HMM.றஹீம் ஆசிரியர்
அருட் திருக் கரந்தனின்
அடிக்கலில் ஒளிர்ந்து
இருள்களை சகாபுகள்
இனிய பேரமைந்து
மருட்களை மத்ரசா
மருங்கினில் எழுந்து
பொருட்குவி செல்வரின்
பொறுப்பினில் பொலிந்து
திருக்கலிமா வதின்
தேன் தினம் பொழிந்து
திகழ்ந்திடும் பத்ரிய்யஹ்
ஜூம்அஹ் நம் பள்ளி
பரந்தவான் பௌர்ணமிப்
பால் நிலா பொழிந்து
பற்பல உடுக்களைத்
தன் உடல் அணிந்து
சிறந்த பேரழகியாய்ச்
சிலிர்ப்பது போலே
தனிப் பெருந்தவத்தின்
தத்துவம் விளக்கி
பனிப் புகார் அகல்வாய்
பல் துறை துலக்கி
பணிந்த நற்குணமும்
பணிபல பூண்டும்
இனிய பேரெனவே
இச் செகம் போற்றும்
அணி தவழ் அறிஞர்
மிஸ்பாஹி தந்த
பத்ரிய்யஹ் ஜூம்அஹ்
பள்ளி நம் பள்ளி
விண்ணகம் மெச்சிடும்
வியத்தகு வலிமார்
எண்ணிலா நிகழ்வுகள்
எங்களிடம் மண்ணில்
கண்மலர் விரிக்கும்
காலெங்களல்லாம்
பொன் மணப் பெண்ணகம்
பூரித்துப் பொழிவதாய்
வண்ண வான் சோடனை
வகையறா வணிந்து
மின்னொளி நகைகளால்
மேனியை மினுக்கி
பன்னறு மலர்களால்
பாவிசை மஜ்லிசை
கண்ணூறு காணும்
கவின் காட்சியாக்கி
அனபொரு பக்தரை
அழைத்த தகம் மகிழ்ந்து
தன்மடித் தரையிலே
தருமமாய் அமர்த்தி
அன்னமும் அருள் நிறை
அறுசுவை உண்டியும்
பெண்ணுக்கு மாணுக்கும்
பேரின்பப் பானமும்
இன்னமுது தெனவே
எக்காலும் அழித்திடும்
பத்ரிய்யஹ் ஜூம்அஹ்
பள்ளி நம் பள்ளி
இன்ன பள்ளியை
எழுப்பு கடமையில்
இங்கிருக்கிறோம் நாமெல்லாம்
அன்ன பள்ளியை
அழகு பள்ளியாய்
அலங்கரிப்பதெம் அவசியம்
கண்ட கனவுகள்
கால தேவையின்
காண வேண்டிய நனவதால்
இன்ன பள்ளியை
நவீன பள்ளியாய்
இனி எழுப்புதல் அவசியம்
நண்ணி இன்றெமை
நாடு சிறுவரின்
நாளை வாழ்வது மலரவே
நமது பத்ரிய்யாஹ்
நவீனமாகிட
நாமுழைப்பது அவசியம்
குலவி வான் வரும்
கூட்டப் பறவைக்கும்
கூடும் மரமதும் அவசியம்
கொள்கை வாதிகள்
கூட்டம் எமக்கொரு
நவீன பள்ளியின்றவசியம்
ஒன்று தவிரவே
றில்லை என்பதால்
நின்று நிலவிடப் பள்ளியும்
ஒன்று பட்ட எம்
உண்மைக் கரங்களை
உஷ்னமாக்குதல் அவசியம்
தனது தலையின் மேல்
தண்ணீர் ஊற்றியோன்
தன்மை புகழ்ந்திடும் தாவரம்
உனது வியர்வையை
மண்ணுக் கீந்திடில்
வாழ்த்தும் பள்ளியின் கோபுரம்
மறந்து பொது நலம்
மலிந்து சுய நலம்
மாண்ட காலமா சொல்லறம்
துறந்து இறையிடம்
தஞ்சமாகியே
தொண்டு செய்திடல் நல்லறம்
நபவி,குவாப் பள்ளி
நபிகள் கட்டிட
நாளும் வியர்வையைச் சிந்தினார்
நடந்து நடந்து பல்
பெட்டி மண்ணினை
அள்ளிக் கொட்டிட முந்தினார்
தூணெழுந்திடக்
தொண்டர் நூறு பேர்
தோள் கொடுத்தமை சாதனை
தூனுடம்பினில்
தூக்கி வழி சிலர்
தூரமாவதே வேதனை
எனது பள்ளியா
உனது பள்ளியா
என்ற மனநிலைதான் பிழை
எனது மில்லையே
உனது மில்லையே
எமது பள்ளியென்றே உழை.###############################