பிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம்
ஸூபிஸத்தின் தளமாக இலங்கிக் கொண்டிருக்கும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஓர் அங்கமாக இன்று 09.11.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05:00 மணியளவில் பள்ளிவாயில் பிரதான குப்பாவின் ஆரம்பப் பணிகள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளின் பொறுப்பாளரும் இந்நாள் காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளருமான அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும், பத்ரிய்யஹ்
Read Moreபாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி நிகழ்வுகள் – 2014
இந்தியாவின் தமிழ் நாட்டில் பாசிப்பட்டணம் எனும் ஊரில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் செய்யிதுனா நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் தந்தை றாவுத்தர் ஸாஹிப் மௌலானா ஆகியோரினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 07.11.2014 (வெள்ளிக்கிழைமை) அன்று பி.ப 05:00 மணிக்கு திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்ற நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ மஜீத் றப்பானீ அவர்களின் துஆப் பிரார்த்தனையும், திருக்கொடியேற்ற நிகழ்வுக்காக ஒன்று சேர்ந்திருந்த மக்களின் முறாதிய்யஹ் முழக்கத்துடனும் கந்தூரிக்காக
Read Moreஆஷூறா தின சிறப்பு நிகழ்வுகள்
இஸ்லாமியப் புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்தொடர்ந்து 10 தினங்கள் ஓதப்பட்டு வந்த, ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் 03.11.2014 அன்று அஷூறா தின இரவோடு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆஷுறா தினத்தையொட்டி மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் விஷேட பயானும், இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரில் யாஸீன் சூறாவும் ஓதப்பட்டது நிறைவுபெற்றது. நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ஆஷுறா தினம் தொடர்பான முஸாதிக்
Read Moreஅழகொளிரும் ஸூபிசத் தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
இலங்கைத் திருநாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகு மிக்க கண்கவர் ஊரான காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் சத்தியக் கொள்கையை உயிர்பிக்கும் தளமாகவும், இஸ்லாத்தின் ஆணிவேரான ஸுபிஸக் கொள்கையை ஆணி்த்தரமாக எடுத்தியம்பும் கொள்கையின் சிற்பமாகவும் இயங்கி வரும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் அழகொளிர் காட்சிகள் சில……. புதிய கட்டிய நிர்மாணப் பணிகளின் போது…… அல்மத்றஸதுர் றப்பானி்ய்யஹ்,பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் ஆகிய இரு இறை சொத்துக்களின் ஸ்தாபகரும் ஆரிபுபில்லாஹ் அப்துர் மிஸ்பாஹீ தவப்புதல்வரின் அருமைத் தந்தையும், காத்தநகர் புகழ் சிறக்க
Read Moreஅல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் நூலகத் திறப்பு விழா
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காகவும், உலமாஉகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காகவும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் கட்டிடத்தில் றப்பானிய்யஹ் வாசிகசாலை எனும் பெயரில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உலமாகஉகளும், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். – அல்ஹம்துலில்லாஹ் –
Read Moreஇமாம் ஹுஸைன் (றழி) அவர்களின் மஜ்லிஸ் ஆரம்பம்.
ஷம்ஸ் மீடியா இணைய அபிமானிகள் அனவருக்கும் மலர்ந்திருக்கும் முஹர்ரம் 1436 நல் வாழ்த்துக்கள். முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்வாக ஷஹீதே கர்பலா ஸிப்துர் றஸூல் அல் இமாம் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரிலான புனித திருக் கொடி ஏற்ற நிகழ்வு இன்று இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இடம்பெற்றது. அதனை அடுத்து அவர்கள் பெயரிலான புனித மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது தொடர்ந்து 10 தினங்கள் இம்மஜ்லிஸ் நடைபெற
Read Moreமேலும் சில புகைப்படங்கள்.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு திரண்டுள்ள மக்கள் திரள்.
Read Moreஇரண்டாம் அமர்வு ஆரம்பம்
எமது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் இரண்டாம் அமர்வு ஆரம்பித்தது. நிகழ்வில் நடைபெற்று முடிந்த இஸ்லாமிய கீதத்தைத் தொடர்ந்து நகர சபைத் தவிசாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஜே.பீ. அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் பின் சங்கைக்குரிய தென்னிந்திய அறிஞர் பீ.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.
Read Moreமுதலாம் அமர்வுகளில் சில காட்சிகள்.
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் தொடர்பான முதலாம் அமர்வுகளில் சில காட்சிகள். இவ்வமர்வில் சங்கைக்குரிய மௌலவீ எம்.எம்.ஏ மஜீத் றப்பானீ அவர்கள் மௌலித் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். முதலாம் அமர்வு நிறைவுற்றுள்ளது இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வு இடம்பெறும். அமர்வில் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த சங்கைக்குரிய உலமாஉகள் உரையாற்றுவார்கள் நிகழ்வுகள் எமது இணையத்தளத்தில்நேரடி அஞ்சல் செய்யப்படுகிர்றது.
Read Moreஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள்.
இன்று மாலை 5.00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் முன்றலில் நடைபெற இருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மிக விமர்சையாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன அல்ஹம்துலில்லாஹ். இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது (www.shumsme.com) இனையத்தளத்தில் நேரடி அஞ்சல் (live) செய்யப்படும். அத்தோடு tmislam இணைய வானொலி ஊடாகவும் ஒலிபரப்பு செய்யப்பபடும். இந்நிகழ்வில் அனைத்துப் பொது மக்களும் கலந்து கொள்ளமுடியும். பெண்களுக்கு பிரத்தியோக இடவசதி செய்யப்ப்பட்டுள்ளது.
Read More