இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) (Justice of The Peace Whole Island) “கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்” என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்”
Read Moreஇஸ்லாத்தின் பார்வையில்ஓதிப்பார்த்தலும் தாயத்துகட்டுதலும்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)- யாருக்காவது நோய்ஏற்பட்டால், அல்லது கண்திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கரசத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும்ஓதி ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதிக்கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும். அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் {وننزلمنالقرآنماهوشفاءورحمةللمؤمنين} (الإسراء-82) (அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய்நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்) என்று கூறியுள்ளான். இது திருமறையில்
Read Moreஅற்புத வரலாறு
-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ- முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன்.
Read Moreஅல்-குர்ஆனின் நற்போதனைகள்
அபூ ஸுப்தீ நல்லுபதேசம் செய்யுங்கள் நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55) உண்மை பேசுங்கள் அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119) அழகானதைப் பேசுங்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83) கனிவாகப் பேசுங்கள் உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும்அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;.
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஸலாத்துல்முஸாபிர் (கஸ்ரு, ஜம்உ தொழுகை) மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். ‘ளுஹர்- அஸர்’ இவ்விரண்டையும் மற்றும் ‘மஃரிபு-இஷா’ இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள்: 1. பயணத்தொலைவு 130 கிலோமீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். இத்தொலை தூரத்தை மண், விண்,
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஜும்ஆ மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன. 1. குறைந்தபட்சம் ஜும்ஆவின் முத ல்ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்படவேண்டும். அனைவரும் முதல் றக்அத்தை ஜமாஅத்தாக நிறைவுசெய்தபின் இமாமுக்கு
Read Moreஅல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்
– மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ். அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாக்கத்தை படிக்கும் “ஷம்ஸ்” இணையத்தள வாசகர்களே! என்னையும், உங்களையும் மேலானவர்களான “தாகிரீன்கள்” எனப்படும் இறை நினைப்பில் வாழும்
Read Moreதுஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள்
-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)- அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறும் பொழுது ‘நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்திய்யுங்கள் நான் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன்” என்று கூறுகின்றான் (40:60). பெருமானார் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்விடம் துஆ கேட்காமலிருந்து விடும் போது அல்லாஹ் கோபிக்கின்றான் என்று சொன்னார்கள் (திர்மிதீ 5/126, -3433-மிஷ்காத்2238) மேற்சொல்லப்பட்ட திருமறை வசனத்திலிருந்தும் திரு நபீமொழியிலிருந்தும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும்போது அந்த துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள் பின்வருமாறு. 1) ஹலாலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். 2)
Read Moreகப்றுகளும் ஸியாறத்தும்
Moulavi MJM. Jahaany Rabbani “ஹழ்றத் புரைதஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபீ (ஸல்) அவர்கள் நவின்றார்கள். கப்றுகளை ஸியாறத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள் ஏனெனில் அதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” நூல்: அபூதாவூத் பாகம் – 02, பக்கம் – 105 மேலும் பைஹகீ என்ற கிரந்தத்தில் வருகிறது. “ஹழ்றத் அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபீ (ஸல்) அவர்கள் குர்பானுடைய இறைச்சியையும் (பேரீத்தம் பழங்களைப் புளிக்கவைக்கப்பயன்படுத்திய) பாத்திரங்களையும்,
Read Moreஉத்தம நபீ உன்போன்ற மனிதனா?
அதி சங்கைக்குரியஷெய்குனா மௌலவீ,அல்ஹாஜ் A அப்துர்றஊப் மிஸ்பாஹீஅவர்கள் வஹ்ஹாபிஸ குழியில் வழுக்கி விழுந்த அல்லாஹ்வின் அடியானே! நபீ ஸல் அவர்கள் என் போன்ற மனிதனென்று நீ சொல்கிறாயா? ஏன் இவ்வாறு சொல்கிறாய்? இது உனது அறியமையா? அல்லது ரியாலுக்காக நீ நடிக்கும் நாடகமா? இது உனது அறியாமையாயின் இதற்கு மருந்தும் உண்டு. மருத்துவமனையும் உண்டு. இது உனது நாடகமாயின் இதற்கு மருந்துமில்லை. மருத்துவனையுமில்லை. என்ன மருந்து? எந்த மருத்துவனை என்ற கேட்க நினைக்கிறாயா? கவலைப்படாதே. இரண்டையும் சொல்லி
Read More