இறைஞான கீத நிகழ்வு
தென்னிந்தியாவின் பிரபல இஸ்லாமியப் பாடகர், இறைநேசர்களின் புகழ் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அன்னவர்கள் கலந்து சிறப்பிக்கும் “இறைஞான கீதங்கள்” பாடும் இனிய நிகழ்வு 22.12.2016 வியாழக்கிழமை இன்றிரவு 7:00 மணி 9:30 மணி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
Read Moreதிங்கள் நபீயைப் புகழாதவன் துர்ப்பாக்கியம் பெற்றவனே!
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ , மிஸ்பாஹீ அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இறை கருவூல மன்னவர், கயல் விழிக்கண்ணவர், கற்கண்டுத் தேனவர், இவ்வகிலத்தின் நாயகர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த கண்ணியம் பூத்த புண்ணிய ‘ரபீஉல் அவ்வல்’ மாதத்திலே நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! இம்மாதத்தில் மிக விஷேடமாகவும், அதிகம் அதிகமாகவும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மாண்புகளையும், கீர்த்திகளையும் புகழ்ந்து பாடுவதும், அன்னவர்கள்
Read Moreஷெய்குனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகமும், ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீயும்
ஆக்கம் – அபுன் நூர் – தொடர்-1. வஹ்ததுல் வுஜூத் பிழையான கொள்கை என அதனை அறியாத ஸுன்னத்வல்ஜமாத் உலமாஉகளும் எண்ணிக்கொண்டுருப்பதால் இந்தியாவிலுள்ள பெரியார்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்காட்டி இச்சத்தியக்கொள்கைக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்ற நல்லெண்ணம் ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்களுக்கு உதித்தது. அதற்காக “அல் கிப்ரீதுல் அஹ்மர்” (சிவப்புக்கெந்தகம்- இது ஷெய்ஹுல் அக்பர் அவர்களின் சிறப்புப்பெயர்) என்ற பெயரில் வஹ்ததுல்வுஜூத் விளக்கங்கள் அடங்கிய பத்வா ஒன்றினை ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்கள் தயாரித்தார்கள். இப்பத்வாவினை எடுத்துக்கொண்டு தனது நண்பர் மெளலவீ இஸ்மாஈல்
Read Moreமாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!
அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்! மௌலவீ HMM. .இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும். ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே, 01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ
Read Moreகரம் பிடிப்போம்! கரை சேர்வோம்!!!
காற்றும் வந்தே சோபனம் சொல்லும் கடலலை யோசை காதினில் மெல்லும் காத்த நகரின் மகத்துவம் சொல்லும் கதிரொளி மிஸ்பாஹீ கதை சொல்லும்! கருவுக்குக் கருத்தும் சொல்லிய நாதர் கருவேதான் எல்லாம் என்றிட்ட சீலர் கருப்பொருள் அறியா மனிதரோ வீணர் காவியம் சொன்ன மிஸ்பாஹீ வாழீ! “கறாமத்”கள் அனந்தம் செய்திடும் ராஜர் காத்த நகர்வாழ் அற்புத சோழர் காத்திடும் எங்கள் ஜவாத்வலீ நாதர் கருவாய் மலர்ந்த மிஸ்பாஹீ வாழீ!
Read Moreமுரீதுகள் – சிஷ்யர்களுக்கான மாநாடு
அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு உம்றஹு) அன்னவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை – ஆன்மீக ஒப்பந்தம் செய்து கொண்ட “முரீதீன், முரீதாத்” ஆண்கள், பெண்களுக்கான மாநாடு 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை “மஃரிப்” தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-5 பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இம்மாநாடு அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களின் தலைமையில் மௌலவீ MS.அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பாகும்.
Read Moreஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.
மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ
Read Moreகாதிரிய்யஹ் திருச்சபை
மெளலவீ MMA. மஜீத் றப்பானீ தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான். நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான். எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள்
Read Moreமுரீதீன்கள் மாநாடு – 2016
காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்… முரீதீன்கள் மாநாடு – 2016 ——————————————- காலம் : 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை இடம் : பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05 நேரம் : பி.ப 6:00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை
Read Moreதியாகங்கள் செய்வோம்! இறைவனைக் காண்போம்!!!
கவி – மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) எல்லாம் அவனாய் இருந்திடும் இறையை துல்ஹஜ் மாதம் தோன்றிய பிறையை கண்டதும் எம்மில் அழித்திட்டான் கறையை அவனை நாமும் போற்றிட வாரீர்! நபிமார் அணியில் தோன்றிய நாதர் இறைவனின் சோதனை பெற்றிட்ட வேதர் “கலீலுல்லாஹ்” என்னும் பெயர் பெற்ற ராஜர் இப்றாஹீம் நபியின் சரித்திரம் கேட்பீர்!
Read More