யார் இந்த காஸிமீ மௌலவீ?
நான் இவனின் பேச்சை றபீஉனில் அவ்வல் 08ம் இரவு முகநூலில் கேட்டேன். “ஸூறத்” உடையையும், உடலையும், தலைப் பாகையையும், அதற்குமேல் போட்டிருந்த சால்வையையும் பார்த்து இவர் ஓர் இறை ஞானியாக இருப்பாரோ, இவரின் பேச்சைக் கேட்டுத்தானாக வேண்டுமென்று பேசி முடியும் வரை செவி சாய்த்துக் கொண்டுமிருந்தேன். வெறும் பச்சத் தண்ணிதான். உப்பும் இல்லை, உறைப்பும் இல்லை. பொதுவாக ருசியே இல்லை. அவரின் நேரமும் வீண். கேட்போரின் நேரமும் வீண்தான். ஆசியாவிலேயே பெரிய அறபுக் கல்லூரி “தேவுபந்த்” மத்ரசாதான்
Read More