தென்னிந்திய இஸ்லாமியப் பாடகர் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்களின் இலங்கை விஜயத்தின் தொகுப்பு
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இறைஞான, இஸ்லாமியப் பாடகர் A. ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்கள் சிங்கப்பூரிலிருந்து கடந்த 21.12.2016 அன்று இலங்கைத்திருநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். இவ்விஜயத்தி்ல் காத்தான்குடி, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று இறைஞான கீதங்களை பாடி மக்களை மகிழ்வித்தார்கள். குறிப்பாக அல் ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களை புகழ்ந்து பாடி, ஸியாறத் செய்து அருள் ஆசிகளையும், சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
Read Moreநபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடி , வேறு பொருட்களை நினைவுச் சின்னங்களாகப் பாவிக்கலாமா?
ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர் அகிலம் சிறந்தோங்க நன் நெறிகளைப் புகட்டி , மேலான வாழ்வில் மனிதர்களை நிலை நிறுத்துவதற்கு அல்லும் பகலும் பல தியாகங்களை மேற் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த திங்களில் நாம் வீற்றிருக்கின்றோம். அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நான் கீழ்க்காணும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிரசிலிருந்து நாவிதர் திருமுடியை எடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழவிருக்கும்
Read Moreஇறைஞான கீத நிகழ்வு
தென்னிந்தியாவின் பிரபல இஸ்லாமியப் பாடகர், இறைநேசர்களின் புகழ் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அன்னவர்கள் கலந்து சிறப்பிக்கும் “இறைஞான கீதங்கள்” பாடும் இனிய நிகழ்வு 22.12.2016 வியாழக்கிழமை இன்றிரவு 7:00 மணி 9:30 மணி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
Read More15 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 13.12.2016 செவ்வாய்க்கிழமையன்று புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி நாயகம்
Read Moreதிங்கள் நபீயைப் புகழாதவன் துர்ப்பாக்கியம் பெற்றவனே!
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ , மிஸ்பாஹீ அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இறை கருவூல மன்னவர், கயல் விழிக்கண்ணவர், கற்கண்டுத் தேனவர், இவ்வகிலத்தின் நாயகர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த கண்ணியம் பூத்த புண்ணிய ‘ரபீஉல் அவ்வல்’ மாதத்திலே நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! இம்மாதத்தில் மிக விஷேடமாகவும், அதிகம் அதிகமாகவும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மாண்புகளையும், கீர்த்திகளையும் புகழ்ந்து பாடுவதும், அன்னவர்கள்
Read Moreதிருமுடிகள் தரிசன நிகழ்வு
அகிலத்தாருக்கு அருட்கொடையாய் அகிலத்தில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் நடைபெற்று வருகின்ற மௌலித் மஜ்லிஸ் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக 04.12.2016 ஞாயிற்றுக்கிழமையன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், குத்புல் அக்தாப் முஹ்யி்த்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பி.ப 2:30 மணியளவில்
Read Moreபூமான் நபீயின் புகழ் கூறும் புனித றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ்கள் ஆரம்பம்
நபீகட்கரசர், நவரத்திணம் பூண்டவர், நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களில் 30.11.2016 புதன்கிழமை
Read Moreஷெய்குனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகமும், ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீயும்
ஆக்கம் – அபுன் நூர் – தொடர்-1. வஹ்ததுல் வுஜூத் பிழையான கொள்கை என அதனை அறியாத ஸுன்னத்வல்ஜமாத் உலமாஉகளும் எண்ணிக்கொண்டுருப்பதால் இந்தியாவிலுள்ள பெரியார்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்காட்டி இச்சத்தியக்கொள்கைக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்ற நல்லெண்ணம் ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்களுக்கு உதித்தது. அதற்காக “அல் கிப்ரீதுல் அஹ்மர்” (சிவப்புக்கெந்தகம்- இது ஷெய்ஹுல் அக்பர் அவர்களின் சிறப்புப்பெயர்) என்ற பெயரில் வஹ்ததுல்வுஜூத் விளக்கங்கள் அடங்கிய பத்வா ஒன்றினை ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்கள் தயாரித்தார்கள். இப்பத்வாவினை எடுத்துக்கொண்டு தனது நண்பர் மெளலவீ இஸ்மாஈல்
Read More20வது வருட தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 20வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 25.11.2016 அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 4:45 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக மஃரிப் தொழுகையின் பின் “அல் கஸாயிதுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதிர்
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்
இறையொளி எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனிதமிக்க றபீஉனில் அவ்வல் மாதத்தினை சிறப்பித்து வருடாவருடம் காத்தான்குடி-06 தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வு இவ்வாண்டு 40வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காகவும், மௌலித் மஜ்லிஸுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் 18.11.2016 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகையின் பின் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் மற்றும் இறைநபீ நேசர்களுக்கான பொதுக் கூட்டம்
Read More