கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 13.01.2017 தொடக்கம் 15.01.2017ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 32வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது.
கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 13.01.2017 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலிதும், இஷா தொழுகையின் பின் பயான் நிகழ்வும், கௌது நாயகம் அன்னவர்களின் பேரில் இறைஞான கீதமும் பாடப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் 01ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
2ம் நாள் நிகழ்வில் 14.01.2017 அன்று பி.ப 5.00 மணிக்கு முஹ்யித்தீன் மௌலிதும், மஃரிப் தொழுகையின் பின் கௌது நாயகம் அவர்களின் திருநாமங்களை ஓதும் குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சன்மார்க்க சொற்பொழிவும், மிஸ்பாஹீ நாயகம் வாழ்த்துப்பாடலும் இடம்பெற்று துஆவுடன் இரண்டாம் நிகழ்வுகள் முடிவுற்றன.
கந்தூரி தினமான 3ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு முஹ்யித்தீன் மௌலிதும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சன்மார்க்க சொற்பொழிவும், சிறார்களின் கஸீதாவும் இடம்பெற்றன. இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாதுடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.