சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 72வது பிறந்த தினமன்று நடைபெற்ற காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், துஆப் பிரார்த்தனை நிகழ்வும்
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் அதிசங்கைக்குரிய ஆன்மீகத் தந்தை அல் ஆரிப்பில்லாஹ் மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்கள் 05.02.2016 அன்று தங்களின் 72வது வயதினைப் பூர்த்தி செய்ததை முன்னிட்டு, அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றை எமது காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சுன்னத்
Read More31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.01.2016 – 31.01.2016 வரை 3 தினங்கள் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்னார் பேரிலான திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸ், குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாக்களால் சன்மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பெரிய துஆ ஓதப்பட்டு
Read Moreகுழப்பத்தை தூண்டுகிறது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா! காத்தான்குடி பொதுமக்களே விழிப்புடன் இருங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு இலங்கை முஸ்லிம் சமூகம் ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறை சார்ந்த சமூகமாகும். ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறையை பின்பற்றும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கை, தரீக்கா வழி முறை தொடர்பான பிழையான விளக்கங்கள், அடையாளப்படுத்தல்கள் அண்மைக்காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஸூபிஸம் என்பது இஸ்லாத்தின்
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 12 அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு பறகத் பெறுதல். அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீர் கொண்டும், அவர்களின் அருட் கரங்கள் கொண்டும், அவர்களின் பிரார்த்தனை கொண்டும் அருள் பெறுபவர்களில் மிக விஷேடமானவர்கள் ஸெய்யிதுல் முபஸ்ஸிரீன் அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
Read Moreஅல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்!? இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான்!?
மீலாதுன் நபீ ஆன்மீகப் பரிசு தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ “அல்லாஹ் “அர்ஷில்” சரிசமமாக அமர்ந்துள்ளான்” என்று சிலரும், அவன் தூண் துரும்பு உள்ளிட்ட அனைத்து சிருஷ்டிகளிலும் இருக்கின்றான் என்று வேறு சிலரும், அவன் எல்லாமாயும் இருக்கின்றான் என்று இன்னும் பலரும் கூறி வருகின்றார்கள். மேற்கண்ட மூன்று வகை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவை சொன்னவர்களேயாவர். வாதம் 1 : அல்லாஹ் “அர்ஷ்” என்ற (சிம்மாசனத்தில், கதிரையில்)
Read Moreபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2015
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாறஸூலல்லாஹ் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ் அஹதவனின் தூதாய், காதமுன் நபீயாய், காரிருள் நீக்க வந்த இறை ஜோதியாய் அவனியில் அவதரித்த அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த பொன் நேரத்தை வரவேற்கும் நன்நோக்கில் 24.12.2015 (வியாழக்கிழமை) அன்று காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருமுடிகள் தரிசன நிகழ்வும், சங்கை நபீகளார் மீது ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், ஈத்
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸின் இறுதி நாள் நிகழ்வுகள்
அகிலத்தாருக்கு அருளாய் அவனியி்ல் அவதரித்த அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் நடைபெற்ற மௌலித் மஜிலிஸின் இறுதி நாள் நிகழ்வுகள்… மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ல் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான கேடயங்கள் வழங்கும் நிகழ்வு தீன்நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் நடைபெற்ற மாகந்தூரி நிகழ்வுகள்
Read Moreமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது
மனிதகுல மாணிக்கம் மன்னர் நபீகள் அவதரித்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யபட்ட மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் 19.12.2015 (சனிக்கிழமை) காத்தான்குடி-06 தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. எம்மால் நிர்ணயிக்கப்பட்ட 08 போட்டி நிகழ்வுக்காக விண்ணப்பித்த 70ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டார். வெற்றிபெற்ற
Read Moreதிருமுடிகள் தரிசன நிகழ்வு தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில்…
அருள் மணம் வீச அவனியில் அவதரித்த ஆருயிர் நாதர், நற்குணத்தின் வேந்தர், நபீகள் கோமான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளையும், வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் திருமுடிகளையும் தரிசித்து அருள் பெற்று மனம் மகிழும் இனிய நிகழ்வு றபீஉனில் அவ்வல் பிறை 06 வியாழக்கிழமை இரவு (17.12.2015) அன்று காத்தான்குடி-06 தீன் நகரில் தௌஹீதின் கோட்டையாய் திகழும் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக
Read More