32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி திருக்கொடியேற்ற நிகழ்வு 2018
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் நிகழ்வு திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் நிகழ்வுகளின் தொகுப்பு.
Read Moreஅருள் மணம் கமழும் றிபாஈ றாதிபும், கந்தூரியும்.
ஸுல்தானுல் ஆரிபீன் அஸ் ஸெய்யித் அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் புனித “தஹறா” றாதிப் மஜ்லிஸும், அருள் மிகு கந்தூரியும் 28.04.2018 – சனிக்கிழமை (ஞாயிறு இரவு) மாலை 07 மணி முதல் 11 மணி வரை தௌஹீதின் தளம் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக கறாமத் கடல் “அஸ் ஸெய்யிதுஷ் ஷெய்கு, அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில் அப்துர் றஷீத் அல்
Read More41வது வருட புகாரீ ஷரீப் தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 41வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 15.03.2018 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 13.04.2018 திகதியன்று நிறைவடைந்தது. இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன்,
Read Moreவிஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2018
அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸ் 22.03.2018 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதே போன்று கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத்
Read More41வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமும், 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அலுவலகத் திறப்பு விழாவும்
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 15.03.2018 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இப்புனித மஜ்லிஸ் ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு
Read Moreகொள்கைக்காக உயிர் வாழ்வோம்
கவிதை – மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அருளே அல்லாஹ் அருவுருவானோன் இதய இருளை நீக்கும் ஒளிமயமானோன் கருவாய் அகிலம் அனைத்தும் ஆனோன் உருவாய் உள்ளவை எல்லாம் ஆனோன் கருவின் உருவாய் கல்கின் முதலாய் திருவாய் மலர்ந்த முஹம்மது நபியை மரகத கவி மணி மாலை சூடி முறையுடன் புகழ்ந்தேன் பாக்கள் பாடி அப்தால் பிரிவில் தோன்றிய நாதர் அப்துல் ஜவாத் எனும் அருந்தவ சீலர் ஒப்பார் இல்லா இன்ஷான் காமில் உஸ்தாத் நாமம் ஓதினேன் பணிந்து
Read More70வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 70வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 23.03.2018 தொடக்கம் 25.03.2018ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக 23.03.2018 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு இரு நாதாக்கள் பேரிலான திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின்
Read Moreஇமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 616ல் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸியா” என்ற ஊரில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள். பின் தூனுஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கே இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ நாயகத்திடம் “தஸவ்வுப்” ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இமாம் ஷாதுலீ அவர்கள் தூனுஸ் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டபோது அவர்களுடன் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும் வெளியேறி எகிப்துக்கு வந்தார்கள். இஸ்கந்தரிய்யஹ் நகரில் தரித்து தனது குருநாதர் இமாம் ஷாதுலீ அவர்களின் “ஷாதுலிய்யஹ்” தரீகஹ்
Read Moreஅஷ் ஷெய்குல் ஆரிபு பில்லாஹ் அப்துர் றஹ்மான் (கம்பம் அப்பா – அம்பா நாயகம்) றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். (அம்பா நாயகம் பற்றி ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்ருஹு அன்னவர்கள்)
இவர்கள் பகிரங்க அற்புதங்கள் நிகழ்த்தும் தங்களின் தந்தை முஹம்மத் ஸஈத் அல் ஜல்வதீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் திறமை மிக்க ஒரு மார்க்க அறிஞரும், “தஸவ்வுப்”, இறை ஞானக் கலையில் வேரூண்டிய மகானும் ஆவார்கள். அவர்களுக்கு நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு அலாகஹ் – தொடர்பு உண்டு. இவர்களும் தனது தந்தை போன்று அற்புதங்கள் உடைய மகானாவார்கள். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்று அதைப்
Read Moreஇமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் கனீ ஆகும். அவர்களின் தந்தை இஸ்மாயீல் அவர்களும், அவர்களின் தந்தை அப்துல் கனீயுமாகும். டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள். ஹனபீ மத்ஹபைப் பின்பற்றியவர்களுமாவர். தன்னுடைய முன்னோர்கள் போன்று “அந் நாபலஸீ” என்று பிரபல்யமானவர்கள். ஹிஜ்ரீ 1050 ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து, அங்கேயே தனது தந்தையான இப்னு அறபீ நாயகத்தின் வழி செல்லும் ஸூபீ அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தனக்கென்று ஓர் இடத்தைப்
Read More