ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 75வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 75வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2019 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
Read Moreசிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்
“உலகிலுள்ள சகல சிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக்கவனிப்பது கொண்டு, அல்லாஹ் தானாகவே இருக்கின்றன. எனினும், வெளியமைப்பைக்கவனிப்பது கொண்டு மட்டும் நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப்பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது. உதாரணமாக, நீர் குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பன போன்று இவை அனைத்தும் (வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும்) இவற்றுக்கு மூலமாயி ருப்பது தண்ணீர்தான். இதேபோல் கானல் நீர் யதார்த்தத்தில் ஆகாயம் (காற்று) தான். அதுவே கானல் நீரின் தோற்றத்தில் வெளியாகியுள்ளது.”
Read More28வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 18.01.2019 தொடக்கம் 20.01.2019 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.
Read Moreவைத்தியக் கலாநிதி பதுரியா பூஞ்சோலை வருகிறார்
காத்தான்குடி 05 பத்ரிய்யாஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹக்கீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் 28வது வருட கந்தூரி தினத்தில் வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம். 20.01.2019 முத்துப்பேட்டையின் முத்தே! வைத்தியக் கலாநிதியே! ஷெய்குத்தவா ஹகீமே! ஷெய்கு தாவூதே!
Read Moreஅல் ஆரிபு பில்லாஹ் அல்குத்புஷ் ஷெய்கு அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு
ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ ———————————– அவர்கள் சிறப்பு மிக்க “ஸெய்யித்” உம், இஸ்லாத்தின் பால் நேர்வழி காட்டக் கூடியவர்களும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருக் கரத்தை முத்தமிட்ட பெருமைக்குரியவர்களுமான அபுல் அப்பாஸ் அஹ்மத் அர் றிபாஈ அல் கபீர் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள. அன்னவர்களின் சங்கைமிகு வமிசத் தொடர் ஸெய்யிதுனா ஹுஸைன் ஷஹீதே கல்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களைப் பின்வருமாறு சென்றடைகின்றது. இப்னுஸ் ஸெய்யித் அஸ் ஸுல்தான் அலீ அபில்
Read More17வது வருட ஷெய்குல் அக்பர் நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 04.01.2019 வெள்ளிக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது.
Read Moreஅஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அவர்களின் தந்தை அலீ என்பவர் ஆகும். ஸ்பெய்ன், ஹாதிம் தாஈ வமிசத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபிய்யாக்களிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்று பெயர் பெற்றவர்கள். பூமி மத்தியின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் “அலிப், லாம்” இல்லாமல் “இப்னு அறபீ” என்று பிரபல்யமானவர்கள். காரணம் அந்த மக்கள் அல் காளீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களை விட்டும் வேறுபடுத்தி அறிவதற்கேயாகும். மொரோக்கோ வாசிகளிடம் “இப்னுல் அறபீ” என்பதாகும். (“அலிப்” “லாம்” சேர்த்து).
Read More34வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2018 நிகழ்வுகளின் தொகுப்பு
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 21.12.2018 தொடக்கம் 23.12.2018ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 34வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது.
Read More17வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2018
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக 21.11.2018 புதன்கிழமையன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகள், திருப்பாத சுவடு தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள்
Read More