியது. பின்னர் இவர்கள் அதன் வயிற்றிலிருந்து வெளி வந்தபோது ஒரு சுரைக்கொடி இவர்களுக்கு நிழலிட்டதென்றும் ஒரு மான் காலையிலும் மாலையிலும் வந்து இவர்களுக்கு பால் நல்கி வந்த தென்றும் கூறப்படுகின்றது.
பின்னர் இவர்கள் மனைவியையும் மக்களையும் இவர்களுடன் ஒன்று சேர்த்தான் இறைவன். நீனவா மக்கள் இவர்களை இலக்குக் கண்டுகொண்டு இவர்களை தம் ஊர்வருமாறு வேண்ட ஒரு நபி ஊரை விட்டு வெளியேறிவிடின் மீண்டும் அவர் அதில் குடிபுகமாட்டார். என்றுகூறி சகியூ என்ற மலையை அடைந்து அங்கேயே வாழ்த்து இவர்கள் உயிர்நீத்தார்கள். இவர்கள் நூன் என்ற மீனின் வயிற்றில் பல நாட்கள் இருந்தால் இவர்களுக்கு (துன்னூன்) மீனுடையவர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.