Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்"வஹ்ததுல்வுஜுத்" பேசிய தற்கால மக்களிடத்தில் பிரபல்யமான செய்குமார்கள்.

“வஹ்ததுல்வுஜுத்” பேசிய தற்கால மக்களிடத்தில் பிரபல்யமான செய்குமார்கள்.

– ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் –

١) الولي الكامل صاحب الكرامات الباهرات وخوارق العادات الظاهرات ” تيكا صاحب ولي ﷲ “

01) தமிழ்நாடு காயல்பட்டணத்தில் வாழும் அல் வலிய்யுல்காமில் செய்கு தைக்கா சாஹிப் றஹிமஹுல்லாஹ் அவர்கள்

يقول الشيخ فی قصيدۃ له مفسّرا معنی الحديث الآتي. قال النبيّ صلی الله عليه وسلّم “لاتسبّواالدّهر فإنّ الله هو الدّهر”

காலத்தை ஏச வேண்டாம்
என்றதால் காலம் நீயே
கோலங்கள் கொண்டதெல்லாம்
“குதா” அன்றி வேறுமுண்டோ
ஆலத்தில் நீயே யல்லால்
அறவே வேறில்லை – எந்தன்
சீலத்தை நல்லதாக்கி
சிறப்பருள் யா காலிகே!

معنی القصيدۃ: لاتسبّواالدهر. هذا نهي من رسول الله صلّی الله عليه وسلّم عن سبِّ الدهر والعصر والزمان. والسبب الحقيقيّ لذلك كونُ الله تعالی دهرا.معناه كون الله عزّ وجلّ عينَ الدهر وعينَ الزمان بالنسبۃ إلی وجوده تعالی أي من حيث الوجود. لأنّ الدهر خَلۡقٌ من الله ومظهرٌ من مظاهر الله تعالی. فصار سبُّ الدهر سبًّا لله تعالی فی الحقيقۃ. كأن يقول الإنسان هذا زمان ملعون ودهر مطرود وذو مصيبۃ ومِحَنٍ وفتنۃ.
وأما سبُّ الدّهر ولعنُه وشتمُه فهو كسبّ الله تعالی ولعنِه وشتمِه.فمن سبَّ ﷲ أوشتمه أولعنه فقد كفر به تعالی.وكذلك من سبّ الدهر وشتمه ولعنه. ويقول الشيخ أيضا.

கோலங்கள் கொண்டதெல்லாம்
“குதா”அன்றி வேறுமுண்டோ

إنّ الأشياء كلّها عينُ الحقّ سبحانه. لأنّ الأشياء كلّها – الموجودات – مظاهر الحقّ تعالی وملابسُه وتجلّياتُه وشئوناتُه الخارجيّۃ. ومعلوم عند ذوی العقل السليم أنّ الظاهر لا يفارق المظهر كما لا تفارق الصفۃ موصوفَها.

ويقول الشيخ أيضا.

ஆலத்தில் நீயே யல்லால்
அறவே வேறில்லை

ليس فی العالم شيئ سوی ﷲ تعالی.والموجود فی الحقيقۃ هوﷲ تعالی فقط لا غيرُه. وهذاالشيخ يَنۡفِی كلَّ شيئ خُلِقَ سویﷲ. ولكن الإنسان يتغيّرُ بالصُّور والأشكال فيعتقد الغيريّۃ بين الحق والخلق.ولا يعتقد العينيۃ من حيث الوجود. هذا جهل منه واغترارٌ به تعالی. كما قال ربّ العزّۃ وغرّتكم الحياۃ الدنيا
أيّها العلماء الكرام! تدبّرُوا نشيدۃ تيكا صاحب ولي ﷲ وتفكّرُوا فيما قال. أتُكفِّرونه أم تجعلونه مشركا؟ وإن قلتم بكفره فكيف نال الكافر السعادۃ والولايۃ؟ وكيف ظهر علی يديه الكراماتُ وخوارقُ العاداتُ؟ ولِمَ بُنِيَ له مزارٌ كقصور الملوك؟ ولم تُرِكَ مبنی المزار إلی هذا الوقت؟ مع كون قاهر فطن ممتلئۃ بالعلماء والفقهاء والأساتيذ. أتظنّون أنّ علماء قاهر فطن جهلاءُ بالدّين؟ لايعرفون الأ كحام الشرعيّۃ. كلّا ظنّكم هذا ظنٌّ فاسد. لأنّ قاهر فطن كان منبع الفقهاء ومسكن الأولياء فی الزمان الماضي. – فی الزمان الّذي عاش فيه الوليّ المذكور تيكا صاحب وليّﷲ رحمه ﷲ – وتوفّي فيه. وبُني له الضريح. ولم ينكر عليه أحد من العلمائها. وإن قلتم بكفره فانهضُوا لتدمير مزاره وتخريبه وتسويته بالتراب. كما قال النبيّ صلی ﷲ عليه وسلّم من رأی منكم منكرا فليُغيِّرۡهُ بيده وإن لم يستطع فبلسانه وإن لم يسطع فبقلبه. وذلك أضعف الإيمان وإن لم تستطيعوا شيئا فأَفۡتُوۡا بوجوب تدمير مراقد الأولياء الّذين قالوا بوحدۃ الوجود. وإلّا فأنتم شركاء فی الإثم. ويكون سكوتكم دليلا لسقوطكم فی النّار.

அஷ் ஷெய்கு ஆரிபுபில்லாஹ் அப்துல் காதில் ஸுபீ ஹழ்றத் அல் காதிரீ அன்னவர்கள்.

الولي الكامل والعارف الواصل الشيخ عبد القادر العالم الصوفي الصديقي القادري القاهري قدس سره، المدفون بمقبرة كفّهاوتّ من سري لنكا، له مزار هناك جميل يأتيه المريدون والمحبون لزيارته ولنيل فضله وفيضه، هذاالشيخ رحمه الله ألّف فى حياته كتبا كثيرة بلغة تَامِلْ، وترجم كتبا كثيرة من كتب الشيخ الأكبر محي الدين ابن عربي رضي الله عنه، ” كأسرار الخلوة” وغيرها،

وترجم الشيخ كتابه ” أسرار الخلوة” إلى لغة تامل باسم ‘கல்வத்தின் இரகசியங்கள்’ يقول الشيخ رحمه الله في ترجمته فى الصفحة الثانية:

“அறிந்து கொள்ளும்! வுஜுதில் – உள்ளமையில் அல்லாஹ்வையும், ஆவனது செயல்களையும் தவிர வேறில்லை.(எல்லாம் அவனே) யாவும் அவனைக் கொண்டே நிலைத்திருக்கின்றன. அவனளவிலேயே மீளுகின்றன. கண்ணிமைப் பொழுதாவது அல்லாஹுத்தஆலா ஆலத்தை – அகிலத்தை விட்டும் மறைந்து கொண்டானேயானால் முழு உலகமும் ஒரேயடியாக இல்லாமலாகிவிடும்.”

(கல்வத்தின் இரகசியங்கள் பக்கம் – 02)

معنى قول الشيخ بالعربية مختصرا: إعلم أنّه ليس فى الوجود إلا الله وأفعاله، ( بل الكل هوالله) وكل شيئ قائم به تعالى، وراجع إليه، فإن غاب الله عن العالم ولو طرفة عين لصار العالم كله معدوما فى آن واحد.

ஷெய்கு நாயகமவர்களின் மொழி பெயர்ப்பில் “வஹ்ததுல்வுஜுத்” ஞானத்தின் உயர் தத்துவமான “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை அதே வசனத்தில் அவர்கள் கூறியிருப்பது – எழுதியிருப்பது “எல்லாம் அவனே” என்று நம்புவதும், சொல்வதும், எழுதுவதும் சரியானதென்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். அதோடு ஷெய்ஹுனா அவர்களும் இதே தத்துவத்தை சரிகண்டவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.

ஷெய்கு நாயகம் “வஹ்ததுல்வுஜுத்” பேசவுமில்லை “எல்லாம் அவனே” என்று சொல்லவுமில்லை, எழுதவுமில்லை என்று குரலெழுப்புவோர் இவ்வுண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைத் தத்துவமான “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா தருகின்ற ஞானச் சுருக்கத்தை “வஹ்ததுல்வுஜுத்” பேசுவோர் “எல்லாம் அவனே” என்று பேசுவதும், எழுதுவதும் அவர்களின் வழக்கமாகும். அவர்கள் அர்த்தமின்ரி அவ்வாறு சொல்லவில்லை. “வஹ்ததுல்வுஜுத்” ஞானத்தை தெளித்து வடித்தெடுத்தால் “எல்லாம் அவனே” என்ற சாரம் வரும்.

“வஹ்ததுல்வுஜுத்” என்ற இரு சொற்களாலான வசனத்திற்கு “எல்லாம் அவனே” என்ற பொருள் நேரடிப் பொருளல்ல. “உள்ளமை ஒன்று” என்பதே அதன் நேரடிப் பொருள் எனினும் இப்பொருளை கருவாகக் கொண்டு ஆய்வு செய்தால் “எல்லாம் அவனே” என்ற சாரம் வருவது வியப்பான ஒன்றல்ல.

ஒரு வசனத்தின் நேரடிப் பொருள் ஒன்றிருக்க அதன் மூலம் விளங்கப்படும் சாரத்தைக் கருத்திற் கொண்டு அதை அதற்கு பொருளாகக் கொள்வது பிழையாகாது.

உதாரணமாக “தவ்ஹீத்” என்ற சொல்போன்று. இச்சொல்லின் நேரடிப் பொருள் ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும். எனினும் இப்பொருள் மூலம் விளங்கப்படும் சாரத்தை கருத்திற் கொண்டும் “ஏகத்துவம்” என்று இதற்குப் பொருள் கொள்வது போன்றாகும்.

والشيخ عبد القادر الصّوفي رحمه الله صرّح بلفظة ” بل الكلّ هوالله” هذا دليل واضح لأن يقال எல்லாம் அவனே فعلى كل مريدي الشيخ أن يؤمن كما قال، ويقول سرّا وجهرا ” بل الكلّ هو الله” ويجب عليه أن ينكر من يقول خلافه وأن ينكر ويعادي من يفتي بخلافه،

ويقول الشيخ – شيخنا أيضا فى كتاب
” ஸுபி ஹழ்றத் நினைவு மலர்”
صفحة ٢١

“ஸுபி ஹழ்றத் நினைவு மலர்” என்ற நூல் 21 ம் பக்கத்தில் ஷெய்குனா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(உனக்கு பதவி வேண்டுமானால் “நான்” என்பதை அழித்துவிடு. வித்தில் மறைந்திருக்கின்ற விருட்சம் வெளியாக வேண்டுமானால் வித்து அழிய வேண்டும். வித்து இருக்கும் வரை மரம் வராது. ஆகவே நீ இருக்கம் வரை அவன் வரமாட்டான். எப்படி யானையில் மரத்தை காணுகின்ற போது யானையை காண முடியாதோ அது போல நீ பனாவாகிப் போனால் அவன் வருவான்.நான் வேறு அவன் வேறு என்ற திரை அற்றுப் போக ஓயாமல் அவனை தியானிக்க வேண்டும். அல்லாஹ்வின் நினைவிலேயே இருக்க வேண்டும்.)

يقول الشيخ رحمه الله: على المريد أن يجاهد حقّ الجهاد لإزالة الغيريّة ولإثبات العينيّة، ويشتغل بالعبادة لإثبات هذه العقيدة،

معنى قول الشيخ بالعربية مختصرا:

إذا أردت مرتبة أو منصبة عندالله أفن نفسك، وادفن وجودك، لأنّ الشجرة لا تنبت إلّا بعد فناء البذر، وكذلك الرّبّ سبحانه لا يتجلّى عليك إلّا بعد فنائك فيه، كالفيل المصنوع من الخشبة، فإن رأيت الخشبة، غاب عنك الفيل وإن رأيت الفيل غاب عنك الخشبةُ فاذكر ربّك حتّى ينعدم حجاب الغيريّة بينك وبينه تعالى، شيخنا هذا رحمه الله يقول” الغيريّة بين الخالق والمخلوق حجاب” ، فأول فرض على الإنسان كشف حجاب الغيريّة، ويقول الشيخ – شيخنا أيضا فى صفحة ٢٣ فى نفس الكتاب:

“லிமனில் முல்குல் யவ்ம்” இன்று அரசாட்சி யாருக்கு? என்பதை உனது கல்பின் காது கொண்டு கேட்பாய். “லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்” அடக்கி ஆளும் ஒருவனான அல்லாஹ்வுக்கே என உனது கல்பின் நாவு கொண்டு பதில் சொல்வாயாக! (அவனன்றி வேறு எதுவுமில்லை).உசுப்புபவனும்,உசுப்பாதவனும் அவனன்றி வேறுயாருமில்லை. வானங்கள் பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுக்கே சொந்தம்.எல்லாம் அவனுக்கே பணிகின்றன.முன்னும் பின்னும் அவனுக்கே புகழ்.

يصرح شيخنا رحمه الله بأن ماسوى الله عدم محض، أيها المريدون لشيخنا عبد القادر الصوفى قدس سره أنّ شيخنا يقول فى مكان من كتبه ” الكل هو الله” எல்லாம் அவனே ويقول فى مكان آخر منها أفن وجودك حتى يتبين أنك الحق ويقول أيضا ” راقب الله حتى تزول الغيريّة التى هي الحجاب بينك وبينه،

நான் என்பதை அழித்து விடு. நான் வேறு அவன் வேறு என்ற திரை அற்றுப் போக ஓயாமல் அவனை தியானிக்க வேண்டும். அவனன்றி வேறு எதுவுமில்லை.
ويقول فى مكان آخر ليس شيئ سوى الله

وهذه العبارات كلها ثمرات وحدة الوجود وخلاصتها، فكيف تقولون إن الشيخ رحمه الله لم يقل بوحدة الوجود ولم يقل بأن الكل هوالله؟

والشيخ عبد القادر الصوفى القدري رحمه الله ينشد فى مجلس الراتب بمضمون هذاالخبر كما يأتي،

ஐனில்லா அறபியே
மீமில்லா அஹ்மதே
அர்ஷளாவும் சிரசுடைய
அண்ணலே ஸலாம்.

وهذه القصيدة للشيخ رحمه الله تُخبرنا أنّ النّبيّ صلّى الله عليه وسلّم رَبٌّ، لأنّ لفظة ” اَلْعَرَبْ” – عَرَبْ – إذا حُذفت منها العينُ تبقى الراء والباء، فتصير ربًّا – رَبٌّ –

وكذلك لفظةُ ” اَحْمَد” إذا حذفت منها الميمُ صارت لفظة أحمد ” أَحَدًا” والشيخ رحمه الله ما قال هذه الحكمة من عند نفسه، ولكنّه قال هذه الحكمة من خَبَرِ ” أنا عرب بلا عين وأنا أحمد بلا ميم” والعارفون يستدلّون بهذا الخبر لإثبات حكمةٍ، وهي أنّ النّبي صلّى الله عليه وسلّم هو ربٌّ وأَحَدٌ.

والشيخ رحمه الله لم يكفر ولم يرتدّ بهذه المقالة، وهو بريئ ممّا يصفه الأعداء والحُسّاد،

அஷ் ஷெய்கு ஸுபி ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் வஹ்ததுல்வுஜுத் பேசவுமில்லை,எல்லாம் அவன் என்று சொல்லவுமில்லை,எழுதவுமில்லை என்று சொல்பவர்கள் இந்த ஆதாரங்களை நடுநிலையோடு எடுத்து நோக்கினால் நிச்சயம் உண்மையை கண்டு கொள்வார்கள்.அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன்.

ஆரிபுபில்லா, அல் ஆலிமுல் பாழில், அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள்

الشيخ الكامل والولي الواصل والعالم الفاضل أحمد ميران المدعوّ ” بعالم الفضة ” ، المدفون ” بأداضي سيني (அட்டாளைச்சேனை ) رحمه الله، والشيخ هذا كان شاعرا ماهرا فصيحا ومجذوبا سالكا، له مزار يزوره أحبابه وأتباعه،
وهذا الشيخ ورفيقه الشيخ عبد القادر الصوفي رحمه الله بايعا الشيخَ الكاملَ محمد عبد القادر الصوفي الحيدرابادي المجذوبَ السالكَ القائلَ بوحدة الوجود رحمه الله، فى وقت واحد،

يقول الشيخ أحمد ميران فى قصائده بلغة تامل

மஹ்பூபு மனோன் மணிக் கீதம்

ஆலத்தில் நிறைந்திடும் அஹதெனும் பொருளதை
அனுதினம் அகந்தனில் நினைந்திடுவீர்
கோலத்தில் அது நின்று குறிப்பா யிலங்கிடும்
“ஹு” என்பதையன்றி வேறில்லையே

*****

மண்ணது விண்ணாய் மறைகள் அனைத்துமாகி
அண்ணல் அஹ்மதுமானாய் ஆதியே நீயும்
அமாவெனும் மர்தபாவில் அறியாதிருப்பதுடன்
ஆலத்தில் கோலமுமானாய் அஹதே நீயும்
நானென்றும் வேறென்றும் நாடியிருப்பவா்க்கு
தூராதி தூரமுமானாய் தூயோனே நீயும்.

*****

அஹதிய்யதெனும் கடலே ஆதியுமாச்சு
அதிலெழுந்த அலைகளது ஆலமுமாச்சு
ஆலமுமாச்சு அதுவே கோலமுமாச்சு

*****

இல்லல்லாஹுவென்று சொல்லி,
இணையதைத் தள்ளு
ஏகபரா பரம் பொருளை
எங்குமே கொள்ளு
எங்குமே கொள்ளு
அதில் தங்கியே நில்லு.

*****

ஐனமா துவல்லூ என்று ஆதி சொன்னதே
அது அனைத்துமே அவனே என்ற
அற்புதமதே அற்புதமதே
நீயுமுணர்ந்திடுமிதே.

*****

ஆதி இறையோனே ஜோதி பெரியோனே
காட்சியளித்திட கல்பிலுதிப் போனே

நானே இழந்தால் நீயது ஏதோ
நீயே இழந்தால் நானது ஏதோ

கன்சுல் மக்பியில் தன்சீஹுமானோனே
கண்ட பொருளதில் நின்று நிறைந்தோனே

ஷம்சுல் ஹுவிய்யத்தாக இருந்தோனே
தாரணிதனிலே தான் பர்தாவுமானோனே

நான் என்றிருந்தேனே நாளும் கழிந்தேனே
தானாயிருந்த தன்மை அறியேனே

லாஅன இல்லாஹு வென்றிராமலே
வேறது என்ற விலங்கிலிருந்தேனே

أيّها العلماء! وأيها المنكرون لوحدة الوجود! ماذا رأيكم عن  الشيخ أحمد ميران صديق شيخنا عبد القادر الصوفي رحمه الله ؟ هل تكفّرونه؟ أم تعتقدونه زنديقا؟ لأنّه صرّح بوحدة الوجود فى الأبيات المذكورة، وأرشد المريدين إلى هذه العقيدة، وملأ كتاب قصائده மஹ்பூபு மனோன் மணிக் கீதம்  بوحدة الوجود وبأسرار إلهية تُهَيِّجُ حُبَّ اللهِ وعِشْقَه، وتُثير جذبةً روحانيّة، ولذَّة لا يعاد لها لذةُ،

أيّها العلماء المنكرون لوحدة الوجود كيف فتواكم عن هذاالشيخ الذي له آلاف مريد من أنحاء هذه الجمهورية، له مزار ببلده يزوره أتباعُه ومريدوه وأحبابه، ألم يأن للذين يكفّرون وحدة الوجود والقائلين بها أن يَهدِمُوا ضرائحَ الأولياء القائلين بوحدة الوجود وضريحَ الشيخ المذكور، تبًّا للمنكرين،

அஷ்ஷெய்கு மாதிஹுர்றஸுல் சதகதுல்லாஹ் அப்பா அல் காஹிரீ அவர்கள்.

الشيخ مادح الرسول صدقۃ ﷲ القاهري المدفون بجِوار المسجد الجامع بكِيۡضَ كَرَيۡ، ابن من ابناء الولي سليمان الذي أطفأ بوَضوئه نارَ مكۃ وهو في منزله ببلده، وهذاالشيخ اشتهر عند مسلمي تامل ناد وسري لنكا، بصدقۃ ﷲ  ” أَفَّا ” معناه الجدّ – أبوالأم أو أبوالأب – أو الذي جاوز عمره خمسين تقريبا.

نجل الولي سليمان الذي بوَضُوۡ
ءِنَارَ مكۃ أطفا صدقۃ ﷲ

إنّ الشيخ صدقۃ ﷲ أفَّا رحمه ﷲ إبنٌ من أبناء الوليّ سليمان القاهريّ رحمه ﷲ. ومن كراماته العجيبۃ أنّه كان يتوّضّأ للصلاۃ فی فناء داره بتَامِلۡ نَادُ. ولمّا رفع رأسه رأی حريقا بمكّۃ المكرّمۃ. فأخذ كفّا من ماء الوَضوء. ورماه إلی جهۃ القبلۃ. فانطفت النَّارُ.  وإلی هذه القصّۃ أشار الشاعر بقوله ” نجل الوليّ سليمان ” إلی آخره.

                                وللشيخ صدقۃ ﷲ القاهري قصائد متفرقة باللغة العربية فى مدح سيد الوجود صلى الله عليه وسلم، ومنها ” القصيدة الوترية” فى مدح خير البريّة، وهي مشهور فى جميع العالم الإسلامي، وهذ الشيخ لقبه العلماء الكرام بعصره ” بشِبْلِ الشَّرِيْعَةِ ”  لِشِدَّۃِ ورعه فی أمر الدين ولِمَهَارَتِهِ فی علوم الشَّريعۃ. ولشهرته فی علوم الفقه.

يقول الشيخ فی قصيدته الوتريۃ :

?صَدُوۡقٌ اِذَا مَا قَالَ لَا وَكَذَا نَعَمۡ
?جَوَادٌ وَكَمۡ مِنۡهُ الۡعَطَايَا وَكَمۡ نِعَمۡ
?وَكَمۡ رَدَّ عَنَّا فَاجِعَ الضُّرِّ حِيۡنَ عَمۡ
?يَدُ الۡمَاحِيۡ هَلۡ كَانَتۡ يَدَﷲِ قُلۡ نَعَمۡ                                   ?وَقُلۡ وَكَذَاالۡمَوۡلَی رَمَی اِذۡ رَمَی رَمۡيَا

நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு விஷயத்தை “இல்லை” என்று கூறினாலும்,இவ்வாறே “ஆம்” என்று கூறினாலும் தமது கூற்றில் மிகவும் உண்மையாளர் ஆவார்கள்.அன்னார் மிகப் பெரிய வள்ளல் ஆவார்கள்.(அன்னாரை புகழ்வோர்க்கும், மற்றவர்களுக்கும்) அன்னாரிலிருந்து எத்தனையோ கொடைகள், எத்தனையோ அருட்பேறுகள் கிடைத்துள்ளன. இடையூறு பொதுவாகச் சூழ்ந்த வேளையில் இடையூறின் கொடுமையை எத்தனையோ முறை நம்மை விட்டும்  தடுத்திருக்கின்றார்கள். “குப்றை” இறைமறுப்பை, பாவங்களை அழிக்கும் நபீயின் கை அல்லாஹ்வின் கையாக ஆகிவிட்டதா? ஆம் என்று நீ கூறு.இவ்வாறே மாநபீ அவர்கள் எதிரிகள் மீது மண்ணை எறிந்த நேரத்தில் எஜமானாகிய அல்லாஹ்தான் எறிந்தான் என்று கூறு.

           والشيخ الإمام مادح الرسول صدقۃ ﷲ القاهري يقول إنّ يد النبي صلیﷲ عليه وسلّم كانت يدَﷲ حين بايع أصحابَه صلیﷲ عليه وسلم. كما في قوله تعالی ” إن الذين يبايعونك إنما يبايعونﷲ يدﷲ فوق أيديهم”

                                      والمراد بيد ﷲ فی هذه الآيۃ يد النبي صلیﷲ عليه وسلم. لا يد ﷲ. لأنّ ﷲتعالی منزه عن اليد والرجل وسائر الأعضاء،  والمراد بيد النبي صلى الله  عليه وسلم عينُه وذاتُه أريد بالجزء الكُلُّ.

              كما فی قوله تعالی ” فأينما تولوا فثم وجه ﷲ” والمراد بالوجه هنا ذاته المقدسۃ. أريد بالجزء الكل كما تقدم. والمعنی الحقيقي المفهوم من هذه الآيۃ أن النبي صلی ﷲ عليه وسلم عين الحق تعالی من حيث الوجود. وليس غيراله بأي وجه من الوجوه.

                                  ويقول الشيخ صدقۃ ﷲ رحمه ﷲ أيضا مشيرا إلی قوله تعالی ” وما رميت إذ رميت ولكن ﷲ رمی” وقل وكذا المولی رمی إذ رمی رميا”

                                              وبيان هذه القصۃ أنّ الكافرين أحاطوا ليلۃ بدار نام فيها النَّبِيُّ صلی ﷲ عليه وسلم مع سيدنا علي كرم ﷲ وجهه. ولما عرف النّبيّ صلی ﷲ عليه وسلم بإحاطۃ المشركين خرج من الدار من حيث لا يشعر أحد. فأخذ قبضۃ من التراب ورمی به وجوه الأعداء. فوقع التراب علی أعينهم فكانوا لا يبصرون كأنهم عميٌ.

                                                 فنزل جبريل عليه السلام علی النبي صلی ﷲ عليه وسلم فقال يا محمد وما رميتَ إذ رميتَ ولكنﷲ رمی. فقد نفیﷲ الرميَ عن محمد صلیﷲ عليه وسلم ونَسَبَه إلی نفسِه علی الحقيقۃ العقليۃ. مع كونه راميا.

أيّها العلماء! ما رأيكم عن الإمام مادح الرسول صدقۃ ﷲ القاهري قدس سرُّه هل أشرك بالله بقوله “يد الماحي هل كانت  يد ﷲ قل نعم وقل وكذاالمولی رمی إذ رمی رميا؟” وهل كفر بالله باعتقاده وحدۃ الوجود كما تقولون؟ أيها المنكرون لوحدۃ الوجود والوهّابيّون الهادمون ضرائح الأولياء قوموا بآلاتكم وسيوفكم وفئوسكم وسافروا إلی كِيۡضَ كَّرَيۡ واهدِموا قبر مادح الرسول صدقۃﷲ القاهري. إن كان فی أصلا بكم دمٌ يجري. أو أظهروا فتواكم بهدم القبور والضرائح.

வஹ்ததுல்வுஜுத் (எல்லாம் அவனே) என்பது குப்ர் என்று கூறக்கூடிய அல்லது அதை பகிரங்கமாக பேசுவது கூடாது என்று சொல்லக்கூடிய சுன்னி உலமாஉகள் இனிமேலும் புனித வித்ரிய்யஹ் சரீபாவை ஓதுவீர்களா? சதகதுல்லாஹ் அப்பா றழியல்லாஹு அன்ஹு அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் எனக் கூறி அப்பா அவர்களுக்கும் வழிகேடர் என்ற முத்திரை பதிப்பீர்களா?

அஷ் ஷெய்குல் காமில், அல் வலிய்யுல் வாஸில் உமர் அல் காஹிரீ அவர்கள்

الشيخ الكامل والولي الواصل عمر القاهري صاحب الكرامات قدس سرّه وهذاالوليّ – عمر القاهري – عالم مشهور فی تامل نَادُو من الهند. مولده مرقده قاهِرۡفَطَنۡ. صاحب كراماتٍ باهراتٍ وذو كشف وإلهام.

من كراماته العجيبۃ قصيدۃ ” أَلّفَ الۡأَلِفُ” التي ألفها الشيخ عمر الولي رحمهﷲ.

ولمّا فرغ من التّأليف أراد أن يُرِيها العلماء والمشائخ فدار البلاد والقری وزار أكثرالعلماء بتامل نَادُو. وأراهم القصيدۃ. فلمّا رأوها تعجّبوا منها وعجزوا عن فهم معناها الحقيقي. ولم يبيّن أحد منهم مراد الشيخ. فكيف يفهم كلام ذی الكشف والإلهام وغيره؟

ثمّ ذهب بها الشيخ إلی مَلَيۡبَارۡ ليريها علمائَها. فزار أوّلا السيد الشيخ جلال الدين مولی بخاري رحمهﷲ. فسلّم عليه وقال ” أتيت إلی سعادتكم بالقصيدۃ الّتي اَلَّفۡتُها لأنشدها بين يديكم.فلم يجب الشيخ جلال الدين رحمه ﷲ بأيّ جواب. وبعد برهۃٍ دعا الشيخ خادمه الذي كان يخدمه.(وهو رجل أمّي هِنۡدُوۡسِيٍّ) كافر يدين بدين الهُنود وقال له أنشِد القصيدۃ التي جاء بها هذاالشيخ.

فأنشد ذلك الخادم عن ظهر قلبه وهو قائم بجوار الشيخ جلال الدين رحمه ﷲ. كأنّه ألّفها وحفظها قبل سنوات. لم يُخۡطِئۡ فی مخارج الحروف ولم يترك لفظۃ من ألفاظها. فتعجّب الشيخ عمر الولي رحمهﷲ حتّی نَسِيَ ما سوی ﷲ وتعجّب معه الحاضرون.

وهاأنا أكتب قصيدۃ عمرالولي هنا للتّبرُّك. يقول الشيخ فی قصيدۃ له كما يأتي. وهذه القصيدۃ كانت تُنۡشَد فی مجلس ” راتب الحداد” من أوّل الزمان إلی أن مَدّ القَرۡنِيُّوۡن أعناقَهم. أنشدها العلماء والعوامّ جميعا. ثم تركوا.

وكان الأساتيذ والعلماء يُنۡشِدُونها خاشعين وخاضعين فی الزمان الماضي. ولكن ترك العلماء هذه النشيدۃ خوفا من الوهابيين ولزَعۡمِهِم كفرها لِتَضَمُّنِهَا معانيَ وحدۃِ الوجود. ولا أدري متي تاب العلماء إلی ﷲ ومتی نطقوا بكلمتي الشهادۃ لِكُفۡرٍ أصابهم أيام قرائۃ هذه النشيدۃ.

وها أنا أذكر بعض الأبيات من النشيدۃ:

?إلهي الخلق مِثۡلُ حَبَاب
علا ماءً لدی الأحباب

?فماءٌ فی الفناء حَبَاب
وحالَ بَقَاه يا ﷲ

?فأين أنا إذا أنتا
بذاتي دائما كُنۡتَا

?فما بِنۡتُ ولابِنۡتَا
ولا تا بيننا ﷲ

إن الشيخ الإمام عمر القاهري رحمه ﷲ يُمَثِّلُ الخلقَ بالحَبَابِ. بذكر الحبَاب مثالا لخلقه تعالی. فيقول ” الخلق مثل حباب” الحباب بفتح الحاء المهملۃ ما يعلوا الماء فی بعض الأوقات. وهي الفَقَاقِيۡعُ التي تَعۡلُوالمَاءَ. يقال لها குமிழி بلغة تامل وBubble بالإنجليزية. وأما الحُباب بضم الحاء فهو الحية.

يفهم من هذاالمثال ان الخلق عينُ ﷲ من حيث الوجود لا غيرُهﷲ. كما ان الحَباب عينُ الماء من حيث الوجود لاغير الماء. والحبابُ عينُ الماء وإن رؤي فی صورۃ الحباب.وهو مادام فی صورۃ الحباب عين الماء وكذلك بعد زوال صورته. وفی كل حال من الحالتين المذكورتين فالحَباب عينُ الماء لا غيرُه. وكذلك ﷲ سبحانه ومخلوقاتُه.

ويقول الإمام أيضا أن الحباب يقول للماء بلسان حاله أنت الذي ظهرت فی صورتي – فی صورۃ الحباب فأين أنا أيها الماء مادمتَ فی ذاتي؟ فما بنتُ أيها الماء عنك وما بنتَ عنِّي.والتاء هي الفارقۃ بين أنا وأنت. وأمّا قوله ” فلا تا بيننا ﷲ” ففيه بعض الإشكال يقول بعض العلماء ” ولا تَأۡ بيننا ﷲ” ولم يقولوا ( وَلَاتَا ) بينناﷲ. بل أخذوا ( وَلَاتَأۡ ) فعلا مضارعا. وﷲ أعلم بالصواب.

أيّهاالعلماء ما رأيكم عن الإمام الولي عمر القاهري رحمه ﷲ هل هو مشرك أم مؤمن؟ وهل مصيب أم مخطئ؟ لأنه قال بوحدۃ الوجود بل صرح بها فی القصيدۃ المذكورۃ. له مزار عظيم مشهور يزوره أحبائه وأتباعه. لماذا تركتم مزاره؟ فاهدموه إن كان إيمانكم قويا. وكونوا كأصحاب النّبيّ صلی ﷲ عليه وسلم الذين هدموا الأصنام والأوثان بإيمانهم القويّ.

“வஹ்ததுல்வுஜுத்” பேசுவதும் எழுதுவதும் பிழை என்று கூறக் கூடிய உலமாஉகளே! அல்வலிய்யுல் காமில் உமர் அல் காஹிரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் விடயத்தில் என்ன கூறப்போகின்றீர்கள். மேற் சொன்ன பாடலில் அவர்கள் ஹக்குக்கு கல்கு வேறானதல்ல அவ்விரண்டும் ஒன்றுதான்.அதற்கு உதாரணம் நீரின் மேல் இருக்கக்கூடய குமிழி போலாகும்.நீரின் மேல் இருக்கக்கூடிய குமிழி அது குமிழியாக இருக்கும் காலமெல்லாம் அது நீராகத்தான் இருக்கின்றது. அதேபோல் குமிழியாக இல்லாத நிலையிலும் அது நீராகத்தான் இருக்கின்றது.குமிழியாக எமக்கு தெரிவது நீரே அன்றி நீருக்கு வேறான ஒரு பொருளல்ல. எதார்த்தத்தில் குமிழி என்று ஒன்று இல்லை நீர்தான் குமிழிபோல் காட்சியளிக்கின்றது. இது போல்தான் ஹக்குக்கும் கல்குக்கும் இடையே உள்ள தொடர்பாகும் என்ற “வஹ்ததுல்வுஜுத்” எல்லாம் அவனே என்ற கருத்தை மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
எனவே உமர் வலிய்யுல்லாஹ் அவர்களையும் முஷ்ரிக் என்று கூறப்போகின்றீர்களா? அல்லது நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளப்போகின்றீர்களா?

தெரிவிப்பது எங்கள் கடமை.
தீர்மானிப்து உங்கள் உரிமை.

குறிப்பு :- மேற்கூறப்பட்ட அறபுப்பாடலை ஹத்தாத் றாதிப் செய்யக் கூடய அனைவரும் பாடிவருவது குறிப்பிடத்தக்கது. முனாபிக்களைத் தவிர.

அஷ் ஷெய்கு ஆரிபுபில்லாஹ் அல்வலிய்யுல் காமில் அப்துர்றஹ்மான் அல்கம்பமீ அவர்கள்.

الشيخ العارف بالله والولي الكامل عبد الرحمن الكَمۡبَمِي. المدفونُ بجوار أبيه محمد سعيد الجلوتي صاحب الكرامات الباهرات رحمهﷲ. وهذاالشيخ عالم ماهر متضلِّع فی فن التصوف والعرفان. له علاقۃ مع الصحابي الجليل عبد الرحمن بن عوف رضي ﷲ عنه. وهذاالشيخ صاحب كرامات كأبيه. مؤمن بوحدۃ الوجود ومصرِّح بها. وذات يوم ذهبت إلی كمبم مع صديقي العالم عبد الصّمد لملاقاته ولنيل توقيعه لكتاب “الكبريت الأحمر” فلقيته فی تَيۡكِيَّتِه الخاصۃِ له.(التيكيۃ مكان بُنِيَ فيه مَبۡنًی بالحجر أو باللّيف للعبادۃ من صلاۃ وذكر ومراقبۃ. يأوي إليها العارفون والصُّوفيّون والمشائخُ والسالكون. وهي لفظۃ أعجميۃ يستعملها المشائخ. ويقال أيضا التّكّيۃ) وهو يتوضأ. ولما رآني قال لي ” حضر جنازۃَ أبيك بدلٌ من الأبدال ” ثم رحّب بِنَا وأمرنا بالجلوس.

ثم دعاني وصديقي إلی سرير كان يجلس عليه. وسئلني ” كيف وَجۡعُ بطنك؟” فقلت ” كما كان لا زاد ولا نقص” ثم سئلني “كيف عمتك؟” قلت بخير. سؤاله هذا أعجبني وحرّك جسمي وقلبي. لأنّي وإن كنت مصابا بوجع البطن منذ سنوات فلا سبيل له لمعرفۃ مرضي لعدم العلاقۃ بيني وبينه. ولا سبيل له لمعرفۃ عمّتي.

وسؤاله هذا ذكَّرَني قول العارفين بالله. “العارف ينظر بنور ﷲ” وأمّا النّور الإلهيّ فلا يَحۡجِبُه شيئ لا دار ولا جدار. بل هو يخرق الحجب كلّها. الكثيفۃ واللّطيفۃ. فلا شكّ أنّ هذاالشيخ كان من العارفين.

ثم دعا ابنا من أبنائه المولوي عبد الغفور وأمره بقراءۃ كتابي “الكبريت الأحمر” من الأول إلی الآخر. وكان يسمع قرائته لفظا لفظا. وبعد فراغه من القراءۃ أخذ الكتاب وكتب ما شاء ﷲ أن يكتب وقال “هذا أول توقيع وآخره” ووقّع فيه. وتوقيعه موجود عندي محفوظ. ومن أراد أن ينظره فعليه أن يحضرني.

يقول هذاالشيخ بلغۃ تامل كما يأتي

உள்ளது ஒன்று மற்றது அன்று
ஒன்றும் பூச்சியமும் இரண்டாகுமா?

وهذه العبارۃ مكتوبۃ علی باب صومعته – تيكيته بكمبم. والمعنی لقوله الأول الحق موجود وغيره مفقود. يعني أن الحق تعالی هو الوجود الحقيقي ووجودُ غيرِه اعتباري. فلا وجود لغيره مستقل. بل الخلق قائم به تعالی. والمعنی لقوله الثاني الواحد والصفر إذا جمعتهما فهما واحد. والمراد بالواحد وجوده تعالی والمراد بالصِّفر الخلقُ. وإن جمعتهما هكذا
( 1+0=1) بقي الواحد فقط.

وماذا تقولون أيهاالعلماء! وما رأيكم أيها الفقهاء عن الشيخ المذكور؟ أهو مشرك أو كافر؟ وماذا تقولون عن جم غفير بايعوه؟ أهم المشركون أو الكافرون؟

இஸ்லாமிய அறிஞர்கள் சமூகமே! சட்ட மேதைகளே! மேற் கூறிய செய்கு நாயகம் அவர்கள் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவர் “முஷ்ரிக்” அல்லது “காபிர்” என்று சொல்வீர்களா? அவர்களிடம் “பைஅத்” செய்து அவர்களின் ஞானவழி வாழும் முரீதுகள் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் அல்லது காபிர்கள் என்று கூறப் போகின்றீர்களா?அவர்களின் தைக்காவில் இன்னும் மேற் சொன்ன “உள்ளது ஒன்று மற்றது அன்று” ,” ஒன்றும் பூச்சியமும் இரண்டாகுமா? என்ற இந்த வாசகங்கள் வாயலியே தமிழில் எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது.தமிழும் புரியவில்லை என்றால் இனி நாம் என்ன செய்யலாம்.இறைவன்தான் உங்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்.அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன்.

அஷ் ஷெய்கு அல்லாமா அல்ஆலிமுல் அறூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அன்னவர்கள்.

الشيخ العلامۃ العالم العروس ( மாப்பிள்ளை லெப்பை ஆலிம்) شيخ مشهور فی تامل نادو فی دولۃ سري لنكا. وقد ألف فی مدح الأولياء وفی ذكر تواريخهم كتبا كثيرۃ – موالد عديدۃ – تجاوز خمسمأۃ. وأمّا كتبه كلّها فهي مطبوعۃ فی مطبعۃ من مليبار. ولكن لم ينتشر بعض منها.

يقول هذاالشيخ فی كتابه ” تلي فاتحۃ ” كما يأتي:

ونفيتُم سواه ظهرا وبطنا
وبحق اليقين ذُقۡتُم شُهودا

இந்தியா – தமிழ் நாட்டிலும், இலங்கைத் திரு நாட்டிலும் “அல் ஆலிமுல் அறூஸ்” மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களும், அவ்லியாஉகளைப் புகழ்ந்தும்,அவர்களின் வரலாறுகளைக் கூறியும் ஐநூறுக்கும் அதிகமான அவ்லியாஉகளின் புகழ் கூறும் நூல்களை – மவ்லிதுகளை – எழுதியவர்களுமான “அல் ஆலிமுல் அறூஸ்” மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தங்களின் “தலைபாதிஹா” என்ற பாத்திமா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்களின் புகழ்மாலையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

சகோதரர்களே! உள்ளிலும், வெளியிலும் – ளாஹிர் – பாதின் – என்ற உள்ளரங்கத்திலும், வெளிரங்கத்திலும் – அல்லாஹ் தவிர – அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை என்று சொல்லி விட்டீர்கள்.(சொல்லுங்கள்). “ஹக்குல் யகீன்” என்ற மூன்றாம் படியேறி இறை காட்சியை கண்டு கொண்டீர்கள்.அனுபவித்து விட்டீர்கள்.(காணுங்கள் அனுபவியுங்கள்)

قوله نفيتم فی المصراع الأول وقوله ذقتم فی المصراع الثاني فعلان ماضيان فی الصورۃ. ولكنهما بمعنی الأمر فی الحقيقۃ وفی نفس الأمر. أي انفوا سواه وذوقوا.

இன்னும் அவர்கள் எழுதிய “மஙானீ ” என்ற நூலில் பல இடங்களில் “எல்லாம் அவனே” என்பதை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். அந்தக் கிதாபில் இஸ்லாம் பற்றிய பாடத்தில் கலிமாவுக்கு ஷரீஅத்,தரீகத்,ஹகீகத், மஃரிபத் என்னும் நான்கு வழிகளில் நான்கு விதமான பொருள்கள் உள்ளன என்று கூறி அந்த நான்கு வகைகளையும் விபரிக்கின்றபோது நான்காவது வகையான மஃரிபத்தின் படி கலிமாவின் பொருளாகின்றது لَامَوۡجُوۡدَ اِلَّا ﷲُ “அல்லாஹ்வைத் தவிர உண்மையான உள்ளமையுடையவன் வேறு எவருமில்லை” என்பதாகும் என்று கூறியுள்ளார்கள். அதாவது وجود “உள்ளமை” என்பது இறைவனுக்கு மாத்திரம்தான் படைப்பினங்களுக்கு( وجود )உள்ளமை என்பது இல்லை. படைப்பினங்கள் இருப்பது போல் காட்சியளிப்பது நமது பேதமை. இருப்பது இறைவனின் வுஜுத் மாத்திரம்தான் என்று கலிமாவுக்கு பொருள் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்கள்.

மேலும் “கலிமாவின் முதல் ஃபர்ளின் அசல்கள் பத்து” என்ற பாடத்தில் முதலாவது அசலலாகிறது (அல்லாஹ்வின் தாத் என்னும் உள்ளமை உண்டாயிருப்பதால் தான் இந்த வானங்கள்,பூமி, இவையிரண்டுக்குமிடையிலுள்ள பொருட்கள் அனைத்தும் உண்டாயின. அல்லாஹ்வின் தாத் இல்லாமல் இவை உண்டாகியிருந்தால் இவற்றின் இயக்கங்கள் முறையாக அமைந்திருக்க மாட்டா.இவற்றை நாம் ஆய்ந்தறிந்து உணர வேண்டும். மேலும், இவை எதுவும் அவனுடைய உள்ளமை இருப்பதற்குத் தேவையானவையல்ல என்பதையும் அறிய வேண்டும்) என கூறியுள்ளார்கள்.

மேலும் அதே கிதாபில் “கலிமாவின் இரண்டாம் ஃபர்ளின் அசல் பத்து” என்ற பாடத்தில் பத்தாவது அசலாகிறது ( அல்லாஹ் தன் அறிவு கொண்டு அறிவுடையவன்;தன் தத்துவங் கொண்டு தத்துவமுடையவன் என்று அறிவது.அதாவது அறிவில்லாமலிருந்து பிறகு அறிவைப் பெற்றவன் என்பதல்ல.இது முதலில்லாத ஒருவனை முதலாளி என்று சொல்வதை போலாகும்.எனவே, அறிவும், அறிவுடையவனும்,அறியப்பட்டதும் மூன்றும் அவனாக இருப்பதால் அனைத்தையும் அவன் அறிவதென்பது உறுதியாகி விட்டது) என கூறியுள்ளார்கள்.

மேலும் “ஏழு வகை நஃப்ஸுகள்” என்ற பாடத்தில் ஏழாவது நஃப்ஸ்ஸின் தன்மைகளைப் பற்றி விபரிக்கும் போது (ஏழுவது நஃப்ஸ்ஸாகிறது நஃப்ஸு காமிலா. பரிபூரணமான நஃப்ஸு எல்லா மகாம்களிலும்,நிலைகளிலும்,அமல்களிலும், நிரப்பமாக இருக்கும் நஃப்ஸு. இதற்குரிய திக்ரு( اَخۡفَی அக்ஃபா) மிக மறைவான திக்ரு.பிந்திய இவ்விரண்டு திக்ரும், திக்ரு செய்கின்றோம் என்ற எண்ணத்தையே மாற்றி, திக்ரு,திக்ரு செய்பவர்,திக்ரு செய்யப்படுகின்றவன்
மூன்றையும் ஒன்றாக ஆக்கி திக்ரு செய்வதாகும்) எனக் கூறி திக்ரும், திக்ரு செய்யக் கூடியவையான இந்த சிருஷ்டிகளும் திக்ரு செய்யப்படக் கூடியவனான அல்லாஹ்வும் ஒன்றுதான். சுருக்கமாக கூறினால் “எல்லாம் அவனே” என்பதை மிகத் தெளிவாக சிறுபிள்ளைக்கும் விளங்கக்கூடிய அமைப்பில் கூறியுள்ளார்கள்.

இன்னும் அவர்களின் “மஙானீ” என்ற கிதாபில் அனேக இடங்களில் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சுக்களை ஆதாரமாக எடுத்துள்ளார்கள். இதிலிருந்து அவர்கள் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சுக்களை சரிகண்டவர்கள் அதுமத்திரமல்லாமல் “எல்லாம் அவனே” என்ற அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்றபதற்கு பின் வரும் சம்வம் அவர்களின் கிதாபில் கூறப்பட்டிருப்பது மறுக்கமுடியாத ஆதாரமாகும்.

“அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து ‘அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?’ என்று கேட்ட போது: اَتَطۡلُبُ الۡاَيۡنَ مَعَ الۡعَيۡنِ ‘ ‘கண்ணால் கண்டு கொண்டே எங்கே என்று தேடுகிறாயா? என்று அவருக்கு பதிலளித்தார்கள் .இதனை விளங்கிக் கொண்ட அந்த கிராமவாசி பின்னால் பெரும் ஆரிஃபா மாறினார்.

மேலும் “அல்லாஹ்வை அறிகிறவர்கள்
ஏன் குறைவாக இருக்க வேண்டுமென்ற கேள்வியும்,பதிலும்” என்ற பாடத்தை விளக்கும் போது

اَنَّی يَغِيۡبُ وَلَيۡسَ يُوۡجَدُ غَيۡرُهُ
لٰكِنۡ اَشَدُّ ظُهُوۡرِهِ اَخۡفَاهُ

” அவனல்லாதது (எங்கும்) பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் அவன் எங்கே மறைந்திடுவான்? எனினும்,அவன் கடுமையாக வெளியாகியிருப்பது அவனை மறைத்துவிட்டது” என்று ஒரு பெரியார் கூறிய கவியை கூறியுள்ளார்கள்.

“முஷாஹதா (ஞானக்காட்சியைக் காணுதல்) வகைகள்” என்று தலைப்பிட்டு; முஷாஹதா என்னும் ஞானக்காட்சியைக் காணுதல் என்பது பலவகைகளுண்டு அனைத்தையும் இரண்டாகச் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. முதலாவது شُهُوۡدُ الۡكَثۡرَۃِ فِی الۡوَحۡدَۃِ பல (மவ்ஜுதாத்களை) படைப்புக்களை ஒரு (வுஜுதில்) உள்ளமையில் தரிசிப்பது. இரண்டாவது شُهُوۡدُ الۡوَحۡدَۃِ فِی الۡكَثۡرَۃِ ஒரு வுஜுதை பல மவ்ஜுதாத்துக்களில் காண்பது.
இவ்விரண்டில் பல பொருட்களில் அவனை தரிசித்தல் என்பது மிக நீளமான விடயமாக இருப்பதால்,விரைவாக ஞானச் சுவை கிடைப்பதற்காக,அல்லாஹுதஆலாவுடைய “ஹாதீ” என்னும் திருநாமத்தின் வெளிப்பாடாக வந்த இன்ஸானே காமிலான (பரிபூரண மனிதரான) றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களில் அவனை தரிசித்துக் கொள்ளவும்”என்று றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எதார்த்தம் யார் என்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.

இன்னும் இது போன்ற பல ஆழமான கருத்துக்களை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் கிதாபில் கூறியுள்ளார்கள்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒன்றுடன் நிருத்திக் கொள்ளமல் பல அதாரங்களை கூறியுள்ளதன் நோக்கம் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “எல்லாம் அவனே” என்ற கொள்கையிலே வாழ்ந்தார்கள் என்பதை மறுப்பவர்கள் விளங்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மௌலிது ஓதுவதையே தங்களில் வியாபாரமாக ஆக்கிக் கொண்டு “எல்லாம் அவனே “எனற இஸ்லாத்தின் ஆணிவேரை அழிப்பதற்காக முயற்சி செய்யும் அறிஞர்களே! சற்று சிந்தியுங்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “தலைபாதிஹா” வை எத்தனை தடவகைள் ஓதுதி உங்களின் சட்டைப் பையையும், சதைப் பையையும் நிரப்பியிருப்பீர்கள். ஒரு நிமிடமாவது உங்களின் உள்ளப் பையை பற்றி நினைத்தீர்களா?அவர்களால் இயற்றப்பட்ட பாடலை பாடித்திரியும் நீங்கள் ஏன் அவர்களின் கொள்கையை மறுக்கின்றீர்கள். அல்லது அது உண்மை என்று விளங்கியும்.பொறாமை, வஞ்சகம்,தன்னுடைய அந்தஸ்து குறைந்து விடும்,உலக ஆதாயங்கள் கிடைக்காது, தனிமனித குறோதம் போன்ற இழிவான குணத்தினால் இதை மறுக்கின்றீர்களா?

இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இது தனிப்பட்ட ஒருவரின் கொள்கையல்ல. குர்ஆனின் கொள்கை,கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் போதித்த கொள்கை, சஹாபாக்களின் கொள்கை, நாங்கள் வருடா வருடம் நினைத்து கந்தூரி கொடுத்து கௌரவிக்கும் வலீமார்களின் கொள்கை.சொல்பவனை பார்த்து சொல்லப்படும் கருத்தை எதிர்த்து விடாதீர்கள். சுகம் இழந்து போவீர்கள்.

أيّها العلماء المنكرون لوحدۃ الوجود والقائلون بكفرها! ما رأيكم وما فتواكم عن هذاالشيخ الذي انتشر صِيۡتُهُ فی تَامِلۡ نَادو وفی سريلنكا. وكثر أتباعه ومريدوه فيهما.أهؤلاء كلهم مشركون وكافرون باعتقادكم؟

الشيخ العالم المحامي سِتِّ لَبَّي. وهذاالشيخ مشهور بسري لنكا بஅறிஞர் சித்தி லெப்பை .قَلَّ من لم يعلَمۡه ولم يسمع به من أبناء سري لنكا. يقول الشيخ……

                           ஆரிபீன்கள் இந்த இல்மை ஒரு ஒழுங்காயும், திட்டமுமாக்கிக் கொள்வதற்கு சிலர் ஏழு “மர்தபா”க்களாகவும், சிலர் நாற்பது மர்தபாக்களாகவும் பிரித்திருக்கின்றார்கள். இவ்விதம் பிரித்து நினைக்காது போனால் அவனைப் பற்றிய இல்முகள் தெளிவுபடாது.நான் உனக்கு ஏழு “மர்தபா”க்களாய் பிரித்திருக்கின்ற பிரிவைச் சொல்கின்றேன்.இந்த “மர்தபா”க்களை அறிவது கொண்டு ஹக்கென்றும், கல்கென்றும் பிரிவாய் பேசினாலும் உள்ளமையிலொன்றுள்ளது திட்டப்படும். ஒரு “மனிதன்” என்ற சொல்லில் சரீரமும்,றூஹும் அடங்கிவிட்டன. பிரித்துச் சரீரமென்றும், றூஹென்றும் இரண்டாகப் பேசினால் இரண்டு மர்தபாக்கள் என்று சொல்லலாம்.வேண்டுமானால் ஏழாகவும் பிரித்துப் பேசலாம். சரீரம், சூட்சுமம், பிராணம்,காமம், மனம்,புத்தி,ஆன்மா ஆகியவைகளே. இன்னும் தேவையானால் எழுபதாய் பிரித்தும் பேசலாம். பிரித்துப் பேசுவதெல்லாம் அக்லை கொண்டு விளங்குவதற்கே! உள்ளமைப் படிக்கு யாவும் ஒன்றுதான். இதை விளங்காது சிலர் மர்தபாக்களுடைய பெயர்களையும்,ஒன்றுக் கொன்றிருக்கின்ற வித்தியாசங்களையும், விளங்கிக் கொண்டு இதுதான் மஃரிபாவுடைய இல்மென்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இந்த பிரிவுகளைக் கொண்டு விளங்கி பிரிவற்றதாயொன்றாக்குவதுதான் தௌஹீது. பிரிவற்றதாய் ஒன்று படுத்துவதற்கு அக்லைக் கொண்டு கூடாது. ஹக்குக்கும்,நமக்கும் இருக்கின்ற திரைகள் நீக்கப்பட வேண்டும்.இதற்காக இல்முடனே பெரியோர்கள் காட்டியிருக்கின்ற அமல்களையும் செய்து வரவேண்டும். இன்ஸான் காமில் அவனுக்கிரண்டு வர்ணிப்புக்களுண்டு. ஒன்று ஹக்கு, மற்றது கல்கு.இரண்டு பெயர்களுமுண்டு. ஒன்று றப்பு,மற்றது அப்து.இரண்டு முகங்களுண்டு.ஒன்று ளாஹிர்,மற்றது பாதின். இவ்விதம் கல்கென்பதும், ஹக்கென்பதும் ஒன்றுதானென்று அறியும் இல்முக்கும்,ஆலங்கள் வெளியான இல்முக்கும் மர்தபாக்களுடைய இல்மென்று சொல்லப்படும். இந்த இல்மை தொடங்கு முன் முதலாவது சில தவறான இஃதிகாதுகளையறிந்து அவைகள் வந்து நுழையாது பேணிக் கொள்ள வேண்டும்.

{ அஸ்றாறுல் ஆலம் பக்கம் 72 முதல் 83 வரை ஆசிரியர் அறிஞர் சித்திலெப்பை }

أيّها العلماء! ما تقولون عما قال العالم المحامي ست لبي. أهو صحيح أو مخطئ؟ هل هو مشرك أو مؤمن؟ لأنه صرح بوحدۃ الوجود. ولكن فی كلامه تَحَيُّرٌ فی بعض المواضع من كتابه. وﷲ أعلم بالصواب.

                                      ஒரு காலத்தில் அறிஞர் சித்திலெப்பையின் பெயரால் அரசாங்கம் ஒரு முத்திரை வெளியிட்டதையும்,அவரின் வரலாறுகளை அரசாங்க பாடத்திட்ட நூலில் சேர்த்ததையும் இங்கு நினைவூட்டுகின்றேன்.

அறிஞர் சித்திலெப்பை அவர்களின் சந்ததிகள் இன்றும் இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.”வஹ்ததுல்வுஜுத்” “குப்ர்” என்று தீர்ப்பு வழங்கிய அறிவுக் கண்ணும், அகக் கண்ணும் குருடான உலமாஉகளின் தீர்ப்பின் படி மதம் மாறிய ஒருவருக்குப் பிறந்த பிள்ளைகள் யார்?

அஷ் ஷெய்கு பீர்முஹம்மத் வலிய்யுல்லாஹ் (தக்கலை) அன்னவர்கள்.

الشيخ الكامل صاحب الكرامات الباهرات وخوارق العادات الظاهرات المُعَمَّرُ بثلاث مأۃ سنۃ الوليُّ العجيبُ فِيۡرۡ محمد ولي ﷲ الرَّاقِدُ فی تَكَّلَيۡ. له مزار كبير جميل واسع. ومن كراماته أنه ألف فی علم التصوف خمسۃ وستين ألف قصيدۃ.ومن كراماته العجيبۃ أنه لم يمت ولم يُغۡسَلۡ ولم يُكَفَّنۡ ولم يُصَلَّ عليه ولم يُدفن كما يفعل لسائر الموتی. ولكنّه رضي ﷲ عنه كان يرحم الفقراء والغرباء والصبيان ويلعب معهم ويعطيهم الفواكه والتمور والحلاوۃ ويأمرهم بالصلاۃ علی النّبيّ صلی ﷲ عليه وسلّم.

وذات يوم دعا الشيخ الصبيان وأمرهم بِحَفۡرِ حُفۡرَۃٍ – قبرٍ – بمكان. وكان يعطيهم الحلاوۃ حتی يفرغوا من حَفۡرِ القبر. ولما فرغوا قال لهم ” يا أبنائي أنام فی هذاالقبر. فاستروا قبري با لتُّراب” ففعل الصبيان كما أمرهم. ثم فشا هذاالخبر بين المسلمين والكافرين. فجائوا مسرعين إلی المكان. فحفرواالقبر.ولكنهم لم يجدوه فيه.

وهذه كرامۃ منه عظيمۃ يعرفها المسلمون وغيرهم من أبناء ” تامل ناد” وﷲ أسعدني بزيارۃ ضريحه مرارا. الحمد لله.

وهذاالشيخ المكرم رحمه ﷲ يقول فی كتابه.

கண்டதும் கேட்டதுமல்ல – அங்கு
கருதி முடிந்த தலங்களுமல்ல
அண்டமும் பிண்டமும் அல்ல
அகார வுகார சிகாரமுமல்ல
மண்டலம் மூன்றதுமல்ல
மறைவாக நின்றாடும் வாசியுமல்ல
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹுமானைக் கண்டு கொண்டேனே!

கண்டதும் கேட்டதும் தானே – அங்கு
கருதி முடிந்த தலங்களும்தானே
அண்டமும் பிண்டமும் தானே
அகார வுகார சிகாரமும்தானே
மண்டலம் மூன்றதும் தானே
மறைவாக நின்றாடும் வாசியும்தானே
அன்றாதி எங்கும் நிறைந்து –
என்னை ஆளும் றஹுமானைக் கண்டு கொண்டேனே!

إنّ هذاالشيخ فير محمد ولي ﷲ ذكر فی الأبيات المذكورۃ التشبيه والتنزيه. القصيدۃ الأولی تشير إلی التنزيه والثانيۃ تشير إلی التشبيه.ألا تری أنّه نفی فی القصيدۃ الأولی كلّ شيئ عن الذّات المقدَّسۃ وأثبته للذّات فی القصيدۃ الثانيۃ. يقول مشائخ تكّلي أنّ للشّيخ فير محمد ولي ﷲ كتبا كثيرۃ تجاوز مأۃ ملأها كلّها بوحدۃ الوجود علی أسلوب خاصّ له. فمن أراد أن يعرف وحدۃ الوجود علی أسلوبه فليطالعها.

அஷ்ஷெய்கு அப்துர் றஷீத் கோயா தங்கள் (மௌலானா வாப்பா) அல் அந்தரூதீ அவர்கள்.

الشيخ السيد عبد الرشيد العنطرودي قدس سره، وهذاالشيخ صاحب الكرامات كأجداده، وهو الشيخ الثاني لهذاالفقير الحقير،

وذات يوم ذهبت لملاقاته إلى بيت من مريد من مريديه ببلدي كاتانكذ، وهو بيت الحاج عبد المجيد وكان الشيخ فى ذلك الوقت جالسا على كرسي وحوله بعض المريدين له، وكان يكلمني ويكلم مريدين، ثم نام برهة وهو على الكرسي، ولما استيقظ قال بصوت خفيف ” نام الله ثم استيقظ” سمعت صوته أُذُنَايَ فقط، ولم يسمعه أحد من الحاضرين،

ولا يخفى على العاقل الحاذق أن قول الشيخ المذكور فيه معاني وحدة الوجود، وهي أن النائم واليقظان فهما الله تعالى لا غيره لعدم الغيرية،

كان الشيخ عبد الرشيد رحمه الله يظهر معاني وحدة الوجود على هذا الاُسلوب وإن لم يُصَرِّحْ بها فى المجالس، وكان هذاالشيخ يُنْشِد قصائدَ عربيَّة حين يُجرِي الرواتب كما تأتي،

على المِيمِ فرقٌ بين أَحَدٍ وأحمَدِ
وإلا فكيف الحقُّ يُعرَفُ ويُقْصَدُ

والمعنى لهذاالبيت أن الميم التي فى لفظة أحمد إذا حذفت صارت أحد، والميم هي الفارقة بين أحد وأحمد، وهي ميم الشريعة، وقد جاء فى الخبر ” أنا أحمد بلا ميم ” والعارفون والصوفيون يستدلون بهذاالخبر – الحديث – وإن لم نر له أصلا وسندا صحيحا، ولكن لا ننكره ولانردُّه لأن العارفين ملهمون، والإلهام موجود فى الإسلام ومقبول لدلالة الأحاديث النبوية والآيات القرآنية عليها، قال الله تعالى وعلمناه – الخضر عليه السلام – من لدنا علما،

தங்கள் வாப்பா அன்னவர்கள் “வஹ்ததுல்வுஜுத்” ஞானத்தை தெளிவாகக் காட்டக்கூடிய பாடல்களை அதி
கமாகப் படிப்பார்கள்.அதுமட்டுமல்ல. “ரிபாயீ றாதிப்” செய்யும் போதும் அழகிய குரலில் “ஜத்பு” உடைய நிலையில் பாடுவார்கள்.

மேற்சொன்ன கவியின் சுருக்கமாகிறது அல்லாஹ்வுக்கும், றஸுலுக்குமிடையில் “மீம்” என்ற ஓர் எழுத்து மட்டுமே பிரிவைக் காட்டுகின்றது. அந்த மீம் என்ற எழுத்து இல்லையானால் அஹதும்,அஹ்மதும் ஒன்றுதான்.أنا أحمد بلاميم நான் “மீம்” இல்லாத “அஹ்மத்” என்றும், أنا عرب بلا عين “ஐன்” இல்லாத அறபீ என்றும் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக சொல்லப்படுகின்றது. அதாவது இறைஞான மாகான்கள் இவ்வாறு சொல்கிறார்கள்.

நான் “மீம்” இல்லாத அஹ்மத் என்றால், நான் “அஹத் ” அல்லாஹ் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதாக கருத்து வரும். நான் “ஐன்” இல்லாத அறப் என்றால் “நான் றப்பு” என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதாக கருத்து வரும்.

ஞான மகான்கள் அல்லாஹ்வும், றஸுலும் ஒன்றுதான் என்ற தத்துவத்தை நிறுவுவதற்காக இவற்றை ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

ஆனால் ஹதீதுக் கலையோடு தொடர்புடைய சிலர் இவ்விரண்டும் ஹதீதுகள் அல்ல என்று திட்டவட்டமாகச் சொல்லியுள்ளார்கள்.

இவ்விரண்டும் ஹதீதுகள் அல்ல என்று கூறுவோர் ஹதீதுக் கலை மேதைகளாயிருந்தாலும் ஸுபி மகான்களின் இடத்தில் இவர்களை இருத்தி வைத்து நோக்க முடியாதென்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.அல்லாஹ் மிக அறிந்தவன்.

மேலும் அவர்கள் பாடி வந்த கவிகளில் பின்வரும் கவிகள் அனைத்திலும் ” வஹ்ததுல்வுஜுத்” எல்லாம் அவனே என்ற சத்தியக் கொள்கை மிகத் தெளிவாக சிறுபிள்ளைகளுக்கும் விளங்கக் கூடய வகையில் கூறப்பட்டுள்ளது.

وَلَسۡتَ تَنَالُ الذَّاتَ مِنۡ غَيۡرِ مَظۡهَرٍ
فَكُنۡ طَالِبًا حَقًّا بِمَظۡهَرِ تُرۡشَدُ

ஒரு “மள்ஹர்” இன்றி நீ அல்லாஹ்வை அடைந்து கொள்ள மாட்டாய். எனவே அல்லாஹ்வை ஒரு “மள்ஹர்” மூலம் நீ தேடிக் கொள்.நல்வழி பெறுவாய்.

இதன் சுருக்கமான விளக்கம் அல்லாஹ்வை ஏதேனும் ஒரு “மள்ஹர்” மூலம்தான் காணலாமே தவிர அது இல்லாமல் காண்பதானது அசாத்தியமேயாகும்.

உதாரணம் தங்கம் என்பது போன்று. தங்கம் என்று ஒன்று இருப்பது உண்மைதான்.அதை யாரும் மறுக்க மாட்டார்கள். மறுக்கவும் முடியாது. அதைக் காண்பதாயின் ஏதோ ஒரு பொருளாகவே காணலாம். உதாரணமாக மோதிரம்,மாலை, காப்பு போன்ற நகைகளாக அல்லது “பிஸ்கட்” தங்க கட்டியாகவே காணலாம். இவ்வாறின்றி “தங்கம்” என்பதை தனியே காண முடியாது. இதே கருத்துதான் மேற்கண்ட பாடலில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறுதான் அல்லாஹ்வை காண்பதுமாகும். அவனை – அவனின் “வுஜுத்” என்ற உள்ளமையை மனிதனாக,மரமாக,சந்திரனாக காணலாமே தவிர இவ்வாறின்றி அல்லாஹ்வை எந்த ஒரு பாத்திரமும் இல்லாமல் காண்பது அசாத்தியமே.

لَقَدۡ جَاءَ مَوۡلَانَا بِصُوَرَۃِ أَحۡمَدٍف
وإلَّا فَكَيۡفَ الرَّبُّ يُعۡبَدُ ويُقۡصَدُ

எங்களின் எஜமானாகிய அல்லாஹ் “அஹ்மத்” முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் “ஸுறத்” உருவத்தில் வந்தான். இவ்வாறின்றேல் “றப்பு”வாகிய அல்லாஹ்வை எவ்வாறு வணங்கப்படும்? எவ்வாறு நாடப்படும்?

அல்லாஹ்வை ஒரு பாத்திரத்தின் மூலம் தான் காண முடியும்மென்று முதலாவது பாடல் கூறியது போல் அவனே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாக வந்தான். வந்தான் என்றால் “தஜல்லீ” அந்த வடிவத்தில் – உருவத்தில் “தஜல்லீ” வெளியானான்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாக வந்தவன் அவனேயன்றி அவன்வேறு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வேறு என்பது கருத்தல்ல.

அல்லாஹ் மட்டுமே தனக்குத் தானான சுயமான “வுஜுத்” உள்ளவனாவான். அவன் தவிர எதுவுமே சுயமான “வுஜுத்” உள்ளதல்ல. அவனல்லாத எல்லாமே அவனின் “வுஜுத்” கொண்டுதான் நிலை பெற்றுள்ளன.அவன் மட்டுமே قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிலைபாடானவன் ஆவான். சிருட்டிகள் – அவனின் வெளிப்பாடுகள் அனைத்தும் அவனைக் கொண்டே நிற்கின்றன.قَائِمٌ بِهِ تَعَالَى

சிருட்டி என்பது قَائِمٌ بِهِ تَعَالَى அல்லாஹ்வை கொண்டு நிற்கின்றது என்றால் விழப்போகும் ஒரு மரம் முட்டைக் கொண்டு நிற்பது போல் சிருஷ்டிக்கு அல்லாஹ்வை ஒரு முட்டாக கற்பனை செய்து விளங்குவது அறியாமையும், தெளிவான “ஷிர்க்” இணைவைத்தலு மேயாகும் .

ஆகையால் அவ்வாறு விளங்கிக் கொள்ளாமல் பாய் என்பது பன்னைக் கொண்டு நிற்பது போன்றும்,ஷேட் என்பது பஞ்சைக் கொண்டு நிற்பது போன்றும், மோதிரம் என்பது தங்கத்தைக் கொண்டு நிற்பது போன்றும் என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒரு மரம் முட்டைக் கொண்டு நிற்கின்றது எனபதற்கும்,பாய் பன்னைக் கொண்டு நிற்கின்றது என்பதற்கும் வேறுபாடு உண்டு. முந்தின உதாரணத்துக்கு இரண்டு பொருட்கள் தேவை. அவை மரம் ,முட்டு என்பதாகும் இரண்டாம் உதாரணத்துக்கு ஒரு பொருள் மட்டுமே தேவை.அது “பன்” என்பதாகும்.பன்,பாய் என்று இரு பொருட்களின் பெயர்கள் சொல்லிக் கொண்டாலும் பொருள் ஒன்று மட்டும்தான் .அது “பன்” ஒன்று மட்டுமே.

تَجَلَّی إِلٰهٌ ذَاكَ شَكۡلَ مُحَمَّدٍ
إِذَا ما تَجَلَّی الۡحَقُّ أَيۡنَ مُحَمَّدٌ

அல்லாஹ் முஹம்மத் ஸல்லல்லஹு அலைஹிவஸல்லம் அவர்களின் “ஷக்ல்” தோற்றத்தில் – உருவத்தில் வெளியானான்.அவன் வெளியானால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எங்கே? அல்லாஹ் வெளியானால் முஹம்மத் என்று ஒருவர் இல்லை.அல்லாஹ்தான் இருப்பான். இதன் விபரம் ஆழமானது. என்போன்ற திரையில் மாட்டிக் கொண்ட சிறுவர்களால் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. மௌலானா வாப்பா போன்ற மகான்களாலேயே இதற்கு விளக்கம் கூற முடியும்.

وَإِنۡ نَظَرۡتَ إلَی الۡحَقِيۡقَۃِ ذَاتَنَا
وَاَنَا وَاَنۡتَ هُنَاكَ شَيۡئٌ وَاحِدٌ

நீ எதார்த்தத்தில் எங்களின் “தாத்” உள்ளமையை பார்த்தால் அங்கே நீயும், நானும் ஒன்றேதான். ஒரே வஸ்த்துத்தான். இரண்டில்லை.

எதார்த்தத்தில் அல்லாஹ் தவிர அவனுடன் வேறு எந்த ஒரு வஸ்த் துவுமே இல்லை.لوكان فيهما آلهۃ إلا ﷲ لفسدتا வானங்கள்,பூமியில் அல்லாஹ்வுக்கு வேறான “இலாஹ்” தெய்வங்கள் இருந்தால் அவ்விரண்டும் – வானமும் பூமியும் கேட்டை
அடைந்திருக்கும்.வானங்கள் பூமியில் பல தெய்வங்கள் இருந்தும் கூட அவ்விரண்டும் கேட்டை அடையாமலிருப்பதற்கு காரணம் அவை அல்லாஹ் தானானவையாக இருப்பதேயாகும். அல்லாஹ்வுக்கு வேறானவையாக இருந்தல் தான் அவ்விரண்டும் கேட்டை அடைந்திருக்கும்.

இதன் மூலம் வணங்கப்படுகின்ற எத்தனை தெய்வங்கள் எங்கு இருந்தாலும் அவை அல்லாஹ் தானானவையே தவிர அவனுக்கு வேறானவையல்ல. இதுவே திருக்கலிமாவான لاإله إلاﷲ என்ற வசனத்தின் தத்துவமாகும்.

மௌலானா வாப்பா பாடிய மேற்கண்ட பாடல்கள் யாரால் இயற்ப்பட்டது என்பது எமக்குத் தெரியாது போனாலும், “ரிபாயீ” றாதிப் சபையில் பலர் மத்தியில் பகிரங்கமாக பாடியவர்கள் சங்கைமிகு ஷெய்குனா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா என்பதை “தரீகா” வோடு தொடர்புள்ள அனைவரும் அறிவர்.

மேற்கண்ட கருத்துக்கள் யாவும் “வஹ்ததுல்வுஜுத்” ஞானத்தோடு தொடர்புள்ளவை என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

“வஹ்ததுல்வுஜுத்” ஞானம் “குப்ர்” என்றால்,”ழலாலத்” என்றால் சங்கைமிகு தங்கள் வாப்பா யார்?

“வஹததுல்வுஜுத்” ஞானம் வழிகேடென்று கூறி,தங்கள் வாப்பாவிடம் “பைஅத்” செய்து கொண்ட நல்லடியார்களை திசை திருப்பி வருகின்றவர்கள் யார்? இவர்கள் ஷெய்குமார்களா?

இவர்கள் தங்கள் வாப்பாவைக் கூட மறை முகமாக வழிகேடர் என்று செல்லி விட்டார்களே! இவ்வாறு சொன்னவர்களின் சொல்லைக் கேட்டுவருகின்ற மௌலானா வாப்பாவின் முரீதுகளுக்கு இன்னுமா ரோசம் வரவில்லை? இவர்கள் சோறு சாப்பிடவில்லை.வைக்கோலையே சாப்பிடுகிறார்கள்.

وهذاالشيخ السيّد عبد الرّشيد نوّرﷲ مرقده صاحب كرامات، وصاحب أخلاق فاضلة، وقائل بوحدة الوجود، ومؤمن بها، كان هذاالشيخ مع أبناء بلدي كاتّانكودي كإخوة من أسرة واحدة، وكان مع أبناء كاتّانكودي كما كان النّبيّ صلى الله عليه وسلّم مع أبناء مكّة قبل البعثة،

ولمّا أيّد الشيخُ عبدُ الرّشيد رحمه الله يَدِيْ فى أمر وحدة الوجود كان العلماء الجاهلون بوحدة الوجود يُعاديه ويُظهرون عداوتهم له، كما أظهر كُفّار قريش عداوتَهم للنّبيّ صلّى الله عليه وسلّم بعد البعثة، وكان الشيخُ هذا إلى آخر نَفَسِه يؤيّد يدي – يد وحدة الوجود، وكان يُوصي مريديه قبل وفاته بلزوم صحبتي، وكان المريدون كلّهم فى قبضته فى حياته، ولكن وقع الإختلاف بينهم بعد انقاله رحمه الله،

أيها العلماء المنكرون لوحدة الوجود ما رأيكم عن السيد الشيخ عبد الرشيد القادري والرفاعي؟ أهو مشرِك أم مؤمن؟ وما فتواكم؟ وما فتواكم عن المريدين للشيخ المنتشرين فى الهند وفى سري لنكا؟

RELATED ARTICLES

Most Popular

Recent Comments