குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 28வது வருட கந்தூரி நிகழ்வுகள்…
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் இணைநிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கம் நடாத்தும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 28வது வருட கந்தூரி எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 23.02.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையின்பின் புனித முஹ்யித்தீன் மௌலித் ஓதப்பட்டது. இஷாத்தொழுகையின்பின் பயான்நிகழ்வு இடம்பெற்று தபர்றுக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ் நிகழ்வுகள் உள்ளே…!
Read Moreசிறப்பு காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும்,ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகளும்
காதிரிய்யஹ், நக்ஷபந்திய்யஹ் தரீகஹ்களின் ஷெய்க் நாயகம் கலாநிதி ஷம்ஸுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகள் 05.20.2013 செவ்வாய் மாலை புதன் இரவு இஷாத் தொழுகையின்பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வகள் அனைத்தும் மிஸ்பாஹீ நாயகமர்களின் முரீதீன்களின் சபையான காதிரிய்யஹ் திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 8.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகள் 11.00 மணியளவில் நிறைவுற்றன. இவ்விழாவின்
Read Moreபூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2013
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 25.01.2013 வௌ்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து சுப்ஹ் தொழுகை வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய இருநூற்கள் இம்மஜ்லிஸில் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாக அலுவலகமும் அன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளே…
Read Moreபுனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்
அல்ஹாஜ் அப்துல் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், இப்றாஹீமிய்யஹ் குர்ஆன் மத்ரஸா, றஹ்மானிய்யஹ் குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றில் புனித றபீஉனில் அவ்வல் மாத்தத்தினைச் சிறப்பிக்குமுகமாக பூமான் நபீ புகழ்கூறும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 12 தினங்கள் நடைபெற்று 24.01.2013 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்! புகைப்படங்கள் உள்ளே… மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத் இப்றாஹீமிய்யஹ் குர்ஆன் மத்ரஸா றஹ்மானிய்யஹ் குர்ஆன் மத்ரஸா
Read Moreமனித உயிர்களைக் காக்க உதவும் இரத்ததான நிகழ்வு – 2013
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I.அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வில் அஷ.ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின்
Read Moreகத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.
முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் – ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். அதிகாலை 3.00 மணிக்கு இஸ்லாமிய ஞாபகார்த்த சின்னமாகிய புனித கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிய
Read Moreவாழ்த்துகிறோம்….
மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம். ஸம்ஸ் மீடியா யுனிட் ஸம் இணைத்தளம்
Read Moreஅஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் – இலவச பாட நூல் விநியோகம் 2012
இடம் – காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். திகதி – 26.12.2012 வழங்கப்பட்டோர் தொகை – 1000 மாணவர்கள். பிரதேசம் – காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம். அதிதிகள் – 01. பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளவாயலின் தலைவர் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ J.P 02. றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MMA.மஜீத் றப்பானீ 03. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லீ பாறூக். 04. காத்தான்குடி பரீட் பௌன்டேசன் பணிப்பாளர் KLM. பரீட்
Read Moreஇஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) (Justice of The Peace Whole Island) “கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்” என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்”
Read Moreநினைவுதின நிகழ்வு
இந்தியாவின் தமிழ் நாட்டின் பாசிப்பட்டணம் எனும் ஊரில் கொழுவீற்றிருந்து பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் செய்யிதினா பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் அன்னாரின் அருமைத் தகப்பனார் ஷெய்ஹு முஹம்மத் (றாவுத்தர் ஸாஹிப் மௌலானா) அன்னவர்களினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் 28.11.2012 அன்று நடைபெற்ற அவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளைம், இப்புனித மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்டு ஆத்மீக உரை நிகழ்த்திய சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களையும், தபர்றுக் விநியோகத்திற்காக தயாராகும்
Read More