வஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும்கொள்கை வழிகேடல்ல. அதுவே ஸூபி தரீக்காக்கள் கூறும் சரியான ஈமான் – நம்பிக்கை.
தொகுப்பு : சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்கள் அல்லாஹுதஆலா தனது தாத் – உள்ளமையைக் கொண்டும், ஸிபாத் – தன்மைகளைக் கொண்டும், அஸ்மாஉ – திருநாமங்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக வெளியாகியிருக்கின்றான். படைப்புக்களாகத் தோற்றுவது அவன்தான். அவனைத் தவிர வேறில்லை. அவன் மாத்திரமே இருக்கின்றான். அவனுடைய தாத் – அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறேயிருக்கும் நிலையில் பிரபஞ்சமாக, படைப்புக்களாக அவனே தஜல்லீ – வெளியாகியுள்ளான். அவனது வெளிப்பாடான பிரபஞ்சம், படைப்பு
Read Moreஅல்லாஹ்வின் தண்டனைகளுக்கும் சோதனைகளுக்குமான காரணங்கள் எவை?
(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ) முன் வாழ்ந்த சமூகத்திற்கு பல்வேறு சோதனைகளும், தண்டனைகளும் வழங்கப் பட்டதற்கான காரணம் அவர்கள் இறைவனுக்கும், தீர்க்க தரிசிகளுக்கும் வழிப்படாமலும், வேதங்களின் அறிவுரைகளின் படி செயல் படாமலிருந்ததுமேயாகும். குற்றம் செய்தவனைத் தண்டிப்பது அநீதியாகாது. இறைவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை. இது இறை வாக்கு. لَاتَبْدِيْلَ لِكَلِمَاتِ الله இறைவனின் பேச்சில் மாற்றமில்லை. إنّه لَايُخْلِفُ الْمِيْعَادَ இறைவன் தனது வாக்கிற்கு மாறு செய்ய மாட்டான்.
Read More“முர்தத்” என்று பத்வா வழங்கிய உலமாக்களே! உங்களிடம் மீண்டும் பகிரங்க சவால்!!
ஸுப்ஹான மன் அள்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா (முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு) சகல வஸ்துக்களும் அவனேதான். அவையாயிருக்க அவ்வஸ்துக்களை வெளிப்படுத்தினவன் துய்யவன். அவன்தான் அல்லாஹ். அவனுக்கே சர்வ புகழும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இல்லை என்றால் அல்லாஹ்வை அறிய முடியாது அவர்கள் மீதும், அவர்களது ஆல் அஸ்ஹாபுகள் மீதும் சலவாத்தும், சலாமும் உண்டாவதாகுக.
Read More“மக்ரிப்” தொழுகையின் பின் ஓதுதல்.
வஹ்ஹாபிஸ வழிகேடு நமது இலங்கை நாட்டிற்கு தலை நீட்டுமுன் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றிச் செய்து வந்த நற்காரியங்களிற் பல வஹ்ஹாபிகளின் விஷம, பயங்கரப் பிரச்சாரத்தினால் கைவிடப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் கூறி ஆதாரங்களுடன் நிறுவ முற்பட்டால் அண்மையில் நாம் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் வெளியிடவுள்ள 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் போன்ற இன்னுமொரு நூல் அல்லது பல நூல்கள் எழுத வேண்டும். எனினும் அவற்றில் சில விடயங்களை
Read Moreஒடுக்கத்துப் புதன் ஒரு கண்ணோட்டம்
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் ஒடுக்கத்துப் புதன் என்பது “ஸபர்” மாத இறுதிப் புதன்கிழமையை குறிக்கும் இம் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்றும் இம் மாதத்ததில் நல்லகாரியமொன்றும் தொடங்கலாகாதென்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இந்நாளில் வாழையிலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லிம்களிடம் குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லிம்களிடம்
Read Moreஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்
முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே “ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள். பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள். பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின்
Read Moreஇந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் ! அனைத்துப் பாக்கியங்களும் பெறுவீர்கள் !
முஹர்றம் மாதத்தின் ஆஷூறா தினத்தையொட்டி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையினரால் வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை ********************************************************************* அன்புள்ள சகோதர சகோதரிகளே! முஹர்றம் மாத பத்தாம் நாள் ஆஷூறா தினமாகும். அன்றிரவு மஃரிப் தொழுகையின் பின் அல்லது இஷாஉ தொழுகையின் பின் ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரால் ஒரு தரம் யாஸீன் ஓதுங்கள். அல்லது மூன்று தரம் ஓதுங்கள். துஆ ஓதும் போது ஸெய்யிதுனா அலீ, ஸெய்யிததுனா பாதிமா, ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு
Read Moreஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம்.
-மௌலவீ,சாமசிரீ,தேசகீர்த்தி, மர்ஹூம் HMM.இப்றாஹீம்(நத்வீ)(JP)- சர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவதற்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான். மலக்குகள் இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான். வலிமார் இறைநேசர்களான
Read Moreஹஜ் வணக்கத்தின் அடிப்படை
“ஹஜ் வணக்கத்தின் சிறப்புக்களும் கடமைகளின் அர்த்தங்களும்” மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் காத்தான்குடி-05 புனித இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவதும் இறுதியுமான கடமையே ஹஜ் கடமையாகும். இக் கடமை உடற்பலம், பணப்பலம் உள்ளவர்களுக்கே கடமையாகும். இஸ்லாமிய ஏனைய கடமைகளான தொழுகை, ஸகாத், நோன்பு ஆகியவற்றை தான் வதியும் இடத்தில் இருந்தவாறே செய்துகொள்ள முடியும். ஆனால் ஹஜ் கடமை இதற்கு மாறானதாகும். ஹஜ் கடமையைச் செய்வதாயின் மக்கா சென்றே செய்ய முடியும். ஹஜ் கடமையின் சிறப்புக்கள் அனந்தம். அவற்றில் சிலதை இங்கு குறிப்பிடுகின்றேன். நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் – “ஒருவர் ஹஜ்செய்ய நாடி தனது
Read Moreபள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்குரிய நிபந்தனைகள்.
ஆக்கம் – அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ ——————————————————————————————————- பரம் பொருளாம் மெய்ப்பொருளின் தூது வந்தது மனிதா புரியுதா? யாரும் இதய சுத்தி பெற்று விட்டால் எல்லாம் புரியுமே அமலன் சொன்னது இதில் அர்த்தமுள்ளது. அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ. அல்லாஹ்வின் பள்ளிவாயலை நிர்வகிப்பவர்களுக்கு எத் தன்மைகள் இருக்க வேண்டுமென்பது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் விபரமாக கூறியுள்ளான். நேற்றைய பதிவிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களை மீண்டும் ஒரு முறை
Read More