முஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வுகள்
இஸ்லாமியப் புதுவருடமான முஹர்றம் மாதத்தை சங்கை செய்யும் முகமாகவும், இஸ்லாத்திற்காக உயிர் நீத்த நபீமணி பேரர் ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், பாசிப்பட்டணத்தில் கொழுவீற்றிருந்து அற்புதங்கள் நிகழ்த்தும் அஸ்ஸெய்யித் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 21.10.2015ம் திகதியன்று இரு மகான்களின் பேரிலான திருக்கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கத்முல் குர்ஆன், மௌலிது ஹஸனைன், நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் மௌலித்
Read Moreகாத்த நகரில் ஜொலிக்கும் இறையில்லம்
இது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி-05ல் அமைந்துள்ளது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். வஹ்ததுல் வுஜூதின் கோட்டை, சுன்னத் வல் ஜமாஅத்தின் கிரீடம், தவ்ஹீதின தளமாக விளங்கும் இப்பள்ளிவாயலின் நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்விறையில்லத்தின் கட்டட அமைப்பின் பெரும் பகுதிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. மூன்று டோம்களின் பணிகள் நிறைவுற்ற நிலையில் பிரம்மாண்டமான மனாராவுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது இலங்கிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின்
Read Moreஏத்துக்கால் கடற்கரையில் கந்தூரி
புதிய காத்தான்குடி ஜெய்லானி ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்கள் பெயரிலான மௌலித் நிகழ்வு ஒன்றை 26.09.2015 சனிக்கிழமை பின்னேரம் ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பான இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட உஸ்தாத்மார்கள், மௌலவீமார்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முஹ்யித்தீன் மௌலித் ஓதி, கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ
Read Moreஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்
இஸ்லாமிய வரலாற்றில் பல படிப்பினைகளை எடுத்துக் கூறும் ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் நிகழ்வுகள் 24.09.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வுகளின் தொகுப்பு…
Read More1ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2015
குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், ஸெய்யிதுஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக கடந்த 11.09.2015 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது. அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் மௌலித் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
Read Moreகொள்கை விளக்கக் கருத்தரங்கு 2ம் கட்டம்
மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்ற கொள்கை விளக்கக் கருத்தரங்கு 02ம் கட்டமாக சுன்னத் வல் ஜமாஅத் சமூகத்தில் வாழ்கின்ற பெண்களுக்கான செயலமர்வாக 06.09.2015 (ஞாயிற்றுக்கிமை) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 02.00 மணி வரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளதாரர்களாக சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons) அன்னவர்களும், சங்கைக்குரிய மௌலவீ MYM. ஜீலானீ றப்பானீ அன்னவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்வில் பெருமதியான கொள்கை சார்ந்த விளக்கங்களையும்
Read Moreகுருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு
கல்முனை வீரத்திடல் (கொளனி) யில் ஆட்சி செய்யும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் புறாகுத்தீன் குருந்தையடி அப்பா நாயகம் அன்னவர்களின் நினைவாக கடந்த 30.08.2015ம் திகதியன்று அன்னார் பேரிலான 14 வருட அருள்மிகு கந்தூரி நிகழ்வு குருந்தையடியப்பா தர்கா ஷரீபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக ஷெய்க் புறாகுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீபிற்கு போர்வை போற்றும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்றது. பின்னர் காத்தான்குடியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சங்கைக்குரிய உலமாக்கள், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்
Read More38வது வருட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் (பெரிய ஆலிம்) வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 38வது வருட அருள் மிகு மாகந்தூரி 02.08.2015 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக அன்னார் பேரிலான திருக்கொடியேற்ற நிகழ்வு பெரும் திரளான மக்கள் ஒன்று கூடலுடன் முறாதிய்யஹ் முழக்கத்துடன் ஏற்றி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்று
Read Moreமுப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி
சத்திய சன்மார்க்கத்தை நிலைநாட்ட இறையோனின் பாதையில் அயராது உழைத்த நிறைநேசச் செல்வர்களான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரீ (குப்பிகாவத்ததை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (அட்டாளைச்சேனை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் நினைவாக றமழான் பிறை 24ம் இரவன்று (11.07.2015 சனிக்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி
Read Moreபத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போரில் கலந்து கொண்ட உத்தம ஸஹாபா பெருமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடைபெற்று வரும் நினைவு மஜ்லிஸ் இவ்வருடம் 04.07.2015 (சனிக்கிழமை) றமழான் பிறை 17ல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தறாவீஹ் தொழுகையின் பின் திருக் கொடியேற்றி வைக்கப்பட்டு மௌலிது ஸுஹதாயில் பத்ரிய்யீனும், ஸஹாபாக்களின் திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடும் நிகழ்வும் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நடைபெற்றது. அதன்
Read More