அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் தொடர் – 03 அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் ஸெய்யிதுனா அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அன்பு மகள், நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமார்களில் வயது குறைந்தவர்களும், மிகப்பிறசித்தி பெற்றவர்களுமாகும். அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களுக்கு 6 அல்லது 7 வயதாக இருக்கும் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவர்களைத் திருமணம் செய்தார்கள். உம்மு
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 02 அஸ்ஸெய்யித் அபூதல்ஹதல்அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்ட ஓர் ஸஹாபீ. அம்பு எய்வதில் சிறந்த வீரர், உஹத் யுத்தத்தின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நோக்கி வந்த அம்புகளை தனது நெஞ்சைக் கொண்டு காத்தவர்கள். ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்னவர்களின் தாய் அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களை திருமணம் செய்தவர்கள். அவர்களின் சாச்சா அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள்மிக்க புனித முடிகளை பாதுகாப்பதில் மிக ஆர்வமாக செயற்பட்டவர்கள். عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُوْطَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ شَعْرَهُ. அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தலை முடியை மழித்த போது அபூதல்ஹா அவர்களே முதன் முதலில் அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்தவர்களாகும்.
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 01 அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை. சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும். வழிகேடர்கள் இதை மறுத்தாலும் எதார்த்தம் இதுவேயாகும். மறுப்பவன் நிச்சயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தம் புரியாதவனாகவே இருப்பான். இறையொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனித உருவில் எங்களைப் போன்றவர்களன்றி அவர்களின் எதார்த்தத்தில் எங்களைப் போன்றவர்களல்லர். அவர்கள் அல்லாஹு தஆலாவுக்கு மிக விருப்பமானவர்கள். இறையருள் பெற்றவர்கள், அருள் வடிவம் பெற்றவர்கள். அவர்களைப் போன்ற ஒருவரை அல்லாஹு தஆலா வெளிப்படுத்தவுமில்லை. வெளிப்படுத்தப் போவதுமில்லை. சந்திரனை விடப் பிரகாசமானவர்கள். ஒளி உருவம் பெற்றவர்கள். அழகின் முழு வடிவம் பெற்றவர்கள் அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள். அன்னவர்களின் உடல் முழுவதும் அருளாகும். அன்னவர்களின் கை எவற்றையெல்லாம் தொட்டனவோ அவை அனைத்தும் அருள் பெற்றன. அன்னவர்கள் பாவித்த பொருட்கள் அனைத்தும் அருள் நிறைந்தவேயாகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தத்தை நன்கு புரிந்திருந்தார்கள் ஸஹாபஹ் – தோழர்கள். அன்னவர்களின் உடலின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்கள் அணிந்த சேட், சாறம், ஜுப்பஹ், போர்வை, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள். அன்னவர்களின் அருள் நிறைந்த புனித உடலிலிருந்து வெளியாகிய சிறுநீர், வியர்வை, இரத்தம், சளி போன்றவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள். இது மாத்திரமன்றி நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாப்பிட்ட, குடித்த பாத்திரங்களைக் கொண்டு அருள் பெற்றார்கள் ஸஹாபஹ்- தோழர்கள் றழியல்லாஹு அன்ஹும். அன்னவர்களின் திருவுடலில் காணப்பட்ட நபித்துவத்தின் முத்திரையை முத்தமிடுவது கொண்டும், தொடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்களின் கை, கால், வயிறு போன்றவற்றை முத்தமிடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்களின் முடிகள், நகங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அன்னவர்கள் வுழூச்செய்து எஞ்சிய நீரை அருந்துவது கொண்டும், தங்களின் உடலில் அதை பூசுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுத இடங்களில் தொழுவது கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள். அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயிலிருந்து துப்பிய நீரைக் கொண்டு அருள் பெற்றார்கள். அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரைக் கொண்டு அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அன்னவர்கள் சாப்பிட்டு எஞ்சிய உணவை சாப்பிடுவது கொண்டும், அன்னவர்களின் அருள் நிறைந்த கை விரல்கள் பட்ட இடத்தில் சாப்பிடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குடித்து எஞ்சிய பானத்தைக் குடிப்பது கொண்டும் ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள். அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினுள் மென்ற ஈத்தம் பழத்தை சாப்பிடுவது கொண்டு ஸஹாபஹ்களின் குழந்தைகள் அருள் பெற்றார்கள். இந்த அருள் தங்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக தங்களுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழந்தைகளை ஸஹாபஹ் – தோழர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சமூகத்துக்கு கொண்டு சென்றார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஈத்தம் பழத்தை எடுத்து, தனது அருள் நிறைந்த வாயினுள் மென்று அதை அந்த குழந்தைகளின் வாயினுள் சுவைக்கச் செய்தார்கள். இவ்வாறு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புடைய சகல வஸ்துக்களைக் கொண்டும் ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் வாழ்க்கையில் அருள் பெற்றார்கள். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாவித்துவிட்டுச் சென்ற பொருட்களில் பறகத் – அருள் உண்டு என்பதை நம்பிய ஸஹாபஹ் – தோழர்கள் அவற்றைக் கொண்டு அருள் பெற்றிருப்பதும், சிறப்புப் பெற்றிருப்பதும் எமக்கு ஓர் சிறந்த முன்மாதிரியாகும். அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களில், அன்னவர்கள் பாவித்த, விட்டுச் சென்ற பொருட்களில் அருள் காணப்படுவது போன்று ஏனைய நபீமார்கள், வலீமார்கள், தரீகஹ்களின் ஷெய்ஹ்மார்கள், அல்லாஹ்வை நன்கறிந்த ஆரிபீன்களிலும், அவர்கள் பாவித்த, விட்டுச் சென்ற பொருட்களிலும் பறகத் – அருள் உண்டு என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம், நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வரலாற்றை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் கூறிக்காட்டுகிறான். தனது மகன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களைப் பிரிந்த காரணத்தினால் கடுமையான கவலையடைந்தார்கள். நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் அழுதழுது அன்னவர்களின் பார்வை பலவீனமடைந்தது. தனது தந்தையின் நிலையை அறிந்தார்கள் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள். தான் அணிந்திருந்த சேட்டைக் கழற்றி, தனது தந்தை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் முகத்தில் அதை வைக்கும் படி அனுப்பி வைத்தார்கள். இந்த சேட்டை அன்னவர்களின் முகத்தில் வைத்தவுடன் அன்னவர்களின் பார்வை தெளிவடைந்தது. இதை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். اِذْهَبُوْا بِقَمِيْصِيْ هَذَا فَأَلْقُوْهُ عَلَى وَجْهِ أَبِيْ يَأْتِ بَصِيْرًا. وَأْتُوْنِيْ بِأَهْلِكُمْ أَجْمَعِيْنْ. நீங்கள் என்னுடைய இந்த சேட்டைக் கொண்டு போய் எனது தந்தையின் முகத்தின் மீது போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்களின் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். ஸுறது யூஸுப் 93 இந்த வசனத்தின் மூலம் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சேட்டை நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் முகத்தில் வைத்த போது அவர்களின் பார்வை தெளிவடைந்தது என்பது உறுதியாகிறது. அந்த சேட்டில் ஏதாவது மருந்து கலக்கப்பட்டிருந்ததா? இல்லை. அது ஒரு நபீ அணிந்திருந்த சேட் அதில் பறகத் உண்டு. நபீமார்கள் பாவித்த பொருட்களில் அருள் காணப்படுவது போன்று அவர்களின் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் அருள் உண்டு. புனித முடிகளைக் கொண்டு அருள் பெறுதல் அண்ணல் ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக் கொண்டு அன்னவர்களின் தோழர்களான ஸஹாபஹ்கள் அருள் பெற்றிருக்கிறார்கள். அவற்றை தங்களின் வீடுகளில் மிக கண்ணியமாக பாதுகாத்திருக்கிறார்கள். அருள் நிறைந்த அந்த முடிகளின் பறகத்தினால் நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அந்த முடிகளின் பறகத்தினால் யுத்தங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் மரணித்தால் அந்தத் திருமுடிகளை தங்களின் ஜனாஸாக்களுடன் சேர்த்து அடக்க வேண்டுமென்று எத்தனையோ ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் உறவினர்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகள் எங்களைப் போன்றவர்களின் முடி போன்றதல்ல. அவை இறையருள் நிறைந்தவை. பறகத் மிக்கவை. எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. அது மாத்திரமல்ல அன்னவர்களின் திரு முடிகள் மிகவும் மணம் வாய்ந்வவையாகக் காணப்பட்டன. ஸஹாபஹ் – தோழர்கள் அது பற்றி வருணித்திருக்கிறார்கள். இன்னும் அவர்கள் அதிக முடிகள் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள் கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதுவே அவர்களின் உம்மத்தினர் பெற்ற பாக்கியமாகும். عَنْ جَابِرِبْنِ عَبْدِ
Read More