அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி – (காணொளி இணைப்பு)
சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்ஃபான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி கடந்த 11.08.2014 திங்கட்கிழமை அன்று சரியாக மாலை 05.00 மணிக்கு புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து அன்னவர்களது புனித அடக்கஸ்தலத்துக்கு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களாலும் ஏனைய உலமாஉகளாலும் போர்வை போர்த்தப்பட்டு; இறை நேசர் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது பறக்கத்தைக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரினதும்
Read Moreமுப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.
(நிகழ்வுகள் தொடர்பான காணொளியும் புகைபடங்களும் உள்ளே.) அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), ஆகிய முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி கடந்த 21/07/2014 திங்கள் பிற்பகல் செவ்வாய் இரவு புனித தறாவீஹ் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
Read Moreபத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி – 2014
பத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி கடந்த 14.07.2014 திங்கட்கிழமை அன்று (புனித றமழான் 17ம் இரவு) காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித தறாவீஹ் தொழுகையின் பின் திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மஜ்லிஸ் நிகழ்வுகளில் பத்ர் ஸஹாபாக்களின் புனித ”மௌலிது ஷுஹதாஉல் பத்ரிய்யீன்” ஓதப்பட்டு, பத்ர் ஸஹாபாக்களின் திரு நாமங்களும் வாசிக்கப்பட்டது. அதனை அடுத்து அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு
Read More28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.
வருடா வருடம் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்ற அஜ்மீர் அரசர் அதாயே றஸூல் குத்புல் ஹிந்த் கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும், அன்னவர்களது அருமை மைந்தர் ஸர்தாரே ஸர்வார் ஸாஹிபே ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும் ஹாஜாஜீ உர்ஸே முபாறக் மாகந்தூரி 28வது வருடமாக இவ்வருடமும் அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் கரீப் நவாஸ் பெளண்டேஷன் நிறுவனத்தால் மிக விமர்சையாக
Read More23 வது வருட ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகள்
இந்தியா – தமிழ்நாடு – முத்துப்பேட்டை- ஜாம்புவானோடையில் கொலுவீற்றிருந்து அருள்புரியும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 23 வது வருட கந்தூரி நிகழ்வுகள் காத்தான்குடி-05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 14.03.2014 – 16.03.2014 வரை தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு மிக சிறப்பாக நடைபெற்றது. இதன் முதல் நாள் நிகழ்வுகள் பி.ப. 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மௌலித் ஷரீப்
Read Moreமீண்டும் ஆரம்பமானது ஜும்அஹ் தொழுகை
சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமான காத்தான்குடி -05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 9 வருடங்கள், 3 மாதங்கள், 8 நாட்களாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குத்பஹ் – ஜும்அஹ் தொழுகை 14.02.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சங்கைக்குரிய மௌலவீ. HMM. இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் குத்பஹ் பிரசங்கம் நிகழ்த்த சங்கைக்குரிய மௌலவீ. ALM. இஸ்மாயீல் (பலாஹீ) அவர்கள் தொழுகை நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் ஆத்மீகப்
Read More29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்
29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி 14.02.2014 வௌ்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித் மஜ்லிஸ், றாதிப் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் நடைபெற்று 16.02.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 9.00 மணியளவில் தபர்ருக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.
Read Moreஇரத்த தான நிகழ்வு 2014
அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும், அன்னாரின் நீண்ட வாழ்நாளுக்காகவும், எமது சகோதர உறவுகளின் உயிர்களைக் காக்கவும் 03வது இரத்தன தான நிகழ்வு 06.02.2014 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 03.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இரத்த தானம் செய்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம்
Read Moreபெரியார் வருகை
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்தவரும், உலகறிந்த பிரசித்தி பெற்ற மார்க்க மேதையுமான அஷ்ஷெய்ஹ் அஸ்ஸெய்யிது அபீபுத்தீன் அப்துல் காதிர் மன்ஸுறுத்தீன் அல் ஜெய்லானிய்யில் பஃதாதீ அன்னவர்கள் 24.01.2014ம் திகதி அன்று காலை 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு வருகை தந்தபோது அன்னாரை மாலை அணிவித்து வர வேற்பு கீதத்துடன் வரவேற்கும் காட்சியின் சில துளிகள்…….
Read Moreபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014
மானுடர்களுக்கு மகிபராய் வந்துதித்த கரையில்லா அருட் கடல் எம் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் பிறந்த தினத்தையும், பிறந்த நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக வருடா வருடம் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துடனும், ஸலாவத் முழக்கத்துடனும் 14.01.2014ம் திகதி அன்று நடுநிசி 03.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக…… கிழக்கு மண்ணில் முதற்தடவையாக SHUMS STUDIO நிறுவனத்தார் வழங்கும் இறை அருள் சொரிந்த இறை நேசர்களின் புகழ்
Read More